Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000...?????


Recommended Posts

பதியப்பட்டது

:P திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர்

ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார்.

நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன.

முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர்கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகியோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன.

திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப்பேற்றுள்ளார். இம்மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்க இலக்கு நிர்ணயித்துள்ளனர.

திரிஷா படங்கள் ரிலீசாகும் போது அவர் ரசிகர்கள் தியேட்டர்களில் கட்அவுட், கொடி தோரணங்கள் அமைத்து அமர்க்களப்படுத்தி வருகிறார்கள். திரிஷா பிறந்த நாளில் அடையாறு புற்று நோய் ஆஸ்பத்திரியில் குழந்தை களுக்கு உணவு, உடைகள் வழங்குவதையும் வழக்க மாக வைத்துள்ளனர்.

திரிஷா தற்போது தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவருக்கு ஆந்திர அரசின் நந்தி விருது கிடைத்துள்ளது. தமிழில் சாமி, கில்லி படங்கள் அவரை முன்னணி நடிகையாக்கின. ஜெயம் ரவியுடன நடித்த உனக்கும் எனக்கும் படம் ரிலீசாகி 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது.

நமீதா ஏய் கோவை பிரதர்ஸ் பச்சக்குதிர உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். சமூக சேவைகளில ஈடுபாடுள்ள அவர் அவ்வப் போது குடிசைப் பகுதிகளுக்கு சென்று ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார்.

நமீதாவுக்கு முதன்முதலாக செல்வம் என்பவர் ரசிகர் மன்றத்தை தொடங்கினார். தற்போது இவர் நமீதா ரசிகர் மன்றங்களின் அகில இந்திய தலைவராகி உள்ளார்.

சென்னையில் நமீதாவுக்கு 50 ரசிகர் மன்றங்கள் உள்ளன. இவற்றில் 3000 பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள் ளனர். இவர்களில் பெரும் பாலானோர் கல்லூரி மாணவிகள். நமீதா ரசிகர் மன்றமும் சமூக சேவை பணிகளில் தீவிரமாக களம் இறங்கி உள்ளது.

முதல்கட்டமாக 20 ஆயிரம் பேரை மன்றத்தில் உறுப்பினராக்க முடிவு செய்துள்ளனர். :lol:

விடுப்பு : Viduppu.com

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நடிப்பவர்களுக்கு மட்டுந்தானா ரசிகர் மன்றம் வைப்பாங்க

Posted

நீங்க கொஞ்சம் காசு தந்தா உங்களுக்கும் ஒன்ரு வச்சிட்டா போச்சு, வசதி எப்படி? B) B) B)

Posted

நடிப்பவர்களுக்கு மட்டுந்தானா ரசிகர் மன்றம் வைப்பாங்க

குளிச்சதை வீடியோ எடுத்து காட்டினாலும் ரசிகர் மன்றம் வைப்பாங்களோ தெரியா :P :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் யாருக்கு ரசிகர் மன்றம் என்று ஒரு விவஷ்தையே இல்லாமல் போய்விட்டது.இவர்களுடைய திறமையில் கோயில் குளம் கோபுரம் என்று கட்ட வெளிக்கிட்டு விடுவார்கள்.சினிமாபோதை மது போதையில் அடிமைப்பட்டுவிட்டர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
    • இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
    • அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.  
    • ரணிலுக்கு சுமன்… அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே. புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.