Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்மா அருகில் இருந்தபோது

அம்மாவின் அருமை தெரியாமல்

அல்லல் மறந்து இருந்தேன்

அந்நிய மண்ணில் தினம்

சிறுத்து பெறுத்து வளைந்து

நிமிர்ந்து வழிந்து ஒடும்

வாழ்க்கையின் பயணத்தில்

அம்மா உன்னை நினைந்து

என் கண்கள் பனிக்கின்றதே

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

பனிப்பவை இரு கண்கள்..

பார்ப்பவை வேறு கண்கள்

மனத்துள் இருந்தும் பெண்ணே..

வீம்பால் வேதனை தரும்..

இல்லறத்துள் வேண்டும்

ஊடலும் கூடலும் கண்ணே

கண்ணே....

அழைக்கும் போது

மாட்டேன் என்பாய் !

விலகிப் போ.....

வில்லங்கம் வேண்டாம் என்பாய்!

விலகிப் போனாலும்...

வேண்டாமென்பாய்

திரும்பிவந்தால்

தலை கவிழ்வாய்....

புவியதனில்

பெருவிரலால்

கோலம் வரைவாய் !

என்ன செய்யப் போகிறாய்?

வேண்டாமென்பாய் -பின்

வேணுமென்பாய்...

எதிர்மறையாய் எனக்கு

வேஷமிட்டுக் காட்டுவாய்

நீ என்றால் நானென்பாய்

நானென்றால் நீ என்பாய்

நாமாக வேண்டுமென்றால்

நாள் பார்க்கச் சொல்கின்றாய்..? :) :P :blink:

Edited by gowrybalan

சொல்கின்றாயே நீயென்று

நான் பார்த்த நாளில்

உனக்காக காத்திருந்தால்..

பாத்திருப்புகள் பலனில்லாமல்..

காத்திருப்புகள் காலவதியாக

என்; கல்யாணக் கனவுகள்..

ஊதி ஊதி உப்பலாக..

இளமை மட்டும்..

இன்னும் ஊசலாடும் ஊஞ்சலாக..

ஊஞ்சலாக - உன்

மனதின் ஆசைகள்

ஊசலாடும்...

ஆதியுடன் சேர்ந்ததனால்

மனங்கூட அடிக்கடி

மரந்தாவும்...

காத்திருக்கச் சொன்னால்

காத்திரு..!

(வெண்) நரை வந்தபின்பும்

நான் வருகின்ற

வழிகளிலே...

உன் விழிகளினால்

தவமிரு..!

வருவேன் நானுனது

வாசல் தேடி..!!! :P

தேடித் தேடி வரத் தேவி

ஓடி வரும் அந்த

ஒற்றையடிப்பாதையோ..

ஓரடி அகலம்..

அவள் வரக்கண்டு

அவள் வருகிறாளென

நான் ஒதுங்கி நின்றேன்

நான் ஒதுறங்கி விட்டேன்

என்று திரும்பிச் சென்றாள்..

மீண்டும் வருவாளோ..மெய்

அறிவாளோ..என்ற

ஏக்கங்கள் நீங்கமுன்னே..

அதே பாதையில்..

அன்று செல்வியாய்ச் சென்றவள்..

இன்று திருமதியாய்..

திரும்பி வர

கண்டும் காட்டிக்கொள்ளாத

அவள் வாழ்க்கைப் பாதையில்

நான் மைல்கல்லாக இல்லை

குறுநுனிக்கல்லாக கூட

இல்லையே இல்லை

இல்லை என்ற போது

நான் உனக்கு

இல்லை என்ற போது....

உன் - நினைவில்

நான் இல்லை

என்றாக வேண்டும்...!

பாடசாலை

உனை அனுப்பி வைத்தார்

பாடத்தை - நீ

படிக்கவில்லை....

பாடலென்றும்

காதலென்றும்

வெட்டிப் பயலாய்

சுற்றித்திரிந்தாய்...

