Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

RCB 235/1

  • Replies 449
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

டிவிலியர்ஸ் சதம்: பெங்களூரு வெற்றி

 

மும்பை: மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல்.. லீக் போட்டியில் டிவிலியர்ஸ் சதம் விளாச பெங்களூரு அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவி்ல எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் இன்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

பெங்களூரு அணிக்கு கெய்ல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் டிவிலியர்ஸ், கோஹ்லி ஜோடி சிறப்பாக செயல்பட்டது. கோஹ்லி அரை சதம் அடித்தார். எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த டிவிலியர்ஸ் சதம் விளாசினார். பெங்களூரு அணி 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 235 ரன்கள் எடுத்திருந்தது. டிவிலியர்ஸ் (133), கோஹ்லி (82) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சிம்மன்ஸ் (68*), போலார்டு (49) அதிரடி காட்டினர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மும்பை அணி 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1249007

  • தொடங்கியவர்

சென்னை சுப்பர்கிங்ஸ் 157

  • தொடங்கியவர்

Chennai Super Kings 157/5 (20/20 ov)
Rajasthan Royals 40/1 (6/20 ov)

  • தொடங்கியவர்

2a5ddg1.jpg

 

Dwayne Bravo plucks a one-hander at the boundary, Chennai Super Kings v Rajasthan Royals, IPL 2015, Chennai, May 10, 2015 ©BCCI

  • தொடங்கியவர்

Chennai Super Kings 157/5 (20/20 ov)
Rajasthan Royals 145/9 (20/20 ov)
Chennai Super Kings won by 12 runs

  • தொடங்கியவர்

சென்னை அணி வெற்றி
 

சென்னை: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் பிரண்டன் மெக்கலம் அரை சதம் விளா, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னையில் இன்று நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான், சென்னை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

சென்னை அணிக்கு டுவைன் ஸ்மித் (6), ரெய்னா (3) ஏமாற்றினர். சிறப்பாக செயல்பட்ட பிரண்டன் மெக்கலம் அரை (81) சதம் அடித்தார். டுபிளசி 29 ரன்கள் எடுத்தார். நேகி (2) நிலைக்கவில்லை. சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்திருந்தது. தோனி (13), டுபிளசி ( 15) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

ராஜஸ்தான் அணிக்கு ரகானே (23), வாட்சன் (28) ஓரளவு கைகொடுத்தனர். ஜடேஜா 'சுழலில்' ஸ்டீவ் ஸ்மித் (4), ஹூடா (15) உள்ளிட்டோர் சிக்கினர். மற்றவர்கள் விரைவில் வெளியேற, ராஜஸ்தான அணி 20 ஓவரில் 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1249006

 

 

  • தொடங்கியவர்

2hmn2wz.png


2mb7g4.png

  • தொடங்கியவர்

ஐபிஎல் சூதாட்டம்: டெல்லியில் அமலாக்கப் பிரிவு சோதனை
 

 

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டம் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் டெல்லி மற்றும் குர்கான் பகுதிகளில் 4 இடங்களில் சோதனை நடத்தினர். இதில், 250 மொபைல்போன்கள், 10 லேப்டாப்கள் கைப்பற்றப்பட் டுள்ளன.

 

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அமலாக்கப் பிரிவு ஐபிஎல் சூதாட்டத்தில் ஹவாலா பணம் புழங்குவது மற்றும் கருப்புப் பண குற்றச்சாட்டுகளை விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 19-ம் தேதி குஜராத்தின் வடோதரா பகுதியில் உள்ள பண்ணை வீடுகளிலிருந்து சில புக்கிகளைக் கைது செய்தது.

 

கருப்புப் பண தடைச்சட்டத்தின் கீழ் மற்றுமொரு வழக்கை கடந்த மார்ச் 26-ம் தேதி பதிவு செய்த ஆமதாபாத் அமலாக்கப் பிரிவு ரூ.4,000 கோடி மதிப்பிலான ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக 2 முக்கியக் குற்றவாளிகள் மற்றும் சிலரைக் கைது செய்தது.

