Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முத்தங்களின் அகராதி (The Dictionary of Kisses)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முத்தங்களின் அகராதி (The Dictionary of Kisses)

இந்து மேனோன் – தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

நக்கி முத்தம் (Lick Kiss) : பாசம் சுரக்கும் முத்த வகை இது. பிஞ்சுக் குழந்தைகள்தான் இதன் முக்கியமான பயன்பாட்டாளர்கள். இந்த முத்தம் நாவால் அளிக்கப்படவேண்டும். முலைப்பால் மணமும் இளநீர் நிறமும் உள்ள தேன் இந்த முத்தத்தை அதிமதுரமாக்குகிறது.

கடி முத்தம் (Byte Kiss) : பற்கள் கொண்டு இடப்படும் முத்தம். இந்த முத்தம் வலியுடன் முடிவு பெறுகிறது. சின்னக் குழந்தைகளும் பெரிய குழந்தைகளும் இதைச் செய்வதில் பிரத்யேகமான திறமை படைத்தவர்கள்.

பட்டாம்பூச்சி முத்தம் (Butterfly Kiss) : கண் இமைகளால் தரப்படும் முத்தம் இது. முத்தம் இடப்படும் நபரை உள்ளங்கையளவு காற்றின் தூரத்தில் நிற்க வைத்து கண் இமைகளால் மேல் நோக்கியும் கீழ் நோக்கியும் முத்தமிடுதல். முகத்தின் மற்ற பாகங்களை தொடாமல் இருக்கும் கவனம் அவசியம்.

ஃப்ரூட்டி முத்தம் (Fruity Kiss) : இது இரண்டு வகைப்படும். 1. பிடித்தமான பழங்களை ருசித்த பிறகு இதழால் மிருதுவாக முத்தம் இடுதல். ஸ்ட்ராபெரி, ஆரஞ்ச், மாம்பழம், மங்குஸ்தான், நாவற்பழம், அத்திப்பழம், சப்போட்டா, லிச்சி, பன்னீர்ப்பழம் ஆகியவை இதற்கு உத்தமம். 2. ஒரு சிறிய துண்டு பழத்தை எடுத்துக்கொண்டு அதை உதட்டுக்கிடையில் மறைத்து வைக்கவும். முத்தமிட்டுக்கொண்டிருக்கும்போதே அந்தப் பழத் துண்டை இருவரும் கொறித்துத் தின்னவும். பழங்களின் வாசமும் ருசியும் முத்தங்களை ஒரு வசந்தகாலத்துக்கு அழைத்துச் செல்லும்.

N.B.: சாக்லேட், அல்வா, பால் பேடா முதலானவைகளும் பழங்களுக்கு பதிலாக உபயோகிக்கத் தகுந்தவை.

எஸ்கிமோ முத்தம் (Eskimo Kiss) : மூக்கினால் வழங்கப்படும் அதியழகான முத்தம் இது. மூக்கு நுனியில் கோபம் இருப்பவர்களுக்கு வழங்குதல் நன்று. மூக்கால் மூக்கை மிருதுவாக உரசுவதுதான் செயல்முறை.

முகப்பரு முத்தம் (Hickey Kiss) : முகப் பரு உள்ள காதலிக்கு / காதலனுக்கு அளிக்கத் தகுந்த அற்புதமான முத்தம் இது. அதிகமாக பழுக்காத, அதிகம் சிவக்காத, வலிக்காத முகப்பருவை இதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். இந்த முத்தத்தை உதட்டால் கொடுக்க வேண்டும். ஒயின் போல சுவை ஊறிய எச்சில் முகப்பருவில் நன்றாகப் புரள வேண்டும். பல் படாமல் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் அளித்தது மிகச் சரியான நல்ல முத்தமாக இருந்தால் அடுத்த நாள் முகப்பரு உலர்ந்து மறைந்து விட்டதைக் காணலாம்.

ஷாக்கடி முத்தம் (The Shockey Kiss) : மிக வேகமான முத்தம் இது. இதன் வேகத்தாலும் ஆழத்தாலும் சுவையாலும் நடுக்கத்தாலும் ஷாக் அடித்த சுகம் கிடைக்கும்.

