Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் சிதைக்கப்படும் தமிழ் மொழி - கண்டு கொள்வாரில்லையோ.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சிதைக்கப்படும் தமிழ் மொழி - கண்டு கொள்வாரில்லையோ.

 
 
tamil-heritage-month.jpg
உலகின் சில மொழிகள் பன் மைய (Pluricentric) நிலை கொண்டவை, ஒன்றுக்கும் மேற்பட்ட மையங்களைக் கொண்டு இயங்குபவை. இதனால் ஒரே மொழிக்கு பல வகையான நடைகள் (Standards) இருக்கின்றன. எடுத்துக் காட்டுக்கு ஆங்கிலத்தை எடுத்துக் கொள்வோம், ஆங்கிலத்தில் பல வகைகள் இருக்கின்றன பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம், கனடா ஆங்கிலம், ஆஸ்திரேலியா ஆங்கிலம், இந்தியன் ஆங்கிலம் எனப் பல வகைகள் உள்ளன. இவற்றில் பிரிட்டன் ஆங்கிலம், அமெரிக்கன் ஆங்கிலம் முக்கியமான நடைகள் ஆகும். இவற்றுக்கு எனத் தனித் தனி அகராதிகள், இலக்கணங்கள் கூட உள்ளன. சுவீடன் மொழியில் கூட சுவீடன் சுவீடன், பின்லாந்து சுவீடன் என்ற இருபெரும் நடைகள் உள்ளன.
 
நம் தமிழ் மொழியும் அவ்வாறான ஒன்று தான் இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ், மலேசியன் தமிழ், சிங்கப்பூர் தமிழ் எனப் பல வகைகள் உள்ளன. இந்த நான்கு நாடுகளில் மட்டுமே அரசு உதவியோடு தமிழ் வளர்ச்சி செவ்வனே நடைபெறுகின்றன, இலக்கியப் படைப்புக்களும் பல எழுகின்றன.

இவற்றில் இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் நடைகள் முதன்மையானவை. இந்த நடைகளைப் பின்பற்றுவோருக்கு உள்ளே பல்வேறு வட்டார பேச்சு மொழிகள் உள்ளன, ஆனால் பொதுவில் ஒரு நடையை மட்டும் பின்பற்றிக் கொண்டு,  எழுதும் போதும், உரையாடும் போதும் கைக்கொள்வர்.  அந்த வகையில் தமிழில் இந்தியத் தமிழ், இலங்கைத் தமிழ் என இரு நடைகள் உள்ளன.  (E. Annamalai, Multiple centres of language development – the case of Tamil) 

 
மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் சில உள்ளூர் மாற்றங்கள் இருக்கின்ற போதும் பெரிதும் இந்தியத் தமிழையே அதிகம் பின்பற்றுகின்றன. அதே போல ஐரோப்பா, கனடா நாடுகளில் புலம்பெயர் இலங்கைத் தமிழர் சமூகத்தில் இலங்கைத் தமிழே அதிகம் பின்பற்றப்படுகின்றன. ஆனால் தமிழக ஊடகத் தொடர்புகளால் அண்மையக் காலமாக இலங்கைத் தமிழ், இந்தியத் தமிழ் இரண்டும் கலந்த நடை கனடா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன. 
 
கனடாவை பொறுத்தவரை ஊடகங்கள் எவ்வித நடையையும் ஒழுங்காகப் பின்பற்றாமல் குழம்பி வருவதை ஊடகங்களில் பயன்படுத்தப்படும் தமிழை வைத்துக் கூற முடிகின்றது. முக்கியமாகத் தமிழ் ஒன் தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் சொற்களைக் கவனித்தாலே நன்கு புரியும். Headlines என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழகம் மற்றும் இலங்கை ஆகிய இரு நடைகளிலும் தலைப்புச் செய்திகள் என்றே கூறுகின்றனர். ஆனால் கனடாவின் தமிழ் ஒன் செய்திகள் முதல் செய்திகள் என மாற்றியுள்ளது. இலக்கணப் படிப் பார்த்தால் கூட முதன்மைச் செய்திகள் என்று கூறலாம், முதல் செய்திகள் எனச் சொல்வது ஒன்றுமே விளங்கவில்லை. 
 
