Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முடிவுக்கு வந்தது சாதனை நாயகர்களின் சகாப்தம்

Featured Replies

முடிவுக்கு வந்தது சாதனை நாயகர்களின் சகாப்தம்
x0nvd0.jpg

 

இலங்கையின் கிரிக்கெட் அணியின் சாதனை நாயகர்களும் நட்சத்திர வீரர்களுமான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.

குமார்சங்கக்கார மற்றும் ஜயவர்தன இருவரும் இந்த உலகக் கிண்ணத் தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தனர்.
இலங்கை அணி தனது காலிறுதி போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் இந்த போட்டியுடன் இலங்கை அணியின் நட்சத்திர வீரர்கள் ஓய்வு பெற்றனர்.

இலங்கை அணியில் இவர்கள் இணைந்து பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது ஜோடி இலங்கை அணிக்கு பல வெற்றிகளை தேடித்தந்துள்ளது.

eueadv.jpg

 

குமார் சங்கக்கார
இடது கை ஆட்டக்காரரான இவர் இதுவரை 403 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14,189 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 25 சதங்களும், 93 அரைசதங்களும் அடங்கும். சங்கக்கார இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ச்சியாக 4 சதங்களை விளாசி உலக சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த உலகக் கிண்ணத்  தொடரில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் வகிக்கிறார்.

சங்கக்கார  7 இன்னிங்சில் 541 ஓட்டங்களை குவித்து முதலிடத்தில் உள்ளார். மேலும்சங்கக்கார விக்கெட் காப்பாளராகவும் சிறந்து விளங்கினார். சங்கக்கார ஒருநாள் போட்டிகளில் 402 பிடியெடுப்பு மற்றும் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

 

மஹேல ஜயவர்தன

வலது கை ஆட்டக்காரரான மஹேல ஜயவர்தன இதுவரை 447 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12,646 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 19 சதங்கள் மற்றும் 77 அரை சதங்கள் அடங்கும். இந்த உலகக் கிண்ணத் தொடரில் மஹேல ஜயவர்தன 5 இன்னிங்சில் விளையாடி 125 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துள்ளார். இந்த உலகக் கிண்ணத் தொடரில் மஹேல ஜயவர்தனவால் சோபிக்க முடியவில்லை. 

 

ஏமாற்றமாக உள்ளது: சங்கா
'தோல்வி அடைந்தது ஏமாற்றமாக உள்ளது. இருப்பினும், போட்டியில் இதுவும் ஒரு பகுதிதான். உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என எண்ணியிருந்தோம். இது நடக்காமல் போனது, என்றார்.

 

திருப்தியை தருகின்றது:  மஹேல

இலங்கை அணியில் இடம்பிடித்தது முதல் இன்று வரை நிறை அனுபவங்களையும் நண்பர்களையும் பெற்றுள்ளேன்.   இலங்கை வீரர்களுடன் 'டிரசிங் ரூமில்' மகிழ்ச்சியாக இருந்தது திருப்தியை தருகின்றது, என்றார்.

 

சச்சின் வாழ்த்து
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இலங்கை அணியின் அனுபவ வீரர்கள் சங்கக்கார மற்றும் ஜயவர்தனவுக்கு இந்திய அணியின் முன்னாள் நம்பிக்கை நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுகல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை அணிக்காக நீண்டநாட்களாக விளையாடியுள்ளனர். இவர்களை இழந்தது இலங்கை அணிக்கு சற்று சவாலாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
 

 

http://www.virakesari.lk/articles/2015/03/18/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

இலங்கை கிரிக்கெட் சிறந்த கைகளில் உள்ளது: ஓய்வு பெறும் சங்கக்காரா
 

 

உலகக்கோப்பை காலிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வி அடைந்தாலும் இலங்கை அணி சிறந்த கைகளில் உள்ளது, அதன் எதிர்காலம் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை என்று ஓய்வு பெறும் சங்கக்காரா கூறியுள்ளார்.

சங்கக்காராவின் கடைசி ஒருநாள் போட்டியாக அமைந்தது இந்தக் காலிறுதிப் போட்டி. ஆனாலும், டெஸ்ட் போட்டிகளில் அவரது பங்களிப்பு சில காலங்கள் தொடரும் என்று அவரே கூறியுள்ளார்.

