Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

என்ன செய்ய போகிறோம் நாம் ஈழ விடுதலைக்கு

Featured Replies

wthhmc.jpg

 

          2009ல் ஈழத்தமிழர்களை இலங்கையோடு சேர்ந்து இனப்படுகொலை செய்த இந்தியா மற்றும் அமெரிக்கா.2009க்கு பிறகான தமிழீழக்கோரிக்கையை 2012 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐநாவில் தீர்மானங்கள் மூலம் நீர்த்துப்போகச் செய்தது.

 

      குறிப்பாக இலங்கையின் மீது சர்வதேச விசாரணை வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் ஒரு வேளை வந்துவிட்டால் அது 60 ஆண்டுகளுக்கான போராட்டத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது (60அண்டுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் அது இனபப்டுகொலை என எளிமையாக நிருபிக்கமுடியும் மேலும் தமிழீழம் அமைத்து தரவேண்டிய அவசியமும் ஏற்படும்) என்பதற்காகவும் முதலில் உள்நாட்டு விசாரணை என்றது .பின் 2002 முதல் 2009வரை மட்டுமே விசாரணையென்று சுருக்கியது அமெரிக்கா.இதன் பிண்ணணியில் இருந்தது இந்தியாதான்.

 

 

இதற்கிடையில் இராசபக்சேவின் சீனா பாசம் அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு பெரும் தலைவழியை கொடுக்க இனி இராசபக்சே நமக்கு (மேற்குலகம் மற்றும் இந்தியாவுக்கு) தேவையில்லையென்று நினைத்த அமெரிக்கா இந்தியாவுடன் சேர்ந்து 2014ல் இலங்கை மீது சர்வதேச விசாரணை என்றும் சொல்லியது. அதோடு நில்லாமல் அது.

 

1. புலிகளையும் விசாரிக்க வேண்டுமென்றும்.

2. இலங்கையில் நடந்தது ஒரு மதச் சிறுபாண்மையினருக்கான மோதல் என்ற ஒரு அபத்ததை வரையறுத்தது.தமிழர்களை ஒரு தனித்த தேசிய இனம் என்பதை திட்டமிட்டு மறைத்தது.

 

ஆனால் இன்று என்ன நடக்கிறது. ஜனவரி 8’2015 அமெரிக்கா மற்றும் இந்தியா விரும்பிய படி இலங்கையில் இராசபக்சே அரசு மாறி 2009 இனப்படுகொலையின் போது இராசபக்சே அரசில் பங்கு வகித்து சரணடைய வந்த தமிழர்களை சுட்டுக்கொல்ல கோத்தபயவுடன் சேர்ந்து உத்தரவிட்ட மைத்திரிபால சிறிசேனா அரியணைக்கு வந்தவுடன் அமெரிக்காவும் சரி இந்தியாவும் சரி மிகத்தீவிரமாக தமீழீழக் கோரிக்கையை அழிக்க அனைத்து வேலைகளையும் செய்ய ஆரம்பித்திருக்கிறது. இதனை கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்கள் நமக்கு வெட்டவெளிச்சமாக காட்டுகிறது.அவை

 

 

ஜனவரி 27 அன்று அமெரிக்க இராஜாங்கத்தின் முன்னாள் வெளியுறவு பிரதிநிதியான தீசிஸ் ஸ்சாப்பர் இலங்கை விசயத்தில் இனி அமெரிக்கா எப்படிப்பட்ட முடிவை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். http://southasiahand.com/…/sri-lanka-after-the-election-up…/ அதில்

”இலங்கையின் ஆட்சி மாற்றத்தை பயன்படுத்தி அமெரிக்காவும் இந்தியாவும் சில இராஜந்திர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும், இதற்கு பயனையாக வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமை கூட்டத்தில் அமெரிக்கா இலங்கைமீதான எந்தவொரு தீர்மானத்தினையும் வைக்கக்கூடாது. அதையும் மீறி ஐநா மனித உரிமை ஆணையம் ஏதாவது தீர்மானத்தை முன்மொழிந்தால் அதனை இந்தியாவோடு சேர்ந்து தடுக்க வேண்டும். இதற்கான ஆதரவை அனைத்து நாடுகளும் வழங்க செய்யும் வேலையையும் அமெரிக்காவும் இந்தியாவும் செய்யவேண்டும்.இலங்கையின் மனித உரிமை மீறலை அமெரிக்கா தனது கட்டுபாட்டில்தான் வைத்திருக்க வேண்டும்.இதனை இலங்கையும் அமெரிக்காவுமே பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும்.

