Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளும் இதுபோன்றே ஆரம்பித்தனராம்! மகிந்த

Featured Replies

71df7e6668daa8854f3de67d2d84f309_L.jpg
 
வடக்கில் தற்போது ஏற்படும் சம்பவங்களைப் போன்றே விடுதலைப் புலிகளும் ஆரம்பித்தில் நடந்துகொண்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
 
மஹியங்கனைப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
ஊடகவியலாளர்களிடம் கருத்துரைத்த மகிந்து,
''தற்போது நீதிமன்றத்தின் மீதும், பொலிஸார் மீதும் கல்வீச்சு நடத்தப்படுகிறது. விடுதலைப் புலிகளும் அன்று இதேபோன்றே ஆரம்பித்தனர். இது மிகவும் பயங்கரமான நிலைமையும், ஆரம்பமுமாகும். வரலாற்றைப் பார்த்தால் விடுதலைப் புலிகளும் இதைப்போன்றே ஆரம்பித்தனர். இதனால் பொலிஸார் இயங்க வேண்டும். வடக்கில் சட்டம் ஒருவகையிலும் தெற்கில் ஒருவகையிலும் இருக்க முடியாது. நாட்டில் ஒரே சட்டம் இருக்க வேண்டும். சமாதானம் நீடிக்க வேண்டும். இந்த நிலைமையில் துரித மாற்றம் ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.
 
எவ்வாறாயினும், புங்குடுதீவு மாணவி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை தனது இனவாதப் பிரசாரத்திற்கு மகிந்த ராஜபக்ச பயன்படுத்துவதாகவும், இதன்மூலம் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு மகிந்த தரப்பு முயற்சிப்பதாகவும் பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
  • கருத்துக்கள உறவுகள்

 

''தற்போது நீதிமன்றத்தின் மீதும், பொலிஸார் மீதும் கல்வீச்சு நடத்தப்படுகிறது. விடுதலைப் புலிகளும் அன்று இதேபோன்றே ஆரம்பித்தனர். இது மிகவும் பயங்கரமான நிலைமையும், ஆரம்பமுமாகும். வரலாற்றைப் பார்த்தால் விடுதலைப் புலிகளும் இதைப்போன்றே ஆரம்பித்தனர். இதனால் பொலிஸார் இயங்க வேண்டும். வடக்கில் சட்டம் ஒருவகையிலும் தெற்கில் ஒருவகையிலும் இருக்க முடியாது. நாட்டில் ஒரே சட்டம் இருக்க வேண்டும். சமாதானம் நீடிக்க வேண்டும். இந்த நிலைமையில் துரித மாற்றம் ஏற்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.

 

மைத்திரியின் அரசு

வடபகுதி மக்களுக்கு  

சிங்கள மக்களைவிட அதிகாரமுள்ள வேறு ஒரு ஆட்சியை கொடுக்கிறது என தூண்டிவிடுகிறார்.. :(

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த.....
"ஹெல்மெட்" போட்டுக் கொண்டு.... நீதிமன்றுக்கு, கல் எறிந்தவர்கள் எல்லாம் ஒட்டுக் குழுக்கள்.
இதுகள் கல் எறிவது, தங்கள் வயித்துப் பாட்டுக்கு....
இதுகளுக்கும்... விடுதலைப் புலிகளுக்கும்... வெகு தூரம்... 


ஏணி, வச்சாலும் எட்டாத தூரம். ஒட்டுக் குழுக்கள்... பொறுக்கித் தின்னிக், கூட்டம்.

உண்மை இப்படித்தான் அன்றும்  நீதிக்காக மாணவர்கள் குரல் கொடுத்தனர் ...........ஆனால் சிங்களவன் திரும்பியும் பார்க்கல .மாணவர்களையே கொன்றான்  .....அதுக்காக அந்த மாணவர்கள் இப்படியெல்லாம் கல்லால் எறிந்து கண்ணாடி உடைக்கல..................கண்ணி வெடி வைத்து தகர்த்தாங்க .    புலியாய் மாறி .............    இதுதான் நடந்தது மகிந்த மாத்தையா .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.