Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொண்டமான் மைதானத்திலிருந்த ரூ.3கோடி பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன

Featured Replies

01(1146).jpg

 

நோர்வூட் தொண்டமான் மைதானத்திலிருந்து சுமார் மூன்று கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களை தாம் கைப்பற்றியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த தகவல்களையடுத்தே அந்த பொருட்களை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1மணியளவில் கைப்பற்றியதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த தகவல்கள் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவானின் கவனத்துக்கு கொண்டுவந்ததுடன் நீதவானின் உத்தரவுக்கு அமையவே அந்த பொருட்களை கைப்பற்றப்பட்டன.

 

தாம் கைப்பற்றிய பொருட்களில் புளோக்கல் இயந்திரம் 43, கூடாரங்கள், நாற்காலிகள், தகரங்கள் உட்பட இன்னும் பல பொருட்கள் இருந்தன என்றும் பொலிஸார் தெரிவித்தனர். கைப்பற்றப்பட்ட பொருட்கள் அரசாங்கத்து சொந்தமானது என்றால் அவற்றை நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்  கினிகத்தேனை பிரதேச செயலாளருக்கு ஒப்படைக்கவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

இந்த பொருட்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர் அதிகாரி ஒருவரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது, குறித்த பொருட்கள் தோட்டத்தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக இலங்கை தொழிலாளர் தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானினால் கொண்டுவரப்பட்டதாகும். கடந்த இருமாதங்கள், ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் அவற்றை விநியோகிப்பதற்கு முடியவில்லை. தேர்தல் முடிந்தவுடன் அவற்றை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன என்றும் அவர் கூறினார். 

 

02(905).jpg

 

05(347).jpg

 

09(128).jpg

 

 

http://www.tamilmirror.lk/137455#sthash.8MB37sT2.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
thondaman-200-news.jpg

நோர்வூட் தொண்டமான் மைதானத்தில் மூன்று கோடி ரூபா பெறுமதியான கூரைத் தகடுகள் உள்ளிட்ட பொருட்களை ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தோட்ட தொழிலாளிகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த பொருட்களே இன்று பிற்பகல் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இவற்றில் புலோக்கல் இயந்திரம் 43, கூடாரங்கள், நாற்காலிகள், தகரங்கள் உட்பட பல பொருட்கள் அடங்குவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

   

கைப்பற்றிய பொருட்களை பற்றி ஹட்டன் நீதவானுக்கு தெரிவித்து அவை அரசாங்க பொருட்களாக இருந்தால், நீதவான் உத்திரவின் படி கினிகத்தேனை பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் பொலிஸார் கூறினர்.

இதற்கிடையே. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், முன்னாள் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் நேற்று காலை 6.45 மணியளவில் சென்னை சென்றுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 171 என்ற விமானத்தில் நாட்டைவிட்டு வெளியேறிச் சென்னையைச் சென்றடைந்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்தால் தான் நாட்டைவிட்டு வெளியேறுவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

thonada-capture-110115-seithy%20(1).jpg

 

 

thonada-capture-110115-seithy%20(2).jpg

 

 

thonada-capture-110115-seithy%20(3).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=124428&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அரச பொருட்கள், தொண்டைமான் மைதானத்துக்கு ஏன்.. வந்தது?
அதை வைக்க.... வேறு இடம் கிடைக்கவில்லையா? :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.