Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

த.தே. கூட்டணித் தலைமையின் செயற்பாடுகளில் மாற்றம் வேண்டும்! - கனடா தமிழ்ச் சமூக ஆர்வலர் குழுமத்தின் கோரிக்கை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
canada-070315-seithy-news-400-seithy.jpg

மார்ச் 07 2015 சனிக்கிழமை அன்று கனடாத் தமிழ்ச் சமூக ஆர்வலர் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொதுக் கூட்டம் ரொறொன்ரோ நகரிலுள்ள ஸ்ரீ ஐயப்பன் ஆலயக் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. “தாயகம தேசியம் தன்னாட்சியுரிமை நோக்கித் தமிழீழ அரசியல் தலைமையைச் செம்மைப்படுத்துவோம்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தை நீண்ட காலத் தமிழின உணர்வாளரான திரு. பாபு அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.

   

மண்டபம் நிறைந்த மக்களின் ஆர்வமிக்க வருகையானது இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தையும் தமிழீழ அரசியல் தலைமைமேல் கனேடியத் தமிழர் கொண்டுள்ள அதிருப்தியையும் வெளிக்காட்டுவதாக அமைந்தது. கனேடிய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சனாதிபதித் தேர்தலை அடுத்து இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றம் ஈழத் தமிழரிடையேயும் பரவலாக உலகத் தமிழரிடையேயும் பெரும் எதிர்பார்ப்புக்களை உருவாக்கியிருந்தது. நாடு சுதந்திரமடைந்த நாள் தொட்டு இற்றைவரை தமிழ் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற அடக்கு முறைக்கு இந்த அரசமாற்றத்தால் ஒரு முடிவு ஏற்படுமென்று தமிழர்களில் ஒருசாரார் நம்பியிருந்தனர். ஆனால் இந்த எதிர்பார்ப்புகள் நம்பிக்கைகள் யாவும் வெறும் கானல் நீர்தானோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை கூட்டத்துக்கு வருகை தந்தோரிடையே காணக்கூடியதாக இருந்தது.

தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வழங்காது அவர்களைத் தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற சிங்கள அரசின் தந்திரோபாயத்திற்குத் தமிழர்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தலைமையும் துணைபோய்விடுமோ என்ற ஏக்கத்தையும் காணக்கூடியதாக இருந்தது. தமிழினத் தலைமையின் முரண்பட்ட பேச்சுக்களுக்கும் வெறுப்பூட்டும் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துத் தாயகத்திலும் புலத்திலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கொடும்பாவி எரிப்புக்களும் நடந்தேறியுள்ளன. இந்தச் சூழலிலேயே மேற்படி கூட்டம் கனடாவில் ஒழுங்குசெய்யப்பட்டது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போது முன்னெடுத்து வரும் அரசியல் செயற்பாடுகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் கூட்டமைப்பானது தமிழரது தேசியநலன் சார்ந்ததும் முரண்பாடுகளற்றதும் தாயகம் தேசியம தன்னாட்சியுரிமை எனும் அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்றுள்ள அனைவரையும் இணைத்து வலிமையான ஓர் அரசியல் தலைமையாக மாற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தே இக்கூட்டம் நடத்தப்பட்டது.

நன்கு அறிமுகமான வானொலி அறிவிப்பாளர் இரமணன் கூட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். இக்கூட்டத்தின் தலையாய நோக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துவதேயன்றி அதனை எவ்விதத்திலும் பலவீனப்படுத்துவதில்லை என்பதை இரமணன் ஐயத்துகிடமின்றி ஆணித்தரமாகத் தனது முன்னுரையில் எடுத்துக் கூறினார். நாட்டில் தற்போது நிலவுகின்ற அரசியல் போக்குகளையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முரண்பாடான அணுகுமுறைகளையும் அவர் சுருக்கமாக எடுத்துரைத்ததைத் தொடரந்து பேச்சாளர்களின் உரைகள் ஆரம்பாமாகின.

