Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுஎஸ் விமானத்தில் இமாம்களுக்கு கைவிலங்கு !!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே அமெரிக்கா ஒரு பாதிரியார் முழந்தாளில் நின்று, யேசு என்று வானத்தை நோக்கிக் கையைத் தூக்கினால், இப்படி விலங்கிடுமா?

இது கேள்

  • தொடங்கியவர்

யதார்ததை புரிந்து கொள்லுங்கள் காவடி தெரிந்தோ தெரியாமலோ முஸ்லீம்களை தீவிரவாதிகளாக்கப்பட்டு விட்டனர்.அவர்கள் அதை முன் ஜாகிரதையுடன் நடக்க வேண்டும் இவர்கள் தொழுகை நடத்துவதுக்குள்ளே கைது செய்யப்பட்டு விட்டனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இச்சம்பவத்தில் முஸ்லீம்கள் வடிவேல் சொன்னது போல் முற்கூட்டியே விமானப் பணியாளர்களிடம் தாம் வழிபடப்போவதைப் பற்றிச் சொல்லியிருக்கலாம். ஆனாலும் அமெரிக்கர்கள் (ஐரோப்பியர்களும் தான்) அண்மைக் காலமாக சற்று அதீத அச்ச உணர்வுடன் நடந்துகொள்கின்றனர், குறிப்பாக விமானப் போக்குவரத்து தொடர்ப்பாக. சென்ற மாதம் தமிழர் (இந்தியர்) ஒருவர் தன் கைத்தொலை பேசியில் தமிழிலும் பேசியதைத் தொடர்ந்து அவர் மேல் ஐயங்கொண்ட அமெரிக்க விமானநிலையக் காவற்றுறை, அவருக்குக் கரைச்சல் கொடுத்துள்ளது. அதைப் பற்றி இங்கு சொடுக்கிப் படிகவும். **

காவடி சொல்வது ஏற்கத்தக்கதல்ல, தமிழீழத்தில் வாழும் முஸ்லீம்கள், தமிழ் இசுலாமியர்களே. அவர்கள் மட்டும் மத்ஞ்சார்ந்த துணைப்பண்பாட்டைக் கொண்டிருக்கவில்லை. சைவர்கள், கத்தோலிக்கர், புறொட்டெஸ்ரெண்ட்ஸ், நாத்திகர் போன்ற மதத்தவரும் வெவ்வேறு துணைப்பண்பாடுகளைக் கொண்டுள்ளனர். எ.க: நாத்திக மதத்தினர் அவர்களின் குருசாமி ராமசாமி நாயக்கர் காட்டிய வழியில் "சுயமரியாதைத் திருமணம்" செய்கின்றனர், அது போல் அவர்களில் பலர் சாமத்தியச் சடங்கு போன்றவை செய்ய மாட்டினம் எனக் கருதுகிறேன்.

அடுத்து, தமிழீழ இசுலாமியத் தமிழர்களுக்கும் பிற தமிழர்களுக்குமிடையில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளது உண்மையே. ஆனாலும் இசுலாமியத் தமிழர்கள் சிங்களர்களை விட எம்மையே கூடுதலாக நம்புகின்றனர் எனக் கருதுகிறேன். எமக்கும் அவர்களுக்குமிடையில் பரஸ்பர புரிந்துணர்வும் நம்பிக்கையும் ஏற்படவேண்டும், அதற்கு நாம் நிச்சயம் அவர்களைத் தேவயின்றி பரிகாசம் செய்வதையும் அவர்கள் பால் காழ்புணர்வுமிழ்வதையும் நிறுத்த முயலவேண்டும்.

** சமா அவர்களுக்கு, "அப்பவே சொன்னான் என்ர கலிஃபோணியா நண்பன் சொன்னவன் ... " எண்டு உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்ட முதல், அந் நபர் தமிழ் கதைத்ததால் ஐயங்கொள்ளப்படவில்லை. அவர் தமிழும் ஆங்கிலமும் கதைத்ததில் அவர் ஆங்கிலத்தில் கதைத்த சில சொற்களைக் கொண்டு அவர் ஏதோ அமெரிக்க பாதுகாப்புக்கு ஊறு செய்யப் போறார் எண்டு ஐமிச்சத்துகுள்ளானார். அந்நபர் அவ்விடத்தே தமிழுக்குப் பதில் வேறு எந்த (அமெரிக்கருக்கு சற்றும்) புரியாத மொழி பேசியிருப்பினும் இதே கதி தான் நடந்திருக்கும். இச்சம்பவதிற்கும் வி.பு களுக்கும் எவ்வித தொடர்புமில்லை.

