Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பார்ப்பனீயம் இன்னும் இருக்கிறதா?

Featured Replies

பார்ப்பனீயம் இன்னும் இருக்கிறதா?

காலைச் சுற்றும் பார்ப்பனீய பாம்புகள்!!

நான் பொழுது போகாமல் இருக்கும் சமயங்களில் என் அறைத் தோழன் அனந்த கிருஷ்ணனுடன் அரட்டை அடிப்பதுண்டு.. வேறென்ன எப்போதாவது UNIX LINUX என்று போகும் எங்கள் உரையாடல் பெறும்பாலான நேரங்களில் அரசியலுக்குள் புகுந்து விடுவதுண்டு.. என் நன்பன் கடுமையான சனாதனி ( ஹிஹி நம்ம கூட சேர்ந்த பின்னாடி இப்ப தம்மடிக்க ஆரம்பிச்சுட்டான்) ஏதாவது விரதம் சந்தியா வந்தனம் காயத்திரி என்று கரடி விட்டுக் கொண்டிருப்பான். நேற்று அவனுடன் பார்ப்பனீயம் பற்றி கொஞ்சம் சூடான விவாதம் ஒன்று ஏற்பட்டது அதில் அவன் முன் வைத்த சில கேள்விகளும் அதற்கு நான் சொன்ன பதில்களும் கொஞ்சம் சுவையானது அது மட்டுமல்ல பொதுவாகவே பார்ப்பனீய பண்பாட்டு ஆக்கிரமிப்பை எதிர்க்கும் எவரும் ஆரம்பத்தில் எதிர் கொள்ளும் கேள்விகளே அவை. இப்போது வேறு தமிழ்மணத்தில் இது தானே டிரெண்டு... எனவே எங்கள் விவாதத்தையே ஒரு பதிவாக்கி விட்டேன் ( ofcourse with the permission of my friend) ..

இனி... Over to - AK (அனந்த கிருஷ்ணன்) & RV (ராஜாவனஜ்)

_____________________________________________________________________

AK : வர்க்கபேதமற்ற, சாதிபேதமற்ற சமுதாயம் வேண்டும் என்று சொல்லும் பொதுவுடைமைவாதிகளான நீங்கள் ஏன் குறிப்பிட்டு பிராமண சாதியை மட்டும் எதிர்க்கிறீர்கள்?

RV : இல்லை பார்ப்பனர்களை மட்டும் எதிர்க்கவில்லை. இன்னும் பார்ப்பனீய ஸ்ம்ருதிகளின் அடிப்படையில் இன்று நிலவும் எல்லா உயர் சாதி ஒடுக்குமுறைகளையும் சேர்த்தே தான் எதிர்க்கிறோம். மேலும் இந்திய சமூக அமைப்பில் வர்க்கம் என்பது சாதி அடுக்குகளுடன் பின்னிப் பினைந்தே இருக்கிறது. வேலை அடிப்படையில் பிரிக்கப் பட்டிருந்த வர்ணங்கள் இப்போது பல்வேறு சாதிகளாக பிளவு பட்டு நிற்கிறது. பார்ப்பனீயம் தெளிவாக பல்வேறு வேதங்கள் மூலமும் ஸ்ம்ருதிகள் மூலமும் சொல்வதை சுருக்கமாக சொல்வதானால் - “நீ ஒருவனை அடிமைப் படுத்திக் கொள். நீயும் எனக்கு அடிமையாக இரு” என்பதே. இந்தியாவின் மக்கள் தொகையில் பெரும் எண்ணிக்கை கொண்ட தலித்துகள் தான் விவசாயக் கூலிகளாகவும் மற்றவர்களால் கேவலம் ஒதுக்கப் பட்ட இன்னபிற வேலைகளை செய்து வருகிறார்கள். இடைச்சாதிகளிலும் உற்று நோக்கினால் உட்பிரிவுகளில் உயர்ந்தோரிடமே மதிப்புடன் தொழில் செய்யும் அளவிற்கு பணவசதியும் தொழிற் சாலைகளில் உயர் வேலை பெறும் அளவிற்கு கல்வி பெறும் வசதியுமுள்ளது. உம்மால் தேடிக் கண்டுபிடித்து அங்கொன்றும் இங்கொன்றுமான விதிவிலக்குகளைத் தான் இதற்கு மாற்றாக காட்ட முடியும். எனவே பார்ப்பன சாதியை மட்டும் எதிர்க்கிறோம் என்பது திரிபுவாதம். நாங்கள் பார்ப்பனீயத்தை தாங்கிப் பிடிக்கும் எல்லா உயர்சாதி ஒடுக்குமுறையாளர்களையும் சேர்ந்தே எதிர்க்கிறோம்.

