Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

11 ஆவது உலகக் கிண்ண திருவிழா

Featured Replies

11 ஆவது உலகக் கிண்ண திருவிழா
 

 

தொரு­மு­னை­யிலும் பாட­சாலை நேரங்­களின் இடையே திருட்­டுத்­த­ன­மாக கிரிக்கெட் விளை­யாடும் சிறு­வர்கள் முதல், விடு­முறை நாட்­களில் மைதா­னத்­திலும் வெற்­றுக்­கா­ணி­க­ளிலும்  விரை­வாக விளை­யாடும் இளை­ஞர்கள் முதல் உலகில் வாழும் மக்கள் தொகை யால் நேசிக்­கப்­படும் இரண்­டா­வது பெரு­வி­ளை­யாட்­டான கிரிக்­கெட்டின் உல­கமே ஒன்­றி­ணைந்து கொண்­டாடும் திரு­விழா  கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­க­வுள்­ளது.

 

world-cup-cricket_zpsuqtzrfsa.jpg

வண்­ண­ம­ய­மான வர்­ணக்­கொ­டிகள்.  மாயாஜாலம் காட் டும் அலங்­கார மின்­வி­ளக்­குகள், விநோ­த­மான உருவ பொம்­மை கள், கண்­கவர் சித்­தி­ரங்கள், மனதைக் கொள்­ளை­ய­டிக்கும் பாரிய புகைப்­ப­டங்கள் ஒரு­பு­ற­மி­ருக்­கையில் மறு­ பு­றத்தில்  சாதா­ர­ண­மா­கவே மக்கள் நெருக்­கடி மிக்க நக­ரங்­க­ளான அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்பேர்ன், சிட்னி, அடிலெய்ட், பிரிஸ்பேர்ன், ஹோபாட் உட்­பட நாட்டின் அனைத்து பகு­தி­களும் நியூ­ஸி­லாந்தின் ஒக்லண்ட், கிறிஸ்ட்சேர்ச், ஹமில்டன், நேப்­பியர் என ஏனைய பகு­தி­களும் உள்­நாட்டு பிர­ஜை­க­ளுக்கு அப்பால் உலகின் பல பாகத்­தி­லி­ருந்தும் பிர­வே­சித்­துள்ள கிரிக்கெட் இர­சிகர் வெள்ளத்தால் நிரம்­பி­வ­ழிந்து கொண்­டி­ருக்­கின்­றது. முழு அவுஸ்­தி­ரே­லிய கண்­ட­முமே உலகக் கிண்­ணத்­தொடர் ஆரம்­ப­மா­க­வுள்­ள­நி­லையில் விழாக்­கோலம் பூண்­டுள்­ளது.

 

1975_zpswvzlwtw9.jpg
நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெற்­று­வரும் உலகக் கிண்ணத் தொட­ரா­னது நேசிக்கும் நெஞ்­சங்­களை சிலிர்க்­க­வைத்து, பிர­மிக்­க­வைத்து, பெருமை கொள்ள வைத்­துள்­ள­தோடு இம்­மு­றையும் அதே­நிலை நீடிக்கும் என்­பது நிச்­சயம். மனித வாழ்­வுடன் ஒன்­றிப்­போன விளை­யாட்­டுக்­களில் ஒன்­றாக காணப்­படும் கிரிக்­கெட்டின் உணர்­வு­மிக்க உலக கிண்ண கிரிக்கெட் திரு­வி­ழாவின் 11ஆவது அங்கம் இம்­முறை அவுஸ்­தி­ரே­லிய, நியூ­ஸி­லாந்து நாடு­களில் இடம்­பெ­ற­வுள்­ளது. பர­ப­ரப்பு விறு­வி­றுப்பு குறை­வில்­லாத பலப்­ப­ரீட்­சைகள் இர­சி­கர்­களின் பசிக்கு விருந்­த­ளிக்­க­வுள்­ள­தோடு சாத­னை­க­ளுக்கு குறை­வில்­லா­த­தைப்­போன்று எதிர்­பார்ப்­புக்கள் சிதையும் பட்­சத்தில் வேத­னை­களும் ஏற்­படும் என்­பதில் எந்த ஐய­மு­மில்லை.