 

இவ்வழக்குகள் தொடர்பாக டெல்லி அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து நேற்று டெல்லி மற்றும் குர்கானில் சந்தேகத்துக்குரிய நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

 

டெல்லியின் கரோல் பாக், சாஸ்திரி நகர், குர்கான் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் 250 மொபைல் போன்கள், முக்கிய ஆவணங்கள், 8-10 லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இழ்வழக்கில், ரிதேஷ் பன்சால் என்ற முக்கிய புக்கியை அமலாக்கப் பிரிவு தேடி வருகிறது. அவர் குர்கானிலிருந்து தப்பி விட்டார் எனவும், கரோல் பாக்கில் இரு இடங்களிலிருந்து பண பரிவர்த்தனை நடைபெற்ற தாகவும் கூறப்படுகிறது.

 

இவ்வழக்கில், பாகிஸ்தானைச் சேர்ந்த புக்கிக்கு தொடர்பு உள்ளது. ஆனால், அவர் பெயரை அமலாக்கப் பிரிவு வெளியிட வில்லை. முகேஷ் சர்மா என்ப வரையும் இவ்வழக்கு தொடர்பாக அமலாக்கப் பிரிவு தேடி வருகிறது. இவருக்கு பிரிட்டனைச் சேர்ந்த பெட்ஷேர்டாட்காம் என்ற இணையதள நிறுவனத்துடன் சட்ட விரோத தொடர்பு இருப்ப தாகக் கூறப்படுகிறது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article7192651.ece

  • தொடங்கியவர்

ஜடேஜா ‘மேஜிக்’: சென்னை வெற்றி

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் ரவிந்திர ஜடேஜாவின் மந்திர பந்துவீச்சு கைகொடுக்க, சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் அணி பரிதாபமாக வீழ்ந்தது.

 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த எட்டாவது ஐ.பி.எல்., தொடரின் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின.  ராஜஸ்தான் அணியில் பின்னி, குல்கர்னி நீக்கப்பட்டு அன்கித் சர்மா, ரஜத் பாட்யா வாய்ப்பு பெற்றனர். ராஜஸ்தான் அணியில் வாட்சன் இடம் பெற்ற போதும், கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித் ஏற்றார். ‘டாஸ்’ வென்ற சென்னை கேப்டன் தோனி, ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

ரெய்னா ஏமாற்றம்:

சென்னைக்கு ‘ஓபனிங்’ சரியாக அமையவில்லை. அன்கித் ‘சுழலில்’ டுவைன் ஸ்மித் (6) சிக்கினார். கிறிஸ் மோரிஸ் பந்தில் ரெய்னா(3) கிளம்ப, 3.4 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 15 ரன்கள் எடுத்து தவித்தது. பின் டுபிளசி, பிரண்டன் மெக்கலம் சேர்ந்து விவேகமாக ஆடினர். சிறிது நேரம் அடக்கி வாசித்த மெக்கலம், பிரவின் டாம்பே ஓவரில் 2 சிக்சர் அடித்து அதிரடிக்கு மாறினார். தொடர்ந்து பால்க்னர், பாட்யா பந்துகளை விளாசிய இவர், அரைசதம் கடந்தார்.  மூன்றாவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சேர்த்த நிலையில், டுபிளசி(29), ரன் அவுட்டானார்.

 

மோரிஸ் ‘செக்’:

போட்டியின் 18வது ஓவரை வீசிய கிறிஸ் மோரிஸ், சென்னைக்கு ‘செக்’ வைத்தார். 2வது பந்தில் மெக்கலத்தை(81 ரன், 7 பவுண்டரி, 4 சிக்சர்)

வெளியேற்றினார். முன்னதாக வந்த நேகியை(2) 3வது பந்தில் அவுட்டாக்கினார். பால்க்னர் வீசிய அடுத்த ஓவரில் டுவைன் பிராவோ ஒரு பவுண்டரி, தோனி தன்பங்கிற்கு ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, 17 ரன்கள் எடுக்கப்பட்டன. சென்னை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. தோனி (13), டுவைன் பிராவோ (15) அவுட்டாகாமல் இருந்தனர்.

எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, சென்னையின் துடிப்பான பந்துவீச்சில் திணறியது. மோகித் சர்மா பந்தில் ரகானே(23) வீழ்ந்தார்.

 

விக்கெட் சரிவு:

பின் ரவிந்திர ஜடேஜா மாயாஜாலம் காட்டினார். முதலில் ஸ்டீவ் ஸ்மித்தை(4) போல்டாக்கினார். அடுத்து வாட்சனை(28) அவுட்டாக்கினார். தொடர்ந்து ‘சுழலில்’ அசத்திய இவரிடம் கருண் நாயர்(10), ஹூடா(15) சரணடைந்தனர்.

