Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பொய்யாவது சொல் கண்ணே, உன் காதல் நான் தான் என்று . (காதல் கதை)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே / அத்தியாயம் 5

ஜெரியும் நண்பர்களும் வீடு திரும்புவதற்கு தமது உடைகளை அடுக்கிக் கொண்டு இருந்தனர் . ஆதித் தம்முடன் இல்லாததை உணர்ந்த ஜெரி அவனை தேடி அவனது அறைக்கு சென்று பார்த்தான் .

ஆதித்யின் அறையில் அவனது உடைகள் அப்படியே போட்டது போட்டபடி காணப்பட்டன . ஆதித் எங்கே போயிருப்பான் ? காலையிலிருந்து அவன் தன் கலகலப்பை எங்கோ தொலைத்திருந்தான் .  வழமையாக ஒரு நிமிடமேதும் சும்மாயிராது எல்லோரையும் வம்புக்கு இழுத்து எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவன் இன்று திடீரென ஒரே யோசனையில் ஆழ்ந்துவிட்டான் . ஒருவேளை அந்த பெண் சஹாணாவிடம் தான் நடந்து கொண்ட விதம் பிழை என்பதை உணருகிறானோ ?

ஜெரிக்கும் சஹானாவை நினைக்கையில் ஒரே பாவமாக தான் இருந்தது . வீணாக ஒரு பழியை சுமந்தது மட்டுமின்றி அவளது வேலையும் அல்லவா பறி போய்விட்டது . ஆனால் ஜெரிக்கு ஆதித்தை பற்றி நன்கு தெரியும். எல்லோரிடமும் விளையாட்டாக பழகுவானே தவிற ஒருவருக்கும் வேண்டுமென்று துன்பம் நினைக்கமாட்டான் . நிச்சயமாக சஹானாவை இவ்வாறு தீங்கில் மாட்டிவிட வேண்டுமென்று அவன் இப்படி நடந்திருக்க மாட்டான் . ஏதோ விளையாட்டாக செய்தது வினையில் முடிந்து விட்டது போலும் .

ஜெரி தனக்குள் முடிவு செய்து கொண்டிருக்கும்வேளையில் ஆதித் தன் அறைக்குள் நுழைந்தான் . "டேய் எங்கேயடா போயிருந்தாய் ? நாங்கள் எல்லோரும் வீட்ட புறப்பட ஆயத்தாமாகி விட்டோம் . ஆனால் உனக்கு கிளம்புகிற எண்ணமில்லையோ ? இன்னும் உனது உடைகளை கூட அடுக்கவில்லை . அது சரி ஆண்ட்டிக்கு டோபெலேரோன் சொக்லேட் வாங்கி வருவதாக கூறி வந்தாய் . நாம் போகும் வழியில் ஒரு மீக்றோஸ் கடையாக பார்த்து வாங்கிவிட்டு செல்ல வேண்டும் . நேரம் தாமதியாமல் வெளிக்கிட்டு வா" என்று அவசரப்படுத்தினான் .

ஆதித் பதில் எதுவும் கூறாது தனது உடைகளை வழமையாக மடித்து வைப்பது போலின்றி அப்படியே அள்ளி தனது பயண பாகில் வைத்து மூடி விட்டு சரி வா கிளம்புவோம் என்று ஹோட்டலின் வாசலுக்கு விறு விறுவென்று சென்றான் .

அன்று திரும்பும் வழி முழுவதும் நண்பர் மத்தியில் காணப்படும் வழமையான அந்த மகிழ்ச்சி மறைந்து போயிருந்தது . அவர்களது குறும்பு தனத்துக்கும் மகிழ்ச்சி ஆரவாரத்துக்கும் ஆதித் தான் தலைமை தாங்குவான் . ஆனால் இன்று அவன் வாடி காணப்பட்டதனால் மற்றயவரும் சூழ்நிலையை மாற்ற தெரியாது மௌனம் காத்தனர் . ஜெரி மட்டும் இடையிடையே கதை கொடுத்தபடி கொஞ்சம் உற்சாகப்படுத்த முயன்றான் .

வீடு வந்து சேர்ந்தவுடன் அம்மா ஆவலுடன் ஓடி வந்தார் . "டேய் ஆதித் யார் வந்திருக்கிறான் என்று பாருடா ? யதுஷன் இங்கு வந்த நாள் முதல் உன் வரவை தான் எதிர்ப்பார்த்து காத்திருந்தான் . அது சரி உங்கள் பயணம் எப்படி போனது ? பனிசறுக்கு விளையாட்டு விளையாடி காயம் எதுவும் இல்லாமல் ஒழுங்காக நீங்கள் நால்வரும் வீடு வந்து சேர வேண்டுமென்று அந்த முருகப்பெருமானிடம் தான் நான் நேர்த்தி வைத்திருந்தேன். இப்பொழுது தான் எனக்கு நிம்மதியாக இருக்கின்றது.

அம்மா மகனை கண்ட சந்தோஷத்தில் மிகவும் ஆரவாரப்பட்டார். ஜெரி உடனே ஆதித்யிடம் திரும்பி எங்கேயடா ஆண்டிக்கு கொண்டு வந்த அந்த சொக்கலேட்டை எடு என்று கூறிக்கொண்டே அம்மாவிடம் திரும்பி உங்களுக்கு நீங்கள் விரும்பும் டோபோலோரோன் சொக்கலேட் வாங்கி வந்துள்ளோம் ஆண்டி . அத்துடன் வந்த களைப்பு மாற உங்கள் கையால் நீங்கள் போடும் விசேட பால் தேத்தண்ணீர் தாருங்கள் . குடித்து விட்டு நாங்கள் கிளம்புகிறோம் . மிகுதி புதினங்களை உங்கள் மகன் ஆதித்யிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று அவசரப்படுத்தினான் .

இவர்களது உரையாடலை கேட்ட யதுஷன் வெளியே வந்து கதவருகில் நின்றபடியே இவர்களை நோக்கியபடி நின்றான் . ஆதித் அவனை கண்டவுடன் ஆவலுடன் ஓடி வந்து கட்டி அணைத்துகொண்டான் . பின்னர் ஜெரியிடம் திரும்பி மச்சான் இவன் யதுஷன் எனது சின்னம்மா மகனாக இருந்தாலும் உங்களை போல ஒரு நல்ல நண்பன் . இனி இவனும் எமது குழுவில் ஒருவன் . உங்கள் எல்லோருக்கும் இவனை அறிமுகப்படுத்துவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சந்தோஷமாக கூறினான் .

நாள் முழுவதும் சோகத்தில் ஆழ்ந்திருந்த நண்பன் மீண்டும் வழமையான உற்சாக தொனிக்கு மாறியதை கண்டு திருப்தியாக ஜெரியும் முன் வந்து யதுஷனுக்கு கைலாகு கொடுத்து இன்றுடன் நாம் ஐவர் கொண்ட பொப் நட்சத்திரங்களாகி விட்டோம் . யதுஷனை தட்டி கொடுத்தான் . மற்றயவரும் யதுஷனை நண்பனாக ஏற்றுக்கொள்ள எல்லோரும் ஒன்றாக அம்மாவின் தேத்தண்ணீர் குடிக்க சமையலறையை நாடிச்சென்றனர் .

அடுத்த நாள் காலை 08.00 மணிக்கே ஆதித் எழுந்து விட்டான். அம்மா வழமைபோல் சமையலறையில் காலை உணவுக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் . ஆதித் அதிசயமாக வெள்ளனவே எழுந்து வந்தது அம்மாவை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது .

அதே நேரத்தில் அவருக்கே உரித்தான கரிசனையுடன் " அதித் என்னடா வேண்டும் ? உன்னால் நித்திரை கொள்ள முடியவில்லையா ? அல்லது நான் பாத்திரத்தை விழுத்தி உனது நித்திரையை குழப்பி விட்டேனா ? என்னை மன்னித்து விடுடா ! கோப்பி கலந்து தருகிறேன் குடித்துவிட்டு மீண்டும் போய் படு . சுவிஸ் போய் வந்த களைப்பு இன்னும் உனக்கு தீர்ந்திருக்காது, கோப்பி கலந்து கொடுத்தார் .