 

1979_zpslecoq48k.jpg
இரண்டு குழுக்­களில் 14அணிகள், 14 மைதா­னங்­களில் 49போட்­டிகள், அவுஸ்­தி­ரே­லி­யாவின் பரந்த மைதா­னங்­களில் துடுப்­பாட்ட வீரர்­களின் போராட்டம், நியூ­ஸி­லாந்தின் சிறிய மைதா­னங்­களில் பந்­து­வீச்­சா­ளர்­களின் திண்­டாட்டம், பந்து எல்­ லைக்­கோ­டு­களை தொட்­டு­வி­ட­முதல் காற்றாய் பறந்து கட்­டுப்­ப­டுத்­து­வது எப்­படி? அதே பந்து புற்­ற­ரை­களை முத்­த­மி­டு­வ­தற்கு முன்னர் காப்­பாற்­று­வது யார்? அனை­வ­ருக்கும் ஒரே கனவு, ஒரே இலக்கு, அதனை அடை­வ­தற்காய் ஒவ்­வொரு நொடியும் மையங் ­கொள்ளும் அழுத்­தங்கள், யாரை யார் வெல்­வது? எவ­ரெ­வரை எப்­படி வீழ்த்­து­வது? ஒவ்­வொரு அணு­விலும் ஓடிக்­கொண்­டி­ருக் கும் சிந்­தனை, இறு­தி­வ­ரையில் விட்­டுக்­கொ­டுப்­பற்ற ஒரு பலப்­ப­ரீட்­சையில் மோதிக்­கொள்ள அனை­வரும் இத்­த­ரு­ணத்­தி­லேயே தயார்!

1983_zpso7fe0zzh.jpg
ஆம் பெரும் ஏற்­பாட்டில் பலத்த எதிர்­பார்ப்­புக்­க­ளுக்கு மத்­தியில் அவுஸ்­தி­ரே­லியா மற்றும் நியூ­ஸி­லாந்து ஆகிய இரண்டு நாடு­களில் 11ஆவது உலகக் கிண்­ணத்­தொடர் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இத்­தொ­டரில் அவுஸ்­தி­ரே­லியா, நியூஸி­லாந்து, இலங்கை, நடப்­புச்­சம்­பி­ய­னான இந்­தியா, இங்கி­லாந்து, மேற்கு இந்­தியத் தீவுகள், தென் ஆபி­ரிக்கா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், சிம்­பாப்வே ஆகிய சர்­வ­தேச டெஸ்ட் அந்­தஸ்து பெற்ற அணி­களும் அயர்­லாந்து, ஸ்கொட்­லாந்து, ஆப்­கா­னிஸ்தான், ஐக்­கிய அரபு இராச்­சியம் ஆகிய கத்­துக்­குட்டி அணி­களும் பங்­கேற்­கின்­றன.

1987_zpss1my15cx.jpg
11ஆவது உலகக் கிண்­ணத்தை தம்­வ­ச­மாக்கி முத்­த­மி­டு­வ­தற்­காக உள்­ளங்கள் இணையும் காதலர் தினமாம் பெப்­ர­வரி 14ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திக­தி­வரை துடிப்­புடன் மிடுக்­காக போட்­டி­யி­ட­வுள்ள 14 அணி­களும் ஏ, பி என இரண்டு குழுக்­க­ளாக பிரிக்­கப்­பட்­டுள்­ளன. குழு 'ஏ' யில்  7அணி­களும் குழு பி யில் 7அணி­களும்  உள்­வாங்­கப்­பட்­ட­துடன் ஒவ்­வொரு அணியும் குழு நிலையில் மற்­றைய அணி­க­ளுடன்  தலா ஒவ்­வொரு தடவை மோத­வுள்­ளன. குழு நிலையில் இடம்­பெ­ற­வுள்ள 42போட்­டி­களும் எதிர்­வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரையில் நடை­பெ­ற­வுள்­ளன.

 

1992_zps6lfofonm.jpg
அத­ன­டிப்­ப­டையில் குழு நிலையில் முத­லிரு இடங்­க­ளுக்கு முன்­னேறும் அணி­க­ளுக்­கி­டையில் காலி­றுதிச் சுற்று இடம்­பெ­ற­வுள்­ளது. மார்ச் மாதம் 18, 19, 20, 21ஆம் திக­தி­களில் முறையே முத­லா­வது காலி­றுதிப் போட்டி சிட்னி மைதா­னத்­திலும் இரண்­டா­வது போட்டி மெல்பேர்ன் மைதா­னத்­திலும் மூன்­றா­வது போட்டி அடி­லெய்ட்­டிலும் நான்­கா­வது போட்டி வெலிங்­ட­னிலும் இடம்­பெ­ற­வுள்­ளன. அதனைத் தொடர்ந்து மார்ச் 24ஆம் திகதி ஒக்­லண்டில்  முத­லா­வது அரை­யி­று­திப்­போட்­டியும் மார்ச் 26ஆம் திகதி இரண்­டா­வது அரை­யி­று­திப்­போட்டி சிட்­னி­யிலும் இடம்­பெ­ற­வுள்­ளன. இப்­போட்­டி­களில் வெற்­றி­வாகை சூடும் இரு அணிகள் மெல்பேர்ன் மைதா­னத்தில் மார்ச் 29ஆம் திகதி இடம்­பெறும் 11ஆவது உலகக் கிண்­ணத்­தொ­டரின் கிண்ணம் யாரு க்கு என்­பதை தீர்­மா­னிக்கும் தீர்க்­க­மான இறு­திப்­போட்­டியில் பங்­கேற்­க­வுள்­ளன.