 

கடைசி கட்டத்தில் போராடிய சஞ்சு சாம்சன் 26 ரன்கள் எடுத்தார். மோகித் சர்மா பந்துவீச்சில்  பால்க்னர்(16),பாட்யா(0) அவுட்டாகினர். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. இதன் மூலம் இத்தொடரில் ஏற்கனவே ராஜஸ்தானிடம் சந்தித்த தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுத்தது.

 

அஷ்வின் எங்கே

சுழலுக்கு சாதகமான சேப்பாக்கம் ஆடுகளத்தில் ஜடேஜா கலக்கியதால், அஷ்வினுக்கு ஒரு ஓவர் கூட தரப்படவில்லை. விரல் காயத்தில் இருந்து மீண்டு வரும் இவருக்கு பந்துவீச்சில் இருந்து விலக்கு அளித்த சென்னை கேப்டன் தோனியின் முடிவு துணிச்சலானது தான்.

 

‘பறக்கும்’ பிராவோ

‘பீல்டிங்கில்’ மிரட்டிய சென்னை அணியின் டுவைன் பிராவோ சும்மா பறந்து...பறந்து பந்தை பிடித்தார். 10வது ஓவரில் ஜடேஜா வீசிய பந்தை வாட்சன் துாக்கி அடிக்க... எல்லைக் கோடு அருகே அந்தரத்தில் பறந்து ஒரே கையால் ‘கேட்ச்’ செய்த பிராவோ, வழக்கமான ‘ஸ்டைலில்’ ஆடினார். பின் பால்க்னர் அடித்த பந்தையும் அருமையாக பறந்து பிடித்தார்.

 

இரண்டாவது இடம்

நேற்று அசத்திய சென்னையின் ஜடேஜா, ஐ.பி.எல்., அரங்கில் அதிக முறை(4), நான்கு விக்கெட் வீழ்த்திய சுழற்பந்துவீச்சாளர் பட்டியலில் இரண்டாவது இடம் பெற்றார். முதல் இடத்தில் கோல்கட்டாவின் சுனில் நரைன்(7 முறை) உள்ளார்.

 

http://sports.dinamalar.com/2015/05/1431186422/ChennaiRajasthanIPLCricketDhoni.html

  • தொடங்கியவர்

Sunrisers v Kings XI at Hyderabad (Deccan) on May 11, 2015

48th match Match scheduled to begin at 20:00 local | 14:30 GMT

  • தொடங்கியவர்

Sunrisers Hyderabad 185/5 (20/20 ov)
Kings XI Punjab 180/7 (20/20 ov)
Sunrisers Hyderabad won by 5 runs

  • தொடங்கியவர்

292wn5s.png

  • தொடங்கியவர்

தடை தொடர்கிறது... வான்கடே மைதானத்தில் நுழைய ஷாரூக் கானுக்கு அனுமதியில்லை!

 

மும்பை: வான்கடே மைதானத்தில் நுழைய தடை நீடிப்பதால், வரும் 14ம் தேதி அங்கு நடைபெற உள்ள மும்பை - கொல்கத்தா அணிகள் மோதும் ஆட்டத்தை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் சக உரிமையாளரான ஷாரூக்கானுக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டு மும்பை - கொல்கத்தா அணிகள் வான்கடே மைதானத்தில் விளையாடின. அப்போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.

 

அப்போது மைதானத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரியுடன் ஷாரூக்கான் மோதலில் ஈடுபட்டார். இதனால், வான்கடே மைதானத்தில் நுழைய ஷாரூக்கிற்கு ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப் பட்டது.

 

இந்நிலையில், வரும் 14ம் தேதி மும்பை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியை நேரில் பார்க்க கொல்கத்தா அணியின் சக உரிமையாளரான ஷாரூக்கிற்கு அனுமதி கிடைக்கவில்லை. இது தொடர்பாக மும்பை கிரிக்கெட் சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ஷாரூக்கான் மீதான தடை தொடர்கிறது. எனவே, அவர் வான்கடே மைதானத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்' என்றார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-still-no-entry-shah-rukh-at-wankhede-stadium-226550.html

  • தொடங்கியவர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அதிரடிக்கு முன்பே நிலநடுக்கத்தால் ஆடிய ராய்ப்பூர்... பீதியில் வீரர்கள்!