AK : அது என்ன பார்ப்பனீயம்?

RV : Simple... காந்தி முன்வைத்த சித்தாந்தம், கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றைத் தொகுத்து காந்தீயம் என்று சொல்கிறோம். இதை நடைமுறை படுத்துவோரை காந்தியவாதி என்கிறோம். அவர்கள் எந்த சாதி, இனம், மொழி, நாடு அல்லது வேறு வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை காந்தியவாதிகள் என்கிறோம். இன்றைக்கு ‘இந்து’ என்று வெளிநாட்டுக்காரனால் நாமகரணம் சூட்டப் பட்டுள்ள இந்த மதம், முன்னர் வேத மதம், வைதீக மதம் என்று அழைக்கப்பட்டது. இதன் சித்தாந்த தலைவர்களாக விதிமுறைகளை வரையறுப்போராக இருந்தவர்கள் பார்ப்பனர்கள். மேலும் அவ்வாறான உரிமை இறைவனால் தங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லிக் கொண்டார்கள். அதை உறுதிப்படுத்திக் கொள்ளும் விதமாக பல்வேறு நூல்களை வேறு எவரும் படிக்க வாய்ப்பளிக்கப் படாத மொழியில் எழுதி வைத்துக் கொண்டனர். மீறி சூத்திர சாதிக்காரன் (அதாவது உழைக்கும் மக்கள்) கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்றும் படித்தால் நாக்கை அறுக்க வேண்டும் என்றும் திமிருடன் நடந்து கொண்டவர்கள் பார்பனர்கள்.

இந்த வேதங்கள், மனுதர்மம், நாரத சம்ஹிதை போன்ற குப்பைகளின் அடிப்படையில் நிலவுகின்ற இறை சித்தாந்தம், பண்பாடு, வாழ்க்கை முறைகள், ஆகிய அனைத்தையும் சேர்த்து பார்ப்பனீயம் என்று வரையறுக்கிறோம். ஏனென்றால், இதன் சித்தாந்த படைப்பாளியாக ஏகபோக உரிமை கொண்டிருந்தவர்கள், பார்ப்பனர்களே. எனவே இதை பார்ப்பனீயம் என்பதே சரியான பதம். இந்த கொள்கையை ஏற்றுக் கொண்டு நடைமுறையில் கடைபிடிப்பவர்கள் எவரையும் - அவர்கள் சூத்திர/ தலித் சாதியினராக இருந்தாலும் சரி - அவர்களையும் பார்ப்பனீயவாதிகள் என்று அழைக்கிறோம்.

சரி பிறப்பால் பார்ப்பனராய் இருந்து மேற் சொன்ன கொள்கைகளை தூக்கியெரிந்து விட்டு வாழ்கின்றவர்களை பற்றி எமது கருத்தென்ன? அவர்களை நாங்கள் பார்ப்பனராய் பார்ப்பதில்லை!

AV : நீங்கள் சொல்வது போல் இப்போதும் பார்ப்பனர்கள் செல்வாக்குடன் தான் இருக்கிறார்களா? இல்லையே.. நீங்கள் மக்களை ஏமாற்றத் தானே ‘பார்ப்பன பூச்சாண்டி’ காட்டுகிறீர்கள்...