ஆதித் அம்மா கலந்து தந்த கோப்பியை ருசித்தவாறே " அது ஒன்றும் இல்லையம்மா . யதுஷன் எழும்பி விட்டானா அல்லது இன்னும் நித்திரையா ? சின்னம்மா, சித்தப்பா எல்லோரும் நலமாக இருக்கிறார்களா ? ஜேர்மன் நாட்டைப்பற்றிய யதுஷனின் முதல் அபிப்பிராயம் என்னவாம் ? மிகவும் அக்கறையாக விசாரித்தான் . அம்மா சிரித்தபடியே "சின்னம்மா, சித்தப்பா எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் .

யதுஷன் அதிகாலையிலேயே எழுந்து அப்பாவுடன் நிறுவனத்துக்கு சென்று விட்டான் . அப்பா அவனை விளம்பர  பிரிவிற்கு தலைமை அதிகாரியாக நியமித்துள்ளார் . எனக்கே ஆச்சரியமாக இருந்தது . அப்பா யதுஷனுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து துணையாக நிற்பார் என்பதனால் நீ அவனை பற்றி கவலை படுவேண்டாம் . உனது காலை உணவாக என்ன சாப்பிட விரும்புகிறாய் என்று கூறினால் நான் தயார் படுத்தி கொண்டுவருகிறேன் " பதிலுரைத்தபடியே தனது கழுவி இருந்த பாத்திரத்தை வெளியே எடுத்தார் .

"இப்பொழுது எனக்கு பசியில்லை அம்மா, பசி எடுக்கையில் கூறுகிறேன்" என்று மீண்டும் தன் அறைக்கு வந்தவன் ஏனோ சஹானாவை பற்றி நினைத்துப் பார்த்தான் . இன்று அவளால் வேலைக்கு போக முடியாததால் வீட்டிலே இருப்பாள் . பாவம், நேற்று தன் தந்தையை எவ்வாறு சமாதானம் செய்திருப்பாளோ ? அவள் அழுதபடியே வெளியேறிய காட்சி அப்படியே அவன் மனதில் நின்றது .

தன்னை சமாதானம் படுத்தும் விதமாக சஹானாவின் கர்வத்துக்கு இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கட்டும் என்று தனக்குள் கூற எத்தனித்தாலும் அவனால் தனது குற்ற உணர்விலிருந்து வெளியே மீண்டு வரவே முடியவில்லை . இருப்பு கொள்ளாமல் தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு " அம்மா நான் அப்பாவின் நிறுவனத்துக்கு சென்று வருகிறேன் " என்று பதிலுக்கு கூட நிற்காமல் கிளம்பினான் .

ஆதித்யின் அப்பா தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும் நிறுவிய அந்த தனியார் நிறுவனம் இப்பொழுது பலருக்கு வேலை வாய்ப்பு கொடுத்தது மட்டுமின்றி வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருந்தது . ஆதித் தமது சொந்த நிறுவனமாக இருந்தாலும் மிகவும் அரிதாகவே அங்கு வருவான் .

அப்பாவிடம் எதுவும் தேவையிருப்பின் வந்து சிறிது நேரமாயினும் தாமதியாமல் மீண்டும் கிளம்பி விடுவான் . இன்று அவன் நிறுவனத்திற்குள் உட்புகுகையில் அதன் பிரமாண்டத்தை பார்க்கையில் அவனுக்கே பெருமிதமாக இருந்தது . ஒரு இலங்கை தமிழன் அதுவும் இந்த ஜேர்மன் நாட்டில் தனியாக ஒரு நிறுவனத்தை நிருவகிப்பது மட்டுமின்றி எல்லோருடைய அன்பையும் மதிப்பையும் பெற்றிப்பது என்பது ஒரு சாதாரண விடயம் அன்று .

ஆதித்யை கண்ட நிறுவன ஊழியர்கள் அன்பாக வரவேற்று அவனுடன் உரையாடினார்கள் . அவனது நலத்தைப்பற்றி அக்கறையோடு விசாரித்தார்கள் . தனது தந்தையிடம் அவர்கள் வைத்திருக்கும் அன்பை கண்டு கொண்ட ஆதித் தான் தன் அப்பாவை சந்திக்க வந்ததை கூறி விடைபெற்றுக்கொண்டு அப்பாவின் அறைக்கு அவரை தேடிச்சென்றார் . ஆதித் அன்று எல்லாவற்றையும் ஒரு புதுக்கண்ணோடு நோக்க தொடங்கினான் . அவனை அறியாமலேயே அவனிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்ததை அவன் அப்பொழுது உணரவில்லை .

 தொடரும் .......

  • 2 weeks later...

மீரா இங்கும் பந்திகளுக்கு இடையில் இடை வெளி விடுங்கள், அப்ப தான் பார்க்கவும் அழகு வாசிக்கவும் சுலபம்.  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீரா இங்கும் பந்திகளுக்கு இடையில் இடை வெளி விடுங்கள், அப்ப தான் பார்க்கவும் அழகு வாசிக்கவும் சுலபம்.  :D

 

நிச்சயம் செய்கிறேன் மீனா .

அது சரி , கதையைப்பற்றி ஒன்றுமே கூறவில்லையே.

நான் அடுத்த அத்தியாத்தை பதிவேற்ற நினைத்தேன் .

நன்றி .

நிச்சயம் செய்கிறேன் மீனா .

அது சரி , கதையைப்பற்றி ஒன்றுமே கூறவில்லையே.

நான் அடுத்த அத்தியாத்தை பதிவேற்ற நினைத்தேன் .

நன்றி .

 

 

 நீங்கள் இப்படி எழுதினால் எப்பிடி வாசிக்க முடியும் மீரா??  :lol: அது தான் சொன்னேன் :)

மீரா, நீங்கள் கதை எழுதிய விதம் அருமை, தொடருங்கள் வாசிக்க மிக ஆவல்!! :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அத்தியாயம்  6

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே

 

ஒருவரை மனத்தளவில் ஒரு செயல் பாதித்திருந்தால் அவர்களது  குணாதிசயங்களை அச்செயல் அப்படியே முழுதாக மாற்றி விடும் என்பது எவ்வளவு உண்மை . ஆதித், தான் சாஹானாவுக்கு தவறு இழைத்ததை உணர்ந்த பிறகு ஒரு நாளிலேயே அவன் ஒரு பொறுப்பு வாய்ந்த மனிதனாக மாற்றம் பெற்றுவிட்டான் . அவனது கண்களில் அவனது அப்பா மற்றுமின்றி அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் எல்லோரும் உயர்ந்து நின்றனர் .

ஆதித்தை கண்ட அப்பாவுக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது . "அட ஆதித் நேற்று நான் வீடு திரும்புகையில் நீ அசதி காரணமாக தூங்க சென்று விட்டாய் . உன்னை எழுப்ப எனக்கு மனமிருக்கவில்லை .

 

அது சரி எப்படி உனது சுவிஸ் பயணம் போனது ? நன்றாக இருந்ததா ? உன் அம்மா தான் கவனமாக வீடு வந்து சேர வேண்டும் என்று ஒரே புலம்பல் . உன் அம்மாவை பற்றி உனக்கு தெரியும் தானே ! நான் சொல்லி தெரியவேண்டியது இல்லை .

அது இருக்கட்டும் ! என்ன இங்கே என்னை தேடி வந்திருக்கிறாய் ? பணம் தேவையா ? எவ்வளவு தேவை "­? என்று தனது பர்ஸை வெளியே எடுத்தார் அப்பா.  " ஐயோ அப்பா, எனக்கு பணம் ஒன்றும் தேவையில்லை . சும்மா தான் உங்களை பார்க்க வந்தனான் . எங்கே யதுஷன் ? எந்த அறையில் வேலை செய்கிறான் ? அவனை பார்த்துவிட்டு வருகிறேன்" என்று யதுஷனை தேடிச்சென்றான் ஆதித் .

 

யதுஷன் அவனது அறையில் யாருடுனோ தொலைபேசியில் கதைத்துக் கொண்டிருந்தான். இவனைக் கண்டதும் கொஞ்சம் பொறுக்குமாறு சமிக்ஞை காட்டிவிட்டு தொடர்ந்து உரையாடினான் . ஆதித் சிரித்துவிட்டு அங்கு விருந்தினர்களுக்கு போடப்பட்டிருந்த கதிரையில் உட்கார்ந்தான் . அந்த அறை மிகவும் வசதியாக இருந்தது . கணணி முதல் எல்லாவித நவீன வசதிகளும் அவ்வறையினுள் செய்யப்பட்டிருந்தன . அப்பாவின் அறையில் கூட இப்படி அழகாக அலங்கரிக்கப்பட்டு நவீனப்படுத்தப்படிருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை .

 

அடடா அப்பா யதுஷனில் மிகவும் மரியாதை வைத்திருக்கிறார் போலும் . அது தான் யதுஷனுக்கு இந்த அறையை கொடுத்திருகிறார் . தனக்குள் எண்ணி விட்டு யதுஷன் தனது தொலைபேசி உரையாடலை முடிக்கும் வரை பொறுமையாக காத்திருந்தான் .

ஒருவாறு தன் நீண்ட உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்த யதுஷன் ஆதித்தை நோக்கி "என்னடா இங்கு வந்து நிற்கிறாய் ? உனது நண்பர் குழாம் எங்கே? இன்று அவர்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டாயோ ? ஆனாலும் என்னை மன்னித்து விடு மச்சான் . உன்னை போல எனக்கு ஊர் சுற்ற முடியாது . தலைக்கு மேல வேலை நிறுவனத்தில் இருக்கிறது . அவற்றை எல்லாம் நான் கவனிக்க வேண்டும் . அங்கிள் என்னிடம் பல பொறுப்புகளை ஒப்படைத்திருக்கிறார் . அவற்றை எல்லாம் நான் தான் முன்னின்று முடிக்க வேண்டும் .

 

இன்று பின்னேரம் என்றால் வேலை முடிந்த பின்னர் உங்களுடன் வெளியே செல்ல வருகிறேன் . என்ன சொல்கிறாய் "? என்று ஒரேயடியாக பரபரத்தான் . ஆதித் சிரித்தவாறே "ரிலாக்ஸ் யதுஷன் ரிலாக்ஸ், உன்னை கொஞ்சம் ஆறுதல் படுத்த, நான் வேண்டுமென்றால் உதவி செய்கிறேன் . சரி சொல் மச்சான், எப்படி உனக்கு உதவுவது ? ஆர்வத்துடன் எழும்பினான்.

 

யதுஷன் ஒருவித சந்தேகத்துடன் தனக்கான வேளைகளில் பாதியை அதித்யிடம் ஒப்படைத்தான் . ஆச்சரியமாக தனக்கு தந்த வேலைகளை மிகவும் சிரத்தை கொண்டு செய்து முடித்தான் ஆதித். அப்பாவிடம் கை எழுத்து வாங்க வேண்டிய கோர்வைகளுடன் அப்பாவின் அறைக்கு சென்ற பொழுது அப்பாவினால் தன் கண்களையே நம்ப முடியவில்லை . "என்னடா ஆதித் நீ எப்பயோ கிளம்பி சென்றிருப்பாய் என்று நினைத்தேன் , இப்பொழுது பைல்களுடன் வந்து நிற்கிறாய் . உன்னை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது ஆதித்" அப்பா மிகவும் பெருமிதமாய் பைல்களை வாங்கி கை எழுத்திட்டு திரும்ப கொடுத்தார் .

 

அன்றிலிருந்து ஆதித் அப்பாவுடனும் யதுஷனுடனும் ஒவ்வொரு நாளும் நிறுவனத்துக்கு செல்ல தொடங்கினான் . நண்பன் ஜெரியை சந்திப்பதை வேலை நேரம் முடிந்து பின்னேரம் 5 மணிக்கு பிறகு சந்திப்பதையும் வழக்கத்துக்கு கொண்டு வந்தான் . அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஆதித்யிடம் இந்த மாற்றத்தை கண்டு மட்டற்ற மகிழ்ச்சி கொண்டனர் . அப்பா தன் புதல்வன் தனக்கு பிறகு நிர்வாக பொறுப்பை ஏற்றுக்கொள்வானோ என்று குழப்பத்தில் இருந்தவர் ஆதித் நிறுவனத்தில் யதுஷனுக்கு சமனாக வேளைகளில் ஆர்வம் காட்டுவதை கண்ட பின்னர் நிம்மதி பெருமூச்சு விட்டார் .

 

இதன் காரணமாக அடுத்த நாள் ஆதித்க்கு பிரத்தியமாக தயார் செய்து வைத்திருந்த அறையை அவனிடம் இதுநாள் வரை ஈடுபாடு காணாததால் யதுஷனுக்கு தற்காலிகமாக கொடுத்திருந்த ஆதித்யின் அறையை அவனுக்கே கொடுக்க தீர்மானித்தார் . அன்று நிறுவனத்துக்கு கொஞ்சம் முன்பே சென்று ஊழியரை கொண்டு அறையை விசேடமாக அலங்கரித்ததுடன் பூச்சாடியையும் ரோஜா பூக்களால் நிரப்பி ஆதித்தை வரவேற்க காத்திருந்தார் .

 

வழமை போல ஆதித் யதுஷனுடன் உள்ளே வர அப்பா முதல் மற்றைய ஊழியர்களும்மாக சேர்ந்து வருக

" இளைய முதலாளியே வருக " என்று ஆதித்யை வலுக்கட்டாயமாக கொண்டு வந்து அவனுக்காக தயார் செய்திருந்த கதிரையில் இருத்தி விட்டனர் . ஆதித் திக்குமுக்காடி போய்விட்டான் . தனக்கு நிர்வாகத்தின் முழு பொறுப்பையும் அப்பா அப்படியே ஒப்படைப்பார் என்று அவனும் சிறிதும் எதிர்பார்க்கவில்லை .

சந்தோஷமாக தன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு " அப்பா நீங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கும் மேலாக உங்கள் நிறுவனத்தை நான் திறம்பட நடத்திக்காட்டுகிறேன். உங்களை என்னால் பெருமைப்பட வைக்க நான் முழு முயற்சியும் செய்வேன் . இத்தனை காலம் நீங்கள் அயராது உழைத்ததுக்கு இனி நீங்கள் சற்று ஓய்வெடுக்கலாம் . இதோ எனக்கு உறுதுணையாக எனது அன்பான நண்பன் யதுஷன் இருப்பான் . என்ன , யதுஷன் நான் சொல்வது சரிதானே" ?

 

 

யதுஷனுக்கோ இப்படி நடக்கும் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை . அதுவும் தனது அறை , தான் இருந்து நிர்வகிக்க போகும் அறை என்று பல கனவுகளுடன் இருந்த யதுஷன் ஒரே விளையாட்டும் கூத்தும்முமாக இருந்த இந்த ஆதித் எப்படி அவ்வளவு விரைவில் அப்படியே மாறி போனான் .

இந்த அங்கிள் அவசரப்பட்டு இப்படி தீர்மானம் எடுக்கிறாரே . இவருக்கு எப்படி நான் இதை புரியவைப்பது தனக்குள் எண்ணிக்கொண்டு இருந்தான் . ஆதித் மீண்டும் யதுஷன் என்று கூப்பிடுவதை கேட்டு சரி என்று சும்மா அமோதித்தான் . ஆனாலும் அவனுக்கு மனதில் சிறிது உளைச்சலாக தான் இருந்தது . எவ்வளவு வசதியான அறை . அங்கிளின் அறையை விட நவீனமானது . அப்படிப்பட்ட அறையிலிருந்து ஒரு சாதாரண அறைக்கு மாறி செல்ல வேண்டும். இனி இங்கு வேலை செய்பவர்களும் ஆதித்யிடம் தான் சென்று வழிந்துக்கொண்டு நிற்பார்கள் . இது நாள் வரை நான் தான் அவர்களுக்கு வேலை வழங்கிக்கொண்டிருந்தேன் . இப்பொழுது ... தன்னுள் ஒரு நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டான் .

 

 

அன்று மதிய நேரம் யதுஷனுக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது . நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தவன் அழைப்பை துண்டித்துவிட்டு நேராக ஆதித்யிடம் வந்தான் . " டேய் மச்சான், எனக்கு அவசரமாக சுவிஸ் நாட்டுக்கு போக வேண்டும் . எனக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களுக்கு ஒரு துன்பம் நேர்ந்து விட்டது . நான் போய் அவர்களை பாதுகாப்பாக இங்கே கொண்டு வந்து சேர்க்க வேண்டும் . நீ அடிக்கடி சுவிஸ் நாட்டுக்கு சென்று வருவதனால் போகும் வழி முதல் எல்லாம் உனக்கு அத்துப்படி . ஆகவே இப்பவே என்னை கூட்டிச் செல்வாயா ? உனக்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பம், வேலையிலிருந்து சிறிய விடுதலை , ஆகவே கிளம்பு மச்சான்  " என்று அவசரப்படுத்தினான் .