 

1996_zpspknbjppt.jpg
அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்பேர்ன், சிட்னி, அடிலெய்ட், பேர்த், ஹோபாட், பிறிஸ்பேர்ன், கான்­பரா ஆகிய மைதா­ன ங்­களில் இறு­திப்­போட்டி உள்­ள­டங்­க­லாக 26போட்­டி­களும் நியூ­ஸி­லாந்தின் ஒக்­லண்டில், கிறிஸ்ட்சேர்ச், வெலிங்டன், நேப்­பியர், ஹமில்டன், ருனெடின், நெல்சன் ஆகிய மைதானங்­களில் 23ஆட்­டங்­களும் இடம்­பெ­ற­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

 

உலகக் கிண்ணத் தோற்­றமும் பரி­ணா­மமும்

 

உலக சனத்­தொ­கையில் அதிக இர­சி­கர்­களைக் கொண்ட விளை­யாட்­டாக காணப்­படும் கால்­பந்­து­ட­னேயே பின்­னிப்­பி­ணைந்­தி­ருந்த உலகக் கிண்ணம் என்ற பதம் தற்­போது கிரிக்­கெட்­டுடன் மிக­மிக அந்­நி­யோன்­ய­மா­கி­யுள்­ளது. பதி­னாறாம் நூற்­றாண்டு முதல் தற்­போது வரை கிரிக்கெட் வர­லாற்றுப் பாதையைக் கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக 1844ஆம் ஆண்டு முதல் சர்­வ­தேச கிரிக்கெட் போட்­டிகள் நடத்­தப்­பட்டு வந்­தாலும், சர்­வ­தேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்­தப்­பட்ட 1877ஆம் ஆண்­டி­லி­ருந்­துதான் கிரிக்­கெட்டின் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள வர­லாறு ஆரம்­ப­மா­கின்­றது.  அவ்­வா­றி­ருக்­கையில் டெஸ்ட் கிரிக்கெட் ஆரம்­பித்து 94வரு­டங்­களின் பின்னர் 1971ஆம் ஆண்டே ஒருநாள் கிரிக்கெட் தோற்­றம்­பெற்­ற­துடன் அதன் தொடர்ச்­சி­யாக 1975இல் கிரிக்கெட் அரங்கில் உலகக்  கிண்ணத் தொட­ரா­னது அறி­மு­க­மாகி தற்­ச­மயம் வெறு­மனே நான்கு தசாப்­தங்­க­ளா­கின்­றன. இருப்­பினும் அதன் தாக்­கமும் பிர­பல்­யமும் அப­ரி­மி­த­மா­னது என்று கூறலாம்.

 

1999_zpskkuqcix5.jpg
இந்­நி­லையில் நான்கு ஆண்­டு­க­ளுக்கு ஒரு தடவை கிரிக் கெட் அணி­க­ளுக்­கி­டையில் பெருந்­தொ­ட­ரொன்றை நடத்­து­வது என்ற தீர்­மா­னத்­திற்கு அமை­வாக 1975ஆம் ஆண்டு முதற்­த­ட­வை­யாக அக்­கால கட்­டத்தில் காணப்­பட்ட கிரிக்கெட் அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்­டித்­தொ­ட­ரொன்று நடத்­தப்­பட்­டது. இத்­தொ­ட­ரா­னது புரு­டென்ஷல் கிண்ணத் தொடர் என்றே அழைக்­கப்­பட்டு வந்­தது. 1983 ஆம் ஆண்டு வரை இப்­பெ­ய­ரா­லேயே அழைக்­கப்­பட்டு வந்­தது. காரணம், கிரிக்­கெட்டின் தயா­க­மான இங்­கி­லாந்தின் பிர­பல தனியார் பங்குச் சந்­தை­யான புரு­டென்ஷல் நிறு­வ­னமே கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான பிர­தான அனு­ச­ர­ணை­யா­ள­ராக காணப்­பட்­டதால் அப்­பெ­ய­ரா­லேயே வெற்­றிக்­கிண்­ணமும் அழைக்­கப்­பட்­டது. அதனைத் தொடர்ந்து அனு­ச­ரணை வெவ்­வே­று­பட்ட தரப்­பி­ன­ரிடம் கைமா­றி­ய­போது அவ் அனு­ச­ர­ணை­யா­ளர்­களின் பெய­ராலே அழைக்­கப்­பட்­ட­போதும் 1999ஆம் ஆண்­டுக்­குப்­பின்னர் அதா­வது சர்­வ­தேச கிரிக்கெட் சபையின் முழு­மை­யான கட்­டுப்­பாட்­டுக்குள் கிரிக்கெட் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து உலகக் கிண்ணம் என அழைக்­கப்­ப­ட­லா­யிற்று.

