Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுவராக வேண்டும் – மோடியிடம் வலியுறுத்துமாம் கூட்டமைப்பு

Featured Replies

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுவராக வேண்டும் – மோடியிடம் வலியுறுத்துமாம் கூட்டமைப்பு MAR 13, 2015 | 2:03by கார்வண்ணன்in செய்திகள்

suresh-premachandran2-300x200.jpgசிறிலங்காவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது தரப்பு நடுநிலையாளராக இந்தியாவின் தலையீடு அவசியம், என்று உணர்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிலங்கா வந்தடைந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர்.

இதன்போதே, மூன்றாந்தரப்பு நடுவராக இந்தியா செயற்பட வேண்டும் என்று கோரவுள்ளதாக, கூட்டமைப்பின் பேச்சாளரான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “தமிழர்களின் பிரச்சினையை 13வது திருத்தச்சட்டத்தின் மூலம் தீர்த்து விட முடியாது என்பதையும் இந்தியப் பிரதமரிடம் எடுத்துக் கூறவுள்ளோம்.

போரினால் இடம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் இன்னமும் மீளக்குடியேற்றப்படவில்லை. அவர்களை மீளக்குடியேற்றுவதற்கு, அவர்களின் நிலங்களில் உள்ள சிறிலங்கா படையினர் அகற்றப்பட வேண்டும். இதுகுறித்தும் இந்தியப் பிரதமரிடம் சுட்டிக்காட்டவுள்ளோம்.

அத்துடன் இந்தியாவில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளை திருப்பி அழைப்பது, காணாமற்போனோரைக் கண்டறிவது, அரசியல் கைதிகள் விவகாரங்கள் குறித்தும் இந்தியப் பிரதமருடன் கலந்துரையாடுவோம்” என்றும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/03/13/news/4352

 

திம்புவிலிருந்து இன்றுவரை 60 வீதமான தமிழினம் அழிந்துவிட்டது.20 வீதம் வெளி நாடுகளில் அகதியாகத் தஞ்சம்...... ஏதோ ஒரு பத்து வீதம் உள் நாட்டிலும் அடிமை.எஞ்சியதையும் அழிக்கவா இந்தியாவை இனியும் நம்புகிறீர்கள்?

 

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைத் தீர்வுக்கு இந்தியா நடுவராக வேண்டும் – மோடியிடம் வலியுறுத்துமாம் கூட்டமைப்பு

 

சிறிலங்காவின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்றாவது தரப்பு நடுநிலையாளராக இந்தியாவின் தலையீடு அவசியம், என்று உணர்வதாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடுத்துக் கூறவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது...

http://www.puthinappalakai.net/2015/03/13/news/4352

 

 

ஒரு தமிழ்ப் பூனை இங்கே, மற்ற சிங்களப் பூனை எங்கேயப்பா? :o:lol:

 

 

 

%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%

 

ஒரு வீட்டில் இரண்டு பூனைகள் நண்பர்களாயிருந்தன .ஆனால் அவைகள் இரண்டும் ஒற்றுமையில்லாது அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டிருந்தன.

ஒரு நாள் அப்பூனைகளுக்கு ஒரு அப்பம் கிடைத்தது. அவை இரண்டும் அதை சாப்பிட முனைந்தபோது அதை சரிசமமாக பிரிப்பதில் அவைகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.

அதனால் பூனைகள் இரண்டும் யாரிடமாவது சென்று அப்பத்தை சரிசமமாக பங்கிட்டு தரச்சொல்லலாம் என எண்ணி வீட்டிற்கு வெளியே வந்தன. அப்போது ஒரு குரங்கு அங்கு வந்தது.

குரங்கிடம் அப்பத்தை கொடுத்து  அதைச் சமமாக பிரித்துத் தரசம்படி கேட்டன. குரங்கும் மிக மகிழ்வுடன் அதற்கு சம்மதித்து ஒரு தராசு கொண்டு வந்து, அப்பத்தை இரண்டாக பிய்த்து தராசின் ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு அப்பத் துண்டை வைத்து நிறுத்தது.

அப்போது ஒரு அப்பத் துண்டு சிறிது பெரிதாக இருந்ததினால், அந்தத் துண்டு இருந்த தட்டு சற்று கீழே பதிந்தது. உடனே அந்தக் குரங்கு அந்த அப்பத் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து சாப்பிட்டுவிட்டு, மீதியை தட்டில் போட்டது . இப்போது மற்றத் தட்டு கீழே தாழ்ந்தது. அப்போதும் அந்த தட்டில் இருந்த அப்பத் துண்டை எடுத்து சிறிது  கடித்துவிட்டு மீண்டும் போட்டது.

இப்படியே மாறி மாறி தட்டுகள் தாழ...குரங்கும் மாறி மாறி அப்பத்துண்டுகளை கடித்துச் சாப்பிட்டது.

அப்பம் குறைவதைக் கண்ட பூனைகள், 'இனி நீங்கள் அப்பத்தை பிரிக்க வேண்டாம், நாங்களே பார்த்துக்கொள்கிறோம்' என மீதமுள்ள அப்பத்தைத் தரும்படி கேட்டன.

ஆனால் குரங்கோ, 'மீதமிருந்த அப்பம் நான் இது வரை செய்த வேலைக்கு கூலி' என்று சொல்லிவிட்டு அனைத்தையும் வாயில் போட்டுக்கொண்டது!

 

 

(எங்கோ படித்த பஞ்சதந்திரக் கதை, ஞாபகத்திற்கு வருது!)

 

  • கருத்துக்கள உறவுகள்

என்ன செய்வது, கூட்டணிக்கும்... அரசியல் செய்ய வேறை வழி தெரியாது.
இப்படி.... காலம் பூராய் அறிக்கை விட்டு, நாட்களை நகர்த்திக் கொண்டிருக்க வேண்டியது தான். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.