Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றங்கள் மீதான உள்ளக விசாரணை நல்லிணக்கத்தின் முதற்படி - மைத்திரி

Featured Replies

my3%20ybfdf877878954.jpg

 

"இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் யுத்தக்குற்றங்கள் மீதான தேசிய விசாரணை நல்லிணக்கத்துக்கான முதற்படி" - என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
 
அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த விசாரணை செப்டெம்பரில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கையில் நடந்த யுத்தக்குற்றங்கள் மீதான சர்வதேச விசாரணையில் எனக்கு உடன்பாடு கிடையாது. நமது நாட்டுக்குள் நடந்த யுத்தம் சம்பந்தமான விசாரணை தேசிய ரீதியில் மட்டுமே நடத்தப்படவேண்டும்.
 
அதேசமயம், யுத்த விசாரணை சர்வதேச மட்டத்தில் நடைபெறுவதை முன்னைய அரசு விரும்பவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த விசாரணை தேசிய ரீதியில் நடத்தப்படும் என சர்வதேசத்துக்குத் தெரிவித்துக்கொண்டே அவ்வாறு செய்யாமல் இழுத்தடித்து வந்ததன்மூலம் முன்னைய அரசு சர்வதேசத்தின் அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டது என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. தேசிய ரீதியில் விசாரணை நடத்தாமல் காலம் தாழ்த்திக்கொண்டிருந்ததன் மூலம் ஐக்கிய நாடுகள் அமைப்பு இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றியது.
 
அதனைத் தொடர்ந்து சர்வதேச மட்டத்தில் விசாரணை நடந்தது. அந்த விசாரணையின் முடிவு கடந்த மார்ச் மாதத்தில் வெளியாகவிருந்தது. எனினும், தற்போதைய அரசு அதன் வெளியீட்டுக்கு காலஅவகாசம் கேட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் அது வெளியாவுள்ளது. எவ்வாறாயினும், அந்த அறிக்கையின் தாக்கத்தை இயன்ற அளவுக்குக் குறைப்பதற்கான வழிமுறைகளை நாம் செய்யவேண்டியதே இன்றைய காலகட்டத்தின் அவசியம். எமது நாடு பல்வேறு உள்நாட்டு யுத்தங்களைச் சந்தித்துள்ளது.
 
1971ஆம் ஆண்டில் நடந்த கிளர்ச்சி அதில் ஒன்றாகும். அந்த யுத்தம் பற்றிய விசாரணை எவரது நிர்ப்பந்தமும் இன்றி அன்றைய அரசால் நடத்தப்பட்டது. அது அரசொன்றின் கடமை என்பதை மறுக்கமுடியாது. 1988, 1989 களில் நடந்த கலவரங்களும் அத்தகையனவே. எனினும், அத்தகைய கலவரங்களின்போது நடைபெற்ற குற்றங்களைக் கிண்டிக் கிளறாமல் மூடிமறைக்கவேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இறுதியாக நடந்த உள்நாட்டு யுத்தத்தின்போது நடந்த குற்றங்கள் தொடர்பில் தேசிய, சர்வதேச மட்டத்தில் விசாரணைகள் தேவை என நிர்ப்பந்தம் செய்யப்பட்டு வருகிறது. இதன் பிரதிபலன் காலப்போக்கில் தெரியவரும்" - என்றார். -
 
 
 

கிளர்சிக்கும் விடுதலை போராட்டத்துக்கும் நிரைய வித்தியாசம் இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.