ஐஸ் முத்தம் (Freeze Kiss or Melt Kiss) : கடும் குளிர்ச்சியுள்ள ஐஸ் துண்டம் ஒன்றை வாய்க்குள் பாதுகாப்பாக ஒளித்து வைக்கவும். முத்தமிடும்போது ஐஸ் துண்டத்தை மெல்ல நாவால் உங்கள் இணையின் வாய்க்குள் தள்ளவும். உங்கள் இணை இதேபோல திரும்பச் செய்ய வேண்டும். இனிப்பான ஐஸாக இருந்தால் இன்னும் ரசமாக இருக்கும். இறுதியில் ஐஸ் தீர்ந்துவிடும்போது இதழ்கள் முத்தத்தாலும் குளிர்ச்சியாலும் உன்மத்த போதையில் மரத்துப் போயிருக்கும்.

காது மடல் முத்தம் (The Earlobe Kiss) : செவியின் கீழ்பாகத்தில் கம்மல் இடும் மிருதுவான பகுதியில்தான் இந்த முத்தம் மலர்கிறது. ஒரு சிறு எருக்கம்பூ காற்றில் பறந்து வந்து காதோரத்தில் பற்றியிருத்தல் போல உதடுகளால் உமிழ்நீரில் நனைத்து முத்தமிடவும். இந்த முத்தத்தின் சத்தம் மூளைக்குள் விதைகள் விழுந்து சிதறுகின்ற அனுபவத்தை உருவாக்கும்.

புலி முத்தம் (The Cheeta Kiss) : பசித்த புலியின் கண்கள் கொண்டவர்களும் உட்புறம் கூர்மையான நீளமான பற்ககளும் கூர் நகங்களும் கொண்டவர்களும் அளிக்கக்கூடிய முத்தம் இது. ஒரு சிறுத்தைப் புலியின் ஆவேசமும் வேகமும் இதற்கு மிக அவசியம். தங்களுக்குள் சண்டை இட்டுக்கொள்ளும் இணைகளில் ஒருவர் இதைத் துவங்க வேண்டும். நகத்தால் கீறிக் கிழித்துவிடுவது போல் வேகமாகச் சென்று கழுத்தில் கடித்து முத்தமிட்டுவிடவேண்டும். பல்லின் மெல்லிய ரத்த அடையாளங்கள் இந்த முத்தத்தை அழகானதாக மாற்றுகிறது.

ஒழுக்கி முத்தம் / பான முத்தம் (Tricle Kiss) : சதா தேன் ஒழுக்கிக் கொண்டிருக்கும் பைங்கிளி ரசிகர்களுக்கு இந்த முத்தம் உத்தமம். பழச்சாறோ பானமோ வாய்க்குள் வைத்துக்கொண்டு இந்த முத்தத்துக்குத் தயாராக வேண்டும். இதழ்களால் ஆழமாக முத்தமிட்டுக்கொண்டிருக்கும்போது வாய்க்குள் ஒளித்துவைத்திருக்கும் பானத்தை ஒரு சிறு சக்தியுடன், இணைக்குள் சிதறடிக்க வேண்டும்.

விரல் முத்தம் (Finger Kiss) : முத்தம் இடப்போகும் நபரின் கைகளை கைகளில் அள்ளியெடுக்கவும். நகத்துக்கும் விரல் நுனிக்கும் இடையே உள்ள இளம் பிங்க் நிறப் பகுதியை இதழ்களால் குடிக்கவும். அங்கே மென்மையாக முத்தமிடவும் செய்யலாம். இப்படியாக பத்து விரல்களிலும் முத்தமிட்டு முடிந்த பிறகு கையைக் கவிழ்த்துப் பிடித்து ஒவ்வொரு விரலையும் மடக்கி விரல் நுனியில் மீண்டும் இதே போல் செய்யவும். பிறகு கையைத் திருப்பி விரித்துப் பிடித்து விரல்களில் முத்தமிட்டுப் பல முத்தமிட்டுக்கொண்டே இருக்கவும். உள்ளங்கை வெள்ளையில் ஒரு ஆழமான முத்தம் வைப்பதோடு இந்த முத்தம் முழுமையடைகிறது. எத்தனை முத்தம் இட்டாலும் ஆசை தீராத, உதடு களைப்படையாதவர்களுக்கு இந்த முத்தம் பொருத்தமானது.