மற்றொன்று மிசிசாகா முன்னாள் மேயரைப் பற்றிய இன்றைய செய்தியில் அவரை நகரபிதா என்றழைத்தது. ஆனால் அவர் ஒரு பெண், அவ்வாறு என்றால் அவர் எப்படிப் பிதாவாக முடியும், நகரமாதா என்றல்லவா சொல்ல வேண்டும். நகரபிதா என்ற சொல்லே மிகவும் அந்நியமான ஒன்று, யாருமே நகரபிதா என்றழைப்பதில்லை, நகராட்சித் தலைவர், மேயர் எனத் தமிழக நடையினைப் பின்பற்றலாம், அல்லது  இலங்கைத் தமிழ் நடைச் சொல்லான நகரசபை முதல்வர் என்ற சொல்லை பயன்படுத்தலாம். இரண்டையும் விட்டுவிட்டு நகரபிதா என்ற வடசொல்லை திணிப்பது ஏனோ, அவ்வாறு திணித்துவிட்டு பெண்ணை போய் நகரபிதா எனக் கூறி முழிப்பது ஏனோ?
 
இது மட்டுமின்றி மற்றொரு தமிழ் தொலைக்காட்சியான ரீவிஐ-யில் நமக்கென்றோர் தொலைக்காட்சி என எழுதுகின்றார்கள். தமிழ், தமிழ் எனச் சதா புழகாங்கிதம் அடையும் இந்தத் தொலைக்காட்சியின் இலக்கணப் பிழையைக் கண்டு கொள்வாரில்லை. நமக்கென்றொரு தொலைக்காட்சி என்றல்லவா எழுத வேண்டும். வருமொழி முதலில் உயிரெழுத்து இருந்தால் மட்டுமே, ஈற்றில் உள்ள ஒரு ஓர் என்றாக மாற்றம் காணும் என்ற ஐந்தாம் வகுப்பு இலக்கணம் கூட இவர்களுக்குத் தெரியவில்லை. 
 
ஊடகங்கள் மட்டுமில்லை, பொதுப் பயன்பாட்டு அறிவிப்புக்களில் கூடத் தமிழ்க் கொலை பல அரங்கேறுகின்றன. ஸ்காபுறோ நூலகம் ஒன்றில் இடப்பட்டு இருந்த விளம்பர அறிவிப்பில் குடியுரிமை என்பதைப்பிரஜாவுரிமை என்று எழுதி இருந்தனர், ஏன் இந்த வடமொழி திணிப்பு. குடியேற்றம், குடியகல்வு, குடிவரவு எனத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தி விட்டு, இதில் மட்டும் ஏன் பிரஜா என்ற வடசொல் திணிப்பு. மற்றொரு அறிவிப்பு பலகையை ஸ்காபுறோ அரசு மருத்துவமனை அறிவிப்பில் கண்டேன். உடலநலம் என்பதை தேகசுகம் என எழுதி இருந்தனர். இதில் எது சரியான தமிழ் என்பதை தாங்களே சொல்லுங்கள். 
 
இத்தோடு நின்றுவிடவில்லை, அனைத்துத் தமிழ் கடைகளும் தமிழ் பெயர் பலகைகளை வைத்து விட்டு ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்த்து எழுதுகின்றனர். ஏன் இந்த இழிநிலை, ரெஸ்றறன்ற் ( உணவகம் ), ரேக் அவுட் ( பொதி எடுத்தல் ) போன்ற சொற்கள் தேவையா? 
 
மற்றொரு தமிழ் பிழையை ஸ்காபுறோ அஞ்சப்பர் உணவகத்தின் பெயர் பலகையில் கண்டேன். அஞ்சப்பர் என்பதே சரியான தமிழ் சொல், ஆனால் அஞ்ஜப்பர் என ஜகரம் சேர்த்து எழுதி இருக்கின்றனர். சென்னையில் எந்த அஞ்சப்பர் உணவகமும், அஞ்ஜப்பர் என எழுதி கண்டதில்லை, ஏனிந்த தமிழ்க் கொலை? 
 