திருவாளர்கள் ராஜ் சுப்பிரமணியம் ஜெயந்தன் பரா ஜெ. ஐயாத்துரை குயின்ரஸ் துரைசிங்கம் ஈழவேந்தன் கரிகாலன் பல்கலைக்ககழக முதுநிலைக் கல்வி மாணவரான திரு ஆகியோரது உரைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் கடுமையாக விமர்சிப்பதாக இருந்தன. இந்த விமர்சனங்கள் பின்வருவம் விடயங்கள் பற்றியதாக அமைந்;தன.

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் சனநாயகமும் வெளிப்படைத்தன்மையும் நிலவவில்லை. குறிப்பிட்ட சிலரே தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துச் செயற்படுத்துகின்றார்கள். அந்நிய நாட்டவர் இவர்களை வழிநடத்துகின்றார்களா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டது.

* 42 ஆண்டுகளுக்கு மேலாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழரால் துக்க நாளாகக் கடைப்பிடித்து வரப்படுகின்ற சிறீ லங்காவின் சுதந்திரதின விழாவில் கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்துகொண்டமையானது பேச்சாளர்கள் அனைவராலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்டது. இவர்கள் தம் சொந்தத்தில் முடிவெடுக்காது பிறரின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து செயற்படுகின்றார்கள் என்பதையே இச்செயல் காட்டுகின்றது என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

* மக்களின் உணர்வுகளை மதிக்காது இத்தலைமை பொறுப்பற்ற போக்கில் செயற்படுகின்றது.

* மக்களின் குரலை அடக்கி ஒடுக்க முயலும் சர்வதிகாரப் போக்கு இத்தலைமையில் காணப்படுகின்றது.

* திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோரோடுள்ள அரசியல் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவர்களையும் உள்வாங்கி கூட்டமைப்பை வலுப்படுத்தத் தலைமை தவறியுள்ளது.

* வல்லாதிக்க சக்திகளின் கைப்பொம்மையாகத் தலைமை செயற்படுன்றது.

* தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க அயராது உழைத்துவருகின்ற புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் செயற்பாடுகளை மதித்துப் போற்றி அவர்களை ஊக்குவிக்காது அவர்களைக் கண்டித்துள்ளது.

* ஐ.நா. சபையின் போர்க்குற்ற விசாரணை தொடர்பான முன்னெடுப்புகளைப் பலப்படுத்தத் தவறியதோடு மட்டுமல்லாது அனைத்துலக விசாரணையைத் தவிர்த்து அரசுடன் ஒத்து உள் நாட்டு விசாரணைக்குத் தலைமை துணைபோய்விடுமோ என்ற அச்சமும் உள்ளது.

* வடமாகாண முதலமைச்சரால் முன்மொழியப்பட்டு மாகாண சபையினரின் முற்று முழுதான ஒப்புதலோடு நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பற்றிய தீர்மானம் கூட்டத்தில் பெரிதும் வரவேற்கப்பட்டதோடு அளப்பரிய துணிவுடன் இத்தீர்மானத்தைச் செம்மையாக வரைந்து நிறைவேற்றிய முதலமைச்சருக்குப் பேச்சாளர்கள் அனைவரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

* தமிழரின் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்கு 13வது சட்டத் திருத்தம் அடியோடு உதவமாட்டாது என வடமாகாண சபையின் முதலமைச்சர் அவர்கள் கூறியிருப்பதை பேச்சாளர்கள் வரவேற்றனர். இதே கருத்தை 1987ஆம் ஆண்டில் தெரிவித்திருந்த திரு சம்பந்தன; தற்போது அத்தீர்மானத்தைச் சுற்றியே இனப்பிரச்சினைம்குரிய தீர்வுக்கான நகர்வுகளை மேற்கொள்ளும் போக்கு கண்டிக்கப்பட்டது.

இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிப்பதற்கு கனடாத் தமிழ்த் தேசியக் சுட்டமைப்பின் தலைவர் திரு. குகதாசன் அவர்களுக்கும் அச்சங்கத்தின் இயக்குநர்சபை உறுப்பினரான திரு. துரைராசா அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

திரு குகதாசன் அவர்கள் தனது உரையில் கூட்டணியில் ஒளிவு மறைவுகள் எதுவும் இல்லை எனவும் திரு கஜந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோருக்கு கூட்டமைப்பின் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன எனவும் கூறினார். மேலும் கூட்டணியில் சனநாயகம் நிலவுகின்றது எனவும் சுதந்திர தின விழாவில் திரு சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்டதை தமிழரசுக் கட்சி ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது எனவும் கூறினார்.

