Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம்! - சனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
london-yarlwood-jail-050315-200-world.jp

லண்டனில் யாழ் வுட் என்னும் ரகசிய தடுப்பு முகாம் ஒன்று இயங்கிவருவதாக சனல் 4 தொலைக்காட்சி ஆவணம் படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை காலமும் எவரும் கமராவோடு அங்கே செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. ஆனால் முதன் முறையாக ரகசிய கமராக்களோடு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் உள்ளே நுளைந்து நடக்கும் கொடுமைகளை படம்பிடித்துள்ளார்கள். யாழ் வுட் தடுப்பு முகாம் என்றது எங்கே இது தமிழர்கள் தடுப்பு முகாமா என்று நினைக்கவேண்டாம். ஆனால் தமிழர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம் இங்கே தான் ஈழத் தமிழ் பெண்களையும் தடுத்து வைத்திருக்கிறார்கள் பிரித்தானிய இமிகிரேஷன் அதிகாரிகள்.

   

அகதிகள் அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டு அவர்கள் நாட்டிற்கு திருப்பி அனுப்பவென தடுத்துவைக்கப்படும் நபர்களை இந்த முகாமிற்கே அனுப்புகிறார்கள். குறித்த முகாமில் சுமார் 400 பேர் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அனேகமானோர் பெண்கள் ஆவர். இவர்களில் 6 பேர் கர்பினிப் பெண்கள் என்பது திடுக்கிடும் தகவல்.

 

இங்கே பலர் எண்ணில் அடங்காத அளவு தற்கொலை முயற்சிகளுக்கு முயன்றுள்ளார்கள். இவை எல்லாம் ஒருபுறம் இருக்க இங்கே காவலாளிகளாக பணிபுரிபவர்கள் பெண்கள் குளிக்கும்வேளை பார்த்து அவர்கள் அறைக்குச் சென்று அவர்கள் குளிப்பததை பார்கிறார்கள். ஆபிரிக்க பெண்களைப் பார்த்து அவர்கள் மிருகம்போன்றவர்கள் என்று தமக்கு தாமே பேசும் காட்சிகள் மற்றும் ஒலி நாடாக்களையும் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

 

பெண்கள் குளிக்கும்போது பார்பது அலாதியான ஒருவிடையம் என்றும், அதனை இங்கே தான் இலவசமாகப் பார்கலாம் என்றும் ஒரு காவலாளி மற்றைய காவலாளியோடு உரையாடும் ஒலி நாடாக்களும் வெளியாகி பெரும் அதிர்சியை கிளப்பியுள்ளது. இலங்கையில் மட்டும் பாலியல் கொடுமை நடக்கவில்லை. பிரித்தானியாவில் அவை நடக்கிறது என்பதனை மக்கள் கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளார்கள் சனல் 4 தொலைக்காட்சிக் குழுவினர். இதனால் லண்டன் இமிகிரேஷன் அதிகாரிகள் பெரும் சிக்கலில் தற்போது மாட்டிக்கொண்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

 

http://seithy.com/breifNews.php?newsID=127784&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இது ரகசிய தடுப்பு முகாம் அல்ல. சட்ட விரோதக் குடியேற்றக் காரர்களை தடுத்து வைக்கும் பகிரங்க இடம் தான். ஆனால் அங்கு சித்திரவதைகள் நடப்பதாக வந்த செய்திகள் தான் இன்று ஊடகங்களில் இடம்பிடித்துள்ளன.  :)  :icon_idea:

பிரித்தானியாவில் எல்லை கடந்து வந்து அரசியல் தஞ்சம் கோரலாமா? அவ்வாறாயின் அவர்களை எவ்வாறு சட்ட விரோதக் குடியேற்றக்காரர் என்று கூற முடியும்?!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த வித பயண ஆவணங்களும் இன்றி வருபவர்களை இப்போது இவ்வாறான இடைத்தங்கல் தடுப்பு முகாம்களில் வைக்க உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

 

இப்ப இங்கிலாந்தில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பிக்கும் நம்மவர்கள் பலர் உறவுகளை பார்க்க என்று சுற்றுலா விசா.. படிக்க என்று படிப்பு விசா இவற்றை தான் பயன்படுத்துகின்றனர். ஆவணங்கள் இன்றி வருவோர் தொகை குறைந்துள்ளது. அப்படி வருபவர்கள்.. தொடர்ந்து கண்காணிக்கப்படும் வகையில்.. குடிவரவுத் திணைக்களத்துக்கு சென்று கையப்பமிட வேண்டும். இன்றேல் தடுப்பில் வைக்கப்படுவார்கள். 