 

இலங்கை அணிக்காக கடந்த 16-17 ஆண்டுகளாக பல்வேறு விதங்களில் பங்களிப்பு செய்துள்ள மகேலா ஜெயவர்தனே இந்த உலகக்கோப்பையில் சோபிக்கவில்லை. அவர் கடுமையாக இது குறித்து ஏமாற்றமடைந்திருப்பார் என்று கூறிய சங்கக்காரா, ஜெயவர்தனேயுடன் ஆடிய நேரங்கள் குறித்து பேசிய போது, “மகேலா இந்தத் தோல்வியினால் பயங்கர ஏமாற்றம் அடைந்திருப்பார். ஆனால் விளையாட்டில் இதெல்லாம் சகஜம். தேவதைக் கதைபோன்ற முடிவுகள் எப்போதும் சாத்தியமில்லை.

உலகக்கோப்பையில் எவ்வளவு உச்சத்தில் முடிய வேண்டும் என்று நினைக்கிறோமோ அது நடக்காது, அது நடக்கவில்லை. அதற்காக ஏமாற்றத்துடன் செல்ல வேண்டிய அவசியமில்லை.

 

எங்கள் இருவரிடையே நல்ல நட்பு இருந்தது. பகைமை என்பது அறவே இல்லை. நான் அணியில் நுழையும் போது மகேலா ஏற்கெனவே 2 ஆண்டுகள் அணியில் இருந்தார். துணைத் தலைவராகவும் அவர் இருந்தார். எங்கள் இருவருக்கும் ஒரே வயது. இதனாலேயே வெகுவிரைவில் நண்பர்களானோம்.

களத்தில் இருவரும் சேர்ந்து பேட்டிங் செய்யும் போது, அவர் எப்போதும் ஆதிக்கம் செலுத்த விரும்புவார். நான் அவருடன் இன்னிங்ஸை நகர்த்திச் செல்பவனாக திகழ்ந்தேன். அவர் விரைவு ரன் குவிப்பில் செல்லும் போது நான் அடக்கி வாசிப்பேன். அவருடன் சேர்ந்து விளையாடுவது எனக்கு மிகப்பெரிய அனுபவமே.” என்றார்.

இலங்கை அணி குறித்து அவர் கூறும்போது, “இலங்கை அணி சிறந்த கைகளில் உள்ளது. அஞ்சேலோ மேத்யூஸ் தலைமைத்துவத்தில் சிறப்பாகச் செயலாற்றி வருகிறார்.

திலகரத்னே தில்ஷன் இன்னும் சிறிது காலம் விளையாடுவார் என்று நினைக்கிறேன். லாஹிரு திரிமானி ஆட்டத்தில் பெரிய முன்னேற்றம் இருந்து வருகிறது.

இந்த இளம் வீரர்களை என்னுடைய இளம் வயதை வைத்து ஒப்பிட்டு பார்க்கும் போது நான் இருந்த நிலையை விட நல்ல நிலையில் உள்ளதாகவே கருதுகிறேன். இன்னும் இவர்கள் கற்றுக் கொள்வார்கள், இலங்கைக்காக மேலும் பங்களிப்பு செய்வார்கள் என்று நினைக்கும் போது உற்சாகமாகவே உள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து எனக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை.” என்றார்.

 

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான காலிறுதி தோல்வி குறித்து...

"தோல்வியடைந்தது ஏமாற்றமே. குறிப்பாக காலிறுதியில் தோல்வி தழுவியது. ஆனால் தென் ஆப்பிரிக்கா போன்ற ஒர் அணியுடன் வெற்றி பெற சிறப்பாக ஆட வேண்டும் என்பதே உண்மை.

என்னுடன் விளையாடியதையும், எனக்கு எதிராக விளையாடியதையும் மகிழ்ச்சியான தருணங்களாக யாராவது கூறினால் நான் அதிக மகிழ்ச்சியடைவேன்.

எவ்வளவோ பெரிய வீரர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். ஆனால் ஆட்டம் தொடர்ந்து போய்க்கொண்டுதான் இருக்கிறது. ரசிகர்கள் எப்போதும் மிகை உணர்ச்சிகளுக்கு ஆட்படக்கூடாது.” என்றார் சங்கக்காரா.

 

404 ஒருநாள் போட்டிகளில் 14,234 ரன்களை எடுத்த சங்கக்காரா இதில் 25 சதங்களை எடுத்துள்ளார். சராசரி 41.98. விக்கெட் கீப்பராக 402 கேட்ச்கள், 99 ஸ்டம்பிங்குகள்.

