Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை இராணுவ அதிகாரி தமது பணியாளரை ஜப்பானில் விற்பனை செய்துள்ளார்!

Featured Replies

பணியாளர் ஒருவரை மேஜர் ஜெனரல் ஒருவர் 70,000 யென்களுக்கு விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 
ஜப்பானுக்கான இலங்கைத் தூதரகத்தில் கடயைமாற்றி வந்த மேஜர் ஜெனரல் ஒருவரே இவ்வாறு, தனது பணியாளரை அந்நாட்டு நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார்.
 
பதவிக் காலம் முடிவடைந்து நாடு திரும்பும் முன்னர் தனது பணியாளரை 70,000 யென் கூலி அடிப்படையில் நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்துள்ளார் என வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பரிந்துரைக்கு அமைய இந்த மேஜர் ஜெனரல் ஜப்பானில் இராஜதந்திர சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
 
குறித்த மேஜர் ஜெனரல், இராஜதந்திர கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி கனிஸ்ட படைவீரர் ஒருவரை தனது பணியாளராக அழைத்துச் சென்றிருந்தார்.
 
நிறுவனத்தில் கிடைக்கும் ஊதியத்தில் 70, 000 யென்களை தமக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்ற உடன்படிக்கை அடிப்படையில் குறித்த பணியாளரை ஜப்பானிலேயே விட்டுவிட்டு, மேஜர் ஜெனரல் நாடு திரும்பியுள்ளார்.
 
நாடு திரும்பினால், பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகாவிடமிருந்து உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடுமென ஜப்பான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு குறித்த கனிஸ்ட இராணுவச் சிப்பாய்க்கு மேஜர் ஜெனரல் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
 
இந்த அனைத்து விபரங்களையும் ஜப்பானுக்கான இலங்கைத் தூதுரக அதிகாரிகளுக்கு குறித்த இராணுவச் சிப்பாய் தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.
 
இந்த சம்பவம் குறித்து தூதரக அதிகாரிகள் ஜப்பான் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
 
இலங்கை தூதரக சேவையின் இராஜதந்திரியொருவர் மாதாந்த கூலி அடிப்படையில் தமது பணியாளாரை விற்பனை செய்த முதல் சந்தர்ப்பம் இதுவென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

இங்கும் இங்கிலாந்தின் லேக்ச்டரில் சொறிலன்காவின் அரசியல் ,விளையாட்டு ,பிரமுகர்களால் இறக்கி விடபட்ட சிங்களவர்கள் தொகை அதிகம் இதில் சொரிலன்காவில் இருக்கும்மட்டும் பல தமிழிர்களை கொலை செய்த தப்பியோடிய ராணுவ சிங்களவர்கள் அடக்கம் .

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு அசைலம் அடிக்க உதவும் புரகிறாசிகள் எல்லோரும் தமிழர் :)

கூடவே கடையில் மணிக்கு 2 பவுணுக்கு வேலை கொடுப்பதும் தமிழ்க் கடைக்காரர்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணை முடிக்கொண்டு எழுதுவது.................................. உங்கள் சவுத்கரோ ல் உள்ள பெரிய தமிழ்கடை பெயர் வேண்டாம் முன்னாள் உள்ள ஆறின சாப்பாடை சூடாக்கி சாப்பிடும் உணவகம் மற்றும் சாம் சிக்கின் கடைகள் வேலை செய்யும் சிங்களவர்களை கேட்டு பார்க்கவும் மணிக்கு 5 குறைய ஒருத்தரும் வேண்டுவதில்லை ஆரம்பத்தில் அப்படி இப்படி என்று இருந்தவனும் கட்டா சம்பல் வெள்ளை சோறு மணக்க மணக்க மீன் குழம்பை காட்டி முதலாளிகளை மயக்கிடுவான்கள் பிறகென்ன சம்பளம் ஏறுமுகம் .10 தமிழனுக்கு மேல் போட்டுத்தள்ளி விட்டு ஒன்றுமே தெரியாத ஆள் போல் அப்பாவியாய்  சவுத்கரோ கடையில் வேலை செய்யும் முன்னால் ஆமியும் உண்டு உங்கள் இடத்தில .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.