திரு. சம்பந்தர் ஆளுமையுடைய சிறந்த ஒரு தலைவர் எனவும் மக்களுக்காகப் பல தியாகங்கள் செய்தவர் எனவும் அனைத்துலகச் சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றவர் எனவும் அவர் எடுத்துரைத்தார். கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்தே வருகின்றது என்றும் குறிப்பிட்டார். இவரின் இக்கூற்றுகளுக்கு சபையினரின் எதிப்பை வெளிப்படுத்தினர். தமிழ் மக்கள் கூட்டணிக்கு அளித்த வாக்கு தமது இன விடுதலைக்கான வாக்குகளேயன்றி கூட்டணிக்கான வாக்குகள் அல்ல என்பதைத் திரு குகதாசனைத் தொடர்ந்து பேசியோர் வலியுறுத்தினர்.

கூட்ட நிறைவாகத் திரு. பாபு அவர்கள் உரையாற்றும்போது ஒற்றுமையான செயற்பாடும் தமிழகத்துடனான உறவும் மிக அவசியம் என்றும் அடிபணிவு அரசியலற்ற தமிழர் நலன்சார்ந்த தலைநிமிர்ந்து செயற்படும் தலைமை வேண்டும என்றும் கூறினார். சம்பந்தன் ஐயா தன் போக்குகளை மாற்றிக்கொள்வாரெனில் நாம் அவரின் தலைமையை முழுமனதோடு ஏற்போம். புலம்பெயர்ந்த மக்களின் மனதைப் புண்படுத்தும் வண்ணம் கருத்துக்களைக் கூறிவரும் சுமந்திரன் அவ்வாறான செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கூட்டநிறைவில் பின்வரும் கோரிக்கைகள் தீர்மானமாக முன்வைக்கப்பட்டன.

* கூட்டமைப்பில் இணைந்திருக்கும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளில் ஒருசிலர் தன்னிச்சையாகச் செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தத் தவறுவாராயின் தாமதமின்றி அவர்கள் மீது கட்சி ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். * தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை என்ற கோட்பாடுகளை மைய இலக்குகளாகக் கொண்டு ஈழத்தேசியத்தைத் தூய்மையாக நேசிக்கும் பிற கட்சியினர் உணர்வாளர் போன்றோரை கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

* தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளும் அரசியல் இலக்குகளும் எதிர்காலச் செயற்பாடுகளும் தாயக மக்கள் புலம்பெயர் மக்கள் கல்விசார் சமூகம் ஆகியோருடன் இணைந்து தீர்க்கமாக வரையறுக்கப்பட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும்.

* புலம்பெயர்ந்த மக்களைப் புண்படுத்துவதை திரு சுமந்திரன் போன்றேர் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

* ஐ.நா.ம.உ. சபையினது போர்க்குற்ற விசாரணை தொடர்பான அறிக்கையை வெளியிடுதல் பிற்போடப்பட்டுள்ள நிலையில் உள்ளக விசாரணை என்ற செயற்பாடு ஐ.நா. விசாரணையை நீர்த்துப்போகச் செய்துவிடும். எனவே உள்ளக விசாரணைக்கு இடங்கொடாது ஐ. நா. சபையின் விசாரணை தொடரக் கூட்டமைப்பு வலிமையாகச் செயற்பட வேண்டும்.

இக்கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதோடு கூட்டம் நிறைவு பெற்றது.

கூட்டமைப்பின் போக்குகளில் மாற்றங்கள் அவதானிக்கப்படாவிட்டால் இது போன்ற கூட்டங்கள் கனடாவில் மட்டுமல்ல எங்கும் தொடர்ச்சியாக நடைபெறும் சூழல் வலுவடையும் என்றே கருதப்படுகின்றது.

 

http://seithy.com/breifNews.php?newsID=128063&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சூட்டுடன் நிப்பவர் டக்கியின் ரேடியோவில் வேலை செய்தவரல்லா?

இந்த ஓராய்கள் ஏன் ஆட்டை நினைத்து அழுகிறன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.