வாழ்க்கை என்றால்

வாழவேண்டும்

வாழ்வதற்கோ....

காசு வேண்டும் !

அதனால்

அன்று - நீ

எனக்குத் தரவில்லை

வெகுமதி

ஆதலால் ....

ஆனேன் - நான்

இன்னொருவன்

திருமதி :lol: :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி ஓர் வெகுமதி

தரும் மதி தந்தாள்

தானமாய் பல லட்சங்கள்

வருவாயும் கை வசம்

தருவாய் நீயும் சந்தோசங்கள்

வாழ்வினில் ஒளியேற்றும் முழுமதி

முழுமதி முகம்காண

அவள் வரும் வழி

விழிவைத்தேன்..

கொடியிடை துவள..

கொங்கைகளாட..

மங்கை வந்தாள்..

சுட்டுவிழிக்கட்டளையால்..

தொட்டுவிட்டு

எட்டிச்சென்றாள்..

அழைத்ததே பேருவகை

சளைக்காமல்

பின்னே நடை போட்டேன்..

பல அடி விலகிப்

போன பாவையவள் திரும்பி

வில் இமை உயர்த்தினாள்..

நிராயுதபாணியனாய் விகடகவி

நன்றே தொடை

நடுநடுங்கிப் போனான்..

விரைத்து நின்ற

எனை விலக்கி அம்மா

என்றோடியது அவள் பிள்ளையோ..

அடடா..இவள்

அவளில்லையோ..

இல்லை அவள்தான்..

என்னை அழைக்கவில்லையோ..

இல்லவே இல்லை..

அசடு.. அசடு...

எப்பிடித்தான் கண்டுபிடிக்கிறாறங்களோ..

அசடு ... அசடு...

அந்த அன்னையவள்

நோக்கினாள்-உன்னை

பிள்ளை பிடி காரனென்று...

கொடியிடை எல்லாம்

உந்தன் முழுமதி என்றால்...

கடியிடை தானே (கடி=யானை)

நமக்கு கடைசியில் மிஞ்சும்..? :lol:

முழுமதி காண

தவம் செய்யும் விழியால்

விகடன்

மதிகெட்டுப் போச்சு... :P

மதி கெட்டுப்போச்சு

மெய்யே மெய்தான்..

மனசும் கேட்கவில்லையே

இள வயசும் கேட்கவில்லையே..

இந்த தேகம் தேடும்

திருப்புமுனைக் காவியங்கள்

நான் தீட்ட நண்பா..

இளமாது மடல்..

தேடுவதும் என்ன எந்தன்

தப்பா..தவறா..

விகடன் பாவியென்றால்.

ஆஞ்சநேயர் மடடும் நல்லவர்.

நல்லவர் வல்லவர் என்று

நாட்டினில் யாருண்டு

நண்பா எந்த நாட்டிலும்

யாருண்டு..???

என் தேவைகள்

உன்னிடம் இருப்பின்

நீயே எனக்கு நல்லவன்...

என் தேவைகள் முடிந்ததும்

நானே உனை விட

என்றும் வல்லவன்..! :P

வல்லவன் தலைவன்..

வாய்மையின் பொருளவன்..

ஈழக்குழந்தையவன்..தமிழர்க்கு

ஒளிமிகு எதிர்காலம் தருவான்..

ஆயிரமாயிரம்..வீர ஆன்மாக்கள்..

பலம் அவனுக்கே உண்டு..

விதையாகிப்போன வீரவிளைச்சல்கள்

யாவும் பூவாய் கனியாய்..

புத்தொளி காணும்..

இன்னல்கள் மறைய

ஈழம் இனிதே மலரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலரும் மங்கையும் ஒரு ஜாதி என்றே

மலர்தனை பறித்து முகர்ந்து விட்டு

மண்ணுக்குள் போட்டே மிதித்திடுவீர்

மங்கையையும் முகர்ந்துவிட்டு

மணித்துளிக்குள் மாசுபடுத்திவிட்டு

மடிதனில் கணம் தந்திடும்

மாயமாய் மாறிடும் மாயமான்கள்

மாயமான்கள் என்று சொல்லி

ஆண் நெஞ்சைக் காயம் செய்வதேனடி..