ஜிப் முத்தம் (Zib Kiss) : ஒரு ஜிப் போடும் அதே வேகத்தில் இந்த முத்தத்தை அளிக்க வேண்டும். முத்தம் கொடுக்க உத்தேசித்திருக்கும் நபரின் கையை இழுத்து நீட்டி வைக்கவும். நடு விரலின் நுனியிலிருந்து கைக்குழி வரை நீள் ரேகையில் ஒரு ஜிப் இருக்கிறதென்று கற்பனை செய்துகொள்ளவும். உதட்டால் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை ஜிப் இழுத்து மூடுவது போல் தோல் பிடித்து முத்தம் அளிக்கவும். பிறகு ஜிப்பை இழுத்துத் திறக்கவும். புறங்கையிலும் இதைத் திரும்பச் செய்யலாம். நீள்முத்த வகையில் அடங்கும் முத்தம் இது.

பாத முத்தம் (Foot Kiss) : கீழ்ப்படிதலையும் காதலையும் ஒன்றாக தெரிவிப்பதற்கான முத்தம் இது. கால்விரல் நுனியை சப்பியபடி பாதங்களை தாமரைப் பூக்களைப் போல் சேர்த்துப் பிடித்து அவற்றின் மத்தியில் இந்த முத்தத்தை அளிக்கலாம். முட்டி போட்டு குனிந்து உட்கார்ந்து அளிக்கிற இந்த முத்தம் கர்வம் பிடித்த உங்களின் இணையைத் திருப்திப்படுத்துகிறது. பாதங்களின் அடி பாகத்தை ஒன்றாகச் சேர்த்தெடுத்து வேகமாக முத்தமிட்டுக்கொண்டே இருக்கவும். கர்வமெல்லாம் அழிந்துபோய் கிச்சுக்கிச்சுக் கூச்சத்தில் நெளிந்து குழந்தையைப் போல வெடித்துச் சிரிப்பதைப் பார்க்கிறீர்கள்தானே?

ஸ்கூட்டர் முத்தம் (Scooter Kiss) : பழைய பஜாஜ், LML வெஸ்பா ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும்போது உண்டாகும் சப்தம்தான் இந்த முத்தத்தின் பிரதானமான கவர்ச்சியம்சம். கன்னம், வயிறு ஆகிய இடங்கள் இந்த முத்தத்துக்கு ஏற்ற இடங்கள். உதடுகளைச் சேர்த்துக் குவித்து வைத்து ‘ப்ர்ர்ர்ர்ர்ர்’ என்ற சத்தம் எழுப்பி அழுத்தமாக முத்தமிடவும்.

காற்று முத்தம் (Wind Kiss / Vacuum Kiss) : வழக்கம்போல் முத்தம் வெளி நோக்கி வைப்பதற்கு பதிலாக உள்நோக்கி வாயை உறிஞ்சுவதுதான் இதன் செய்முறை. உதடோடு உதடு சேர்த்து முத்தமிடும்போது வாயை கொஞ்சம் திறந்து வைத்து ஆத்மாவை இழுத்துஎடுப்பதைப் போல காற்றை ஆழமாக உறிஞ்சவும்.

பறக்கும் முத்தம் (Flying Kiss) : உள்ளங்கையில் முத்தம் இட்டுப் பிறகு ஊதிக் காற்றில் பறக்கவைக்கும் முத்தம். தூரம் ஒரு பிரச்னையல்ல என்பது இந்த முத்தத்தின் சிறப்பம்சமாகும். வீட்டுக்காவலில் வைக்கப்பட்டவர்களுக்கும் வீட்டின் பால்கனியில் இருப்பவர்களுக்கும் ரகசியமாக எத்தனை முத்தம் வேண்டுமென்றாலும் கொடுக்கலாம் என்பதால் இது அதிக அளவில் ஜனரஞ்சகப் புகழ் வாய்ந்தது.