 

ராய்ப்பூர்: டெல்லி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே இன்று ஐபிஎல் போட்டி நடைபெற உள்ள சட்டீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இன்று இரவு நடைபெற உள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் ராய்ப்பூரிலுள்ள நிலையில், நிலநடுக்க பாதிப்பை அவர்களும் உணர்ந்துள்ளனர்.

 

t ராய்ப்பூரில் நில நடுக்கத்தை உணர முடிந்தது. நிலநடுக்கத்தின் மைய பகுதியுள்ள மக்களை நான் இப்போது நினைத்து பார்க்கிறேன், என்று இலங்கை முன்னாள் ஆல்ரவுண்டர் ரசல் அர்னால்டு டிவிட் செய்துள்ளார். சண்டீகரில் உட்கார்ந்திருந்தபோது ஆஸி. முன்னாள் வீரர் டேமியன் மார்டின் நில அதிர்வை உணர்ந்ததாக டிவிட் செய்துள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/tremors-felt-dd-csk-ipl-2015-match-host-city-raipur-former-226597.html

  • தொடங்கியவர்

டெல்லி டேர்டெவில்ஸுடன் இன்று மோதல்: முதலிடத்தைத் தக்கவைக்கும் முனைப்பில் சென்னை
 

 

சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸும், டெல்லி டேர்டெவில்ஸும் மோதுகின்றன.

பிளே ஆப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துவிட்ட சூப்பர் கிங்ஸ் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதோடு, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெறும். இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சூப்பர் கிங்ஸ் 8 ஆட்டங்களில் வென்று 16 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

 

 

ஆனால் டெல்லி அணியோ இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி அதில் 8-ல் தோல்வி கண்டதோடு, அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது. கடந்த 1-ம் தேதி பஞ்சாபை வீழ்த்திய டெல்லி, அதன்பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் இப்போது சூப்பர் கிங்ஸை சந்திக்கிறது.

பிளே ஆப் சுற்றை ஏற்கெனவே இழந்துவிட்ட டெல்லி அணி, இனி இழப்பதற்கு எதுவும் இல்லை. எனவே இன்றைய ஆட்டத்தில் அந்த அணி வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் ஆக்ரோஷமாக ஆடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. பிரென்டன் மெக்கல்லம், டுவைன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, டூபிளெஸ்ஸி, கேப்டன் தோனி, பிராவோ என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் யார் களத்தில் நின்றாலும் ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்கள். அதுதான் அந்த அணியின் பெரிய பலமும்கூட.

 

வேகப்பந்து வீச்சில் ஆசிஷ் நெஹ்ரா, மோஹித் சர்மா, டுவைன் பிராவோ கூட்டணியும், சுழற்பந்து வீச்சில் அஸ்வின்-ஜடேஜா கூட்டணியும் அசத்தி வருகின்றன. நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஜடேஜா 4 ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இன்றைய ஆட்டத்தில் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

டெல்லி அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. ரூ.16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் இரு அரைசதங்களை மட்டுமே அடித்தார். ஸ்ரேயாஸ் ஐயர், டுமினி, யுவராஜ் சிங், கேதார் ஜாதவ், அல்பி மோர்கல் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பு அமையும்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜாகீர்கானின் வருகைக்குப் பிறகு ஓரளவு பலம் பெற்றாலும், எதிரணி மீது பெரிய அளவில் நெருக்கடி ஏற்படுத்த முடியவில்லை. மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்ட்டரும் ஓரளவு சிறப்பாக பந்து வீசி வருகிறார். சுழற்பந்து வீச்சில் அமித் மிஸ்ரா, டுமினி ஆகியோரையே நம்பியுள்ளது டெல்லி.

 

இதுவரை

இவ்விரு அணிகளும் இதுவரை 15 ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் சூப்பர் கிங்ஸ் 11 முறையும், டெல்லி 4 முறையும் வெற்றி கண்டுள்ளன.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88/article7196842.ece

  • தொடங்கியவர்

யுவராஜுக்கு ரூ. 16 கோடி ஏன்

 

புதுடில்லி: ‘‘யுவராஜ் சிங்கிற்கு ‘மார்க்கெட்’ மதிப்பு அதிகம். இதனால் தான் ரூ. 16 கோடி கொடுக்க நேர்ந்தது,’’ என, டில்லி அணி தலைமை அதிகாரி ஹேமன்ட் துவா தெரிவித்தார்.           