 

 

உத்­தி­யோ­க­பூர்­வ­மான கிண்ணம் உருப்­பெற்­றது

 

1975முதல் 1999வரையில் வெவ்­வேறு வடி­வி­லான கிண்­ணங்­களே வெற்­றி­பெ­று­ப­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. 1999ஆம் ஆண்டு முதற்­த­ட­வை­யாக சர்­வ­தேச கிரிக்கெட் சபையின் தீர்­மா­னத்­திற்கு அமை­வா­கவும் கிரிக்­கெட்டின் மகி­மையைப் பறை­சாற்றும் வகை­யிலும் பந்து, விக்­கெட்­டுக்கள், துடுப்­பு­மட்டை ஆகிய மூன்­றையும் பிர­தி­ப­லிக்கும் வகை­யி­லான தற்­போ­தைய கிண்ணம் வடி­வ­மைக்­கப்­பட்­டது. இங்­கி­லாந்தின் பிர­­பல்யம் பெற்ற நகைக்­க­டை­யான ஜெரால்ட் நிறு­வ­னமே வெள்ளி மற்றும் கில்ட் எனப்­படும் ஒரு­வகை உலோ­கத்­தினால் இக்­கிண்­ணத்தை வடி­வ­மைத்­தது. 11கிலோ­கிராம் எடை­யுள்ள இக்­கிண்­ண­மா­னது 60 சென்­ரி­மீற்­றர்கள் உய­ர­மு­டை­யது. இக்­கிண்­ணத்தை எத்­தி­சையில் நின்று பார்த்­தாலும் எந்­த­வே­று­பாட்­டையும் காண­மு­டி­யாத விந்­தை­மி­குந்த விட­யத்­திற்கு பிளே­டெனிக் முறையில் வடி­வ­மைக்­கப்­பட்­ட­மையே கார­ண­மா­கின்­றது.

 

2003_zpskpmilvok.jpg
70இலட்சம் ரூபா செலவில் உரு­வாக்­கப்­பட்ட இக்­கிண்­ணத்தின் கீழ்ப்­ப­கு­தி­யி­லி­ருந்து மேலாக கடந்த காலங்­களில் வெற்றி பெற்ற அணி­களின் பெயர்கள் பொறிக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­கா­லத்தில் வெற்­றி­பெ­ற­வி­ருக்கும் அணி­களின் பெயர்­களும் பொறிப்­ப­தற்­கான வச­தி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. உலகக் கிண்­ணத்­தொ­டர்­களில் வெற்றி பெறும் அணிக்கு இக்­கிண்ணம் வழங்­கப்­ப­டு­வ­தில்லை என்­ப­துடன் இக்­கிண்­ணத்தைப் போன்ற நக­லொன்றே வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. இதனால் அதன் பாது­காப்பு உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

 

இது­வ­ரையில் சாதித்த அணிகள்

 

1975ஆம் ஆண்டு 8அணிகள் பங்­கேற்ற முத­லா­வது உல கக் கிண்ணத் தொட­ரா­னது கிரிக்­கெட்டின் தாய­க­மான இங்­கி­லாந்தில் நடை­பெற்­றது. அணிக்கு 60 ஓவர் கொண்ட போட்­டி­ களில் வீரர்கள் வெள்ளை நிற உடை­யி­லேயே பங்­கேற்­றனர். இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றிய கிளைவ் லொயிட் தலை­மை­யி­லான  மேற்­கிந்­திய தீவு­களும் இயன் செப்பல் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய அணியும் ஜூன் 21ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸ் மைதா­னத்தில் 24 ஆயிரம் இர­சி­கர்­க­ளுக்கு மத்­தியில் மோதின. 60 ஓவர்­களில் மேற்­கிந்­தியா 8 விக்­கெட்­டுக்­களை இழந்து 291 ஓட்­டங்­களைக் குவித்­தது. அணித்­த­லைவர் கிளைவ் லொயிட் 85 பந்­து­களில் 102 ஓட்­டங்­களைப் பெற்றார். இயன் செப்பல், கிரேக் செப்பல், அலன் டானர் உள்­ளிட்ட ஐவர் ரன்­அவுட் முறையில் ஆட்­ட­மி­ழக்க 58.4 ஓவர்­களில் அவுஸ்­தி­ரே­லியா 274 ஓட்­டங்­களைப் பெற்று 17 ஓட்­டங்­களால் தோல்­வி­ய­ டைந்­தது.  இதனால் முதல் உலகக் கிண்­ணத்தை  முத்­த­மி ட்ட அணி­யாக ஆட்­ட­நா­யகன் விரு­தையும் தன்­வ­சப்­ப­டுத்­திய அணித்­த­லைவர் கிளைவ் லொயிட்டின் மேற்­கிந்­திய தீவுகள் வர­லாற்றில் தடம்­ப­தித்­தது.

