Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசையுடன் சென்ற வசாவிளான் மக்கள் கண்ணீருடன் திரும்பினர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

article_1426854295-IMG2416.jpg

 உயர் பாதுகாப்பு வலயத்துள் அமைந்துள்ள வசாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு, மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டு, அழைக் கப்பட்ட மக்கள் நேற்று ஏமாற்றப்பட்டனர். 

அதனால் ஆத்திர மடைந்த அவர்கள் இராணுவத்தினருடனும், அரச அதிகாரி களுடனும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 25 வருடங் களின் பின்னர் சொந்தக் காணிகளில் கால் வைக்கலாம் என்ற ஆசையுடன் வந்த மக்களை, இராணுவத்தினரும் அரசும் சேர்ந்து நேற்று ஏமாற்றித் திருப்பி அனுப்பியது.
 
வலி.வடக்கில் ஆயிரத்து நூறு ஏக்கர் விடுவிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்திருந்தது. அதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை, வலி.கிழக்குப் பிரதேச செயலாளர் பிரி வுக்கு உட்பட்ட வளலாய் கிராம சேவையாளர் பிரிவு மக்களிடம் கையளிக்கப்பட் டது. இந்த நிலையில் வலி.வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட் பட்ட வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவு (ஜே/244) நேற்று விடுவிக்கப்படும் என்று கடந்த புதன்கிழமை மீள்குடியேற்ற அதிகார சபையின் தலைவர் ஹரிம் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
 
இந்த அறிவிப்புக்கு அமைய மக்கள், வலி.வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லைப் பகுதியாக விளங்கும் ஒட்டகப்புலத்திற்குச் சென்றிருந்தனர். அங்கு வலி.வடக்குப் பிரதேச செயல கத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர் களின் பெயர்கள் வாசிக்கப்பட்டன. அத்துடன் புதிய பதிவுகளும் மேற் கொள்ளப்பட்டன. 
 
வல்லை  அராலி பிரதான வீதியில், ஒட்டகப்புலத்தில் வைக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதும், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் கே.ஸ்ரீமோ கனன், வலி.வடக்குப் பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன், வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவர் அ.குணபால சிங்கம், அருட்தந்தையர்கள் எல்லோ ரும் விடுவிக்கப்பட்ட பிரதேசத்துக் குள் சென்றனர்.
 
பிரதான வீதியின் இருபுறமும் இரா ணுவ முகாம்கள் அப்படியே இருந் தன. பொதுமக்களின் வீடுகளில் அமைக்கப்பட்ட இராணுவ முகாம்க ளும் அப்படியே இருந்ததுடன், அவற் றுக்கு முன்பாக புதிதாக நிரந்தர பாது காப்பு வேலி அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். மீள்குடியமர்வுக்கான எந்த அறிகுறியும் காணப்படவில்லை.
 
விடுவிக்கப்பட்ட  இடத்திலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இருந்த, ஒட்டகப் புலம் அமல உற்பவ அன்னை ஆலயத்துக்குச் சென்று வணங்கிய பின்னர் மீண்டும் பிரதான வீதியால் நடந்து சென்றனர். இதுவரை தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து, சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் பிரதான வீதியிலேயே இரா ணுவத்தினர் மக்கள் அருட்தந் தையர்கள் பிரதேச செயலாளர் எனச் சகலரையும் தடுத்து நிறுத்தினர். 
 
அதையடுத்து பொதுமக்களும், அருட் தந்தையர்களும், ஜே/244 கிராம சேவையாளர் பிரிவு முழுமையாக விடுவிக்கப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. எஞ்சிய தோலகட்டி பிரதேசமும், வயாவிளான் கிழக்குப் பகுதிக்குள்ளேயே வருகின்றது. அதனைச் சென்று பார்வையிட அனு மதிக்க வேண்டும் என்று கோரினர். இதற்கு இராணுவத்தினர் அனுமதி வழங்கவில்லை. இந்த எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது என்று தெரிவித்து அதில் உறுதியாக இருந்தனர்.
 
இதனால் கொதிப்படைந்த பொதுமக்கள், இராணுவத்தினரை கடுமையான வார்த்தைகளால் வாக்குவாதப் பட் டனர். பிரதான வீதியால் நடந்து வருவதற்காக எங்களை அழைத்தீர்கள் என்று பொதுமக்கள் இராணுவத்தினர் மீது சீறிச் சினந்தனர். இராணுவத்தினருடைய பதில்களைக் கேட்க தயாரில்லாத பொதுமக்கள், கடுமையாகப் பேசினர். 
 