 

இந்திய அணி வீரர் யுவராஜ் சிங், 33. கடந்த 2011ல்  உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருது வென்றார். பின் ‘கேன்சரால்’ பாதிக்கப்பட்ட இவர், விரைவில் மீண்டார். மோசமான ‘பார்ம்’ காரணமாக சமீபத்திய உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கவில்லை. இருப்பினும், எட்டாவது ஐ.பி.எல்., தொடரில் இவரை அதிகபட்சமாக ரூ. 16 கோடிக்கு டில்லி அணி வாங்கியது. இத்தொடரில் 12 போட்டியில் 205 ரன்கள் (சராசரி 18.63) மட்டும் எடுத்தார். தவிர, டில்லி அணியும் ‘பிளே–ஆப்’ வாய்ப்பையும் இழந்தது.     

 

இதுகுறித்து டில்லி அணியின் தலைமை அதிகாரி ஹேமன்ட் துவா கூறியது:           

யுவராஜ் சிங்கிற்கு கொடுத்த ரூ. 16 கோடி குறித்து தான் அதிகம் பேசுகின்றனர். அணி உரிமையாளர் என்ற முறையில் குறைந்த தொகை தரத்தான் விரும்புவோம். யுவராஜ் சிங்கை ஏலத்தில் எடுக்க, பலத்த போட்டி இருந்தது. இவருக்கு சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. இதன் அடிப்படையில் தான் தான் அதிக விலை கொடுக்க நேர்ந்தது. ‘இவ்வளவு பணம் கொடுங்கள் என, நான் யாரிடமும் கேட்கவே இல்லை,’’ என, யுவராஜே கூறியுள்ளார்.       

     

ஏலம் நடந்த அன்று சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட பல்வேறு ‘மீடியா’வில், அவரது மனசாட்சியை காயப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் அரங்கேறின. அனைத்து தரப்பில் இருந்தும் யுவராஜ் மீது பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது. இது தான் அவரை மிகவும் பாதித்து விட்டது. அவரும் ஒரு சாதாரண மனிதர் தான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வீரர் என்ற முறையில், யுவராஜ் சிங் இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு, சிறப்பான ஆட்டத்தை தருவார் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு எங்களால் முடிந்தவரையில் ஆதரவு தரத் தயார்.         

இவ்வாறு ஹேமன்ட் துவா கூறினார்.   

         

யார் ‘சூப்பர்’            

ஹேமன்ட் துவா கூறுகையில்,‘‘ பொதுவாக ‘டுவென்டி–20’ போட்டிகளில் யாராவது ஒரு வீரருக்கு சிறப்பான நாளாக அமைந்து விட்டால், அவர் தான் ‘சூப்பர் ஸ்டார்’. மற்றபடி,  ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாடினால் தான், வெற்றி பெற முடியும்,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2015/05/1431355168/YuvrajSinghDelhiIPLCricketSalary.html

  • தொடங்கியவர்

CSK batting

  • தொடங்கியவர்

மெக்கல்லம் விக்கெட்டை மெய்டன் ஓவருடன் வீழ்த்திய ஜாகீர் கான்
 

 

ராய்ப்பூரில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பிரெண்டன் மெக்கல்லம்மை ஜாகீர் கான் அற்புதமாக நெருக்கி வீழ்த்தினார்.

 

3 ஓவர்கள இதுவரை வீசிய ஜாகீர் கான் 6 ரன்களை மட்டுமே கொடுத்து மெக்கல்லம் விக்கெட்டைக் கைப்பற்றினார். அந்த ஓவர் மெய்டன் ஓவர்.

 

21 பந்துகளை சந்தித்த மெக்கல்லம், வழக்கத்துக்கு மாறாக ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்து 11 ரன்களில் ஜாகீர் கான் வீசிய 3-வது ஓவரின் கடைசி பந்தில் மிட் ஆஃப் திசையில் டெல்லி கேப்டன் டுமினியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதற்கு முன்பு வீசிய 5 பந்துகளிலும் மெக்கல்லத்தினால் ரன் எடுக்க முடியவில்லை.