இப்போது சர்வதேச மட்டத்திலும் பாதிக்கபட்டவர்கள் மட்டத்திலும் எழும் குரலை அடக்க இந்தியா இலங்கையோடு பேசி நல்லிணக்க ஆணைக் குழுவினால பரிந்துரைக்கப்பட்ட சில பரிந்துரைகளை நிறைவேற்றச் செய்ய வேண்டும்.இதனை இந்தியா ஆரம்பித்துவிட்டது என்றே நினைக்கிறேன்.இப்படி செய்வதன் மூலம் இலங்கையில் பொருளாதார அளவில் மேற்குலக நாடுகள் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன்) தங்களது ஆதிக்கத்தை செலுத்த முடியும்.”

 

 

இப்படி ஒரு கட்டுரையை எழுதி அமெரிக்கா தனது நலன் சார்ந்து விரைவாக முடிவெடுக்கவேண்டுமென்று ஆலோசனைகளை வழங்கியிருந்தார். இப்போது சிலருக்கு சந்தேகங்கள் வரக்கூடும் யாரோ ஒருவர் எழுதும் கட்டுரைக்கு அமெரிக்கா மதிப்பளிக்குமா என்று? இந்த கட்டுரையை எழுதியவர் வெறும் முன்னால் அதிகாரி மட்டுமல்ல இவர்தான் 90 களிலிலேயே இலங்கை பிரச்சனையை கவனித்துக்கொள்ள அமெரிக்காவினால் இலங்கைக்கு அனுப்பட்டவர். இவரின் 30 ஆண்டுகளான வெளியுறவு அதிகாரி வாழ்க்கையில் 11 ஆண்டுகள் தெற்காசியாவில் இருந்தவர். இவரின் கருத்தின் அடிப்படையில் தான் கடந்த காலங்களில் அமெரிக்காவின் தெற்காசியா கொள்கைகள் இருந்திருக்கிறது. இப்படிப்பட்ட மிக முக்கியமான ஒருவர் எழுதியதை நாம் சாதாரணமாக விட்டுவிடமுடியாது இதேபோலத்தான்

 

கடந்த மாதம் ஜனவரி 28 அன்று அமெரிக்காவின் முன்னாள் துணை செயலாளரும் அமைதி ஒப்பந்த காலத்தில் இலங்கை அரசுடனும் புலிகளுடனும் (2002-2004 வரை இரணில் ஆட்சி காலத்தில்) பேசியவருமான ரிச்சர்ட் ஆர்மிடேஜ் அமெரிக்க பத்திரிக்கையிலேயே மேற்சொன்ன கருத்தை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதினார். அதில் “இது தான் சரியான தருணம் இந்துமகா சமுத்திரத்தில் அமெரிக்கா நிலைக்கொள்ளவும், அமெரிக்கா தனது நலன் சார்ந்து இலங்கையோடு உள்ள தனது கொள்கையை மாறுவாக்கம் செய்யவும் ஏனென்றால் இப்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு அமெரிக்காவின் நலன் சார்ந்த அரசு’என்று வெளிப்படையாக எழுதினார்.http://www.asiantribune.com/node/86321 அமெரிக்க அரசின் கொள்கை வகுப்பாளராகவும் அதனை செயற்படுத்துபவராகவும் இருந்தவர்கள் இப்படி தொடர்ச்சியாக எழுதிவந்த வேளையில் தான் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் நிசா தேசாய் பிஸ்வால் ஜனவரி 31, பிப்.1 மற்றும் பிப். 2 என மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு வருகை தந்தார். இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதலில் வந்த வெளிநாட்டு உயரதிகாரி அமெரிக்காவை சேர்ந்த பிஸ்வால்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதன்படி இலங்கைக்கு வருகைதந்த அவர் இலங்கையில் அதிபர் சிறிசேனா இரணில் விக்கரம்சிங்கே தமிழ்தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லீம் தலைவர்கள் என்று பலரையும் சந்தித்தார்,இந்த சந்திப்பில் முக்கியமாக அவர் சொன்னது ”இலங்கையில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்காவிற்கு சுமூகமான சூழல் ஏற்பட்டிருப்பதால், ஐ.நாதீர்மானத்தினை முன்னுக்கு கொண்டுவந்து பிரச்சனைகளை வளர்க்க விரும்பவில்லை என்று பேசியிருக்கிறார்.” http://www.newindianexpress.com/…/…/02/04/article2652351.ece

