Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிற்கு ஆப்பு! ஶ்ரீ.ல.சு.கட்சி தலைமைத்துவம் சந்திரிக்காவிற்கு!

Featured Replies

3bbd7eba6b043fd8a3819fa2bb9dd9c9_L.jpg
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பிற்கு அமைய நேற்று அதன் தலைமைத்துவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில், எதிர்காலத்தில் கட்சியின் யாப்பு திருத்தப்பட்டு கட்சியின் தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவிற்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் 12ஆவது ஷரத்திற்கு அமைய, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவர், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்படும் சந்தர்ப்பத்தில், அந்த கட்சியின் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் வழங்கப்பட வேண்டும்.
 
அத்துடன், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக் காலம் முடிடைந்த பின்னர் அவருக்கு, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பிற்கு அமைய கட்சியின் ஆலோசகர் பதவி வழங்கப்படும்.
 
இதற்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்தக் கட்சியின் தலைவராகவும், மகிந்த ராஜபக்ச அந்தக் கட்சியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டனர்.
 
எவ்வாறாயினும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்படும்போது, ஜனாதிபதி கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் என அதுரெலியே ரத்தன தேரரின் 'தூய்மையான நாளை'' அமைப்புடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
 
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட்டபோது இந்த இணக்கப்பாட்டிற்கு உடன்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

http://tamil.srilankamirror.com/news/item/1250-2015-01-17-04-18-31

Edited by Kashni

  • கருத்துக்கள உறவுகள்
கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரிக்கு கையளித்த மஹிந்த!

 

 

maithripala-mahinda-300x199.jpgஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ இன்று (16) விடுத்துள்ள விசேட அறிக்கையில்,

‘நமது ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமை பதவியை இன்றிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கையளிக்கிறேன். நான் இந்த தீர்மானத்தை எடுப்பது ஐம்பது வருடகாலமாக உறுப்பினராக, தலைவராக மேலும் பல பதவிகளை வகித்து அர்ப்பணிப்புடன் பாதுகாத்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாகப் பிரிவதை பொறுத்துக் கொள்ள முடியாத விருப்பமின்மையால் ஆகும். தாய்நாட்டை போன்று இதனையும் பாதுகாக்கவும் முன்னேற்றவும் அர்ப்பணித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஒற்றுமையாக வைத்துக் கொள்வது அதன்மீது அன்பு செலுத்தும் அனைவரினதும் பொறுப்பாகும். அதனால் புதிய தலைமை, நிறைவேற்று சபை உள்ளிட்ட அனைத்து அதிகார பிரிவும் தேசத்தின் முழு எதிர்பார்ப்புக்காக வேண்டி கட்சியை வழிநடத்த வேண்டும்.

கட்சிக்காரர்களின் பாதுகாப்பு, கட்சிக்குள் ஜனநாயகம் போன்றவை குறித்து உங்கள் அனைவரினதும் கவனம் திரும்பும் என்பது எனது நம்பிக்கை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் எனக்கு வாக்களித்த சுமார் 50 லட்சம் மக்களின் பிரார்த்தனை மற்றும் அபிலாஷைகளுக்காக எதிர்காலத்திலும் நான் முன்நிற்பேன் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறுகிறேன்.

கடந்த காலங்களில் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கவும் நான் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கிறேன்.´

http://tamilleader.com/?p=46338

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.