Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெருக்கடியில் மைத்திரி: நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நெருக்கடியில் மைத்திரி: நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல்!

 

dT46JNi.jpg

 

இன்று அமைச்சரவை நியமனம் நடக்குமென அறிவிக்கப்பட்ட போதும், அது பெரும்பாலும்  தள்ளிப் போகலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆட்சியமைப்பதற்கு தேவையான நாடாளுமன்ற பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதில் மைத்திரி இன்னும் வெற்றியடையாததால், மைத்திரி தரப்பில் சற்று குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

தற்போது மைத்திரி பக்கம் 98 பாராளுமன்ற உறுப்பினர்களும்,  மகிந்த ராஜபக்ச பக்கம் 118 உறுப்பினர்களும் உள்ளனர். ஆட்சியமைப்பதற்கு 115 உறுப்பினர்கள் தேவையென்ற நிலையில், இதுவரை அந்த இலக்கை மைத்திரி தரப்பு எட்டவில்லை. இதனால் அமைச்சரவை நியமனம் சில தினங்கள் தள்ளிச் செல்ல வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதுதவிர, ஏற்கனவே அறிவித்ததற்குப் புறம்பாக அமைச்சர்களின் எண்ணிக்கை 25இலிருந்து 40ஆக உயரவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற பெரும்பான்மையை பெறும் முயற்சியில் சந்திரிகா, ராஜித இருவரும் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மகிந்த தரப்பில் உள்ள எம்.பிக்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ச்சியாக பேச்சில் இருவரும் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. 

தொண்டமான், பிரபா கணேசன், வாசுதேவ, பேராசிரியர் திஸ்சவிதாரண, டி.யு. குணசேகர, டிலான் பெரேரா, மற்றும் ஜ,தே.கவிலிருந்து சென்ற அதவுல்லா, ஹிஸ்புல்லா, காதர் மற்றும் சிலருடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. 

ஏப்ரல் 20ம் திகதி வரையான நூறு நாட்கள் மாத்திரமே புதிய அமைச்சரவையும் இயங்கும் என்பதும் இக்கால இடைவெளியில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீண்டும் செயற்ப் அனுமதிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பாராளுமன்றப் பெரும்பான்மை தொடர்பான சவால் ஒன்றினை புதிய ஜனாதிபதி எதிர்கொள்ளவுள்ளமையும் அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்பட்டதற்கிணங்க செயற்படுவதற்கும் பாராளுமன்றப் பெரும்பான்மை தேவையென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. எனவே முன்னர் குறிப்பிட்டபடி 25 அமைச்சர்களுடனான அமைச்சரவையை அமைத்து முன்செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்,  எதிர்வரும 19ம் திகதி பாராளுமன்றம் கூடும் போது எதிர்க்கட்சியில் உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் புதிய ஜனாதிபதி ஆட்சியமைக்க முடியாத நிலை தோன்றும்.

ஆட்சி மாற்றத்தோடு மேலும் பல உறுப்பினர்கள் தம் பக்கம் சேர்வார்கள் என்றே பொது எதிரணி ஆரம்பம் முதற்கொண்டு எதிர்பார்தது வந்தது.  40 பாராளுமன்ற உறுப்பினர்கள் வருவார்கள் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நம்பியிருந்தார். எனினும், எதிர்பார்க்கப்பட்ட பலர் இறுதியில் காலைவாரிவிட்டனர்.

ஆளுங்கட்சியிலிருந்து மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் அவர்களிற்கு அமைச்சர்கள் நியமனம் வழங்கும் இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே த.தே.கூ மற்றும் ஜே.வி.பி ஆளுங்கட்சி வரிசையில் அமர மாட்டாது என அறிவித்துள்ளதால், அவர்களின் நிலைப்பாட்டையும் மாற்ற சந்திரிகா முயற்சித்து வருகிறார்.

மைத்ரியின் வெற்றிக்காக உழைத்த அசாத் சாலி, மனோ கணேசன், முஜிபுர் ரஹ்மான், ஹிருனிகா, சரத் பொன்சேகா உள்ளிட்ட பிரமுகர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லையெனும் நிலையில் மேலதிக உறுப்பினர் தேவையை நிரப்ப மைத்திரி அணி என்ன செய்யப் போகிறதென்பதிலேயே அந்த அணியின் எதிர்காலம் தங்கியுள்ளது.

அவ்வாறு இல்லையெனின், நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் நிலைக்கு புதிய ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்படுவார்.

http://www.deepamnews.com/details.php?nid=1&catid=22832&hit=1#

  • கருத்துக்கள உறவுகள்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் நிலைக்கு புதிய ஜனாதிபதி நிர்ப்பந்திக்கப்படுவார்.
தேவை என்றால் செய்ய வேண்டியதுதானே....தமிழனை அழிக்க நிறைவேற்றுஅதிகாரம் பாவிப்பியள் இதற்கு ஏன் தயங்குகிறீர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.