Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியுசிலாந்து மாதிரியான தேர்தல் முறை! – 13ம் திகதி அமைச்சரவையில் ஆலோசனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து மாதிரியான தேர்தல் முறை! – 13ம் திகதி அமைச்சரவையில் ஆலோசனை

[Monday 2015-05-04 08:00]
cabinet-200-news.jpg

தேர்தல் முறை மாற்றம் தொடர்பான இறுதி சட்டமூல வரைபு எதிர்வரும் 13 ஆம் திகதி அமைச்சரவைக் கூட்டத்தின்போது அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில் அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தேர்தல் முறை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

  

இதேவேளை இலங்கையின் புதிய தேர்தல் முறை நியூசிலாந்தின் தேர்தல் நடைமுறைகளில் காணப்படும் சாதகமான சில அம்சங்களை உள்ளடக்கியதாக காணப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 29 ஆம் திகதி நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தின்போது தேர்தல் முறை மாதிரி ஒன்றை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்திருந்தார். அந்த யோசனை தொடர்பில் சகல தரப்பினரது கருத்துக்களையும் யோசனைகளையும் பெறுமாறும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியிருந்தார்.

 

அந்தவகையில் தற்போது அரசாங்கம் இந்த புதிய தேர்தல் முறை தொடர்பான யோசனைகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியானது ஏற்கனவே புதிய தேர்தல் முறை யோசனை ஒன்றை தயாரித்துள்ளது. எனினும் கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனை குறித்தே தற்போது கருத்துக்கள் பெறப்பட்டு வருகின்றன.

 

குறித்த தேர்தல் முறைப்படி தற்போது 225 ஆக இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255 ஆக உயர்த்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 165 உறுப்பினர்கள், விகிதாசார முறைமையின் பிரகாரமான 90 உறுப்பினர்கள் என்று பகிர்ந்து செல்லும்படி 255 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

 

விகிதாசார முறைப்படி தெரிவு செய்யப்படும் 90 உறுப்பினர்களை பொறுத்தமட்டில் 66 உறுப்பினர்கள் மாவட்ட ரீதியிலும் 24 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் ரீதியிலும் தெரிவு செய்யப்படும் வகையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச யோசனையை அடிப்படையாகக் கொண்டு சகல தரப்பினரிடம் இருந்தும் அபிப்பிராயங்களை பெற்றதன் பின்னர், புதிய தேர்தல் முறைமை மாற்றத்துக்கான அரசியலமைப்பு திருத்தத்தை சமர்ப்பிக்க கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.

 

மேலும் மற்றுமொரு தேர்தல் முறை குறித்த யோசனையும் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்முள்ளது. அந்த முறைப்படியும் 255 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் வகையில் பிரேரிக்கப்பட்டுள்ளது. அதாவது 196 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ரீதியிலும் 59 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மட்டத்திலும் தெரிவு செய்யப்படும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முறை கொண்டு வரப்படுமிடத்து தற்போது காணப்படுகின்ற பிரதிநிதித்துவங்களில் பாதிப்பு ஏற்படாது என்று கூறப்படுகின்றது.

 

குறிப்பாக சிறுபான்மை மற்றும் சிறு அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேர்தல் முறை மாற்றத்தை முன்னெடுக்கவேண்டும் என்று பல தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. எனினும் 5 வீதத்துக்கு குறைவான வாக்குகளை பெறுகின்ற கட்சிகளுக்கு பிரதிநிதித்துவங்கள் கிடைக்கப்பெறாத வகையிலேயே தேர்தல் முறை வரும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே சிறுபான்மை கட்சிகள் தேர்தல் முறை மாற்றம் தொடர்பில் தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகின்றன. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமாக புதிய தேர்தல் முறைமை கொண்டு வரப்படவுள்ள நிலையில் சிறுபான்மை அரசியல் கட்சிகள் தேர்தல் முறை மாற்றம் குறித்த தமது நிலைப்பாட்டை அண்மையில் அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருந்தன.

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், றிசாட் பதியுதீன், பழனி திகாம்பரம் ஆகியோர் கூட்டாக இவ்வாறு முக்கிய ஆவணத்தை சமர்ப்பித்திருந்தனர். தேர்தல் முறை மாற்றமானது சிறுபான்மைச் சமூகங்களையும், சிறிய கட்சிகளையும் பாதிக்காதவகையில் அமையவேண்டும் என்று கோரிக்கை விடுத்தே இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

இது இவ்வாறு இருக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோரை சந்தித்து கலந்துரையாடுவதென்றும், அத்துடன் தங்களுக்குள் தொடர்ச்சியாக பேச்சுகளை நடத்துவதென்றும். சிறுபான்மை கட்சிகள் கடந்தவாரம் தீர்மானித்திருந்தன.

http://www.seithy.com/breifNews.php?newsID=131432&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.