Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுன்னாகம்;தகிக்கும் தண்ணீர் : ஆவணப்படம் (முழுமையான வீடியோ இணைப்பு)

Featured Replies

muraly-f878787-copy-300x168.jpg

 

யாழ். சுன்னாகம் பகுதியின்  கிணறுகளில் கழிவு ஒயில் கலந்தமை தொடர்பிலான ஆவணப்படம் ஒன்று வெளியடப்பட்டுள்ளது. ‘சுன்னாகம்;தகிக்கும் தண்ணீர்’  என்ற இந்த ஆவணப்படத்தை ஊடகவியலாளர் ஜெரா இயக்கியுள்ளார்.   இந்தப்பட வெளியீடு நேற்றுமுன்தினம் சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் மணிமண்டபத்தில் இடம்பெற்றது.
 
இந்த வெளியீட்டு நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் எனப் பலதரப்பினரும் கலந்துகொண்டனர். இதில் கலந்துகோண்டு சிறப்புரை வழங்கிய மருத்துவரும், யாழ். மருத்துவ சங்கத்தின் தலைவருமான முரளி வல்லிபுரநாதன்,
 
வலிகாமத்தில் உள்ள கிணறுகளில் கழிவு ஒயில் கலப்பது சம்பந்தமாக நாம் பல்வேறு தரப்பினரதும் கவனத்துக்குக் கொண்டுவந்திருந்தோம். இதுகுறித்து வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் அறிவித்தோம். அத்துடன் அவரை நேரடியாகச் சந்தித்து கலந்துரையாடவும் நேரம் கேட்டு கடிதம் எழுதியிருந்தோம். நாம் கடிதம் அனுப்பி பல மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி நேரம் ஒதுக்குவதாக முதலமைச்சரின் செயலாளர் எமக்கு அறிவித்தார். ஆனால் நாம் இந்திய பிரதமர் வரும் நிலையில் இது சாத்தியப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது, அது சாத்தியப்படும் என செயலாளர் தொவித்தார். இறுதி நிமிடத்தில் அந்தச் சந்திப்பையும் ரத்து செய்தனர். நாம் இன்றுவரை இந்தக் கலந்துரையாடலுக்கான நேரம் ஒதுக்கி தரப்படும் என எதிர்பார்த்து இருக்கின்றோம்.- என்றார்.
 
11140122_10152692174171949_1290815104669
 
11146231_10152692174196949_7361823341145
 
நிகழ்வில் தொடர்ந்தும் சிறப்புரையாற்றிய களனி பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளர் வைத்திய கலாநிதி. பாலச்சந்திரன் குமரேந்திரன், நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலந்துள்ளமை சம்பந்தமான ஆய்வினை, வெளிநாட்டில் உள்ள முன் அனுபவம் வாய்ந்தவர்களைக் கொண்டு மேற்கொள்வதன் ஊடாகவே முழுமைப்படுத்த முடியும். தற்போது வட மாகாண சபையால் நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் ஒன்பது பேரில் யாருக்கும் நீரியல் நிபுணத்துவம் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே இந்தக் குழு குறித்து மறு பரிசீலனை செய்வதுடன், இவர்களுடன் முன் அனுபவம் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களையும் இணைப்பதன் மூலம் நம்பகமான ஆய்வை செய்யமுடியும். அத்துடன் இங்குள்ளவர்களுக்கும் அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்க முடியும்.- என்றார்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.