RV : இல்லை!! பெரியாரும் அம்பேத்கரும் அதிகாரத்துடன் பார்ப்பனர்களுக்கும் இந்த சித்தாந்தத்தை தலையில் சுமந்தவர்களுக்கும் இருந்து வந்த செல்வாக்கை கட்டுடைத்த பின்னர் இப்போது முன் போல் நேரடியாக வெளிப்படையாக உங்களால் ஏமாற்ற முடிவதில்லை என்பது உண்மையே. ஆனால் subtleஆக இன்னும் நுண்ணியமான தளங்களில் உங்கள் பண்பாட்டு, சித்தாந்த சொருகல் நீடிக்கிறது. எப்படி?? பார்ப்போம்,

கல்யாணம் முதல் கருமாதி வரை சடங்கு என்ற பெயரில் எமது உழைக்கும் மக்களுக்குப் புரியாத மொழியில் உளறிக்கொட்டி காசு பார்ப்பது பார்ப்பனர்கள். இது சாதாரணமாக வெளியே இருந்து பார்த்தால் நமது இகலோக நலத்திற்கும் பரலோக முக்திக்கும் சாமியிடம் புரோக்கர் வேலை பார்த்ததிற்கு கமிசன் என்று மட்டும் புரியும்.. ஆனால் இது சராசரி மக்களின் உளுணர்வு தளத்தில் ‘இந்த மந்திரம் சொல்கிற பார்ப்பான்’ ஏதோ சராசரிக்கு மேல் உள்ளவனோ என்கிற பிம்பத்தை ஏற்படுத்துகிறது.. புரோகிதத்தில் கிடைக்கும் காசு கம்மி தான் . எல்லா பார்ப்பனரும் புரோகிதத்தில் ஈடுபடுவதில்லை . மிகச்சிறிய அளவில் தான் ஈடுபடுகின்றனர் என்பதும் உண்மையே ஆனால் இந்த புனித பிம்பம் மொத்த பார்ப்பனர்களின் மேலும் விரிகிறது.

இப்போதும் பெரும்பாலான சினிமாக்களில் மகா உத்தமர்களாக மகா அப்பாவிகளாக காட்டப் படும் பார்ப்பன கதாபாத்திரங்கள். ஏன் சினிமா தானே என்று விட்டுவிட முடியாது. பார்வையாளன் மனதின் உளுணர்வில் அவனை அறியாமல் ‘அய்யிருங்க பாவம் ரொம்ப நல்லவங்க’ என்று எழுதுகிறது அந்தக் காட்சிகள். சாதிப் பிரச்சினைக்கு “தீர்வு” சொல்லும் படங்கள் கூட எங்கே துவங்கியது சாதி? எது இந்த பிரச்சினையின் மூலம் என்று கேட்பதில்லை.

உழைக்கும் மக்களின் வரிப்பணத்தில் செத்த பாஷையை அரசு வளர்க்கிறது. எதிர்த்துக் கேட்க எந்த ஓட்டுக் கட்சியாலும் முடியாது . செயலலிதா ‘ஆலய பாதுகாப்பு நிதி’ என்று அறிவிக்கிறார் - உடனே தொழிலதிபர்கள், நடிகர்கள், சாராய முதலைகள் என்று காணிக்கை செலுத்த முண்டியடிக்கிறார்கள்.. இது மதச்சார்பற்ற அரசாயிற்றே இப்படிச் செய்யலாமா என்று கோர்டுக்குப் போனால் - இல்லை, வேதம் நமக்குப் பொதுவானது. கோயில் இந்து மதத்திற்கு மட்டும் உரியதல்ல; அவை நமது பண்பாட்டுச் சின்னங்கள் என்கிறது சென்னை உயர்நீதி மன்றம். யார் செல்வாக்கிழந்தது??

முதல் நாள் செயலலிதா ஊத்தைவாயன் காம கேடி செயேந்திரனைப் பார்க்கப் போகிறார். இருவரும் சமமான நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல் நாளிதழ்களில் படம் வருகிறது. இரண்டாம் நாள் நாட்டின் சனாதிபதியே பார்க்கப் போகிறார்; அவர் செயேந்திரன் முன் கைகட்டி நிற்பது போல் நாளிதழ்களில் படம் வருகிறது. இரண்டையும் பார்க்கும் பாமரன் மனதில் என்ன பதியும்?