 

 

ஆதித் கொஞ்சம் தயங்கினான் . " வந்து , மச்சான் யதுஷன் , இன்று தான் அப்பா இந்த பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார் . அவரது முகத்தில் நிம்மதி உணர்ச்சி நிழலாடுவதை கண்டு நானே ஆறுதல்பட்டேன். அப்படியிருக்கையில் அவரிடம் இப்ப போய் மீண்டும் சுவிஸ் நாட்டிற்கு கிளம்புகிறேன் என்று சொல்வது அவ்வளவு நன்றாக இருக்காது . அது மட்டுமில்லை எனக்கு வேலை செய்வது மிகவும் பிடித்திருக்கிறது . உண்மையை கூறுவதாயின் இது எனக்கு ஆச்சரியத்தையே தருகிறது யதுஷன் " என்று இழுத்தான் .

 

 

அப்படி என்றால் சரி ஆதித் , நானே ரயிலை பிடித்தோ அல்லது வேறு வழியாகவோ சுவிஸ் நாட்டிற்க்கு செல்கிறேன் . அங்கு செல்வது எனக்கு மிகவும் முக்கியம் . ஒருவர் துன்பத்தில் இருக்கையில் என்னால் சும்மா இருக்க முடியாது " கோபத்துடன் வெளியேறினான் யதுஷன் .

ஆதித் ஒரு கணம் யோசித்தான் . சுவிஸ் நாட்டுக்கு மீண்டும் செல்வதை அவனது மனம் ஏனோ விரும்பவில்லை . ஏனோ அல்ல ஆதித்க்கு காரணம் நன்றாகவே தெரிந்தது . தான் சஹானாவுக்கு செய்த பிழையை எண்ணி இன்னும் மனதிற்குள் வாடினான் .

தன்னுடன் மகிழ்ச்சியாக வேலை செய்யும் சக ஊழியர்களை காணும்பொழுது தான் ஒரு அப்பாவியின் வேலையை பறித்து அவளின் வாழ்வாதாரத்தை சிதைத்து விட்டேனே என்ற குற்ற உணர்வு அவனை வாட்டியது . மீண்டும் அந் நாட்டிற்க்கு சென்று அந்த சம்பவத்தை நினைவு கூற அவனுக்கு விருப்பமே இருக்கவில்லை .

 

 

ஆனாலும் யதுஷன் கட்டாயம் செல்ல வேண்டும் என்கிறான் . இலங்கையிலிருந்து நேரே இங்கு வந்த அவனுக்கு வேறு ஒரு நாடாகிய சுவிஸ் நாட்டிற்க்கு செல்வது மிகவும் சிரமம் தான் . ஆதித்யின் மனம் இளகியது .

உடனே யதுஷனை பின்தொடர்ந்தவாறே அவனது அப்பாவின் அறைக்கு சென்றான் . அங்கு அப்பாவின் முன்னே தயங்கியபடி நின்ற யதுஷனை விலக்கி விட்டு " அப்பா நான் மிக அவசரமாக யதுஷனுடன் சுவிஸ் நாட்டிற்க்கு சென்று வர வேண்டும். தயவு செய்து அனுமதி தாருங்கள் . திடுதிப்பன வந்து கிளம்புகிறேன் என்று கூறுவதற்கு மன்னிக்கவும் . திரும்பி வந்தவுடன் பொறுப்பாக எல்லாவற்றையும் கவனித்துக் கொள்கிறேன் அப்பா . யதுஷனையும் துணைக்கு அழைத்து போகிறேன் " பதிலுக்கு கூட நிற்காமல் யதுஷனை இழுத்துக்கொண்டு வெளியேறினான் .

 

 

யதுஷன் " அங்கிள் , நான் இப்பொழுது என்ன   செய்வது   ? எப்படி மறுக்க முடியும் , ஆகவே திரும்பியவுடன் உங்களுக்கு எப்பொழுதும் போல் உறுதுணையாக இருப்பேன் " என்று பரிதாபமாக பார்த்தபடியே ஆதித்யுடன் கிளம்பினான் .

அப்பா யோசனையுடன் ஆதித்தை நோக்கினார் . " ஒரு வேளை தன் மகன் திருந்தி விட்டான் என எண்ணி அவசரப்பட்டு விட்டோனோ . கொஞ்ச நாட்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு பொறுப்புகளை கொடுத்திருக்கலாமோ . இவன் அந்த நல்ல பையன் யதுஷனையும் கெடுத்து விடுவானோ என்று சந்தேகமாகவல்லவா இருக்கிறது ". பெருமூச்சுடன் மிகுதி வேலையை தொடரத் தொடங்கினார் அப்பா .

தொடரும் .....

 

  • கருத்துக்கள உறவுகள்

மீராகுகன் மிகவும் அழகாகப் போகின்றது உங்களது கதை சொல்லல். நான் எப்பவும் முதலே வாசித்து விடுவேன் , கருத்திடுவதில் படு சோம்பேறி நான். மனதில் ஏற்படும் ஆயாச உணர்வுகளை யதுஷன் மூலம் இயல்பாகக் காட்டுகின்றீர்கள் , தொடர்ந்து எழுதுங்கள்...! :D

கருத்து எழுதாட்டிலும் நாங்கள் வாசிக்கின்றோம் மீராகுகன் தொடர்ந்து எழுதுங்கள் :)

   

(1,224 views )  :)

 

Edited by மீனா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருத்து எழுதாட்டிலும் நாங்கள் வாசிக்கின்றோம் மீராகுகன் தொடர்ந்து எழுதுங்கள் :)

   

(1,224 views )  :)

 

நன்றி மீனா . என்றாலும் நேரம் கிடைக்கையில் கருத்து எழுதினால் ஊக்கத்தை கொடுக்கம் .

ஒரு காதல் நாவல் உருவாக்க முயற்சிக்கிறேன் .

  • 4 months later...

மீரா.... கதையின் மிகுதியையும் இணைத்து விடுங்கள் ! :)

 

  • கருத்துக்கள உறவுகள்

கதை நன்றாக உள்ளது, மிகுதியை எதிா்பாா்க்கிறொம். பாராட்டுகு்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே
(தொடர்கதை-அத்தியாயம் 7)
Chapter 7
ஆதித் யதுஷனுடன் சுவிஸ் நாட்டிற்கு பலமணி பயணத்தின் பின் வந்து சேர்ந்தான் . மனத்தில் சஞ்சலம் நிலவினாலும் நண்பனுக்காக ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்ற காரணத்தினால் தன்னால் முடிந்ததை செய்கிறேன் என்ற மனத்திருப்தி அவனுள் எழுந்தது . சூரிச் நகரை வந்தடைந்த பின்னர் யதுஷன் ஆதித்யிடம் " டேய் ஆதித் , என்னை கூட்டிக்கொண்டு வந்ததுக்கு மிகவும் நன்றி. அவர்கள் துன்பத்தில் இருக்கும் பொழுது முன்பின் அறியாத உன்னை அவர்கள் வீட்டிற்கு அழைத்து செல்வது அவ்வளவு நன்றாக இருக்காது .

ஆகவே நீ உடனே கிளம்பு . அங்கிள் நானும் உதவிக்கு இல்லாது மிகவும் கஷ்டப்படுவார் . உன் அப்பா என்னிடம் எவ்வளவு கருணை கொண்டு வேலை தந்திருக்கையில் அவருக்கு நான் ஒரு நாளாவது துணையாக நிற்காவிடில் என்னுள் குற்ற உணர்ச்சி தான் மேலோங்கிறது . நான் அங்கிளுக்கும் பெரியம்மாவுக்கும் மிகவும் கடமைப்பட்டுளேன்“ .

