Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வவுனியாவில் பதற்றம்

Featured Replies

வவுனியா பஸ் தரிப்பிட பகுதியில் குழுமியிருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்ததையடுத்து அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலையை கண்டித்து இன்று (21) வவுனியாவில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

 

வவுனியா வர்த்தகர்கள் சங்கத்தினால் ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், இன்று வவுனியாவில் அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் வங்கிகள், பாடசாலைகள் என்பனவும் இயங்காதுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்ற போதிலும் தனியார் பஸ் சேவைகள் மற்றும் முச்சக்கரவண்டி சேவைகள் உட்பட போக்குவரத்து வசதிகளும் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.

 

வவுனியா தபால் நிலைய ஊழியர்கள், நகரசபை மாவட்ட செயலக ஊழியர்கள், விவசாய கல்லூரி மாணவர்கள் மற்றும் மாவட்ட செயலக ஊழியர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை, இளைஞர்கள் சிலரால் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டதுடன் வீதி தடைகளும் இடப்பட்டுள்ளது.

 

 

www.tamilmirror.lk/146531#sthash.fRuv6pjU.dpuf

ஹர்த்தால் என்பதிற்கு பதிலாக கடையைப்பு, முழு அடைப்பு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்...!

  • கருத்துக்கள உறவுகள்
வவுனியாவில் இன்று பூரண கடையடைப்பு
d5c10dc1a8c19a5b9c01f0708ea35b6c.jpg

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து வவுனியாவில் இன்று  பூரண கடையடைப்பு நடைபெறுகின்றது.

 
 வவுனியா நகரப் பகுதி வெறிச்சோடிக் காணப்படும் அதேவேளை பரவலாக பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
 நகருக்கு வரும் சில வீதிகளில் ரயர்கள் போட்டு எரியூட்டப்பட்டுள்ளது. வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரப் பகுதியில் அமைதியான முறையில் நடைபெறவிருந்த போராட்டத்துக்கும் பொலிஸார் அனுமதி வழங்கவில்லை.
 
இதேவேளை, பாடசாலைகள், வங்கிகள், அரச திணைக்களங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகளும் தனியார் பஸ்களும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.o%282%29.jpg
 
oo%282%29.jpg
 
ooo%281%29.jpg
 
oooooooooooooooo.jpg
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=862754043721455553#sthash.hxywV9aZ.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி உறவுகளே...

 

வழக்கு வவுனியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் வந்துள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.