இதனையேதான் சமீபத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த காமன்வெல்த் நாடுகளில் செயலாளர் இந்தியாவை சேர்ந்தவரான கமலேஷ் சர்மாவும் வழிமொழிந்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழ்தேசிய பாராளுமன்ற உறுப்பினர் வரும் மார்ச் மாதம் மட்டுமல்ல, செப்டம்பர் 2015 இல் கூட அமெரிக்க தீர்மானத்தின் மூலமாக கொண்டு வரப்பட்ட விசாரணையின் அறிக்கை சமர்பிக்கப்படுமா எனத் தெரியவில்லை என்று தனது கவலையை தெரிவித்திருக்கிறார்கள். இப்படி ஈழக்கோரிக்கையை தனது நலனை முன்னிறுத்தி முடக்க நினைக்கும் அமெரிக்காவுக்கு அனைத்து வேலைகளையும் பின்னிருந்து செய்துகொண்டிருக்கிறது இந்தியா..

அமெரிக்கா மற்றும் இந்தியாவின் இந்த கூட்டுச் சதியை உணர்ந்ததாலேயே 2012லிருந்தே அயோக்கிய அமெரிக்க தீர்மானத்தினை மே 17 இயக்கம் எதிர்த்தே வந்தோம். அமெரிக்கா தமிழரின் பிரச்சனையை வைத்து ஆட்சி மாற்றத்தினை செய்ய விரும்புகிறது. இதில் தமிழீழப்படுகொலை ஒரு பகடைக்காயாக பயன்படுத்தபடுகிறது. காரியம் முடிந்தவுடன் கைகழுவி விடும். மேலும் தமிழர்களை தேசிய இனமாக வரையறை செய்யாமல் மதச் சிறுபான்மையினராக வரையறை செய்து இனப்படுகொலை என்கிற பதம் வந்து விடாமல் கவனமாக தீர்மானத்தினை வரையறை செய்திருக்கிறது என்று போராடினோம்.

ஆனால் இதை எதையும் காதில் வாங்காமல் எங்களை குறைசொல்வதிலேயே குறியாய் இருந்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லபோகிறார்கள் என்று தெரியவில்லை ஒருவேளே இதற்கும் ஏதாவது சப்பை கட்டு கட்டுவார்களா என்று தெரியவில்லை.

 

இனி நாம் என்ன செய்யபோகிறோம் தங்களது நலனுக்காக தமிழரின் 60ஆண்டு கால விடுதலை போராட்டத்தை நசுக்க துடிக்கும் ஏகாதிபத்திற்கு அடிபணிய போகிறோமா?இல்லை எதிர்த்து நின்று நமது விடுதலையை முன்னெடுக்கப் போகிறோமா என்பதில் தான் இருக்கிறது இனி ஈழவிடுதலை.

இதோ நாங்கள் ஆரம்பித்துவிட்டோம் ஈழவிடுத்தலைக்கான பொதுவாக்கெடுப்பினை ஐநா மன்றமே உடனே நடத்தக்கோரி முருகதாசன் தீக்குளித்த பிப் 12ல் ஐநா அலுவலகத்தை முற்றுகையிடுகிறோம்.

ஈழத்தின் கோரிக்கையை விட எங்களது கட்சி இயக்கமே முக்கியம் என்பவர்களை தவிர்த்து, ஈழத்தினை நேசிக்கும் எவரும் இதில் பங்கேற்கலாம்.

 

சமரச அரசியல் தற்கொலைக்கு சமம்.

 

மே 17 இயக்கம்

 

www.velichaveedu.com/11215842/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.