„எனது நண்பர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களை ஜேர்மன் நாட்டிற்கு கூடிவர ஏற்பாடு செய்யவேண்டும் . ஆகவே இப்பவே உன்னிடம் விடை பெறுகிறேன் மச்சான் " என்று அவசரமாக கூறி விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் . ஆதித்க்கு ஏதோ மாதிரி ஆகி விட்டது . நீண்ட தூரம் காரோட்டி வந்த களைப்பு மாறாது மீண்டும் உடனே திரும்புவது என்பது இயலாத காரியம் . அத்துடன் யதுஷனின் நண்பர்களுக்கு தானும் ஏதும் வழியில் உதவி இருக்கலாம் . அதாவது அவர்களை தனது காரிலேயே மீண்டும் கூட்டிச் சென்றிருக்கலாம் .

ஆதித் இவ்வாறு யோசனை செய்தாலும் மீண்டும் மனதை தேற்றியவாறே யதுஷன் கூறுவதும் உண்மையாக இருக்கும் . முன்பின் தெரியாத என்னை அவர்கள் எப்படி, அதுவும் கஷ்டத்தில் இருக்கையில் என்னை வரவேற்பதில் சிக்கல் இருக்கும் . யதுஷன் எவ்வளவு நல்லவன் . ஒவ்வொருவரது உள்ளத்தையும் புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு தன்னலமற்று நடக்குகிறான் . அவனது நட்பு எனக்கு ஒரு வரப் பிரசாதம் " என்று தன்னுள்ளே மெச்சிக்கொண்டே மீண்டும் வீடு நோக்கி தன் பயணத்தை தொடங்கினான் .

யதுஷன் வீடு திரும்ப இரண்டு நாட்களாகி விட்டது . அவனது நண்பர்களை விசாரித்த போது அவர்களை ஒருவாறு தேற்றி சம்மதிக்க வைத்து இங்கே கொண்டு வந்ததாகவும் எப்படியும் அவர்களுக்கு ஏதாவது நல்ல வழி செய்து கொடுக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்தான் .

ஆதித் அத்துடன் அப்படியே அதை விட்டு விட்டான் . ஆதித் முழுமையாக தன் அப்பாவின் நிறுவன பொறுப்புகளை ஏற்றுக்கொண்டான் . அப்பா நிறுவனத்தை தலைமை தாங்கினாலும் அவரின் கீழ் நிர்வாகத்தை திறம்பட நடத்த பழகிக்கொண்டான் . ஆனாலும் அவரின் அனுமதியுடனேயே எந்த முக்கிய முடிவுகளையும் எடுத்துக்கொள்ள தவறுவதில்லை . இப்படியே அதித் சுவிஸ் நாடு சென்று திரும்பி 3 வாரங்கள் ஆகி விட்டன .

வழமை போன்று அப்பாவிடம் கை எழுத்து வாங்க அவர் அறைக்குள் செல்ல முற்படுகையில் யதுஷன் அப்பாவிடம் ஏதோ தயங்கிபடியே கேட்பது அவனது காதில் கேட்டது . உள்ளே செல்வதா என்று யோசித்துவிட்டு அட இது யதுஷன் தானே என்று கதவின் பிடியை திறப்பதற்கு எத்தனிக்கும் வேளையில் அப்பா " இதோ பார் யதுஷன் உனக்கு வேண்டப்பட்ட பெண்ணாக இருந்தாலும் கணக்கு வேலை பார்பதற் குரிய தகுதி பெற்றிந்தால் மட்டுமே என்னால் அவளுக்கு வேலை தர முடியும் . உனக்கு தெரிந்தவள் என்ற ஒரு தகுதி போதுமா ?

இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் எல்லோரும் அவரவர் துறையில் படித்து தேர்ச்சி பெற்றவர்களே . ஏன் உன்னையே எடுத்துக்கொள் . உனது படிப்புக்கு உகந்தவாறே நீ மேற்பார்வையாளராக வேலை செய்கிறாய் . நீ குறிப்பிடும் பெண் வரவேற்பளாராக வேலை செய்த முன் அனுபவம் உள்ளது எனக் கூறுகிறாய் . ஆனால் எமக்கு அந்த இடம் வெற்றிடமாக இல்லை . சாரா அந்த வேலையை திறம்பட செய்கையில் அவளை என்னால் வேலையிலிருந்து தூக்க முடியாது . ஆகவே என்னை மன்னித்து விடு . அந்த இடம் வெற்றிடமானால் தருகிறேன் என்று கூறி விடு " என்று தீர்மானமாக கூறி முடித்தார் .

அப்பா மிக இறுக்கமான மனநிலையில் இருக்கையில் எப்படி உள்ளே செல்வது என்று ஆதித் அப்படியே திரும்பி அவர்களது வரவேற்பறைக்கு வந்தான் . வரவேற்பறைக்கு வந்தவன் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்று விட்டான் . ஒரு வாரப்பத்திரிகையை புரட்டியப்படி இருக்கையில் அமர்ந்திருப்பது சஹானாவல்லவா ! அப்படி என்றால் யதுஷன் வேலை கேட்பது இவளுக்காகவா ? தன் நண்பர் துன்பத்தில் இருப்பதால் இங்கு கூட்டி வந்ததாக கூறினான் . நான் அவளுக்கு இழைத்த பிழை தான் அவளையும் அவளது குடும்பத்தையும் பாதித்து விட்டதோ ".

ஆதித் உடனே விரைந்து அப்பாவின் அறைக்கு வந்தான் . " அப்பா, அந்தப் பெண்ணை இந்த நிமிடத்திலிருந்து எமது விளம்பர பிரிவிற்கு பொறுப்பாக நியமிக்கிறேன் . நீங்கள் தானே அடிக்கடி கூறுவீர்கள் என்னிடம் நிர்வாக பொறுப்பை தள்ளி விட்டு நீங்கள் ஓய்வு எடுக்க விரும்புவதாக . ஆதலால் நான் எடுக்கும் முடிவுகளிலும் நீங்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் . அது சரி உடனே அவளுக்கு வேலைக்கான நியமன கடிதத்தை தயார்படுத்த உத்தரவு இடுங்கள் " என்று அதிகார தொனியில் கூறிவிட்டு யதுஷனை பார்த்து கண்ணடித்தான் . யதுஷன் அப்படியே மலைத்துப் போய் நின்று கொண்டிருந்தான் .

உடனே தன்னை சுதாகரித்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் அறையை விட்டு வெளியேறினான் . ஆதித்யும் சஹானாவிடம் சென்று தன்னை அறிமுகப்படுத்திவிட்டு இந்த நல்ல செய்தியை கூறுவதற்கு அவளை தேடிச் சென்றான் .

அவளை நெருங்கையில் ஏற்கனவே யதுஷன் சஹானாவிடம் சென்று விட்டிருந்தான் . சஹானா ஆதித்க்கு பின்புறம் காட்டியவாறு நின்றுகொண்டிருந்தாள் . யதுஷன் அவளிடம் சஹானா " நான் கூறினேன் அல்லவா, உனக்கு உடனே வேலை கிடைக்கும் என்று . அது மட்டுமின்றி விளம்பர பிரிவிற்கு பொறுப்பாக ஒரு உயர்ந்த பதவியும் கூட . இனி நீ ஒன்றுக்கும் கவலை கொள்ளத் தேவையில்லை . என்றும் உனக்கு நான் உறுதுணையாக இருப்பேன் " ஆறுதலாக கூறிக்கொண்டு இருந்தான் .

சஹானாவோ மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போயிருந்தாள் . மிகவும் உணர்ச்சிப் பெருக்கோடு " யதுஷன் தீயவர்களின் நயவஞ்சக செயலினால் மிகவும் மனம் வருந்தி போயிருந்த எனக்கு உன் போன்ற நல்லவரினால் நன்மை பெற்றிருக்கிறேன் . உனக்கு எப்படி நன்றி கூறுவது என்று எனக்கு தெரியவில்லை " அவளது குரல் தளுதளுத்தது .

ஆதித் அப்படியே பின்வாங்கிகொண்டான் . "ஒருவேளை அவள் தன்னை தான் தீயவன் என்று குறிப்பிடுகிறாளோ , அப்படியிருப்பின் அவளிடம் சென்று பேசுவதற்கு இது சரியான தருணம் அல்ல . இனி இங்கு தானே வேலை செய்யப்போகிறாள். சாவகாசமாக அவளிடம் மன்னிப்பு கேட்போம் " தனக்குள் முடிவு எடுத்துகொண்டான் .