அன்புத்தோழனாய்..

தாய்க்கு நல் மகனாய்..

நல்ல குடிமகனாய்..

நற்க்கணவனாய்..

பிள்ளை வாழ்வுக்காய்

ஊனுருகும் நல்ல

தந்தையாய்..

ஆண் இல்லையா..

:angry: "ஆண் இல்லையா" என்று

தேடித்திரிந்த

பெண்ணின் கதை

இங்கு ஏனடி...?

அவர்கள் பட்ட பின்பு

பாவி என்பார்...

கெட்டபின்பு

கேடி என்பார்...

மீண்டும்...மீண்டும்...

"ஆண்கள் இல்லையா"

என்று ஏங்கித்திரியும்

பெண்கள் இங்கு நூறடி....

அதுபோல

ஆணிலும் உண்டு

பெண்ணிலும் உண்டு

மாயமான்கள்...

ஆனால் யாழினில்

இருக்கும்- நானும்

ஆதியும்...விகடனும்..

கவரிமான்கள்...!

அதை நீயும் பாரடி :angry:

'பாரடி" என்றால்

இப்பாவியை அடித்துவிடுவார்கள்.

ஆதலால்.....

பார் அடி என்று

பதிலடிக்கவா கௌரிபாலா?

கவரிமான் என்று சொன்னால்

சவரி கட்டி விடுவார்களே!

ஏற்கனவே தொங்குமான் இறைச்சியென்று

என் தோலுரிக்கத் துணிந்தவர்கள்.

ஆணில்லையா? என்றால்

விசிறி இழந்த சிவத்தைக்(சவம்) காட்டி

மெய்யிழந்த சக்தியெல்லாம்(சகதி)

மெய்யுலுக்க வந்துவிட்டால்....!

அய்யனே!

மாரிப்பையா! அடியேன் தாங்குவேனோ? :D

:D:Dதாங்குவேனோ..?

என்று சொல்லி

தூக்கம் கொள்ளும்

ஆதியே-நீ

தொங்கு மானின்

கூட்டம் - என்பதறியா...

கவரி மானுக்கு

உவ-மானம் செய்தேன்...??

பாவியே - இப்

பாலகனை

பரிதவிக்க விட்டு

விட்டாய்....

கூவியே நான்

அழைத்தபோது

எந்தக் கொப்பில்

தான் இருந்தாய்...?

முன்னர்....

மூன்று காலில்

வந்தவர்கள்(aus)-உன்

வாலறுத்துப் போனதனால்....

இன்று

தாங்குவேனோ

என்று சொல்லி

தூக்கம் கொள்ளப்

போய்விட்டாய்.....

"ஆண் இல்லையா"..?

என்று - அலைகின்ற

பெண்களிற்கு

பதில் சொல்ல

என்னோடு ஆணாகயாரிருக்கார்...??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆணாகயாரிருக்கார் களத்திலே எண்டு ஆசுவாசத்துடன் வியம்பினால்

ஆண்கள் எல்லாம் பொங்கிடுவார் பூகம்பமாய் கொதித்திடுவீர்

ஆணாகயாருக்கிறார் ஆத்திலே என்றே வினவிய அம்புஜம் மாமியை

ஆணவத்துடன் எண்ணியபடி படி ஏறி செல்வதன் அர்த்தம் புரியாதா

புரியாதா எனக்கு..

உன் புதிரான சூட்சுமங்கள்..

பொண்டாட்டியும்.. டீயும்..

புறம் காட்டும் அகம்..

சந்தோசமிகுதியால்..

சக்கரை வியாதி தந்தாள்..

கசப்பு மிகுதியால்..

சக்கரை மறந்திடுவாள்..

கோபத்தின் உச்சியில்

வாயில் புண் தந்தாள்..