 

 

1979ஆம் ஆண்டும் 8 அணி­களின் பங்­கேற்­புடன் இரண்­டா­வது தட­வை­யாக இங்­கி­லாந்­தி­லேயே நடை­பெற்­றது. அரை­யி­றுதியில் பாகிஸ்­தானை வென்ற கிளைவ் லொயிட் தலை­மை ­யி­லான மேற்­கிந்­திய தீவு­களும் நியூ­ஸி­லாந்தை வென்ற மைக்பிறேலி தலை­மை­யி­லான இங்­கி­லாந்தும் ஜுன் 23ஆம் திகதி லண்டன் லோர்ட்ஸில் இறு­திப்­போட்­டியில் பங்­கேற்­றன. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியா 60 ஓவர்­களில் 9 விக்கெட் இழப்­புக்கு 286 ஓட்­டங்­களை எடுத்­தது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய  இங்­கி­லாந்து அணி 51 ஓவர்­களில் 194 ஓட்­டங்­க­ளுக்குள் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 92ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. சேர்.விவியன் ரிச்சர்ட்ஸ் 138 ஓட்­டங்­களை குவித்து ஆட்­ட­நா­ய­கனானார்.

 

 

1983ஆம் ஆண்டு இங்­கி­லாந்­தி­லேயே நடை­பெற்ற தொடரில் 8 அணிகள் பங்­கேற்­ற­துடன் கன­டா­வுக்கு பதி­லாக சிம்­பாப்வே இடம்­பெற்­றது. அரை­யி­று­தியில் இங்­கி­லாந்தை வென்ற கபில்தேவ் தலை­மை­யி­லான இந்­தியா பாகிஸ்­தானை வீழ்த்தி இறு­திப்­போட்­டிக் குள் நுழைந்த கிளைவ் லொயிட் தலை­மை­யி­லான  பலம்­மிக்க மேற்­கிந்­திய தீவு­களை 25ஆம் திகதி லண்டன் லோர்ட் ஸில் இறு­தி ப்­போட்­டியில் சந்­தித்­தது. முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தியா 54.5 ஓவர்­களில் 183ஓட்­டங்­க­ளுக்கு சக­ல­விக்­கெட்­டுக் ­க­ளையும் இழந்­தது. மேற்­கிந்­தி­யாவின் பல­மிக்க துடுப்­பா ட்ட வரிசை கிரீனிட்ஜ் (01), ஹெய்ன்ஸ் (13) விவியன் ரிச்சர்ட்ஸ் (33) கிளைவ் லொயிட் (08) என பிர­கா­சிக்க த வற 52 ஓவர்­களில் 140 ஓட்­டங்­களில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 43ஓட்­டங்­களால் தோல்­வி­ய­டைந்­தது. இந்­தியா முதற்­த­ட­வை­யாக கிண்­ணத்தை சுவீ­க­ரித்­த­துடன் மொகிந்தர் அமர்நாத் ஆட்­ட­நா­ய­க­னாக தெரி­வானார்.

 

 

1987ஆம் ஆண்டு இந்­தியா மற்றும் பாகிஸ்­தானில் 8 அணி­களின் பங்­கேற்­ற­லுடன் 50 ஓவர்கள் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட போட்­டி­க­ளாக முதல்­மு­றை­யாக நடத்­தப்­பட்­டன. அரை­யி ­று­தியில் இந்­தி­யாவை வீழ்த்தி இறு­திப்­போட்­டிக்குச் சென்ற  இங்­கி­லாந்து பாகிஸ்­தானை வெற்றி பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சந்­தித்­தது. சுமார் ஒரு லட்சம் இர­சி­கர்­க­ளுக்கு மத்­தியில் கொல்­கத்தா ஈடன் கார்டன் மைதா­னத்தில் நடை­பெற்ற  பர­ப­ரப்­பான இறு­திப்­போட்­டியில் அலன் போர்டர் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லியா 50 ஓவர்­களில் 5 விக்கெட் இழப்­புக்கு 253ஓட்­டங்­களை எடுத்­தது. பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இங்­கி­லாந்து அணி 50 ஓவர்­களில் 8 விக்கெட் இழப்­புக்கு 246 ஓட்­டங்­களை எடுத்­ததால் அவுஸ்­தி­ரே­லியா 7 ஓட்­டங்­களால் வெற்றி பெற்று கிண்­ணத்தை முதற்­த­ட­வை­யாக சுவீகரித்தது. அவுஸ்­தி­ரே­லிய வீரர் டேவிட் பூன் ஆட்­ட­நா­யகன் விருது பெற்றார்.

