Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனாவின் பட்டுப்பாதையும் முத்து மாலையும் வேல் தர்மா (ஒரு பேப்பருக்காக)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சீனாவின் பொருளாதாரம் அதன் ஏற்றுமதி
யில் பெரிதும் தங்கியுள்ளது. சீனாவின் முக்கிய
ஏற்றுமதி நாடுகளான ஐரோப்பிய ஒன்றிய நாடு
களும் வட அமெரிக்க நாடுகளும் பொருளா
தாரப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருக்
கையிலும் சீனா தனது உள்நாட்டு மக்களின்
கொள்வனவை அதிகரிக்க முடியாத நிலையி
லும் புதிதாக ஏற்றுமதிச் சந்தைகளை சீனா
தேடிக்கொண்டிருக்கின்றது. சீனாவின் உள்
நாட்டு வேதனம் மற்றும் கொள்வனவு அதன்
மொத்தத் தேசிய உற்பத்தியில் 56 விμக்காடாக
1983-ம் ஆண்டு இருந்தது. அது பின்னர் 36 விμக்
காடாகக் குறைந்து விட்டது.
ஏற்றுமதியில் தங்கியிருக்கும் தனது பொரு
ளாதாரத்தை உலக நெருக்கடிகள் பாதிக்காமல்
இருக்க சீனா ஒரு கடல் வழிப்பட்டுப்பாதையை
உருவாக்கியதுடன் மாற்றுப் பாதையாக
மத்திய ஆசியாவினூடாக ஒரு தரைவழிப்பட்டுப்
பாதையையும் உருவாக்கியுள்ளது. சீன ஏற்று
மதியில் பெரும்பகுதி ஐரோப்பிய ஒன்றிய நாடுக
ளுக்குச் செல்கின்றது. சீனாவிற்கும் 28 நாடு
களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திற்கு
இடையிலான வர்த்தகம் அதிகரித்துச் செல்
கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் சீனாவிற்
கும் இடையிலான வர்த்தகம் நாளொன்றிற்கு
ஒரு பில்லியன் யூரோ நாணயம் பெறுமதியான
தாகும். சீனப் பொருட்கள் கடற்பாதையூடாக
ஐரோப்பாவிற்குச் செல்வதாயின் மலாக்கா
நிரிணையைக் கடந்து இந்து மாகடல் கடந்து
சென்று ஏடன் வளைகுடாவுடாகச் சென்று சூயஸ்
கால்வாயையும் கடந்து சென்று கிப்ரல்டர் நீரி
ணையில் (நஞ்சுஹகூஞ் ச்கி எகூஸசுஹஙீஞ்ஹசு) புகுந்து இரு
வல்லரசுகளான பிரான்சிற்கும் பிரித்தானியா
விற்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாய்
ஊடாகப் பயணித்து ஐரோப்பாவை அடைய
வேண்டும். இதற்கு சிங்கப்பூர், கொμம்பு,
கெய்ரோ, லிஸ்பன் (போர்த்துகல்) ஆகிய
துறைமுகங்கள் முக்கியமானவையாகும். சீனா
வின் ஏற்றுமதி வர்த்தகம் நடக்கும் இந்தப்
பாதையை புதிய பட்டுப்பாதை என அழைக்கிறார்
கள். ஆனால் இப்பாதை உலகின் மிக மோச
மான திருகுப் புள்ளிகளைக் (ஷகுச்ஙிக் சிச்கூஙூஞ்சூ)
கொண்ட பாதையாகும். இதற்குப் பாதுகாப்பாக
முதலாம் கட்டமாக சீனா முத்து மாலைத் திட்டம்
என்னும் பெயரில் தொடராகப் பல துறை முகங்க
ளைத் தன் வசப்படுத்தி அபிவிருத்தி செய்து
வருகின்றது. சீனாவின் முத்துமாலைத் திட்டத்
தில் உள்ள துறை முகங்கள்:  Hong Kong, Sanya,
Islas Woody, Islas Spartly, Sihanoukville, Islas coco,
Sittwe(Burma) Chittagong (Bangladesh)
Hambantota (Sri Lanka), Maro(Maldives) Gwadar
Y Pansi(Pakistan) Al Ahdab(Iraq), Lamu(Kenya)
Puerto Sudan.
