Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொனேனே நான்செத்து அந்தாதியின் பிடியில்

ஆனானே அவன்பித்து கிளியனார் மடியில்

தேனாரும் அவர்வாயில் தொலைந்தானே விகடன்

மானான விழியர்தாம் கொண்டாரே மகுடம்

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

மகுடம் சூடியதால்ப் பேர்

அரசனே ஆனாலும்..அவன்

தாய் காலடி தொழுதல் கடன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகுடம் தனை மக்கள்

மனதினில் தக்க வைத்திருக்கும் ராஜகோபுரம்

எங்கள் தலைவர் தமிழ் படை என்றாலே

புலிப்படை என்றுணர வைத்தவர் எங்கள் தலைவர்

புதிய புறநானூறு படைத்திடும்

எம் சரித்திர நாயகர் எம் தலைவர்

எம் தலைவர் எமக்காக

பிறந்திட்ட நாளின்று-பகை

அஞ்சிட அரியணை

ஆளப் பிறந்தவரை..

வஞ்சனையோடு சில

பிறவிகள் எதிர்த்திடும்..

தமிழ் நெஞ்சனைத்தும்

நின்றாரை இந்நாளிலும்

வாழ்த்துவோம்.

வணங்குவோம்.

வணங்குவோம் கவியென்னுள் கவிகவிய வைத்தவளை

இனங்கண்டு எனைவசைத்த ஈழத்துத் தாயவளை

மனங்கொண்டு தன்பாலை தினந்தந்த தமிழாளை

திகட்டாத மொழியாலே எனைத்தின்ற விழியாளை.

விழியாளைத் தமிழென்னும் அழகு

மொழியாலே அழைத்தேன்..

வழி தெரியாமல் தடுமாறி வசை

பொழிவாளோ நினைத்தேன்

பழியேதும் சொல்லாப்பொற்க்

கிழி போன்ற பெண்ணாள்

அழியாத வரந்தந்தாள்..காதல்

Edited by vikadakavi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காதல்

காதல்

காதல்

இதன் அர்த்தம் புரியாமல் - தங்கள்

வாழ்க்கையை கேள்விக்குறியாய்.....பல பேர்...

இதன் அர்த்தத்தை

கொச்சைப்படுத்திக் கொண்டு.. இன்னும் பலர். . .

புரிந்துணர்வுடனும்

புனிதத்துடனும்

சில காதலர்களின் இதயத்தில்

தெய்வீகமாய் . . .காதல்.

Edited by erimalai

  • கருத்துக்கள உறவுகள்

காதல் ஆற்றில் நீந்தாமலே காமம்

நோதல் ஒன்றே நாதமாய் இரண்டும்

பேதம் இல்லாப் புலனுணர்வென அறியும்

போதில் துலங்கும் பேதமை

பேதமை புகுமிடத்து ஆண்மை

பேராவல் களி காமமீடேறப்

பேதையாள் பார்த்தே பரிதவிக்க

பேசாமல் கச்சை கட்டுமாண் கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கள் குடித்தால் போதை வரும்

கள்ளி உந்தன் இதழைக்

கண்டாலே எனக்குள் போதை

தலைக்கேறுகிறதே

ஒருமுறை உன் தேன் தரும்

இதழ்தனை சுவைக்கத்

அனுமதி தந்திட்டால்

கள்ளின் சுவை அறிந்திடுவேனே

அறிந்திடுவேனே அம்மா..

பேசிவிட்டால் என்னோடு..

அம்மா நீ நலமா..

என்னைப் பெற்றவளே..

உன்னருகே நானில்லையம்மா..

என்னை வளர்த்தவளே..

உயிரெல்லாம் நீதானம்மா

வகிடெடுத்து தலைசீவி

வாஞ்சையுடன் முத்தம் தந்து

பாடசாலை அனுப்பிவிட்ட..

பார்த்திருக்கும் தெய்வம்..

பள்ளி விட்டுவருமெந்தன்

பசியறிந்து ருசியறிந்து...

உணவை ஊட்டிவிடும்

அருமை உள்ளம்..

என் சிறு வலிக்கே

பதைபதைப்பாய்..

பெருவலி கண்டு

என்னை ஈன்றவளே..

அந்நிய நாட்டில்..

உன்னை நான் அடிக்கடி

நினைத்தாலும் தாயே..

என்னை நொடிக்கொரு தரம்

நினைப்பவள் நீயே அம்மா..

அம்மா எப்படி இருக்கிறாய்

உன் மகன் நான் எப்போது

கேட்டாலும் அம்மா நலமென்ற

வார்த்தைச் சுகத்திலும்

சோகம் தொணிக்குதேம்மா..

ஐயிரண்டு மாதம்

சுமந்தவளுக்கு..பாவிநான்

ஐயிரண்டு ஆண்டுகள்

பிரிவுச்சுமை தந்துவிட்டேனேயம்மா

அம்மா சொல்லம்மா

நீ நலமா..நீ நலமா அம்மா..

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவெனும் நின்கவிதை அகமெல்லாம் தரும்சோகம்

இம்மானுடப் பிறப்பதிலே இழக்கலது அவள்பாசம்

மும்மாரி பொய்த்திடினும் முதற்கவளம் உன்வாயில்

அம்மாது உனைச்சேர அடிமனது தொழுதிடுதே..

