Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போச்சு எல்லாமே போச்சு

பொம்பிள சிரிச்சா போச்சு

புகையில விரிச்சா போச்சு

பக்கம் பக்கமாய் சொல்லியாச்சு

வாய்விட்டு சிரிச்சா

நோய் விட்டு போகும் என்றே

நங்கையரும் சிரிக்கினம்

நோயை விரட்டி அடிக்க

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

போச்சு எல்லாமே போச்சு

பொம்பிள சிரிச்சா போச்சு

புகையில விரிச்சா போச்சு

பக்கம் பக்கமாய் சொல்லியாச்சு

வாய்விட்டு சிரிச்சா

நோய் விட்டு போகும் என்றே

நங்கையரும் சிரிக்கினம்

நோயை விரட்டி அடிக்க

அடிக்க அடிக்க அம்மி கல்லும் நகரும்

புரட்சி வெடிக்க சிறு தீப்பொறி போதும்

ஆட்சி ஆரசாங்கம் மக்களுக்காக மாறும்

நிஜ மக்களாட்சி வர மாறும் இந்த ஊரும்

ஊரும்..உலகும்..

பாத்திருக்கும்..

காத்திருக்கும்..ஒரு உரை..

நாட்டின்... அரசியலை..

சூழலை..

எல்லாம் மாற்றக்கூடிய வல்லமை

பொருந்திய உரை..

எப்போது சொல்வார்..

என்ன சொல்வார்..

என.. எல்லோரும்

காத்திருக்கும் உரை..

எங்கள் வீரத்தமிழன்..

தானைத்தலைவன்..

கரிகாலனின்

மாவீரர்தின உரை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வீரத்தமிழன் அவன்

வீரம் நெஞ்சினில் எழ

வீறு கொண்டு எழுந்தவர்

தமிழ் ஈழ விடுதலைக்காய்

தன் கனவுகள் ஆசைகள் துறந்து

தேசத்தின் விடுதலைக்காய்

தேகத்தினை இழந்து

சாவிலும் சரித்திரம்

சரித்திரம் படைக்கும்

மா வீரர்கள் அவர்கள்

அவர்கள் யாரடா

அந்நியரா...???

அட ஆழ வந்தாரோ

எம் மண்ணிணையா....???

துப்பாக்கி உன் கையில்

இன்று இல்லையா...???

அவரை தூக்கிலே

போடவும் கயிறில்லையா....???

கொடியார் அவரை நீ

கொல்லலயா....??? எத்தனை

கொடுமைகள் புரிந்தார்

உனக்கு தெரியலயா....???

இனியும் உனை விட்டால்

தவறல்லவா - நீ

துரோகியாய் இருப்பது

முறையல்லவே....

இவனை போடடா

முதல் தூக்கினிலே

இவனே எமக்கின்று

கொடியவனே......

இறுதி சொல்லில் கவிதை எழுத தொடங்குங்கள் அதுவே விதி...

Edited by vanni mainthan

கொடியவனே..-தமிழ்

குலம் அழிக்க வந்த

கயவனே..

ஈடேறாதடா உன்

எண்ணம்

நடக்காதடா உன்

ராஜாங்கம்..

பலிக்காதடா உன்

கனவு..

மோசக்காரனே..

வேசக்காரனே..

இரக்கமில்லா

அரக்கனே..

எம் தலைவர் உன்னைச்

செய்வாரடா..

சூரசம்ஹாரம்.

Edited by vikadakavi

"சூரசம்ஹாரம்"

"ராவண வதம்"

தமிழன் வழிபடு தினங்கள்

நம்மவர் வீழ்ச்சியை

நாமே துதிக்கிறோம்...

தமிழரெல்லாம்

அரக்கர்

தெழுங்கரெல்லாம்

குரங்கர்....

ஆரியர் மட்டுமே தேவர்

தெய்வீக பிறப்புகள்....

ஆரிய மதகுருவின்

போதனை இது.

வேதனை இங்கே

இழி தமிழன் நிலை....

கண்ணன் ....முகுந்தன் ...

கோபாலன்..வைகுந்தன்..

ஆரிய அரசன்..

இராமன் பொருள்பட

ஆயிரம் பெயர்கள்..

இராவணனை நினைக்க

யாருமேயில்லை இங்கு...

வேசி மகனென்று

வெட்கமின்றி சொல்கிறோம்.....

ஆரிய கடவுள் எல்லாம்

புல்லரித்துதான் போவார் - எம்

கூனிய நிலை கண்டு .......!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை அந்தாதியில் மலரும் கவிதைகள் எல்லாமே அழகு.

இறுதிசொல்லிலே கவிதை ஆரம்பித்தால் கவிதை அந்தாதிக்கு மேலும் அழகு

கண்டு என்றே ஆரம்பியுங்கள்.

கண்டுகொண்டேன்..

கன்னிமனம்..அதில்..

ஈரமில்லை..அவள்

இரங்கவில்லை..

தங்கநிறம் கொடுத்தான்..

தவழும் கூந்தல் கொடுத்தான்

அழகுவிழி கொடுத்தான்

பூங்கொடியாய் இடை கொடுத்தான்

எடுப்பாய் மூக்கும். சிவப்பாய் இதழும்

சங்குக்கழுத்தும்....தாமரைப்பா

கண்டுகொண்டேன்..

கன்னிமனம்..அதில்..

ஈரமில்லை..அவள்

இரங்கவில்லை..