சீனாவின் பட்டுப்பாதையும் முத்து மாலையும்
சீனாவின் ஏற்றுமதிக்கு மட்டுமல்ல எரிபொருள்
இறக்குமதிக்கும் முக்கியமானதாகும். சீனா
வின் பட்டுப்பாதையிலும் முத்து மாலையிலும்
இலங்கை மிக முக்கியமான ஒரு அம்சமாகும்
இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும்
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் இந்தியப்
பயணமும் சீனாவின் முத்து மாலை அறுபடுமா
பட்டுப்பாதை உடைபடுமா என்ற கேள்விகளை
எμப்பியுள்ளது. ஏற்கனவே சீன முத்து மாலை
யின் ஒரு துறைமுகமான பர்மாவின்(மியன்மார்)
துறைமுகத்தின் மீள் கட்டுமான வேலைகளை
இந்தியா பொறுப்பு ஏற்று விட்டது. தென் சீனக்
கடலில் சீனாவின் அச்சுறுத்தலால் மலேசியா
தனது நீர் மூழ்கிக் கப்பல்களின் தரத்தையும்
எண்ணிக்கையும் உயர்த்திக் கொண்டிருக்
கின்றது. இது மலாக்கா நீரிணையில் சீனாவின்
பட்டுப்பாதைக்கு அச்சுறுத்தலாகும் பராக் ஒபா
மாவின் இந்தியப் பயணம் இந்திய அமெரிக்க
படைத்துறை ஒத்துழைப்பை வலுவடையச்
செய்யலாம் என்ற அச்சத்தில் இரசியா இந்தியா
வுடன் இணைந்து செயற்படும் தன் விருப்பத்
தைத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுடன் இணைந்து ஐந்தாம் தலை
முறைப் போர் விமானங்களை உற்பத்தி செய்வ
தைத் துரிதப் படுத்தவும் இந்தியாவிற்கு காற்
றில்லா உந்து வலு நீர்மூழ்கிக் கப்பல்களை விற்
பனை செய்யவும் இரசியா முன் வந்துள்ளது.
 அதிக எடையுள்ள படைக்கலங்களை ஏந்திச்
சென்று வீசுதல்,
 நஞ்க்ஹஙீஞ்கு எனப்படும் ரடாருக்குப் புலப்படாத
தன்மை,
 உயர் தரப்பறப்புச் செயற்பாடு,
 தரையிலும் வானிலும் உள்ள கட்டளை
நிலைகளுடனும் மற்றப் படை நிலைகளுட
னும் சிறந்த தொடர்பாடல்,
 மிகப் புதிய ரகக் கணனிகள்
ஆகியவை ஐந்தாம் தலைமுறைப் போர்
விமானங்களின் அம்சங்களாகும். இரசியாவின்
ப-50 ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்கள்
அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறைப் போர்
விமானங்களான ஊ-22 இலும் பார்க்கச் சிறந்த
வையாகக் கருதப்படுகின்றன.
இரசியாவும் இந்தியாவும் இணைந்து ஐந்தாம்
தலைமுறைப் போர் விமானங்களை வடிவமைப்
பும் உற்பத்தியும் செய்வதாக 2012-ம் ஆன்டு
உடன்பட்டன. இரு தரப்பினரும் ஆளுக்கு
ஐந்தரை பில்லியன் அமெரிக்க டொலர்கள்
செலவளிப்பதாகவும் ஒத்துக் கொள்ளப்பட்டது.
ஆனால் வடிவமைப்பு தொடர்பான தகவல்
களை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இரசியா
தயக்கம் காட்டியது. அத்துடன் உற்பத்தியும்
தாமதம் அடைந்தது. இதனால் இந்தியா விரக்தி
யடைந்திருக்கையில்2015 ஜனவரி மாதம் 21-ம்
திகதி இரசியாவினதும் இந்தியாவினதும்
பாதுகாப்பு அமைச்சர்களான சேர்கி ஷொய்
குவும் மனோகர் பரிகாரும் சந்தித்து ஐந்தாம்
தலைமுறைப் போர் விமான உற்பத்தியை துரிதப்
படுத்த ஒத்துக் கொண்டுள்ளனர். ஒரு விமானி
யைக் கொண்ட ஐந்து பரீட்சார்த்த விமானங்
களை ஏற்கனவே இரசியா உருவாக்கி விட்டது.
இந்தியாவிற்குத் தயாரிக்கப்படவிருக்கும்
விமானங்கள் ஒரு விமானியும் ஒரு படைக்கல
இயக்குனரும் பயணிக்கக் கூடியனவாக அமை
யும். இந்தியா 127 விமானங்கள் தனக்கு உற்
பத்தி செய்யும். ஆனால் இதற்கு இன்னும் பத்து
ஆண்டுகள் வரை எடுக்கலாம் என எதிர்பார்க்
கப்படுகின்றது.