ஆசை மிகுந்துவிட்டால்..

அடி ஆத்தி

ஆத்தி ஆத்தி தருவாள்..

டீயில் பார்த்தேன்.

பொண்டாட்டி முகம்..(அகம்)

பல வேளைகளில்

பொல்லாத நடிகையப்பா

(எல்லாம் கற்புஅணை ஸாரி கற்பனை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவாக நானிருந்தேன் அவனுக்கு

தப்பாமல் ஒன்றுக்கு இரண்டு வேலை

அப்பு ராசா என் மகன் கேட்டவை

தப்பாமல் வாங்கிக் கொடுத்த கைகள்

கைகள் மனம் களைத்த பொழுதினில்

வைப்புக்களும் இருக்கைகளும் கரைதலில்

பைகளின் மனங்களின் வெற்றிடங்கள்

நைந்துரும் வாழ்க்கையின் எல்லை

வாழ்கையின் எல்லையில் வசந்தம் இருக்குமென்று

நேற்றைய பொழுதை நான் வாழ்ந்திட மறந்தேன்!

நேற்றைய பொழுதினில் ஏற்பட்ட வடுக்களால்

இன்றிந்த நாளும் வீணே கழிகின்றது!

பார்க்கலாம் பிறகென்று மறந்த கடமைகள்

எந்தன் வாழ்வினில் எத்தனை ஆயிரம்!

எத்தனை ஆயிரம் எனும்போதெல்லாம் அந்த

மாவீர தெய்வங்களின் நினைவுதான் வருகின்றது!

காக்க நீ கந்தா கடம்பா என உருகிப்பின்

அடுத்தவரை விரைந்து அழிக்கும் சமூகத்தில்

தோன்றினார் மாபெரும் கரும்புலி வீரர்

கும்பிடுகின்றோம் உமை நாம் எம் கடவுளாக!

வேதனையை நானும் வேரோடு சாய்ப்பதற்கு

முயற்சிகள் செய்கின்றேன் விடிவுதான் இன்னுமில்லை!

ஈழத்தமிழனும் தானொறு "தேசத்தின் குரலென்று"

ஐக்கிய நாடுகள்சபை செல்வதுதான் எப்போது?

(எழுத்துப் பிழைகள் இருந்தால் மன்னித்துக்கொள்ளவும்! சுமார் ஏழு வருடங்களின்பின் ஏதோ ஒரு உணர்வில் தோன்றிய கிறுக்கல் இது! )

Edited by மாப்பிளை

எப்போது கேட்டாலும்

இப்போதே என்று

முப்போதும் அன்னமிட்ட

அன்னையின் குழையல் சோறு

பால்நிலா முற்றம்

தங்கையின் சிரிப்பு

அப்பாவின் அரவணைப்பு

வாழ்ந்து இழந்த நான்..

என்போல் அகதிகள்..

ஆண்பெண்

வாழாவெட்டிகள்தாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாழாவெட்டிகள்தாம் வாழ்ந்துவிட்டு

வாழ்வைத் தொலைத்த பெண்ணினங்கள்

நாடுவிட்டு நாடு போய்

நாடி வந்தால் வரவேற்புக்கள்

புகுந்தவீடு போய் திரும்பி

புதிராய் திரும்பி வந்தாலே

பதியப்படும் பெயரோ வாழாவெட்டி

விதவை, அபலை, பேதை, மலடி என்றே

வகை வகையாய் பல்லுடைந்த பட்டங்கள்

வைத்திடுவார் பாரினில் பெண்ணுக்கு

பெண்ணுக்கு ஆதரவு

தர..

ஆயிரம் கரங்கள் நீளும்..

நீளும் கரங்கள்

பிடித்து பெண்ணாசைகள்

ஊஞ்சலாடும்

ஆடும் ஊஞ்சலில்...

ஆனந்தம் கண்டு

ஆண்கள்..வாழ்வு

ஊசலாடும்.. :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.