எனவே ஜாகீர் கான் விக்கெட்-மெய்டன் ஓவராக அதனைச் சாதித்தார். மெக்கல்லத்தை சர்வதேச கிரிக்கெட்டில் கூட சமீபத்தில் யாரும் இப்படிக் கட்டிப் போட்டதில்லை. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஸ்ட்ராஸ் அவரை விரைவில் வீழ்த்தினார். ஆனால் அவரை நிற்கவிட்டு கட்டிப் போடுவது என்பது கடினம்

 

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

 

2-வது ஓவரை ஜாகீர் கான் வீச மெக்கல்லம் 2 பந்தில் ஒரு ரன் எடுத்து எதிர்முனைக்கு சென்றார். ஜாகீர் கான் முதல் ஓவரில் 1 ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.

மீண்டும் 4-வது ஓவரில் ஜாகீர் வர, மேலேறி வந்து அடிக்க முயன்றார் மெக்கல்லம், கான் வெளியே சற்று தள்ளி வீசினார் மெக்கல்லம் மட்டையில் சிக்கவில்லை மீண்டும் ஒரு ரன்னே கிடைத்தது. அதே ஓவரில் ஸ்மித் ஒரு பவுண்டரி அடித்தார். அடுத்த 2 பந்துகளில் ஸ்மித் தடவினார். அந்த ஓவரில் ஜாகீர் கான் 5 ரன்களே கொடுத்தார்.

 

 

அதற்கு அடுத்ததாக 6-வது ஓவர் ஜாகீர் கான் பந்து வீச, மெக்கல்லம் மீண்டும் ஸ்ட்ரைக்கிற்கு வந்தார். சரி. இந்த ஓவரில் நிச்சயம் ஜாகீரை பதம் பார்ப்பார் என்றே கருதப்பட்டது. ஆனால்..நல்ல அளவில் வீச முதல் பந்தை தடுத்தே ஆடினார் மெக்கல்லம், அடுத்த பந்தை ரிவர்ஸ் ஸ்கூப் செய்ய முயன்றார் முடியவில்லை. அடுத்த பந்து கொஞ்சம் அடிக்கும் இடம் கிடைத்தது ஆனால் பந்து ஆஃப் திசையில் அருகிலேயே பீல்டர் கையில் சென்றது ரன் இல்லை.

 

5-வது பந்தும் பாயிண்டில் கைக்கு நேராகச் சென்றது. பந்து மெக்கல்லமிற்கு வாகாக வீசப்படவில்லை. 6-வது பந்தில் கிரீஸிற்குள் நகர்ந்து ஜாகீரின் ரிதம்-ஐ கெடுக்க நினைத்தார் மெக்கல்லம் ஆனால் ஜாகீர் லைனை மாற்றவில்லை. ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே ஃபுல் லெந்தில் வீச மெக்கல்லம் நேராக மிட் ஆஃபில் டுமினி கையில் கேட்ச் கொடுத்தார்.

மொத்தம் 10 பந்துகள் ஜாகீர் கானைச் சந்தித்த மெக்கல்லம் 3 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு அரிய விக்கெட் மெய்டன் ஓவராக அது அமைந்தது. அதுவும் மெக்கல்லத்திற்கு எதிராக!!

 

சென்னை அணி மெக்கல்லம், ஸ்மித், ரெய்னா விக்கெட்டுகளை இழந்து 11 ஓவர்களில் 53/3 என்று தடுமாறி வருகிறது. டு பிளெஸ்ஸிஸ் 12 ரன்களுடனும், தோனி 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/article7198316.ece

  • தொடங்கியவர்

டெல்லியின் 'டெரர்' பந்து வீச்சில் திணறிய சென்னை! 119 ரன்களில் குளோஸ்

 

ராய்ப்பூர்: டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான போட்டியில் டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. எனவே, டெல்லி அணி 120 ரன்களை இலக்காக கொண்டு ஆடி வருகிறது. இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 8 வெற்றிகளின் மூலம் 16 புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.  பிளே ஆப் சுற்றை ஏறக்குறைய உறுதி செய்துவிட்ட சூப்பர் கிங்ஸ் அணி, ராய்ப்பூரில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது.

