Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தலிலும் 'அன்னத்தில்' கூட்டணி

Featured Replies

22b5b3b0334d4500edf03be1a111fda9_L.jpg
100 நாள் வேலைத் திட்டத்தின் பின்னர் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொதுக் கூட்டணியொன்றை அமைத்து 'அன்னம்' சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தற்போது இரு தரப்புக்களுக்கிடையே பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
நாட்டிலுள்ள அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நாட்டிலுள்ள இரண்டு பிரதான கட்சிகளும் தேசிய அரசாங்கமாக சில வருடங்கள் நாட்டை நிர்வகிப்பது அத்தியாவசியமானது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
தன்னை ஜனாதிபதியாக்குவதில் பாரியளவில் பங்களிப்புச் செய்த ஐக்கிய தேசியக் கட்சியும், தான் தலைமைத்துவம் வகிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் 100 நாள் வேலைத் திட்டத்தின் பின்னர் நடைபெறும் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டால், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்தமாக மாற்றமொன்றுக்கு வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பு வீணடிக்கப்பட்டுவிடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருதுகின்றார்.

http://www.tamil.srilankamirror.com/news/item/1243-2015-01-16-15-53-17
 
அப்பாடா இப்பவாவது இலங்கையின் எதிர் காலம் பற்றிய சிந்தனை வந்ததே. நடப்பவைகள் நல்லதாகவே தெரிகின்றன. தேசிய நிறைவேற்று சபை நியமனங்கள், தேசிய அரசாங்கம் பற்றிய கருத்து, தமிழ்கைதிகளின் விடுதலை (எனக்குத் தெரிந்தவர் 1984 இல் இருந்து உள்ளே இருப்பதாக கேள்விப்பட்டேன். இருந்தால் அவருக்கு 52 வயது. சிறையில் 30 வருடங்கள்), ஆளுனர் மாற்றம், சட்டத்திற்குப் புறம்பாக இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்களை திரும்பவும் கையளிப்பதற்கான குழு நியமிக்கப்பட்டமை  போன்றவை.
 
இவைகள் மைத்திரியிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி பதவி உள்ளதால்தான் இலகுவாக முடிந்தது. மைத்திரியிடம் உண்மையாகவே தமிழர்கள் இழந்த வாழ்வை, நிம்மதியை திருப்பிக் கொடுக்கும் எண்ணம் இருப்பின் நிறைவேற்று அதிகாரம் உள்ள ஜனாதிபதி பதவியை சிறிதுகாலம் வைத்திருப்பது எமக்கு நன்மை பயக்கும் என்பது எனது விருப்பம்.
 
எங்கேயோ ஒரு ஒளிக்கீற்று தெரிகின்றது.
நம்பி ஏமாந்த இனம்தான். இருப்பினும் எமக்கு நம்பிக்கை வைத்து நடப்பதை தவிர வேறு வழிகள் இருப்பதாகத் தெரியவில்லை. கூட்டமைப்பு சாணக்கியமாக நடக்க வேண்டிய காலம். சர்வதேசமும் இந்தியாவும் நிச்சயமாக கூட்டமைப்பிற்கு பக்கபலமாக நிற்கும் என நம்புவோம்.

Edited by ஜீவன் சிவா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.