அவனது மனத்தை அவளது மகிழ்ச்சி ஏதோ செய்தது. அன்று வீடு திரும்பியவுடன் அம்மாவிடம் சென்று அப்படியே மடியில் சாய்ந்துக்கொண்டான். அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம் . " என்னடா ஆதித் என்ன உனக்கு ? எதுவும் செய்கிறதா ? தலை இடிக்கிறது என்றால் மருந்து தருகிறேன் " என்று கரிசனையோடு அவன் தலையை கோதி விட்டார் .

அடுத்த நாள் வேலைக்கு சென்றப்பொழுது சஹானாவுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள்லிருந்து ஊதுபத்தி வாசனை வந்து கொண்டிருந்தது . மெல்ல எட்டிப்பார்த்தான் . ஏற்கனவே வந்திருந்த சஹானா ஒரு மூலையிலிருந்த மேசையில் நல்லூர் முருகனின் படத்தை வைத்து கண்களை மூடியவாறே பிரார்த்தித்துக் கொண்டு இருந்தாள் . ஆதித் அப்படியே நின்றபடியே அவளை பார்த்தான் .

அங்கு இலங்கையில் பார்த்ததையும் விட அவளது அழகு மெருகேறி இருந்தது . இப்படியொரு பேரழகியா ? அவனால் அவளிடமிருந்து கண்களை நகர்த்தவே முடியாது அப்படியே உற்றுப் பார்த்துகொண்டு இருந்தான் . சஹானாவை அன்று யாழ்ப்பாணத்தில் பார்த்தப் பொழுதே ஒரு தேவதையை பார்ப்பது போலிருந்தாள் . ஆனால் இன்று அதி நாகரீகமாக மாறாவிட்டாலும் வெளிநாடுகளுக்கு ஒத்துப்போகக் கூடியதாக ஜீன்சும் அதற்கு பொருந்தக்கூடிய மென்சிவப்பு நிறத்தில் பிளவுசும் அணிந்திருந்தாள் .

அவளது கூந்தலையும் கொஞ்சம் தளர்வாக விட்டு ஆனால் இடையூறு அளிக்காதவகையில் இருபுறமும் க்ளிப்புகளினால் அழகாக கிளிப் செய்திருந்தாள் .நெற்றியின் நடுவே மிக சிறிய பொட்டு .
அன்று அப்படியே ஒரு யாழ்ப்பாணத்திற்கேற்றவாறு தமிழ் பெண்ணாக வலம் வந்தவள் இன்று இந்நாட்டவருக்கேற்ற விதமாக உடை அணிந்து அப்படியே ஒத்துப்போகக் கூடியதாக இருக்கிறாள் . அவனுக்கு ஒரே மலைப்பாக இருந்தது .

சஹானா சுவாமியை மனதினுள் கும்பிட்டு விட்டு கண்களை திறப்பதை கண்டதும் ஆதித் உடனே அவ்விடத்தை விட்டு அகன்றான் . அன்று அவனுக்கு வெளியே ஒரு வாடிக்கையாளரை சந்திக்க வேண்டி இருந்ததால் தாமதிக்காமல் தனது காரிலேயே அப்பாவிடம் கூறி விட்டு கிளம்பிச் சென்றான் . சஹானா தனது புது வேலை தளத்தின் சுற்றாடலுக்கு பழக்கப்படட்டும் ஆறுதலாக அவளிடம் என்னை அறிமுகப்படுத்துவோம் என ஆதித் தீர்மானித்துக் கொண்டான்.

அடுத்த வந்த இரு நாட்களும் ஆதித்துக்கு வெளியே வாடிக்கையாளர்களை சந்தித்து அவர்களை நிறுவனத்தில் முதலீடு செய்யவதற்க்கு பேச்சு வார்த்தை நடத்த வேண்டி இருந்தது . அவன் அதில் முழுகவனத்தையும் செலுத்தி வெற்றியும் ஈட்டினான் . மிகுந்த மகிழ்ச்சியுடன் இரண்டாவது நாள் மதிய நேரமாக நிறுவனத்துக்கு திரும்பினான் . அப்பாவிற்கு ஒரே பெருமை . தனது மகன் வாடிக்கையாளர்களை தன் பக்கமாக வென்று வெற்றியுடன் திரும்பியது அவருக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்தது .

ஆதித் பசி கிளம்ப நிருவனத்தின் சிற்றுண்டி சாலைக்கு சென்றான் . அங்கு பேர்கேரும் பிரெஞ்ச் ப்ரையிசையும் எடுத்துக்கொண்டு ஒரு ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் இவனைக்கண்ட சாரா தனது உணவை எடுத்துகொண்டு அவன் அருகில் வந்தமர்ந்து அளவளாக தொடங்கினாள் . சாரா மிக கலகலப்பான பெண் . அதித்யும் இயல்பாகவே சுவாரசியமாக உரையாடுபவனாகையால் இருவரும் சேர்ந்து ஒரேயடியாக அரட்டை அடிக்க தொடங்கினர் .

வெற்றியின் களிப்பில் இருந்த ஆதித் நகைச்சுவையாக ஏதோ கூற சாரா மிக பலமாகவே சிரிக்க தொடங்கினாள் . யதுஷனுடன் மதிய உணவை உண்ண வந்த சஹானா இவளது சிரிப்பை கேட்டு இவர்கள் பக்கமாக திரும்பி பார்த்தவள் ஆதித்யை கண்டதும் அதிர்ச்சி அடைந்தாள் . அவளது முகம் அப்படியே உறைந்து போய்விட்டது . ஒருகணம் அவளை அச்சம் ஆட்கொண்டது . ஆனால் மறுகணமே ஆதித் சாராவுடன் குலாவுவதைக்கண்டு அருவருப்பும் கொண்டாள் . யதுஷனிடம் திரும்பி அதோ அங்கு இருக்கும் ஆடவனை கண்டீர்களா ?

ஒரு பொது இடத்தில் இப்படியா அநாகரீகமாகவா நடப்பது . பெண்களை கண்டால் ஒரேயடியாக வழிந்து தள்ளுகிறான் . சீச்சீ பார்க்க அசிங்கமாக இருக்கிறது . வாருங்கள் எமது உணவை எடுத்துக்கொண்டு எமது அறைக்கு சென்று சாப்பிடலாம் அவனை விரைவு படுத்தியவாறே உணவு தட்டுடன் விரைந்தாள் .
அவளுக்கு பின்னால் யதுஷனும் ஆதித் அவனை கூப்பிடுவதையும் பொருட்படுத்தாது சாதுவான எலிப்போல் சென்றான் . ஆதித்க்கு ஒரே ஆச்சரியம் .

ஒரு வேளை தான் கூப்பிட்டது யதுஷனின் காதில் விழவில்லையோ . இருக்கும் இருக்கும் . மீண்டும் சாராவிடம் உரையாட தொடங்கினான் .
முதல் கோணல் முற்றும் கோணல் என்பது ஆதித்க்கு சரியாக அமைந்து விட்டது . சஹானாவுடனான முதல் சந்திப்பு பிழையாகி போனதிலிருந்து ஒவ்வொருமுறையும் அவர்களுக்கிடையான சந்திப்புக்கள் ஏதோ முறையில் தொடர்ந்து பிழையாக போவது வழக்கமாகவே போய்விட்டது இவர்களுக்கு .
அடுத்த ஞாயிறு தொடரும் .... மீரா குகன்

https://www.youtube.com/watch?v=aSV6IX7MwdU

கதையை நகர்த்திய விதம் மிக அருமை... தொடருங்கள் வாசிக்க மிக ஆவல் நண்பி !! :)

  • கருத்துக்கள உறவுகள்

சான் ஏறினால் முழம் சறுக்குது...!  ஆதித்துக்கு ஆதியும் சரியில்லை , அந்தம் எப்படியோ...!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதையை நகர்த்திய விதம் மிக அருமை... தொடருங்கள் வாசிக்க மிக ஆவல் நண்பி !! :)

mikavum nandriyada

 