 

சிஎஸ்கே வெற்றி பெறும்பட்சத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொள்வதோடு, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையையும் பெறும். ஆனால் டெல்லி அணியோ இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி அதில் 8ல் தோல்வி கண்டதோடு, அடுத்த சுற்று வாய்ப்பையும் இழந்துவிட்டது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி கண்ட நிலையில் இப்போது சூப்பர் கிங்ஸை சந்தித்தது. ஆனால் தொடக்கம் முதல் டெல்லி பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தது. இதனால், சென்னை அணி அதிரடி தொடக்க வீரர்களான மெக்கல்லமும், ட்வைன் ஸ்மித்தும் ரன் அடிக்க சிரமப்பட்டனர்.

 

 

வழக்கத்துக்கு மாறாக அதிக பந்துகளை சாப்பிட்ட மெக்கல்லம் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்மித்தும் 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவும், 11 ரன்களில் அவுட் ஆனார். அப்போது 9.2 ஓவர்களில் சென்னை 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்பிறகு டோணியுடன் ஜோடி சேர்ந்த ட்வைன் பிராவோ 8 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் டோணி, ரன் ரேட்டை உயர்த்துவதற்காக சற்று அதிரடி காண்பித்தார்.

 

ஆனால், 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த டோணி, ஜாகிர்கானின் அருமையான ஸ்லோ பந்தில், ஷபாஸ் நதீமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியின் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினாலும், ஜாகீர்கானின் பந்து வீச்சு மிக அருமையாக இருந்தது. 4 ஓவர்கள் பந்து வீசிய ஜாகீர்கான் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்து வீச்சில் பழைய வேகம் மற்றும் துல்லியம் தென்பட்டது. இந்திய அணி சீருடையில் மீண்டும் ஜாகீர்கானை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை, அவர் உருவாக்கியுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-daily-guide-match-49-delhi-daredevils-vs-chennai-226612.html

  • தொடங்கியவர்

Chennai Super Kings 119/6 (20/20 ov)
Delhi Daredevils 120/4 (16.4/20 ov)
Delhi Daredevils won by 6 wickets (with 20 balls remaining)

  • தொடங்கியவர்

டெல்லியின் 'டெரர்' பந்து வீச்சால் வீழ்ந்தது சென்னை! 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

 

ராய்ப்பூர்: டெல்லி டேர்டெவில்சுக்கு எதிரான போட்டியில் டாசில் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்களை மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து ஆடிய டெல்லி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. 

 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராய்ப்பூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை எதிர்கொண்டது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் தோல்வி கண்டு பிளே ஆப் வாய்ப்பையும் இழந்த டெல்லி, இப்போட்டியில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சூப்பர் கிங்ஸை சந்தித்தது.

 

ஆனால் தொடக்கம் முதல் டெல்லி பந்து வீச்சு மிகவும் கட்டுக்கோப்பாக இருந்தது. இதனால், சென்னை அணி அதிரடி தொடக்க வீரர்களான மெக்கல்லமும், ட்வைன் ஸ்மித்தும் ரன் அடிக்க சிரமப்பட்டனர். வழக்கத்துக்கு மாறாக அதிக பந்துகளை சாப்பிட்ட மெக்கல்லம் 21 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஸ்மித்தும் 24 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறி கொடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னாவும், 11 ரன்களில் அவுட் ஆனார்.

 

அப்போது 9.2 ஓவர்களில் சென்னை 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதன்பிறகு டோணியுடன் ஜோடி சேர்ந்த ட்வைன் பிராவோ 8 ரன்களில் நடையை கட்டினார். கேப்டன் டோணி, ரன் ரேட்டை உயர்த்துவதற்காக சற்று அதிரடி காண்பித்தார். ஆனால், 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த டோணி, ஜாகிர்கானின் அருமையான ஸ்லோ பந்தில், ஷபாஸ் நதீமிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்துள்ளது. டெல்லி அணியின் பவுலர்கள் அனைவரும் சிறப்பாக பந்து வீசினாலும், ஜாகீர்கானின் பந்து வீச்சு மிக அருமையாக இருந்தது.