 

 

1992ஆம் ஆண்டு அவுஸ்­தி­ரே­லியா, நியூஸி­லாந்து நாடு கள் முதல் முறை­யாக இணைந்து நடத்­தின. வெள்ளை நிற சீரு­டை­யுடன் பங்­கேற்ற வீரர்கள் வண்ண உடைக்கு மாறினர். அத்­துடன் வெள்ளைப்­பந்து, பக­லி­ர­வுப்­போட்டி, முதல் 15 ஓவர்­க ளில் வெளிக்­கள வீரர்­க­ளாக இரு­வரே செயற்­ப­ட­மு­டியும் என்ற விட­யங்கள் அறி­மு­க­மா­கின. இன­வெறி சிக்­க­லி­லி­ருந்து விடு­தலை பெற்ற தென்­ஆ­பி­ரிக்கா 21 ஆண்­டு­க­ளுக்கு பின்னர்  முதல்­மு­றை­யாக உலகக் கிண்­ணத்தில் கலந்து கொள்ள  9அணி­களின் பங்­கேற்­ற­லுடன் தொடர்ந்து நடை­பெற்­றது. அரை­யி­று­தியில் நியூஸி­லாந்தை வெற்றி கொண்ட இம்ரான்கான் தலை­மை­யி­லான பாகிஸ்­தானும் தென்­ஆ­பி­ரிக்­காவை வெற்­றி­கொண்டு 3ஆவது முறை­ யாக இங்­கி­லாந்து இறு­திப்­போட்­டிக்குள் நுழைந்­தது. 87ஆயிரம் ரசி­கர்­க­ளுக்கு மத்­தியில் மெல்போர்ன் மைதா­னத்தில் நடை­பெற்ற இறு­திப்­போட்­டியில் முதலில் துடுக்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் 50 ஓவர்­களில் 6 விக்­கெட்­டுக்கு 249 ஓட்­டங்­களைக் குவித்­தது.  இங்­கி­லாந்து அணி 49.2 ஓவர்­களில் 227 ஓட்­டங்­க­ளுக்கு சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழக்க பாகிஸ்தான் முதற்­த­ட­வை­யாக வெற்­றியைப் பதிவு செய்­தது. ஸ்விங் பந்­து­வீச்சில் கலக்­கிய வசீம் அக்ரம் 3 விக்­கெட்­டுக்­களை கைப்­பற்றி ஆட்­ட­நா­ய­கனானார்.

 

2007_zpsnimx8fg9.jpg

1996ஆம் ஆண்டு இந்­தியா, பாகிஸ் தான், இலங்கை ஆகிய ஆசிய நாடுகள் கூட்­டாக நடத்­திய 5ஆவது தொட ரில்  முன்­னைய 9 அணி­க­ளுடன் கென்யா, நெதர்­லாந்து, ஐக்­கிய அரபு எமிரேட்ஸ் ஆகி­யன அறி­மு­க­மா­கின. அரை­யி­று­தியில் இந்­தி­யா வை வீழ்த்­திய அர்­ஜுன ரண­துங்க தலை­மை­யி­லான இலங்கை மற்­றொரு அரை­யி­று­தியில் மேற்­கிந்­தி­யாவை வீழ்த்­திய மார்க் டெய்லர் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சந்­தித்­தது. லாகூரில் மார்ச் 17இல் நடை­பெற்ற போட்­ டியில் முத­லில துடுப்­பெ­டுத்­தா­டிய அவுஸ்­தி­ரே­லியா 7 விக்­கெட்­டுக்கு 241 ஓட்­டங்­களை குவித்­தது. பதி­லுக்கு  ஆடிய இலங்கை அர­விந்த டி சில்வா (107), குரு­சிங்கா(65),  அணித்­த­லைவர் ரண­துங்க (47) ஆகி­யோரின் அபா­ர­மான ஆட்­டத்தின் மூலம் 46.2 ஓவர்­களில் 3 விக்­கெட்­டுக்­களை மட்டும் இழந்து வெற்­றி­யி­லக்கை அடைந்­தது. 7 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்ற இலங்கை முதற்­த­ட­வை­யாக கிண்­ணத்தை சுவீ­க­ரித்­த­துடன் போட்­டியை நடத்­திய நாடு உலக கிண்­ணத்தை வென்­றது என்ற  வகை­யிலும் இலங்கை புதிய வர­லாறு படைத்­தது. ஆட்­ட­நா­ய­க­னாக அர­விந்த டி சில்வா தெரி­வானார்.

 

அவுஸ்­தி­ரே­லி­யாவின் ஹட்ரிக் வெற்றி

 

1999ஆம் ஆண்டு நடை­பெற்ற ஏழா­வது உலகக் கிண்­ண த்தை வென்ற அவுஸ்­தி­ரே­லியா அதனைத் தொடர்ந்து 2003, 2007ஆம் ஆண்­டு­களில் இடம்­பெற்ற எட்டாம், ஒன்­பதாம் உல கக் கிண்­ணங்­க­ளையும் தம­தாக்கி ஹட்ரிக் சாத னை புரிந்­தமை விசே­ட­மா­ன­தாகும்.

