Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால்! காலையிலேயே ரயர்கள் கொளுத்தி போக்குவரத்து முடக்கம்

Featured Replies

harthal%202015%2005%2020.jpg

 

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பூரண கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் இன்று காலை திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில் போக்குவரத்தை தடுக்கும் விதத்தில் நாற்சந்தியில் ரயர்கள் கொளுத்தப்பட்டன. இதனால் குறைந்தளவு மக்களே பயணித்த போதும் அவர்களின் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டது. காலையிலேயே இவ்வாறான செயற்பாடுகள் தொடங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
 
இதேவேளை இன்று யாழ்ப்பாணம் முழுவதும் வர்த்தக நிலையங்கள், அரச திணைக்களங்கள், வங்கிகள் இயங்காது எனத் தெரியவருகிறது. தனியார் பேருந்து சேவைகளும் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 
harthal%202015%2005%2020%2001.jpg
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கடையடைப்பு ஓகே....
அதுக்கு ஏன், ரயரை எரித்து... வீதியை பாழாக்குகிறார்கள்.

  • தொடங்கியவர்

யாழ். நீதிமன்றத்தின் கண்ணாடி உடைப்பு

 

article_1432106574-jaffna%20-%20Copy.jpg

 

 
யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டத்தொகுதியிலுள்ள கண்ணாடிகள், புதன்கிழமை (20) கல்லெறித் தாக்குதலுக்குள்ளாகி சேதமடைந்துள்ளன.
புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள், நீதிமன்றத்தில் புதன்கிழமை (20) ஆஜர்ப்படுத்தப்படுவதாக அறிந்த மக்கள் நீதிமன்றத்தைச் சுற்றி ஒன்றுகூடினர்.
அவர்களில் சிலர் நீதிமன்றத்தை நோக்கி கற்களை வீசினர். இதனால் நீதிமன்ற கண்ணாடிகள் உடைந்தன. 
நீதிமன்றத்துக்கு முன்பாக நின்றிருந்த சிறைச்சாலை பஸ்ஸின் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. 
இதில் சிறைச்சாலை பஸ்ஸின் முன்பக்க, மற்றும் பக்கத்து கண்ணாடிகள் உடைந்தன. அத்துடன், வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மீதும் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கல்வீச்சுத் தாக்குதலில்   பொலிஸ் அதிகாரி ஒருவர் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளார். 
பொலிஸாரின் பாதுகாப்பு வேலியை உடைத்து உள்நுழைய முற்பட்டவர்கள் மீது கண்ணீர் புகை வீசி குழப்பத்தில் ஈடுபட்டவர்களைக் பொலிஸார் கட்டுப்படுத்தினர்.
இதனையடுத்து, விசேட அதிரடிப்படையினர் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது.
 
article_1432106705-jaffna2%20-%20Copy.jp
 
article_1432106719-jaffna3%20-%20Copy.jp
 
  • தொடங்கியவர்

புங்குடுதீவு மாணவியின் படுகொலையை தொடர்ந்து இன்று புதன்கிழமை(20) யாழ்ப்பாணத்தில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், யாழ்.மாவட்டத்தின் அனைத்து செயற்பாடுகளும் முடங்கின. புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை (20) ஹர்த்தால் அனுஷ்டிக்க வேண்டும் என பல அமைப்புக்கள் கோரிக்கை விடுத்தன.

 

  இதனையடுத்து, யாழ்.மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், வங்கிகள், நிதிநிறுவனங்கள், பாடசாலைகள் என அனைத்தும் மூடப்பட்டன. பஸ் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் வீதிகளில் ஆங்காங்கே டயர்கள் கொளுத்தப்பட்டுள்ளன.   வர்த்தக சங்கங்கள், கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆகியோர் கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு அனைத்து இடங்களிலும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

article_1432096957-5.jpg

 

article_1432096981-8.jpg

 

article_1432096989-9.jpg

 

article_1432096997-10.jpg

 

article_1432097034-15.jpg

 

http://www.tamilmirror.lk/146440#sthash.gTeg8dab.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
கோப்பாய் பயிற்சி கல்லூரி ஆசிரிய,மாணவர்கள் போராட்டம்
2e5e1885b6fd0caaf6bcbf84f0d989c1.jpg
புங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்டதை வன்மையாக கண்டித்து கோப்பாய் பயிற்சி கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
 
கருவிலே சுமந்தவன் கதறுவதா?தெருவிலெ கொடியவன் வாழ்வதா,பள்ளி மாணவியை கொன்ற பாதகர்களை கிள்ளி எறிவோம்,வித்தியா என்னும் மொட்டை, கருக்கிய கயவர்களுக்கு உச்ச தண்டனை வழங்குக என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
999%2810%29.jpg
 
99999%287%29.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=195754041920673138#sthash.8J9m22oj.dpuf

 


கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் : முடிவில் முதல்வரிடம் மகஜர் கையளிப்பு
3964e24efaf0d31e258f5370ac9f5448.jpg
புங்குடுதீவு மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி கோரி கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் மாணவர்கள் இன்று கண்டன போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
 
 
தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் கண்டன போராட்டத்தை பேரணியாக சென்று வடக்கு முதல்வர் சி.வி .விக்கினேஸ்வரனிடம் மகஜர் ஒன்றினை கையளிக்கவுள்ளனர்.
 
அதன் பின்னர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடைபெறும் வர்த்தகர் சங்கம் மற்றும் ஆசிரியர் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
yvvvv.jpg
 
yvvvvvvvv%281%29.jpg
 
yvvvvvvvvvvvvvvvvvvvvvv.jpg
 
yvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvvv.jpg
 
 
 
777777777777%281%29.jpg
 
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=866884041820288602#sthash.JZgvpqW9.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.