எங்களது காணிகள் உள்ளேதான் இருக் கின்றது. விட்டே ஆக வேண்டும் என்று விடாப்பிடியாக நின்றனர். 25 வருடங்களின் பின்னர் காணியைப் பார்க்கலாம் என்ற ஆவலோடு வந்தால், இவ்வாறு வீதியைக் காட்டி ஏமாற்றுகின்றீர்களா? வயாவிளான் கிழக்கில் எஞ்சிய பகுதிகளை ஏன் பார்வையிட அனு மதிக்க மறுக்கின்றீர்கள். நாங்கள் இன்று எவ்வளவோ வேலைகளை விட்டு, வவுனியா  மன்னார் உள்ளிட்ட பல் வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருக்கின்றோம். எங்களது காணிகளையாவது பார்வையிட விடுங்கள் என்று கெஞ்சினர். இராணுவத்தினர் எதற்கும் மசியவில்லை. 
 
வயாவிளான் கிழக்கு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளான ஒட்டகப்புலம், தோலகட்டி, வடமூலை ஆகிய பகுதிகளுக்குள் மக்கள் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை.  இந்தப் பகுதிகளை விடமறுக் கும் நீங்கள், ஏன் எங்களை மீள்குடியமர்வுக்கு வரச் சொல்லி அழைத்தீர் கள் என்று கடும் தொனியில் இராணு வத்தினருடன் தர்க்கப்பட்டனர். 
 
இராணுவத்தினர் மக்களை அனுமதிப் பதில்லை என்ற முடிவில் இறுதி வரையில் உறுதியாக இருந்ததால், பொது மக்கள்  ஏமாற்றத்துடனும் விரக்தியு டனும், இராணுவத்தினரையும் புதிய அரசையும் திட்டித் தீர்த்தவாறே சோக மாகத்திரும்பினர். 
 
 
இதேவேளை இந்தச் சம்பவம் தொடர் பில் யாழ்.மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை நேற்று மாலை தொடர்பு கொண்டு கேட்ட போது, இவ்வாறு இராணுவத்தினர் மக்களை அனுமதிக்காமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும், தெரியப்படுத்தப் பட்டால் இது தொடர்பில் மீள்குடியேற்ற அதிகார சபைத் தலைவருடன் பேசுவ தாகக் குறிப்பிட்டார்.  
 
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர் க.சுரேஷ் பிரேமச் சந்திரன், மீள்குடியமர்வுச் செயற்பாட் டில் அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றதா என்று கேள்வி எழுப்பியதுடன் கொழும்பில் இருக்கும் ஜனாதிபதிக்கும்  பிரதமருக்கும் இங்குள்ள நிலைமைகள் தெரியாது. அவர்கள் நேரடியாக மீள்குடியமர்வுப் பகுதிகளையும் மக்க ளையும் சந்திக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
 
மக்கள் வந்து ஏமாற்றத்துடன் செல்கின்ற நிலைமைதான் இருக்கின்றது. விடுவிக்கப்பட்ட காணிகள் தோட்டக் காணிகளாகவோ அல்லது கலட்டிக் காணிகளாகவோ இருக்கின்றன. மக்கள் குடியிருப்புக்களை அண்டிய காணி கள் விடுவிக்கப்படவில்லை. பல எதிர் பார்ப்புக்களுடன் வந்தமக்கள் அழு குரல்களுடன் வீடு திரும்பும் நிலைமை தான் ஏற்பட்டிருக்கின்றது. 
 
அரசு ஆயிரத்து நூறு ஏக்கர் காணியை விடுவிப்பதாகச் சொன்னது.  இந்த அறிவிப்பு எங்களும், சர்வதேச சமூகத் திற்கும் சொல்லப்பட்டது. வளலாயில் 233 ஏக்கரும், வயாவிளானில் 197 ஏக் கரும் விடுவிக்கப்படுவதாகச் சொல் லப்பட்ட போதும், சொல்லப்பட்ட அளவு காணிகள் விடப்பட்டனவா என்பது சந்தேகமே  என்றும் தெரிவித்தார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

ஆத்திரப்படாமலும்

உணர்ச்சி வசப்படாமலும்

மக்கள் கிடைத்தை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி

அங்கு குடியமரவும்

மக்களின் வரவை அதிகளவில் உறுதி செய்யவும்

ஆக்கிமிப்பையும் தவறுகளையும் வெளியில் கொண்டுவரவும் முயலணும்

 

இது சாதாரணமாக எழுதிவிட்டுப்போவது பொல் இலகுவானதல்ல

ஆனால் நம்மவர்கள் செய்யவேண்டிய பெரும் பணி

 

இதற்கு அந்த மண்ணைவிட்டு வெளியில் புலம் பெயர்ந்த 

ஊர் மக்கள் ஒன்றிணைந்து பெருமளவு உதவலாம்....

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.