தங்கநிறம் கொடுத்தான்..

தவழும் கூந்தல் கொடுத்தான்

அழகுவிழி கொடுத்தான்

பூங்கொடியாய் இடை கொடுத்தான்

எடுப்பாய் மூக்கும். சிவப்பாய் இதழும்

சங்குக்கழுத்தும்....தாமரைப்பா

என்ன விகடகவி, நீங்கள் சொல்லும் லட்சணங்களை பார்த்தால் ஒரு ஆங்கிலேய பெண்மணியிடம் மனதை பறிகொடுத்ததை போல் உள்ளதே :D

oh my god

God promise..

there is nothing like that..

ஐயோ ஏங்க

கவிதை எல்லாமே உண்மையாவா இருக்கணும்..

என்னோட மனைவி மெய்யா கறுப்புங்க

இதயத்தை தவிர

எல்லாம் தொலைத்தேன்

இருப்பது ஒன்று

இதயம் மட்டுமே...

இதையும் வந்து

இன்று நீ

கேட்டால்

என்னடி செய்வேன்

சொல்லடி பெண்ணே....???

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணேயுனைக் கொள்ளக் கோடியர் வந்தார்நம்

கண்ணாய மண்காக்க ஆயிரரே சென்றார்தம்

உண்ணாத நிலையிலும் போரினையே வென்றார்எம்

மண்காத்த அவர்தனையே மனதினிலே கொள்வாய்.

கொள்வாயென களமிறங்கும் 'கொல்"லோசை கள்ளனோ?

பொல்லாத புலன்செதுக்கும் சொல்லோசை வல்லனோ?

:lol::lol::lol:

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

வல்லனோ அல்லனோ அற்றையான் அறிகிலேன்

புல்லனே எம்மவர் வெற்றியின் முன்றலில்

கல்லனே வித்துடல் கண்டும்யான் அங்கிலேன்

நல்லனே ஆயினும் மெல்லிசை வாயிலில்

மெல்லிசை வாயிலில் மேனியும் இதம்

துள்ளிசை மிகுந்திட தமிழுக்கு ரணம்..

மெல்லியலாடையில் பார்வைக்கு சுகம்..

தெ ள்ளிய ஓடைபோலாயிடும் தினம்..

ஓடையும் ஓடையில் அறிந்திடா மனம்..

ஓடிடுமிளமைக்கும் வருந்திடாமலே..

பாடையில் சேர்ந்திடல் தமிழ்க்கொலையாமோ..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க்கொலை யாமோவென வினவல் வேண்டாம்

அமிழ்த்துவார் கடலில் மெல்லியலார் காண்நீர்க்

குமிழ்போலாம் வாழ்க்கையின் நீட்சி அதன்கண்

அமிழ்தினும் இனிதாய தமிழ்மொழி காப்பாய்

காப்பாய் வேந்தேயெனக்

கதறியழுகினும்..கோ

அந்தப்புரத்திலாடும்..அரசிளம்

பெண்களோடு.சல்லாபம் மிகுந்து..

ஆட்சியின் மாட்சிமை

மதுவில் மறந்தனன் காண்.

காண்பாய் களத்தினில் கந்தகக் கோலங்கள்

வீண்பாய் உளத்தினில் வினைதரு யாலங்கள்

ஏன்வாய் எனக்கென எகிறிடும் காலங்கள்

கூன்தோய் முதுகினில் குமுறிடும் தாளங்கள்

தாளங்கள் மாறிய

இதயஜதியை

ஏற்றி இறக்கும் பெண்ணே..

வயோதிப எல்லையில்

வாழ்ந்து பார் தெரியும்..

என் தள்ளாடும்

வயது தாவணிக்கனவுகள்.. :D

தாவணிக்கனவுகள் துறந்த தங்கையர்

ஆகுதியாகியே தாயகம் மீட்கையில்

பாவணி வகுத்திட பைத்தியமாக நாம்

வேரிட்ட திமிரில் வேற்றிடம் சாய்வதேன்?

Edited by ஆதிவாசி

சாய்வதேன் என இயம்பியலியல்பே..அன்றிச்

சாய்ந்ததேனடா..என் கல்லறைச்சுவரில்..

சாணைதீட்டி நீ ஏற்றிய நாக்கூர் -இதயச்

சாலை யாவும் செந்நீர்ச்சேற்றில்.

  • கருத்துக்கள உறவுகள்

சாய்வதேன் விகடகவியே பாவாடையின் பக்கம்

பேய்களே பயங்கொள்ளும் பூவாடையின் பக்கம்

பாய்களே வேண்டின் எந்தமிழ்மண் நித்தம்

மாய்ந்துதான் போமே தினம்சிந்திஇ ரத்தம்

ஆஹ்.. முந்திய விகடகவிக்கே வாய்ப்பு..

Edited by Danguvaar

செந்நீர் சேற்றிலே சிந்திவிழும் அன்பு

பன்னீர் தெளித்தாலும் பக்கம்வரா நம்பு

டங்குவார் தொடங்குவார் என்று அறியாது போனேன்

Edited by ஆதிவாசி

அறியாது போனேன்..

ஆறோடும் கரையில்

அமர்ந்தாலும் கூட

வருகின்ற காற்றோடு

தலைசாயும் நாற்று

காற்றோடும் சேரும்

கூட்டாளியென்றுதான்

அறியாது போனேனே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.