Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண அமைச்சு செயலர்களிற்கு மீண்டும் இடமாற்றம்!

Featured Replies

அரசியல் சர்ச்சைகளால் இடைநிறுத்தப்பட்ட வடக்கு மாகாண சபையின்  செயலாளர் உட்பட அமைச்சுக்களின்  செயலாளர்களுக்கான இடமாற்றம் மீண்டும் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.   

 கடந்த ஏப்ரல் முதலாம் திகதி  முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வடக்கு மாகாண அமைச்சுக்களின்  செயலாளர்களுக்கு இடமாற்றங்கள் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும்  ஆளுநர் பளிகக்காரவின் உத்தரவிற்கு அமைய இடமாற்றங்கள் இடை நிறுத்தி  வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையினில்   மீண்டும் எதிர்வரும் 27ஆம்  திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்படவுள்ளது.  அதற்கமைய வடக்கு மாகாண சுகாதார அமைச்சின்  செயலாளராக கடமையாற்றிய இ. ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும், கல்வி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய எஸ். சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின்  செயலாளராகவும் , மீன்பிடி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ. வரகதீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சின்  செயலாளராகவும் , உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சி.திருவாகரன்  சுகாதார அமைச்சின்  செயலாளராகவும்  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 இதேவேளை வடக்கு மாகாண சபையின் செயலாளராக கடமையாற்றிய சிவபாதசுந்தரம் பயிற்சி ஒன்றிற்கு செல்லவுள்ளதால் அவருடைய இடத்தை நிரப்புவதற்கு உள்ளூராட்சி ஆணையாளராக பணியாற்றிய ஜெகு மாகாண சபையின்  செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   அதற்கமைய எதிர்வரும் 27ஆம்  திகதி நடைமுறைக்கு வரும் வகையில் அனைவரும்  கடமைகளை பொறுப்பேற்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் முறையற்ற விதத்தினில் தனது அமைச்சு செயலாளராக பற்றிக் ரஞ்சன் என்பவரை நியமித்ததையடுத்து ஏற்பட்ட குழப்பத்தால் இவ்விடமாற்றம் முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.pathivu.com/news/39298/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.