 

அதேபோல்.. வதிவிட விசா இன்றி இருப்பவர்களும் பிடிபட்டால் இவ்வாறான முகாம்களில் தடுத்து வைக்கப்பட்ட பின் நாடு கடத்தப்படவோ அல்லது விசா வழங்கப்படும் பட்சத்தில் அல்லது சட்டத்தரணிகள் பெயிலில் எடுக்கும் பட்சத்தில் அல்லது குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானிக்கும் பட்சத்தில் விடுவிக்கப்படவும் வழி உள்ளது. 

லண்டனில் சிறை வதை முகாம் “யாழ் வூட்” அம்பல படுத்திய சனல் 4

 

லண்டனில் யாழ் வூட் என்ற இரகசிய முகாமில் தமிழ் பெண்கள் ,மற்றும் ஆண்களை தடுத்து வைத்து கொடுமை படுத்தும் இரகசிய வதை முகாம் ஒன்று அம்பலமாகியுள்ளது

சனல் போ தொலைகாட்சிக்கிக்கு குறித்த விடயம் தெரிய வந்த நிலையில் அவர்களது இரகசிய விசாரணை குழு குறித்த முகாமின் உள்ளே இறங்கி அதிரடி தகவல்களை திரட்டி வெளியிட்டுள்ளது

இந்த சனல் போவின் துணிகர செயல்பாட்டினை அடுத்து பிரிட்டன் குடிவரவு குடியகல்வு அமைச்சு சிக்கலில் மாட்டியுள்ளது

இதில் கர்ப்பிணிகள் ,உள்ளதும் அம்பல மாகியுள்ளதுடன் ,குளிக்கும் பெண்களை சிறை காவலர்கள் பார்வை இடுவதாகவும் தெரிவிக்க பட்டுள்ளது

அனைவரும் அகதி அந்தஸ்து கோரியவர்கள் அவை நிராகரிக்க பட்டு நாடு கடத்த இங்கே தடுத்து வைக்க பட்டுள்ளனர் பலர் தற்கொலைக்கு முயன்றுள்ளதும் அம்பலமாகியுள்ளது

பலர் மேல் படிகட்டில் இருந்து குதித்து கால்களை முறித்துள்ளனர் .

சிறை வைக்கக பட்டவர்களின் அறைக்குள் நுழைய முன்பு கதவுகளை தட்டாது உள்ளே செல்கின்றனர் இது பிரிட்டன் சட்டத்திற்கு முரணானது ,குறித்த காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் இது தொடர்பாக பாராளுமன்றில் எதிர்கட்சிகள் எம்பிக்கள் இதற்கு எதிராக குரல் எழுப்ப உளள்னர் என்பதுடன் வரும் தேர்தலில் ஆளும் அட்சிக்கு தமிழர்கள் வாக்கு வீதம் மழுங்கடிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது

குறித்த வதை முகாம் தனியார் நிறுவனம் ஒன்றினாலேயே பராமரிக்க பட்டு வருகிறது அதற்காக அரசு பெரும் தொகை பணத்தையும் செலவு செய்து வருகிறது .

காணொளியைக் காண இந்த இணைப்பை அழுத்தவும்

http://bcove.me/8ye17soa

 

http://link.brightcove.com/services/player/bcpid69900095001?bckey=AQ~~,AAAAAEabvr4~,Wtd2HT-p_VhJQ6tgdykx3j23oh1YN-2U&bctid=4088875697001

 

 

http://www.jvpnews.com/srilanka/99960.html

 

 

 

 

Edited by BLUE BIRD

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.