Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவின் திட்டத்தை சிறிலங்கா இராணுவமே தோற்கடித்தது

Featured Replies

மகிந்தவின் திட்டத்தை சிறிலங்கா இராணுவமே தோற்கடித்தது JAN 10, 2015 | 14:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

rajita-ruwan-rathna-300x200.jpgகொழும்பு நகரில் சிறிலங்கா இராணுவத்தை நிலைநிறுத்த இறுதி நேரத்தில் மகிந்த ராஜபக்ச முயற்சி மேற்கொண்டதாகவும், ஆனால், அவரது உத்தரவுக்கு இராணுவத் தளபதி இணங்க மறுத்து விட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியெ ரத்தன தேர்ர் ஆகியோருடன் இணைந்து, நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

“கொழும்பில், இராணுவத்தினரை நிறுத்த வழங்கப்பட்ட உத்தரவை ஏற்க, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் தயா ரத்நாயக்க மறுத்து விட்டார்.

அவசரகாலச்சட்டத்தின் மூலம், அதிகாரத்தை தக்கவைக்கும் திட்டத்தை முன்னைய அரசாங்கம் கொண்டிருந்தது.

கடைசி நேரத்தில், உயர்மட்டத்தில், இருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை ஏற்க மறுத்ததன் மூலம், அரசாங்க அதிகாரிகள்  அந்த திட்டத்தை தோற்கடித்து விட்டனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தேர்தலுக்குப் பின்னர், வடக்கில் இராணுவ முகாம்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், வடக்கில் எங்கும் புலிக்கொடிகள் ஏதும் பறக்கவில்லை.

இராணுவ முகாம்களின் மீது கற்களும் வீசப்படவில்லை. யாழ். பல்கலைக்கழகத்தில் வன்முறைகளும் இடம்பெறவில்லை.அவற்றான செய்திகள் அனைத்தும் பொய்யானவை.” என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/01/10/news/2749

 

  • தொடங்கியவர்

 நாட்டிலே மக்களிடம் வேறு விதமான கதை பரவி விட்டது. இப்போ நீங்கள் இப்படித்தான் கூறவேண்டும் இல்லையேல் உங்கள் மீது மக்களிடம் மதிப்பே இருக்காது.ஆகவே இப்படி கூறுவதால் உங்கள் மதிப்பு உயரும் என்று சொல்லி கொடுத்திருப்பார்கள் போல

Edited by BLUE BIRD

ஆக மொத்தத்தில தாறுமாறா கொஞ்சம் நடந்திருக்கு. நாங்களும் நினைச்சம் மகிந்த பிரச்சனை இல்லாமல் போனவரெண்டு. வேறு தெரிவு இல்லாமலும் பிரச்சனைகளில் முத்தி விடாமல் இருக்கவுமே சொந்த ஊருக்கு போயிருக்கிறார் அங்கே தான் பாதுகாப்பும் அதிகம். 

 

அவர் அங்கோ போவதற்கான முன்னேற்பாடுகள் இருந்தமாதிரி தெரியவில்லை. 

இதுதான் ஜனநாயகம் எண்டு யாரோ சொன்னர்கள் கதை வேறமாதிரி கிடக்குது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.