மயில்தோகை முத்தம் (Peacock Kiss) / தேவதை முத்தம்(Angel Kiss) : கற்பனை வளத்துடன் இந்த முத்தத்துக்கு இந்தப் பெயர் வழங்கப்பட்டுள்ளதாகக் கொள்ளலாம். Eye Kiss, Eyelid Kiss ஆகிய பெயர்களிலும் இந்த முத்தம் அறியப்படுகிறது. திறந்திருக்கும் கண்ணின் இமைகள் கொண்டு அளிக்கப்படும் முத்தம் இது. நாக்கால் கண்ணின் உள் இமை மடல்களை மிருதுவாகத் தொடுவது இந்த முத்தத்தை இன்னும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

தொப்புள் முத்தம் : (Cavern Kiss) : தொப்புளின் ஆழத்தை அளக்கின்ற ஒருவகை முத்தம் இது.

அலை முத்தம் (The Wave Kiss) : நாக்கின் நுனியால் இந்த முத்தத்தை அளிக்கவேண்டும். நாக்கைக் கூர்மையாக்கி அதன் நுனியால் வாய்க்குள் சுழி போல சுழற்ற வேண்டும். அலை போல அதன் வேகத்தை அதிகமாக்க வேண்டும். மிக அற்புதமான முத்த வகை இது.

புல்லுருவி முத்தம் (Mistle toe Kiss) : ஒரு புல்லுருவி ஒரு மரத்தில் வேரை ஆழப் பதிப்பதைப் போன்றது இந்த முத்தம். பற்களாலும் உதடுகளாலும் முத்தமிடும்போது கைவிரல் நகங்களால் கொழுத்த இடங்களில் இறுக்கிப் பிடிக்க வேண்டும். காற்பாதத்துக்கு மேல் ஏறி விரல் அழுத்தி உயர்ந்து இந்த முத்தத்தை இட வேண்டும். நெஞ்சாங்கூட்டின் மேலும் கழுத்திலும் இடலாம். உடல் எரிச்சலும் புகைச்சலும் இதை மேலும் அற்புதமாக்குகிறது. புல்லுருவிக்கு போதும் என்று தோன்றும்போதுதான் இந்த முத்தத்தை முடிக்க வேண்டும். (முன் எச்சரிக்கை: வலியைப் பொறுத்துக்கொள்ளவே முடியாதவர்களுக்கு இந்த முத்தத்தை அளிக்கக் கூடாது.)

முத்தங்களின் அகராதி இத்துடன் முற்றுப்பெறவில்லை. இன்னும் மீதமிருக்கும் பக்கங்களை இட நெருக்கடி காரணமாக சேர்க்க முடியாமைக்கு வருந்துகிறேன்

http://malaigal.com/?p=6161

இனி யாரும் புல்லுருவி என்று சொன்னால் கோபப்படக்கூடாது :lol:

புல்லுருவி முத்தம் (Mistle toe Kiss)

article-2066715-0000F1D900000258-869_468

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
காய்ஞ்சமாடு கம்பிலை விழுற மாதிரி / எடுத்தமாம் கவுட்டமாம் எண்டு இருக்குற  ஆக்களுக்கு நல்ல இணைப்பு....... :icon_idea:
 
எண்டாலும் உந்த வரிசையிலை இரண்டாவது பாருங்கோ....
சொல்லி வேலையில்லை........ :wub:
அதிலையும் அடுத்தநாள் காலமை கடிவிழுந்த இடத்தை காட்டி கடிச்சவனுக்கே முறைப்பாடு சொல்லுவினம் பாருங்கோ....அய்யய்யே.... :wub:  :wub:
பிறகென்ன அதை சமாளிக்க முத்த அகராதியே தேவைப்படும் பாருங்கோ :lol:  :D
  • கருத்துக்கள உறவுகள்
 
உம் என்ன அகராதி இது ....
பாதியை காணோம்??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.