தொழுதிடுதே..உள்ளம்

தலைவா உன் உருவங்கண்டு

ஐம்பத்திரண்டு அகவிலும்

நீ சிங்கமய்யா சிங்கம்..

அழுத எங்கள்

கண்ணீர் யாவும்

துடைத்தாய் உன்

விரலால் ..

சொல்லிவிட்ட வார்த்தைகள்..

வலி தவிர்க்கும் சுகம்.

உறுதியான வார்த்தைக்கெல்லாம்.

தலைவா நாங்கள்

ஒற்றுமையாய்

வலிமை செய்வோம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செய்வோம் ஒன்றுபட்டே செயற்படுவோம்

செய்வதற்கரிய பல அரிய செயல்கள் புரிந்தே

தமிழீழம் பெற்றிட புலத்தினிலிருந்தே

ஒன்றுபட்டு உறுதி பூண்டிடுவோம்

புது உலகம் படைத்திட

புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ்

தவத்தால் தலைவன் கிடைத்தான்

இவன் விழிகளில் தீப்பொறி பறக்கும்..

பார்க்கும் வழிகளில் தென்றல் நடக்கும்

புது உலகம் படைத்திடப் பிறந்தான் -தமிழ்

தவத்தால் தலைவன் கிடைத்தான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிடைத்தான் அல்லுற்ற எம் தமிழ் மக்களுக்கு

கிடைத்தற்கரிய எம் தலைவர் கிடைத்தார்

கிடைக்கும் எம் இனத்துக்கு விடுதலை

கிடைக்கவேண்டும் என்ற நம்பிக்கையில் நாம்

நாம் விலைகள் பேசி

எம் தலைகளை விற்கிறோம்...

பெண்கள் விலைகளைக் கொடுத்து

வில்லங்கத்தை வாங்குகிறார்கள்..

சீதனம். :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சீதனம் வாங்கியே

சீக்கிரத்தில் செல்வந்தனாய்

சிறப்பாய்

சீவித்திடுவர்

சீதனம் கொடுத்தவர் வாழ்வும்

சீர் குலைந்து போய்விடும்

சீதனம் கொடுத்தும்

சீர் வேண்டும் என்றே

சினந்து கொண்டு

சிங்காரப் பெண்ணை

செந்தணலில் வேகவிட்டும்

பார்த்திடுவரே ஆண் இனம்

ஆண்இனம் பாவம் அவருக்கு

ஏனிந்த சாபம்..

நாட்டினை ஆழ்வான்..அவன்

வீட்டினில் சாவான்..

பெண்ணடிமை எல்லாம் பொய்..

ஆணடிமை என்பதே மெய்.

அகப்பை காம்புதான்

சேங்கோல்..

அவள் சொல்லும்

வார்த்தை வேதம்.

தலையணை ஆண்டிடும்

தேசம்..ஆண்கள்

தழுவிடும் விசயத்தில் மோசம்..

கண்ணசைவே உத்தரவு..

மீறிவிட்டால் தொந்தரவு..

விடுதலை வேண்டும்

விடுதலை வேண்டும்..

ஆணுக்கும் விடுதலை

வேண்டும் ;)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேண்டும் வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றார்

வேண்டிக் கிடைத்ததில் திருப்தி கண்டிட்டால் இன்பந்தான் பெருகிடாதோ

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்றறியாமலே

மேலும் மேலும் சொத்து சேர்த்து சுகம் காணாமலே

போகின்ற ஆத்மாவைக் கட்டியாளத்தான் முடியுமா

முடியுமா எனக் கேட்டால்

உன்னால் முடியாது..

முடியாது என்று எதுவும்

கிடையாது..நாங்கள்

முயன்றால்..

  • கருத்துக்கள உறவுகள்

முயன்றால் முடியாதது ஏதுமில்லையாம்.. மேற்கில்

பயன்தரா சீவன்களின் நிறபேதத்தால் கறுப்பி

நயன்தரா நிறத்துக் குருகினாரே...முயன்றதால்

இயன்றதா அவர்நாடும் நிறமாம் செம்மை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

செம்மையாகும் மந்திரங்களை நிதம் செபித்திட்டால்

செம்மையாகிடும் மனமதில் மயக்கங்கள் ஏதுமில்லாமலே

செந்தமிழ் சிறக்க கவி ஒன்று படைத்திட நானும்

செந்தூர் முருகனை வேண்டுகின்றேன்

முருகனை வேண்டுகிறேன்

அவன் கை வேலால்..

தமிழர் பிணங்கள் மேல்ச்

சதிராடும்..சிங்கள அரக்கரைச்

சங்கரிக்க முருகனை

வேண்டுகிறேன்..கொள்ளுப்பிட்டி

குண்டுபோல முருகன்

வேல் குறி

தப்புமோ.. தவறுமோ..

தப்புமோ?... தவறுமோ?

வைத்தகுறி வைத்ததுதான்!

அப்பு, ஆத்தா காலந்தொட்டு

சொத்துமுதல் சொந்தம்வரை

கொப்பேறி நின்ற பேயின்

கோரத்திற்கு இரையானோம்.

எத்தனைநாள் ஏதிலியாய்

இன்னொருவர் நாட்டிடையே

இன்னலினுள் கிடந்து உழல்வோம்

தாயகத்தின் மீட்புநோக்கி

வைத்தகுறி வைத்ததுதான்!

இனி தப்புமோ? அது தவறுமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.