அண்ணா “திராவிட” முன்னேற்ற கழகத்தின் தலைவி; மான்புமிகு முதல்வர் - ‘நான் பாப்பாத்தி தான்’ என்று சட்டமன்றத்திலேயே அறிவிக்கிறார்... ‘என்ன சொன்னாலும் இது நம்மவா ஆட்சி’ என்று தமிழக பிராமணர் சங்கம் புளகாங்கிதப் பட்டுக் கொள்கிறது... ·

கொலை செய்து மாட்டினான் பெரிய காம கேடி. உள்ளம் கொதிக்கிறது ‘தினமலத்’திற்கு. சின்ன காம கேடி டி.வி நடிகையுடன் ரிக்கார்டு டான்ஸ் ஆடியது அம்பலமானவுடன் ‘அக்கார்டிங் டு லா’ என்கிறான் ‘சோ’மாறி. இது ஏற்கனவே உண்டான புனித பிம்பம் கலைந்து விடுமோ என்ற பயத்தினால் அல்லாமல் வேறெதற்கு? இது இவர்கள் வாசகர்களின் மேலான மறைமுக கருத்து சொருகல் அல்லாமல் வேறென்ன? இவர்கள் எழுத்துக்கள் படிக்கும் வாசகன் மேல் செல்வாக்கு செலுத்துவதில்லையா?·

காம கேடி சிறையில் பூசை செய்ய வசதி.. நெய்யும் பருப்பும் தின்று விட்டு புளுக்கை போட வாழையிலை அப்புறம் எதற்கு ‘இப்ப எல்லாம் முன்ன மாதிரி செல்வாக்கில்லை’ புலம்பல்... நாட்டையே விழுங்க வரும் மறுகாலனியாதிக்க அபாயத்தை சுவற்றில் எழுதும் தேசபக்தர்களுக்கு போலீஸின் அடிஉதை!! யாரிடம் உள்ளது செல்வாக்கு?·

இன்றும் உள்ளதே சாதி..! எங்கே உள்ளது இதன் மூலம்? யார் இதை போற்றி பாதுகாக்கிறார்கள்? “நோய் முதல் நாடி” என்று இன்றைய சாதி அமைப்பை trace செய்தால் எங்கே போய் முடிகிறது? பின் ஏன் செல்வாக்கில்லை என்ற புலம்பல்? வேதங்களும் ஸ்மிருதிகளும் செல்வாக்கிழந்தது என்கிறவர்கள், அப்படியானால் ஏன் அதில் சொல்லப் பட்ட கருத்துக்கள் மட்டும் செல்வாக்கிழக்கவில்லை என்ற இரகசியத்தை சொல்வார்களா?

இது போல் இன்னும் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்; ம.க.இ.க தோழர் மருதையனின் உரைவீச்சில் அவர் சொன்னது போல் , இது ஒரே இழையின் தொடர்ச்சி தான் - சாணக்கியன், ஆதிசங்கரன், புஷ்யமித்ர சுங்கன், ஞானசம்பந்தன், ராஜகோபாலாச்சாரி, வெங்கட்ராமன், ஜெயலலிதா.....

A.V : பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம் என்ற பெயரில் நீங்கள் செய்வது இனவாதம் பரப்புவது தானே? பார்ப்பனீயத்தை எதிர்க்க வேண்டுமானால் அதை வேறு பெயரில் சொல்லி எதிர்க்கலாமே? ஏன் பார்ப்பனர் பெயரையும் சேர்த்துச் சொல்கிறீர்கள்? இது எங்களை புன்படுத்துகிறதே?