ஒரு பொய்யாவது சொல் என் கண்ணே (தொடர்கதை) அத்தியாயம் 8
Chapter 8
ஆதித் உணவை முடித்துக்கொண்டு சாராவுடன் கதைத்தபடியே மீண்டும் தன் அறைக்கு செல்கையில் சஹானா யதுஷனுடன் கதைத்தபடியே உணவை பகிர்வதைக் கண்டான் . "அட இப்பொழுது எப்படி போய் அவளை குழப்புவது ? சரி நாளையாவது பார்ப்போம்" மனதிற்குள் நினைத்தபடியே சாராவுடன் இணைந்து சென்றான் . ஏதோ அரவம் கேட்டு நிமிர்ந்த சஹானா ஆதித் சாராவுடன் கதைத்தபடியே செல்வதைகண்டதும் மீண்டும் அவள் முகம் சுருங்கியது .
அடுத்த நாள் ஆதித் கதைத்து முடித்திருந்த அந்த வாடிக்கையாlளர் முதலீடு செய்வதற்கு வருவதாக இருந்தது . அவரை வரவேற்கும் பொறுப்பை யதுஷன் மூலமாக சஹானாவிடம் ஒப்படைத்திருந்தான் ஆதித். மற்றைய பொறுப்புகளை தானே முன்னின்று செய்தான் . நிறுவனத்தில் எல்லோரும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தனர் . ஆதித் யதுஷனிடம் வந்து நான் தயாரிக்க கொடுத்த பத்திரங்கள் எல்லாம் தயார் நிலையில் இருக்கிறதா? என்று கேட்க அவனோ" நான் சஹானாவிடம் தயார்படுத்த கூறி இருந்தேன் . இதோ போய் எடுத்து வருகிறேன்" என்று சென்றான் .

சஹானாவை தேடிச் சென்றால் அவள் இருக்கையில் இல்லை . ஆனால் பத்திரங்கள் எல்லாம் தயார் நிலையில் அவளது மேசையில் காணப்பட்டன . யதுஷன் அவற்றை எடுத்துப் பார்த்தான் .எல்லாம் சரியாகத் தான் தயாரிக்கப்படிருந்தது . "சரி எதுக்கும் இப்பத்திரங்களின் பிரதி ஒன்றும் எடுத்து வைத்தால் நன்று, அங்கிளிடமும் நல்ல பெயர் எடுக்கலாம்" என நினைத்தபடியே நகல் எடுக்கும் இயந்திரம் அருகே சென்றான் . அங்கு நிர்வாக ஊழியர் ஒருவர் அவருக்கு தேவையான கடிதங்களின் பிரதிகளை எடுத்துக்கொண்டு இருந்தார் . "சரி நான் தொலைநகல் அனுப்பும் இடத்திலேயே எடுப்போம்" என்று அங்கு சென்று முயற்சிக்க சஹானா தயார் செய்து வைத்திருந்த அப்பத்திரம் அதற்குள் அப்படியே சிக்கிக் கொண்டது . யதுஷனுக்கு என்ன செய்வது என்று தெரியாது முழித்தான்.
சஹானா மிகவும் கஷ்டப்பட்டு இவற்றை தயாரித்திருந்தாள் என்பது அவனுக்கு தெரியும் . தான் அதை நாசமாக்கி விட்டேனே என்று குற்ற உணர்வு அவனை ஆட்கொண்டது . சஹானா இவ்விபரங்களை தனது கணனியில் பதிவு செய்யவில்லை என்றும் அவள் குறிப்பிட்திருந்தாள் . இதுவும் ஒரு காரணம் யதுஷன் பிரதி ஒன்றை எடுத்து வைக்க முயன்றது . மெதுவாக மிகுதி பத்திரத்தை எடுத்துகொண்டு வந்து சஹானாவின் மேசையில் வைத்து விட்டு அவ்விடத்தை விட்டு அகன்றான் . தனது அறைக்கு சென்று இப்பொழுது என்ன செய்யலாம் என்று இருக்கையில் இருந்தவாறே யோசித்தான் .
இதே சமயம் ஆதித் எல்லா ஆயத்தங்களையும் செய்துவிட்டு ஒப்பந்த மற்றும் முதலீட்டு பத்திரங்களை தயார் நிலையில் வைப்பதற்காக சஹானாவை தேடி வந்தான். அவளோ அங்கு இல்லாததை கண்டு சுற்றும் முற்றும் பார்த்தான் . அவனது கண்கள் தானாக மேசையிலிருந்த கடிதங்களை நோக்கியது . " இது என்ன ? ஒரு பக்கம் கிழிந்த நிலையில் இருப்பது ஒப்பந்த பத்திரமா "? ஆதித் அதை கையில் எடுத்துப் பார்த்தான் . அது நிறுவனத்திற்கும் அந்த வாடிக்கையாளருக்குமிடையிலான ஒப்பந்த பத்திரமே தான் .

" ஏய், என்ன செய்கிறாய் இங்கே ? உன்னை யார் இந்த நிறுவனத்தினுள் நுழைய விட்டது ? ஓஹோ பாவம் அந்த சாராவை ஏமாற்றி உள்ளே நுழைந்து விட்டாய் போலும். என்ன உனது கையில் இருப்பது ? இது நான் தயாரித்த பத்திரம் அல்லவா ? உனக்கு என்ன தைரியம் இருந்தால் நான் தயாரித்து வைத்திருந்த இந்த முக்கிய பத்திரத்தை எடுத்து கிழித்திருப்பாய் ? உன்னை உள்ளே விட்டிருக்கவே கூடாது . நான் நேற்றே யதுஷனிடம் உன்னைப் பற்றி கூறி அவதானமாக இருக்க எச்சரித்தேன் . ஆனால் பாவம் அவன் . எல்லோரையும் நல்லவர் என்று எண்ணும் ஏமாளி. உடனே உன்னை வெளியேற்றினால் தான் சரி . யதுஷன் ஒரு முக்கிய வாடிக்கையாளரை எதிர்ப்பார்த்திருக்கிற நேரம் இது . ஆகவே தயவு செய்து உடனே வெளியேறி விடு, இல்லை என்றால் இதோ அந்த காவலாளிகளை கூப்பிட்டு வெளியேற்றுவேன்" என்று முகம் கோபத்தில் சிவந்த நிலையில் சஹானா ஒரேயடியாக பொரிந்து தள்ளினாள் .

ஆதித் இவளது கோபத்தைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தான் . " நான் யார் என்று இவளுக்கு தெரியாது போலும்" . ஆதித் ஒன்றுமே கூறாது மௌனமாக தன் அறைக்கு திரும்பி வந்தான் . சஹானா தன்னிடம் மிகுந்த கோபம் கொண்டுள்ளாள் . அவனது வாழ்வில் இன்று இரண்டாவது முறையாக ஒரு பெண்ணினால் அதுவும் அதே பெண்ணினால் அநியாயமாக தாறுமாறாக கத்தலை கேட்க வேண்டியதாகி விட்டது . அன்று யாழ்ப்பாணத்தில் சஹானாவின் கோபத்தைக் கொஞ்சமும் பொருட்படுத்தாது வீடு திரும்பியவுடன் மறந்த ஆதித்க்கு இன்று ஏனோ மனதில் வலித்தது . தான் கெட்டவன் இல்லை என்பதை அவளுக்கு எடுத்து உரைக்கவேண்டும் போல் இருந்தது . அவளைச் சமாதானப்படுத்த இது தருணம் இல்லை என்பதை உணர்ந்தான் . அதற்குள் சாரா அவன் அறையை தட்டி விட்டு அவர்கள் எதிர்ப்பார்த்த வாடிக்கையாளர்களின் வருகையை கூற ஆதித் அவர்களை வரவேற்பதற்காக உடனே விரைந்தான் .
அக்கிழமை வழமை போல் எல்லோரும் தம்தம் வேளைகளில் மூழ்கி இருந்தனர் . ஆதித்க்கும் அதற்குப் பின் சஹானாவை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை . அவள் வேண்டுமென்றே தன்னை புறக்கணிக்கிறாள் என்பதை அவன் லேசாக புரிந்துக்கொண்டான் . அவளது ஆத்திரம் ஆற சிறிது காலம் அவகாசம் கொடுத்துவிட்டு சாவகாசமாக தன்னைப்பற்றி எடுத்துக் கூறுவோம் என்று தீர்மானித்துக் கொண்டான் . "சஹானா யதுஷனிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவதினால் அவனிடமே தன்னைப்பற்றி எடுத்துக் கூறுமாறு கேட்டுவிடுவோம் . அவன் எப்படியும் எனக்காக இதை கட்டாயம் செய்வான்" ஆதித் திருப்தியுடன் தன் அலுவல்களில் ஈடுபட்டான் .
இப்படி இருக்கையிலே தான் ஆதித்யின் அப்பா ஒரு நாள் யதுஷனை கூப்பிட்டு வெளி வேலையை கவனிக்க சாராவுடன் அனுப்பிவிட்டு ஆதித்யையும் சஹானாவையும் தன் அறைக்கு அழைத்தார் . சஹானா ஒன்றும் புரியாமல் அவர் அறைக்கு சென்ற பொழுது அங்கு நின்ற ஆதித்தை கண்டதும் முகத்தை சுளித்தாள் . ஆதித்க்கு இவளின் முகச்சுளிப்பை கண்டதும் ஒரே ஏமாற்றமாக போய் விட்டது . இவர்களின் உணர்ச்சி மாறுதல்களை கவனியாத அப்பா இருவரையும் இருக்கையில் அமரச்சொல்லி விட்டு பேசத்தொடங்கினார் .