 

4 ஓவர்கள் பந்து வீசிய ஜாகீர்கான் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்து வீச்சில் பழைய வேகம் மற்றும் துல்லியம் தென்பட்டது. இந்திய அணி சீருடையில் மீண்டும் ஜாகீர்கானை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை, அவர் உருவாக்கினார். இதையடுத்து பேட் செய்ய வந்த டெல்லியின் தொடக்க வீரர் டி காக் 3 ரன்களிலும், கேப்டன் டுமினி 6 ரன்களிலும் அவுட்டான நிலையில் சென்னை கை ஓங்கியது.

 

ஆனால், தொடக்க வீரர் ஷ்ரேயாஸ் ஐயரும், யுவராஜ்சிங்கும் சென்னை கனவை தகர்த்தனர். யுவராஜ்சிங் 32 ரன்களிலும், ஆல்பி மோர்கல் 8 ரன்களிலும் அவுட்டான நிலையில், 16.2 ஓவர்களில், 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த டெல்லி வெற்றி இலக்கை எட்டியது. ஷ்ரேயாஸ் ஐயர் 49 பந்துகளில் 70 ரன்களை குவித்தும், கேதர் ஜாதவ் 1 ரன்னிலும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-daily-guide-match-49-delhi-daredevils-vs-chennai-226612.html

  • தொடங்கியவர்

2rw57ib.png

  • தொடங்கியவர்

பெங்களூருவை சமாளிக்குமா பஞ்சாப் * இன்று ‘விறுவிறு’ மோதல்

 

மொகாலி: மொகாலியில் இன்று நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணிக்கு சமீபத்தில் சதம் அடித்த கெய்ல், டிவிலியர்ஸ் பெரும் பலமாக உள்ளனர். கேப்டன் கோஹ்லியின் அசத்தல் ‘பார்ம்’ நம்பிக்கை அளிக்கிறது. எப்படிப்பட்ட பந்துவீச்சையும் சிதறடிக்கும் இந்த மும்மூர்த்திகள் இருப்பது எதிரணிக்கு சிக்கல்தான். பின் வரும் தினேஷ் கார்த்திக், சர்பராஸ் கான் தங்கள் பங்கிற்கு கைகொடுத்தால் வெற்றியை வசப்படுத்தலாம். 

 

ஸ்டார்க் பலம்:

பந்துவீச்சில் ஸ்டார்க் (16 விக்.,) அசத்துகிறார். இவரின் அசுரவேகத்திற்கு இன்றும் விக்கெட் விழலாம். டேவிட் வைஸ், ஹர்சல் படேல், அரவிந்த் கைகோர்த்தால் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு தொல்லை தான். ‘சுழல்’ பணியை சகால் கச்சிதமாக செய்கிறார். இப்போட்டியில் வென்றால், பெங்களூரு அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு பிரகாசமாகும்.

 

மில்லர் ஆறுதல்:

இதுவரை 10 தோல்விகளை சந்தித்த பஞ்சாப் அணி ஏற்கனவே ‘பிளே–ஆப்’ வாய்ப்பை இழந்தது. முரளி விஜய், வோராவின் துவக்கம் பெரியளவில் இல்லை. மேக்ஸ்வெல், சகா, கேப்டன் பெய்லி சொதப்புகின்றனர். கடந்த போட்டியில் 44 பந்தில் 89 ரன்கள் விளாசிய மில்லர் ஆறுதல் தருகிறார்.

 

ஜான்சன் இல்லை:

மிட்சல் ஜான்சன், ஆஸ்திரேலியா திரும்புவதால், இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார். சந்தீப் சர்மா, அனுரீத் சிங் ஏமாற்றுகின்றனர். ஹென்ரிக்ஸ் நம்பிக்கை அளிக்கிறார். சுழற்பந்துவீச்சாளர் அக்சர் படேல் எழுச்சி பெற்றால் ஆறுதல் வெற்றி குறித்து சிந்திக்கலாம்.

 

இதுவரை...

ஐ.பி.எல்., அரங்கில் இதுவரை இரு அணிகள் 15 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் பஞ்சாப் 9, பெங்களூரு 6ல் வென்றன.

 

மழை வருமா

போட்டி நடக்கும் மொகாலியின் இன்றைய வானிலையை பொறுத்தவரை அதிகபட்சம் 37, குறைந்தபட்சம் 22 டிகிரி செல்சியாக இருக்கும். மழை வர 10 சதவீதம் வாய்ப்பு உள்ளது.

 

http://sports.dinamalar.com/2015/05/1431448558/ipleightseasonindia.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.