RV : இல்லை ஏற்கனவே சொன்னது போல பார்ப்பனீய எதிர்ப்பு என்பது ஒரு குறிப்பிட்ட இன/சாதி எதிர்ப்பு அல்ல. உழைக்கும் மக்களுக்கு இந்த சித்தாந்தத்தின் மேல் உள்ள மயக்கத்தை கலைக்க வேண்டியுள்ளது. பார்ப்பனீயம் ஏற்படுத்திய கொழுப்பில் ஒடுக்குமுறையில் ஈடுபடுவது ஒரு சில உயர் சாதியினரே அவர்களை எதிர்த்துப் போராடும் அதேவேளையில் இந்த சித்தாந்தத்தை இருபத்தோராம் நூற்றாண்டிலும் வேதபாடசாலைகள் வைத்து போற்றி பாதுகாக்கும் சாதியையும் எதிர்க்க வேண்டியுள்ளது. தயவு செய்து வேறு பாட்டை புரிந்து கொள்ளுங்கள் - "நீங்கள் ஒரு பஞ்சமனை ஒடுக்குவது அவன் அந்த சாதியில் பிறந்தான் என்ற ஒரே காரணத்திற்காக. நாங்கள் உங்களை எதிர்ப்பது நீங்கள் பார்பனராய் பிறந்த காரணத்திற்காக அல்ல!! பார்ப்பனீயத்தை முன்னெடுத்து செல்வதற்காக. இது உங்களை புன்படுத்துகிறதென்றால்; எங்களுக்கு வேறு வழியில்லை அப்படித்தான் புன்படுத்துவோம்!!

AV : நீங்கள் வர்க்கப் போராட்டக்காரர்கள் தானே பின் எதற்கு நாத்திகப் பிரச்சாரம்? உங்களுக்கே நம்பிக்கை இல்லை ஆயிற்றே, பின் ஏன் கடவுள் விஷயத்திலும் கோயில் நடைமுறைகளிலும் தலையிடுகிறீர்கள்?

RV : மதம் ஒடுக்கப்பட்டவனிடம் சொல்வது என்ன? “நீ அடங்கி ஒடுங்கி நடந்து கொள் பரலோக ராச்சியத்தில்(இங்கே சொர்க்கம்) உனக்கு இடம் கிடைக்கும்; ஒடுக்குபவனிடமோ நீ உன் அடிமைகளிடம் கருனையோடு நடந்து கொள் தான தருமங்கள் செய்” அதாவது இருக்கும் systemஐ குலைக்க வேண்டாம் அதற்குள் இருவரும் சன்டை போடாமல் இருங்கள் என்று வலியுறுத்துகிறது... நாங்கள் ஒடுக்கப்பட்டவன் தன்னெழுச்சியாய் கிளர்ந்தெழ வேண்டும் என்கிறோம். அதற்கு தடையாய் உள்ள மதம் என்னும் மயக்கம் கலைக்கப் பட வேண்டியது மிக அவசியம்..

மேலும் மார்க்ஸியத்தின் அடிப்படை இயக்கவியல் பொருள்முதல்வாதம். இது எந்த ஒரு மதத்திற்கும் மிகக் கடுமையான எதிரி. அடிப்படையிலேயே கருத்துமுதல்வாதமான மதத்துடன் நேரடியான முரண்பாடுகள் கொண்டது. மதம் பரப்பி விட்டுள்ள சமுதாய வேர்களை கலைவது ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தன்னெழுச்சியுடன் நேரடி தொடர்புடையதாகும்.. இங்கே மதம் என்று நாம் குறிப்பிடுவது இந்து முசுலிம் கிருத்துவம் யூதம் புத்தம் சமனம் என்று அனைத்துக்கும் பொருந்தும்

இங்கே ஆகப் பெரும்பான்மையான மதம், இந்து மதம் என்று சொல்லப் படும் பார்ப்பனீய மதம். எனவே நாங்கள் உம்மை மட்டும் target செய்வது போன்ற தோற்றம் ஏற்படுவது தவிர்க்கவியலாதது... உலகளவில் பொதுவுடைமைவாதிகள் அனைத்து மதம் மற்றும் கடவுள் கோட்பாடுகளையும் எதிர்த்தே வந்துள்ளனர்.

நம்பிக்கையை பொருத்தமட்டில் - உம்முடைய நம்பிக்கை எம்முடைய மக்களின் வாழ்வை கேள்விக்குள்ளாக்கினால், நாங்கள் உமது நம்பிக்கையின் இருப்பின் மேல் கேள்வி எழுப்புவது தவிர்க்க இயலாதது.