நடப்பு உலகக்கோப்பையில் 7 இன்னிங்ஸ்களில் சங்கக்காரா 541 ரன்களை 108 ரன்கள் என்ற சராசரியில் எடுத்துள்ளார்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/article7007616.ece

  • தொடங்கியவர்

es2als.jpg

2ch749d.jpg

16jf2o4.jpg

rr58n4.jpg

fvcy8p.jpg

317jozm.jpg

  • தொடங்கியவர்

otix35.jpg

b69b94.jpg

ezhgde.jpg

  • கருத்துக்கள உறவுகள்
இது  பெருமையாகவும் ...
கவலையாகவும் கரையும் பொழுதுகள்...
 
 
நன்றி நவீனன்...
 
  • தொடங்கியவர்

ஒரு நாள் கிரிக்கெட் பிரி­யா­வி­டைக்கு இந்தத் தோல்வி ஏமாற்றம் அளிக்­கி­றது குமார் சங்­கக்­கார உணர்­வுபூர்வமாக தெரி­விக்­கின்றார்​
 

(சிட்னி கிரிக்கெட் அரங்­கி­லி­ருந்து நெவில் அன்­தனி)

 

கிரிக்கெட் அரங்கில் அப­ரி­மி­த­மாக பிர­கா­சிப்­ப­தற்கும் அதே­வேளை ஓய்வு பெறு­வ­தற்கும் எவ்­வித தொடர்பும் இல்லை. காலம் வரும்­போது ஓய்வு பெறு­வ­துதான் உசி­த­மா­னது.

நாட்­டிற்­காக 14 வரு­டங்­க­ளுக்கு மேல் விளை­யா­டி­ய­தை­யிட்டு பெருமை அடை­கின்றேன்.

21oh38.jpg

அந்த மன­நி­றை­வோடு ஓய்வு பெறு­கின்றேன்’’  என இலங்கை சிரேஷ்ட வீரர்­களில் ஒரு­வ­ரான குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.
தென் ஆபி­ரிக்­கா­வு­ட­னான  உலகக் கிண்ண கால் இறுதிப் போட்டி முடிவில் செய்­தி­யா­ளர்­களை சந்­தித்­த­போது குமார் சங்­கக்­கார மேற்­கண்­ட­வாறு கூறினார்.

உலகக் கிண்ணப் போட்­டி­க­ளி­லி­ருந்து ஏமாற்­றத்­துடன் ஓய்வு பெற நேரிட்­டமை கவ­லையும் ஏமாற்­றமும் அளிக்­க­வில்­லையா எனக் கேட்­ட­போது,
‘‘இது பொருத்­த­மான ஒரு முடிவு அல்ல. உலகக் கிண்ணப் போட்­டி­களின் ஆரம்­பத்தில் நாங்கள் திற­மை­யாக விளை­யா­டி­வந்தோம்.

 

ஆனால் இன்­றைய தினம் எங்­க­ளுக்கு சாத­க­மாக அமை­ய­வில்லை. இரண்டு விக்கெட்டுகள் குறைந்த ஓட்­டங்­க­ளுக்கு வீழ்ந்த பின்னர் ஓட்ட எண்­ணிக்­கையை சீர்­ப­டுத்த முயற்­சித்தோம். ஆனால் எதி­ர­ணியின் சுழல்­பந்­து­வீச்சில் ஏழு விக்கெட்­களை இழந்தோம்.  அவர்கள் திற­மை­யாக பந்­து­வீ­சினர்.

எங்­களால் 250 அல்­லது 260 ஓட்­டங்கள் பெற­மு­டி­யாமல் போனது எங்­க­ளுக்கு பாத­க­மாக இருந்தது. இது எனக்கும் மஹேல ஜய­வர்­த­ன­வுக்கும் பெரும் ஏமாற்­றத்தை அளிக்­கின்­றது’’ என பதி­ல­ளித்தார்.

 

தென் ஆபி­ரிக்கா போன்ற ஒரு திற­மை­வாய்ந்த அணியை வீழ்த்­து­வ­தென்றால் நாங்கள் திற­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும்.