1999இல் இங்­கி­லாந்து மற்றும் ஸ்கொட்­லாந்து, அயர்­லாந்து, நெதர்­லாந்து, வேல்ஸ் ஆகிய நாடுகள் நடத்­தின.  12 அணிகள் பங்­கேற்ற இத்­தொ­டரில் சுப்பர் சிக்ஸ் சுற்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான போட்டி சம­நி­லையில் நிறை­வ­டைந்­ததைத் தொடர்ந்து இறு­திப்­போட்­டிக்கு தெரி­வான ஸ்டீவ்வோ தலை­மை­ யி­லான அவுஸ்­தி­ரே­லியா வசீம் அக்ரம் தலை­மை­யி­லான பாகிஸ்­தானை சந்­தித்­தது. ஜுன் 20ஆம் திகதி லோட்ஸ் மைதா­னத்தில் நடை­பெற்ற இப்­போட்­டியில்  முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய பாகிஸ்தான் அணி 39 ஓவர்­களில் 132 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. பந்­து­வீச்சில் ஷேன் வோர்ன் 4 விக்­கெட்­டுக்­களை கைப்­பற்­றி னார். பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸி. 20.1 ஓவர்­களில் 2 விக்கெட் இழப்­புக்கு 133 ஓட்­டங்­களை பெற்று 8 விக்­கெட்­டுக்­களால் வெற்­றி­பெற்­றது. இதன் மூலம் 1987 இற்கு பின்னர் மற்­று­மொரு தடவை கிண்­ணத்தை கைப்­பற்­றி­யது.

 

 

2003ஆம் ஆண்டு தென்­ஆ­பி­ரிக்கா, சிம்­பாப்வே, கென்யா நாடுகள் முதற் தட­வை­யாக இணைந்து நடத்­திய இத்­தொ­டரில் ஸ்கொட்­லாந்­துக்கு பதி­லாக கனடா, நமி­பியா, நெதர்­லாந்து உள்­வாங்­கப்­பட்டு 14 அணிகள் பங்­கேற்­றன. தென் ஆபி­ரிக்­காவின் ஜொஹ­னஸ்­பேர்க்கில் மார்ச் 23ஆம் திகதி நடை­பெற்ற இறு­திப்­போட்­டியில் சௌரவ் கங்­குலி தலை­ மை­யி­லான இந்­தி­யாவும் ரிக்கி பொண்டிங் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லிய அணியும் மோதின. கங்­கு­லியின் அழைப்பில் முதலில் துடுப்­பெ­டுத்­தாட ஆரம்­பித்த ஆஸி.க்கு கில்­கிறிஸ்ட் (57), மெத்­தியூ ஹேடன் (37) சிறப்­பான ஆரம்­பத்தை வழங்க அதனை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அணித்­த­லைவர் ரிக்­கி­பொண்டிங் 121பந்­து­களில் 4நான்குஇ 8ஆறு உள்­ள­டங்­க­லாக 140ஓட்­டங்­களைப் பெற்று இறு­தி ­வ­ரையில் ஆட்­ட­மி­ழக்­கா­தி­ருந்தார். இவ­ருக்கு துணை­யாக டேமியன் மார்ட்டின் (88) இருக்­கவும் 50 ஓவர்கள் நிறைவில் 2விக்­கெட்­டுக்­களை இழந்­து 359 ஓட்­டங்­களைக் குவித்­தது. உலக கோப்பை இறுதி ஆட்­டத்தில் அணி­யொன்று பெற்ற அதி­க­பட்ச ஓட்டம் என்­ப­துடன் தனி­வீ­ர­ரொ­ரு­வரின்  அதி­க­பட்ச ஓட்­டத்­தையும் பொண்டிங் பதிவு செய்தார். ஷெவாக் (82) ஆட்­ட­மி­ழக்க தடு­மா­றிய இந்­தியா 39.1 ஓவர்­களில் 234 ஓட்­டங்­களைப் பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. 125 ஓட்­டங்­களால் வெற்றி பெற்ற ஆஸி. 3ஆவது முறை­யாக உலக மகு­டத்­திற்கு முத்­த­ மிட்­டது. 11 போட்­டி­களில் தோல்­வி­க­ளையே காணாது அணி யை வழி­ந­டத்­திய தலைவர் பொண்டிங் ஆட்­ட­நா­யகன் விரு­தைப்­பெற்றார்.

