Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவீர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்புவீர்கள்! 

bc447360d751ea9bf7aa4909d3e53698.jpg
 
நீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார்.
 
வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கும் மாணவர்களுக்கு ஒரு தொகுதி காலணிகளை  பிரிட்டன் அமைச்சர் வழங்கினார்.
 
அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
என்னை வரவேற்றதற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பிரதமர் டேவிற் கமரூன் வந்தமையினால் நானும் வர விரும்பினேன். 
 
இங்கிருக்கும் பிள்ளைகள் அனைவரும் தங்களுடைய சொந்த இடங்களில் பிறக்கவில்லை என்றும் இந்த முகாம்களில் பிறந்துள்ளனர் என்பதையும் நான் நன்கு அறிவேன்.
 
அனைவரும் ஆர்வமாக இருக்கும் தருணத்தில் நான் இலங்கைக்கு 2 ஆவது தடவையாக வந்துள்ளேன். இலங்கையில் தற்போது நடைபெறுகின்ற மாற்றத்தோடு உங்களுடைய சொந்த இடங்களுக்கு செல்வதற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்று நம்புகின்றேன். 
 
பிரித்தானிய மக்களுடைய விருப்பத்திற்குசார்ப்பான காலணிகள் வழங்குவதில் மகிழ்ச்சி, பாடசாலை, உங்களுடைய ஊருக்குச் செல்லவும் வாய்ப்புக் கிடைக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 
 
 
 
 
 
இராணுவத்தின் பிடியிலுள்ள  நிலங்களை மீட்டுத் தாருங்கள்; வலி.வடக்கு மக்கள் கோரிக்கை
 
இராணுவத்தின் பிடியிலுள்ள நிலங்களை மீட்டுத்தருமாறு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடம் வலி.வடக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள சபாபதிப்பிள்ளை முகாமிற்கு இன்றைய தினம் விஜயம் செய்த பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரிடமே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
 
நீண்ட காலமாக முகாம்களிலே வாழ்ந்து வருகின்றோம் விரைவில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை எங்களுக்கு பெற்றுத்தர நடவடிக்கை எடுங்கள் என கோரினர். 
 
இதேவேளை வலி.வடக்கில் இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான நிலங்களின் வரைபடத்தையும்பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்  பார்வையிட்டார்.
 
IMG_0008%20copy(4).jpg
 
IMG_0010%20copy.jpg
 
IMG_0019%20copy.jpg
 
IMG_0027%20copy.jpg
 
IMG_0092%20copy.jpg
 
IMG_0098%20copy.jpg
 
 
 
 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=380643842330777620#sthash.Z5AoMmMM.dpuf

வலி.வடக்கில் படையினருக்கு நீச்சல் தடாகம்
[ ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2015, 10:20.36 AM GMT ]
swiming_pool_army_001.jpg
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் படையினருக்கான நீச்சல் தடாகம் மற்றும் படையினருக்கான கிளப் ஆகியனவற்றை படைத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரத்நாயக்க திறந்து வைத்துள்ளார்.

உயர்பாதுகாப்பு வலயம் விடுவிக்கப்படும் என்னும் நம்பிக்கை எழுந்திருக்கும் சமகாலத்தில் படையினருக்கான நீச்சல் தடாகத்தினை ஜெனரல் தயா ரத்நாயக்க கடந்த வியாழக்கிழமை திறந்து வைத்துள்ளார்.

 

குறித்த பகுதியில் பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கும் தல்செவன உல்லாச விடுதியிலேயே குறித்த நீச்சல் தடாகம் மற்றும் படையினருக்கான கிளப் ஆகியனவற்றை படைத்தளபதி ஆரம்பித்து வைத்திருக்கின்றார்.

மேலதிகமாக இந்த நிகழ்வில் ஒவ்வொரு படைப்பிரிவுக்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால் மறுபக்கம் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் மக்கள் குடியேற்றப்படுவார்கள் என்ற பேச்சை நம்பிய வலி,வடக்கு முகாம் மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் விரைவில் மீள்குடியேறும் கனவுடன் காத்திருக்கின்றமையும்,

புதிய மீள்குடியேற்ற அமைச்சு உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள காணிகள் குறித்த தகவல்களை, சேகரித்துக் கொண்டிருக்கின்றமையும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

swiming_army_002.jpg

swiming_army_003.jpg

swiming_army_004.jpg

swiming_army_005.jpg

swiming_army_006.jpg

swiming_army_007.jpg

http://www.tamilwin.com/show-RUmtyCTVKcew1.html#

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.