ஆனால் அது வாய்க்­க­வில்லை. மேலும் துடுப்­பாட்ட வலு விளை­யாட்­டின்­போது விக்­கெட்டுகள் சரிந்­தன. அது தான் கிரிக்கெட் விளை­யாட்டில் காணப்­படும் சம்­பி­ர­தாயம். இவ்­வா­றான போட்­டி­களில் ஏதோ ஒரு அணி தோல்­வியைத் தழு­வித்தான் ஆக­வேண்டும். அதுதான் எங்­க­ளுக்கு நேர்ந்­தது’’ எனவும் அவர் குறிப்­பிட்டார்.

புதிய  இளம் வீரர்­க­ளுக்கு என்ன கூற­வி­ரும்­பு­கின்­றீர்கள் என அவ­ரிடம் கேட்­ட­போது, ‘‘தேசத்­திற்­காக இத்­த­கைய வீரர்­க­ளு­டனும் இதற்கு முன்னர் விளை­யா­டிய வீரர்­க­ளு­டனும் சேர்ந்து விளை­யா­டி­யது எனக்கு பெரு­மை­யையும் கௌர­வத்­தையும் தரு­கின்­றது.

இளம் வீரர்கள் கடு­மை­யா­கவும் அர்ப்­ப­ணிப்புத் தன்­மை­யு­டனும் தேசத்­திற்­காக விளை­யா­ட­வேண்டும்.  அதன் மூலம் மற்­றை­ய­வர்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக திக­ழ­வேண்டும்’’ என்றார்

ஏஞ்­சலோ மெத்யூஸ் ஒரு சிறந்த ஆளுமை மிக்க தலைவர்  எனவும் குமார் சங்­கக்­கார தெரி­வித்தார்.

 

 

மஹேல ஜய­வர்­தன நேற்­றைய போட்­டி­யுடன் அனைத்து வகை­யான சர்­வ­தேச போட்­டி­க­ளி­லி­ருந்தும் ஓய்­வு­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. குமார் சங்­கக்­கார ஒருநாள் போட்­டி­க­ளி­லி­ருந்து ஓய்­வு­பெற்ற போதிலும் தொடர்ந்தும் டெஸ்ட் போட்­டி­களில் விளை­யா­ட­வுள்ளார்.

37 வய­தான குமார் சங்­கக்­கார, 130 டெஸ்ட் போட்­டி­களில் 38 சதங்கள் உட்­பட 12,203 ஓட்­டங்­க­ளையும் 404 ஒருநாள் சர்­வ­தேச போட்­டி­களில் 25 சதங்கள் உட்­பட 14,234 ஓட்­டங்­க­ளையும் 56 சர்வதேச இருபது போட்டிளகில் 1,382 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

மஹேல ஜயவர்தன  149 டெஸ்ட் போட்டிகளில்  34 சதங்கள் உட்பட 11,814 ஓட்டங்களையும் 448 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 19 சதங்கள் உட்பட 12,650 ஓட்டங்களையும் 55 சர்வதேச இருபது 20 போட்டிகளில்
1493 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9329#sthash.ZAsBGWTO.dpuf

  • தொடங்கியவர்

மஹேல, சங்காவுக்கு டெண்டுல்கர் புகழாராம்
 

 

ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து நேற்றுடன் விடைபெற்ற இலங்கை அணியின் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

உலக கிண்ணத் தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மஹேல ஜயவர்தனவும் குமார் சங்கக்காரவும் அறிவித்திருந்தனர்.

தென் ஆபிரிக்காவுடனான கால் இறுதியில் இலங்கை அணி தோல்வியுற்றதையடுத்து இவ்விரு வீரர்களின் கடைசி ஒருநாள் சர்வதேச போட்டியாக அது அமைந்தது.

அதன்பின் குமார் சங்கக்காரவினதும்  மஹேல ஜயவர்தனவினதும் நீண்ட கால கிரிக்கெட் வாழ்க்கையை  பாராட்டி டுவிட்டரில் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

"இவ்வளவு வருடங்கள் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டின் அங்கமாக இணைந்திருந்த நிலையில் நீங்கள் இருவரும் இல்லாத அணியை கற்பனை செய்வது கடினமானது. உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். 

 

வர்ண ஆடைகளுடன் நீங்கள் கட்டியெழுப்பிய இன்னிங்ஸ்களை நாங்கள் இழக்கப்போகிறோம்" எனவும் சச்சின் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=9327#sthash.daSKUR8d.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.