ஆதித்தை நோக்கி "இன்று நான் எனது நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர்களுடனும் வேறும் சில புதிய வாடிக்கையாளர்களையும் அழைத்திருக்கிறேன் . அவர்கள் எல்லோருக்கும் எமது நிறுவனத்தில் கொண்டு வரப்படுகிற மாற்றங்களை பற்றியும் எமது வருங்கால திட்டங்களையும் உரைக்க வேண்டியது எமது பொறுப்பு . ஆகவே இன்றைய கூட்டத்தை நீ தலைமை தாங்கி நடத்த வேண்டும் . அவர்களுக்கு விரிவாகவும் விளக்கமாகவும் உனது யோசனைகளை முன் வைத்து அவர்கள் அபிப்பிராயங்களை கேட்டு நடப்பது எமது கடமை . அத்துடன் அவர்கள் எல்லோருடனும் நாம் ஒரு நல்ல சுமூகமான உறவை வைத்திருப்பதனால் வேறும் புதிய வாடிக்கையாளர்களை வெல்லுவதும் சுலபம் .

ஆகவே ஆதித் நீ இப்பொறுப்பை சிறப்பாக செய்வாய் என நம்புகிறேன் . உனக்கு உதவியாக சஹானாவை நியமிக்கிறேன் . நீங்கள் இருவரும் இணைந்து வெற்றிகரமாக நடாத்த எனது வாழ்த்துக்கள்" என்று கூறி முடித்தார் . ஆதித் சஹானாவை நோக்கினான் . சஹானாவோ இவனை முறைத்தபடி பார்த்துக்கொண்டு இருந்ததாள் . ஆதித் சுதாகரித்தபடியே அப்பாவை நோக்கி " நீங்கள் நிம்மதியாக இருங்கள் . நாம் இருவரும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறோம் . வா சஹானா நேரே கருத்தரங்கு நடைபெறும் மண்டபத்துக்கு சென்று ஏற்பாடுகளை கவனிப்போம்" எனக் கூறியபடியே அறையை விட்டு வெளியேறினான் ,
வெற்றிகரமாக ஆதித் தனது உரையை முடித்தான் . அங்கு கூடியிருந்தவரது கரகோஷம் பலமாக இருந்தது . ஆதித் விளக்கமாக நிறுவனத்தின் புதிய திட்டங்களை முன் வைத்தான் . என்னென்ன மாற்றங்களை கொண்டு வர தான் உத்தேசித்திருப்பதை அவர்களிடம் எடுத்துரைத்தபோது எல்லோரும் ஒரே குரலில் வரவேற்றனர் . அப்பாவிற்கு தன் மகனை பார்க்க மிகவும் பெருமிதமாக இருந்தது . எப்படி இவன் ஒரு ஆற்றல் மிக்க தலைவனாக மாற்றம் பெற்றான் ? புதிய யுக்திகளை கொண்டு நிறுவனத்தை மேலும் சிறப்பாக அல்லவா நடாத்த முற்படுகிறான். மகனை தந்தை மனதினுள் மனமார மெச்சினார் .
வந்திருந்தவர்கள் ஒருவர் மாறி ஒருவராக ஆதித்தை பாராட்டி விட்டு விடைபெற்று சென்றனர் . ஆனால் சஹானாவினால் மட்டும் இக்காட்சியை ஜீரணிக்க முடியாது தவித்தாள் . போயும் போயும் இவனை எல்லோரும் பாராட்டுகிறார்களே ? ஒரு கணம் யோசித்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள் . ஆதித் அங்கு இல்லை , தனது அறைக்கு போயிருக்க வேண்டும் . அவளும் அதித்யின் அறைக்கு சென்று கதவை தட்டி உள்ளே வரலாமா ? என்று கேட்டாள் . வரலாமே என்று கூறிவிட்டு நிமிர்ந்தவன் சஹானா நிற்பதை கண்டதும் திகைத்தான் ஆதித் . முதல் முறை தனது அறைக்கு இவள் வருகிறாள் . தன்னை அறியாமலே மனதில் உற்சாகம் அவனை தொற்றிக் கொண்டது . " ஓஹோ இவளும் என்னை பாராட்ட தான் வருகிறாள் . இது தான் சரியான சந்தர்ப்பம் . அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு நான் யார் என்பதையும் கூறி விடலாம் .

சஹானா வா வா , இதோ இக்கதிரையில் நீ உட்காரலாம்" என்று புன்சிரிப்புடன் உபசரித்தான் . சஹானா வெடுக்கென்று " நான் ஒன்றும் இங்கு உட்கார வரவில்லை . யதுஷனின் பொறுப்பை தட்டி பறித்துவிட்டு அவன் தயார் செய்து வைத்திருந்த யோசனைகளையும் உனது யோசனை போல் எல்லோருக்கும் கூறுவது எவ்வளவு தவறு . உனக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா ? எப்படி எல்லாம் திட்டம் தீட்டி யதுஷனை உரிய நேரத்தில் வெளியேற்றி விட்டாய் . எமது நிறுவனத்தின் தலைவர் திரு .ராகவனிடம் எதையோ கூறி அவரையும் ஏமாற்றி யதுஷன் முன்னின்று தலைமை தாங்க வேண்டிய இந்த கூட்டத்தை உனது சூழ்ச்சியினால் கை மாறி உன்னிடம் வந்து விட்டது .

நீ மற்றவரை ஏமாற்றினாலும் உனது சுயரூபம் எனக்கு தெரியும் . ஆகவே இனி உனது வாலை யதுஷனிடம் காட்டாது கொஞ்சம் விலகியே இரு என்று எச்சரித்து விட்டு போகவே வந்தேன் " . அவனது பதிலுக்கும் காத்திராது மிகுந்த சினத்துடன் வெளியேறினாள் . ஆதித் அப்படியே அவனது இருக்கையில் தொப்பென்று விழுந்தான் . " ஏன் சஹானா என்னை இப்படி வெறுக்கிறாள் . அங்கு சுவிஸ் நாட்டில் ஏதோ விளையாட்டுக்காக செய்தது வினையில் முடிந்தது உண்மை தான் . அதற்காக தான் இவளிடம் எப்படியும் மன்னிப்பு கேட்கலாம் என்றால் இவள் கொஞ்சமேனும் இடம் கொடுக்கிறாள் இல்லை . என்னை தவறாகவே நோக்கிறாள் " . கொஞ்சம் முன்னர் சந்தித்த வெற்றியின் களிப்பு அவனிடமிருந்து முற்றாகவே அகர்ந்தது . சஹானா தன்னைபற்றிக்கொண்டுள்ள அபிப்பிராயத்தை எப்படியும் மாற்றி அவள் மனதை எப்படியும் வெல்லுவது என்பது ஒரு சவாலாகவே ஆகி விட்டது அதித் இச்சவாலில் அவன் வெற்றியீட்டும் வரை அவன் ஓயப்போவதும் இல்லை .

அடுத்தவாரம் தொடரும் .........
மீரா குகன்

https://www.youtube.com/watch?v=AvDO_0sSlBo

http://www.meeraspage.com/my-novel/

சான் ஏறினால் முழம் சறுக்குது...!  ஆதித்துக்கு ஆதியும் சரியில்லை , அந்தம் எப்படியோ...!

பாவமாக தான் இருக்கு ஆதித் பார்க்க . என்ன செய்வது suvy . நன்றி மெனகெட்டு வாசிக்கிறதுக்கு

தொடருங்கள் நண்பி!! :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.