இந்தியாவிற்கு தனது காற்றின்றிய உந்து
வலுவின் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களை
விற்பனை செய்யவும் இரசியா முன்வந்துள்
ளது. காற்றின்றிய உந்து வலுவின் இயங்கும்
நீர் மூழ்கிக் கப்பல்கள் டீசல் மின்சாரத்தால்
இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களிலும் பார்க்கக்
குறைந்த அளவு ஒலி எμப்பும். இதனால்
இவற்றை எதிரிளால் இனம் காண்பது கடினமா
கும். அணுவலுவில் இயங்கும் நீர்மூழ்கிகள்,
டீசல் மின்சாரத்தில் இயங்கும் நீர்மூழ்கிகள்,
காற்றின்றிய உந்து வலுவில் இயங்கும் நீர்
மூழ்கிகள் ஆகிய மூன்று வகைககளில் காற்றின்
றிய உந்து வலுவின் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்
களே எதிரிகளால் இனம் காணுவது கடினமாகும்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஜனவரி 25-ம்
திகதி இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்
தின் போது அமெரிக்காவும் இந்தியாவும் பாது
காப்புத் துறையில் ஒத்துழைப்பும் படைத்துறை
விற்பனையும் தொடர்பாகப் பல உடன்பாடுகள்
எட்டப் படலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே
இரசியா இந்தியாவுடன் இணைந்து ஐந்தாம்
தலைமுறைப் போர் விமானங்களை உற்பத்தி
செய்வதைத் துரிப்படுத்தவும் காற்றின்றிய
உந்து வலுவின் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்
களை விற்பனை செய்யவும் முன்வந்துள்ளதாக
நம்பப்படுகின்றது.
விமானம் தாங்கிக் கப்பல்களில் இருந்து
விமானங்கள் இலகுவாகப் பறக்கவும் இறங்
கவும் அமெரிக்கா உஙீக்ஷஞ்சுச்ஙுஹகீஙூக்ஞ்கூஷ அகூசுஷசுஹகிஞ் கஹஞிஙூஷகு
நட்சூஞ்க்ஙு என்னும் தொழில்நுட்பத்தை உருவாக்கி
யுள்ளது. உஙஅகந எனச் சுருக்கமாக அழைக்
கப்படும் இந்த முறைமை உற்பத்தியை தன்னு
டன் இணைந்து செய்யுமாறு அமெரிக்காவை
இந்தியா கோரியுள்ளது. இந்த முறைமை செலவு
குறைந்ததும், பராமரிப்புத் தேவை குறைந்ததும்
ஆகும். அத்துடன் பாரமான விமானங்களையும்
 பாரம் குறைந்த விமானங்களையும் இலகுவாக
சேவையில் ஈடுபடுத்த முடியும். இந்த முறை
மையை இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து
உற்பத்தி செய்வது பற்றிய பேச்சு வார்த்தைகள்
துரிதப்படுத்தப்படவிருப்பதாகத் தெரிகின்றது.
ஏற்றுமதியில் தங்கியிருக்கும்
தனது பொருளாதாரத்தை உலக
நெருக்கடிகள் பாதிக்காமல்
இருக்க சீனா ஒரு கடல்
வழிப்பட்டுப்பாதையை
உருவாக்கியதுடன் மாற்றுப்
பாதையாக மத்திய
ஆசியாவினூடாக ஒரு
தரைவழிப்பட்டுப்பாதையையும்
உருவாக்கியுள்ளது.
அமெரிக்கா இந்தியாவுடன் கச்கீகூசூஞ்கூஷசூ நஞிசிசிச்சுஞ்
அகீசுக்க்ஙுக்ஙூஞ் எனப்படும் படைத்துறைப் பல்வழங்கல்
ஆதரவு உடன்படிக்கை செய்ய அதிக அக்கறை
காட்டுகிறது. 2006-ம் ஆண்டு இரு நாடுகளும்
கேந்திரோபாயப் பங்காண்மை ஒப்பந்தம்
செயததில் இருந்து அமெரிக்க இந்தியாவுடன்
படைத்துறைப் பல்வழங்கல் ஆதரவு உடன்
படிக்கை செய்ய விருப்பம் கொண்டுள்ளது.
இந்த உடன் படிக்கை கைச்சாத்திடப் பட்டால்
அமெரிக்காவின் கடற்படையினர் இந்தியாவின்
படைத் தளங்களைப் பாவிக்க முடியும். அமெரிக்
காவின் படைக் கப்பல்களும் விமானங்களும் நீர்
 முழ்கிக்கப்பல்களும் இந்தியாவில் எரிபொருள்
நிரப்ப முடியும். இவற்றின் பராமரிப்புக்களை
இந்திய மண்ணிலும் கடலிலும் செய்ய முடியும்.
இதே போல் அமெரிக்காவின் படைத் தளங்
களை இந்தியாவும் பாவிக்க முடியும். இந்தியா
வின் மிகப் பெரிய கடற்பரப்பு அமெரிக்கா
விற்குப் பெரும் பயன் தரும். இந்தியக் கடற்கரை
ஓரங்களை அமெரிக்கக் கடற்படை பாவிக்கத்
தொடங்கினால் அது சீனாவிற்கு பெரும் அச்
சுறுத்தலாக அமையும். அமெரிக்காவின் லேசர்
கதிர்த் தொழில் நுட்பத்துடன் கூடிய எவுகணை
எதிர்ப்பு முறைமை சீனாவைப் படைத்துறை
ரீதியில் பின்னுக்குத் தள்ளிவிடும்.
அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்தால்
சீனாவின் முத்து மாலையை அறுக்க முடியும்
பட்டுப்பாதையை உடைக்க முடியும்.
வேல் தர்மா
(ஒரு பேப்பருக்காக)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.