Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்சியின் ஆலோசகர் பதவியும் மகிந்தவிற்கு பறிபோகும் நிலை

Featured Replies

853197cadb7f0bf1a498fa7fcc83ce07_L.jpg
 
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற இரவு அரச அதிகாரத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக சூழ்ச்சி செய்தமைக்கான சாட்சியங்கள் கிடைக்கப் பெற்றால், அவரை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து விலக்குவதற்கு அந்தக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நீதித்துறை அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, 'லங்காடெய்லி' இணையத்தளத்திற்க வழங்கிய செவ்வியில், முன்னாள் ஜனாதிபதி மகிந்தவிற்கு தற்போது விடுவொன்று இல்லையெனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற இரவு அலரி மாளிகையில் சூழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டதாக சாட்சிகள் கிடைக்கப் பெற்றால் அவர் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்படுவார் என அவர் குறிப்பிட்டார்.
 
''குறித்த தினத்தில் அந்த இடத்தில் இருந்த அனைவருக்கெதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மகிந்த ராஜபக்சவும் அந்த இடத்தில் இருந்துள்ளார். தற்போது அவருக்கு விடுவொன்று இல்லாமல் இருக்கிறது. 35 சரத்தில் இருந்த பாதுகாப்பு தற்போது இல்லாமல் போயுள்ளது. குற்றமிழைத்திருந்தால் அவரும் நிச்சயமாக நீதிமன்றத்தின்முன் நிறுத்தப்படுவார். நல்லாட்சி நடத்துவதற்கு நாட்டில் நீதித்துறை அடிப்படையானது'' என அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறாயினும், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி பதவி வகித்த ஒருவருக்கு கட்சியின் ஆலோசகர் பதவி வழங்கப்படும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் 12ஆவது சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதற்கமைய தற்போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோருக்கு ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamil.srilankamirror.com/news/item/1346-2015-01-24-10-07-49

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.