 

2011_zpscsi7nfsl.jpg

2007 ஆம் ஆண்டு மேற்­கிந்­திய தீவு­களில் முதல் முறை­யாக 16 அணி­களின் பங்­கேற்­புடன் நடை­பெற்ற உலகக் கிண்­ணத்­தொ­டரில் பவர்-­பிளே அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. லீக் மற்றும் அரை­யி­று­தியில் பிர­கா­சித்த ரிக்கி பொண்டிங் தலை­மை­யி­லான அவுஸ்­தி­ரே­லி­யாவும் மஹேல ஜெய­வர்த்­தன தலை­மை­யி­லான இலங்கை அணியும் ஏப்ரல் 28ஆம்­தி­கதி பிரிட்ஜ்­ட­வுனில் பலப்­ப­ரீட்சை நடத்­தின.  மழையால் 38 ஓவர்­க­ளாக குறைக்­கப்­பட்ட இந்த போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய ஆஸி.க்கு ஆரம்­பத்­து­டுப்­பாட்ட வீரர் கில்­கிறிஸ்ட் 104 பந்­து­களில் 13 நான்கு, 6 ஆறு 149 ஓட்­டங்­களைப் பெற்று இறு­திப்­போட்­டியில் அதி­கூ­டிய ஓட்­டங்­களைப் பெற்ற வீரர் என்ற சாத­னை­யையும் தன­தாக்­கினார். அவுஸ்­தி­ரே­லியா 38 ஓவர்­களில் 4 விக்­கெ­ட்டுக்­களை இழந்து 281 ஓட்­டங்­களைக் குவித்­தது.  பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை சார்பில்  சனத் ஜெய­சூர்ய (63), சங்­கக்­கார (54) களத்தில் நின்று போரா­டிய போதும்  ஆஸி.யின் ஆதிக்கம் ஓங்­கியே இருந்­தது.  மீண்டும் மழை குறுக்­கிட்­டதால் 36ஓவர்­க­ளாக போட்டி மட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு 269ஓட்­டங்கள் வெற்­றி­யி­லக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. இருப்­பினும் 36 ஓவர்­களில் 8 விக்­கெட்­டுக்கு 215 ஓட்­டங்­களைப் பெற்று இலங்கை தோல்­வியைத் தழு­வி­யது. இதனால் நான்­கா­வது தட­வை­யாக கிண்­ணத்தைக் கைப்­பற்­றிய ஆஸி. தொடர்ச்­சி­யாக மூன்று தட­வைகள் உலகக் கிண்­ணத்தை தம­தாக்கி ஹட்ரிக் சாதனை படைத்­த­வர்கள் என்ற வர­லாற்று சாத­னை­யையும் புரிந்­தனர். 26 விக்­கெட்­டு­களை சாய்த்த வேகப்­பந்து வீச்­சாளர் கிளென் மெக்ராத் ஆட்­ட­நா­ய­க­னானார்.

 

 

2011ஆம் ஆண்டு 10ஆவது உலகக் கிண்­ணத்­தொ­டரை இந்­தியா, இலங்கை, பங்­க­ளாதேஷ் ஆகிய ஆசிய நாடுகள் இணைந்து நடத்­தின. நடு­வர்­களின் தீர்ப்பை எதிர்த்து முறை­யிடும் (டி.ஆர்.எஸ்.) முறை அறி­மு­க­மா­னது. 14அணி­களின் பங்­கேற்­ற­லுடன் நடை­பெற்ற இத்­தொ­டரின் இறு­திப்­போட்­டியில் டோனி தலை­மை­யி­லான இந்­தி­யாவும் குமார் சங்­கக்­கார தலை­மை­யி­லான இலங்­கையும் இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றி­யி­ருந்­தன. ஏப்ரல் 2ஆம்­தி­கதி மும்பை வான்­கடே மைதா­னத்தில் நடை­பெற்ற ஆசிய அணிகள் மோதும் வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த இறு­திப்­போட்­டியில் இலங்கை முதலில் துடுப்­பெ­டுத்­தாடி 6 விக்­கெட்­டுக்­களை இழந்து 274 ஓட்­டங்­களை எடுத்­தது. மஹேல ஜெய­வர்த்­தன 103 ஓட்­டங்­களைப் பெற்றார். பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய இந்­தி­யாவின்  ஷெவாக் (00), சச்சின் (18) அரங்கு திரும்­பவும் கௌதம் கம்பீர் 97 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொ­டுக்க இறு­தி­நே­ரத்தில் அதி­ர­டியை வெளிப்­ப­டுத்­திய அணித்­த­லைவர் டோனி   இந்­தி­யாவின் வெற்­றியை உறு­தி­செய்தார்.இந்­தியா 48.2 ஓவர்­களில் 4 விக்­கெட்­டுக்கு 277 ஓட்­டங்­களை எடுத்து  6 விக்­கெட்­டு­களால் வெற்­றி­யீட்­டி­யது.  இதன்­மூலம் 28 ஆண்­டு­க­ளுக்கு பின்னர் சொந்த மண்ணில் உலகக் கிண்­ணத்தை கைப்­பற்றி வர­லாறு படைத்­தது. 91 ஓட்­டங்­களைக் குவித்த டோனி ஆட்­ட­நா­ய­கனானார்.

 

 

http://www.virakesari.lk/articles/2015/02/12/11-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.