இவ்வாறு கனடாவின் பொதுத் தமிழில் ஏகப்பட்ட பிழைகள் நிரம்பியுள்ளன. இதனைத் தமிழ் தமிழ் எனப் புலம்புவோரே செய்து வருகின்றனர். இலங்கைத் தமிழ் நடையில் வடசொல் சார்பு முறை ( விசேடம் - சிறப்பு, அனுஷ்டிப்பு - கடைபிடிப்பு, பகிஷ்காரம் - புறக்கணிப்பு, வித்யாலயம் - பள்ளி, பாடசாலை - பள்ளிக்கூடம், சர்வகலாசாலை - பல்கலைக்கழகம், பிரதம - முதன்மை, அதிதி - விருந்தினர், இராப்போசனம் - இரவு விருந்து, வைத்தியசாலை - மருத்துவமனை, பீடம் - துறை, காவலர் - பொலிஷார் எனப் ) பல உள்ளன, அது அங்குள்ள நடைமுறை தான். 
 
கனடாவில் கூட அவை தேவையில்லை என்பது எனது தனிப்பட்டக் கருத்து, அப்படி பயன்படுத்துவோம் என விடாபிடியாக நின்றாலும் அதற்காகத் தேவையற்ற இடங்களிலும் கூட தொடர்ந்து செயற்கைத்தனமான சொற்களையும், வடசொற்களையும் இடுவது முகம் சுளிக்க வைக்கின்றன. அதுவும் நகரபிதா எனப் பெண்ணைக் கூறுவது அருவருக்கத் தக்கது. இன்னம் அதிகம் கவனித்தால் மேலும் பல பிழைகளை காணலாம்.

சம்பந்தப்பட்ட தமிழ் ஊடகங்கள், செய்திதாள்கள், வணிக நிறுவனத்தார் தமிழை பிழையின்றி, அழகு குன்றாமல் எழுத முயல வேண்டுகின்றேன். கனடா தமிழ் சமூகமும் பிழையின்றி, நல்ல தமிழ் சொற்களை பொதுப் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது காலக் கட்டாயமாகும். 

 

  • கருத்துக்கள உறவுகள்

கவி நடையில்.. சில இலக்கண வழுவமைதிகள் கருத்தில் கொள்ளப்படலாம்.

 

ஆங்கிலத்திலும் கூட இலக்கண வழுவமைதிகள் உள்ளன. inversion and Emphasis என்று சொல்லி அடிப்படை இலக்கணம்.. மாறி எழுதலாம்.. சில முதன்மைகளை இனங்காட்ட..!

 

நமக்கென்றோர் தொலைக்காட்சி.. கவிநடை சொற்றொடராய் உள்ளது.. அதில போய் ஏன்..?!

 

நமக்கென்றோர் தொலைக்காட்சி என எழுதுகின்றார்கள். தமிழ், தமிழ் எனச் சதா புழகாங்கிதம் அடையும் இந்தத் தொலைக்காட்சியின் இலக்கணப் பிழையைக் கண்டு கொள்வாரில்லை. நமக்கென்றொரு தொலைக்காட்சி

 

:lol:  :D

 

எதுக்கும் நம்ம தமிழ் வாத்தியார் வந்து தான் பதில் சொல்லட்டுமே அறிந்து கொள்வோம்.  :)

 

  • கருத்துக்கள உறவுகள்
'கேம்பிரிச்சு ஆங்கில மொழி மதிப்பீடு (Cambridge English Language Assessment) என்பது ஆங்கில கற்பித்தல் தரத்திற்காகவும் ஆங்கில மொழியில் தேர்வு வழங்கும் ஓர் இலாப நோக்கற்ற மதிப்பீடாகும். கேம்பிரிச்சு ஆங்கிலத் தேர்வினை ஒவ்வொரு வருடமும் 130 நாடுகளில் இருந்து நான்கு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் எழுதுகின்றனர்.'  :o
 
எங்கள் தமிழ் மொழியின் தரத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க உலகத்தில் எங்காவது இப்படி ஓர் பல்கலைக்கழகம் இருப்பதாகத் தெரியவில்லை.  :(
  • கருத்துக்கள உறவுகள்

ஓர் என்று பாவிப்பது உயிரெழுத்துகளுக்கு முன்னால் மட்டுமே.. "ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தானாம்.." :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.