AV : ஒரு தலைவன் சொன்னான் என்பதற்காக “கடவுள் இல்லை” என்பதும் கேள்விகள் இல்லாமல் அதை ஏற்றுக் கொள்வதும் அந்த தலைவன் சொன்ன சித்தாந்தத்தையே ஒரு மதம் க்குவது தானே?

RV : நாம் எதிர்ப்பது யாரோ சொன்னார் என்ற வெறும் நம்பிக்கை என்னும் கருத்தியல் அடிப்படையில் அல்ல.. பொருள்முதல்வாதம் என்னும் விஞ்ஞான பார்வையில்.. மேலும் மார்க்ஸோ ஏங்கெல்ஸோ எவரும் கேள்விகளுக்கப்பாற் பட்ட ‘கடவுள்’கள் இல்லை..

____________________________________________________________________

பொதுவாக விவாதத்தில் நன்பர்களை இழப்பது எனக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தும் ஒரு விஷயம்...(இங்கே கூட ஒரு முறை அப்படி நிகழ்ந்து விட்டது ஒரு பதிவர் என் கமெண்டால் வருத்தப் பட்டு தனி மடல் கூட அனுப்பினார்) எனவே இந்த அளவில் எங்கள் விவாதம் ஒரு நிறுத்தத்திற்கு வந்து விட்டது. அனந்தாவை இதற்குப் பின் சகஜ நிலைக்கு கொண்டு வர அரை பாக்கெட் சிகரெட் செலவாகி விட்டது.....

____________________________________________________________________

சரி... இந்த இடத்தில் தமிழ்மணத்தில் உலவும் சமரசவாதிகளையும் அவர்கள் நடுநிலைமையையும் கொஞ்சம் கவனிக்கலாமா?

முதலில் ‘நடுநிலை’ என்ற ஒன்று கிடையவே கிடையாது.. ஒன்று பிரச்சினை மற்றொன்று அதன் தீர்வு... இடைப்பட்ட அனைத்தும் திரிபுவாதங்களே. அவை பிரச்சினை வளரவே உதவும்

சாதி பாகுபாடு ஒழிக்கப் பட வேண்டும்... ஆனால் பாகுபாட்டுக்கு காரணமான சாதி பற்றி பேசக் ,கூடாது. ஒடுக்குமுறை கூடாது; ஆனால் ஒடுக்குபவரைப் பற்றி.... மூச்!!! என்னே ஒரு நடுநிலை!! ·

வேதங்கள் புனிதம்; வேதியர்கள் பாவம் அப்பாவிகள்... அதன் உள்ளடக்கத்தை பற்றி எவனாவது கேட்டு விட்டால் போதும் நேரடியாக பதில் வராது - வெங்காயத்தலையன் என்று பதிவு வரும்.. பரவாயில்லை அந்த மனிதர் வாழும் காலத்தில் இதை விட எதிர்ப்புகளைப் பார்த்தவர்.

இந்த சமாதானப் புறாக்களின் யோக்கியதையைப் பாருங்கள்... எங்கேயாவது பார்ப்பனர்களுக்கு எதிராக எவனாவது கேள்வி கேட்டு விட்டால் போதும்; “ஐயோ சாதி வெறி அம்மா இனவெறி” என்று ஜராகிவிடுவர். "ஆமாம், சாதி என்பது யார் கண்டுபிடிப்பு" என்று கேளுங்கள்... அவர்களே ஞானஸ்நானம் கொடுத்து உங்களை ‘பெரியார்மதத்தில்’ சேர்த்து விடுவார்கள்·

ஐயா உங்கள் விவாதத்தில், பதிவுகளில் உள்ள முரண்களே உங்களை அம்பலப் படுத்துகிறது..

எதிர்ப்பாளர்களைப் பொருத்தவரையில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் - உங்கள் ஏதிர்ப்புகள் தான் எங்களை வளர்க்கும் ‘எதிர் எதிரான சக்திகளின் முரண்பாடுகள் வளர்ச்சிப் போக்கின் கூறுகள்’ என்ற இயக்கவியல் தத்துவத்தை நம்புகிறவர்கள் நாங்கள்..

____________________________________________________________________

நன்றி

rajavanaj@gmail.com

http://vanajaraj.blogspot.com/2006/11/blog-post_12.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.