தமிழீழம் என்பது இஸ்லாமிய மக்களையும் உள்ளடக்கியது. அவர்கள் பிரச்சனைக்குரியவர்கள் இல்லை.

ஒரு தனித்துவம் மிக்க சமூகத்தின் மீது இந்தக் களத்தில் இவ்வளவு தூரம் வெறுப்புக் கொட்டப்படுவது ஏற்படையதாக இல்லை.

இஸ்லாமிய சமூகம் தமிழர்கள் பற்றி கொண்டிருக்கும் அச்சத்தை நியாயப்படுத்துகின்ற வேலையை நீங்கள் செய்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடிப்படையிலேயே எமக்கு கீழான இனம் அவர்கள் என்ற மன மடிப்பு எம்மிடம் இருப்பது தான் இதற்கு காரணமோ தெரியவில்லை.

சிங்களவர்களிடம் எம்மைக்குறித்து இருப்பது போல.

ஈழவன் சொன்னது. - தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மீது தீவிரவாதிகள் பட்டம் விழுந்து விட்டது. அதற்கேற்றது போல அவர்கள் நடக்கணும்.-

இது அப்படியே கொழும்பு வாழ் தமிழர்களுக்கும் பொருந்தும்.

எல்லாம்- டமாசு :lol:

தனிமனித சுதந்திரத்துக்கு தலை சிறந்த இடம் அமெரிக்கா. அமெரிக்காவில் தனி மனிதசுதந்திரத்தைப் பற்றியும் மதங்களுக்குக் கொடுக்கும் மரியாதையையும் பற்றி பேசுவீர்கள் என்றால் பிரச்சனையை கிளறிவிட்டு தலையில் மண்ணைப் போடும் கூட்டமாக மாறிவிட்டீர்களே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து எம் போராட்டத்தில் நசுக்காக சேற்றை வாரி இறைக்க இருக்கும் வம்புக் கோஸ்டிகள் தமிழீழம் கிடைத்தால் அடுத்தது மதப்பிரச்னை மற்றும் பல பிரச்சனை எழும் என மாயஜால விளையாட்டை காட்டுகிறார். இவற்றைப் புரிந்து கொள்ளுங்கள் இஸ்லாமியர்களும் எம் சகோதர்களே காலம் வரும் போது அதை அவர்களே உணர்வார்கள். இது மறுக்கமுடியாத உண்மை

இதே அமெரிக்கா ஒரு பாதிரியார் முழந்தாளில் நின்று, யேசு என்று வானத்தை நோக்கிக் கையைத் தூக்கினால், இப்படி விலங்கிடுமா?

இது கேள்

ஈரானில் இருந்தோ சிரியா, சவுதி, இப்பிடி வேற முஸ்லீம் நாடுகளில் செய்தால் கட்டாயம் நடக்கும்....! வேணும் எண்டால் அப்பிடி ஒரு நாட்டுக்கு போய் பரீட்ச்சீத்து பாருங்கள்...!

அடிப்படையிலேயே எமக்கு கீழான இனம் அவர்கள் என்ற மன மடிப்பு எம்மிடம் இருப்பது தான் இதற்கு காரணமோ தெரியவில்லை.

சிங்களவர்களிடம் எம்மைக்குறித்து இருப்பது போல.

ஈழவன் சொன்னது. - தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மீது தீவிரவாதிகள் பட்டம் விழுந்து விட்டது. அதற்கேற்றது போல அவர்கள் நடக்கணும்.-

இது அப்படியே கொழும்பு வாழ் தமிழர்களுக்கும் பொருந்தும்.

எப்பிடி நடக்கவேணும் காயம் பட்டமாதிரி தாண்டித்தாண்டி நடக்காமல் ஒழுங்காயே..???

Edited by Thala

ஈரானில் இருந்தோ சிரியா, சவுதி, இப்பிடி வேற முஸ்லீம் நாடுகளில் செய்தால் கட்டாயம் நடக்கும்....! வேணும் எண்டால் அப்பிடி ஒரு நாட்டுக்கு போய் பரீட்ச்சீத்து பாருங்கள்...!

உலகின் - மிக மோசமான பிற்போக்குவாதம்..

முஸ்லிம்கள்..........வாழ்க்கைமுறை.

........

அது - நாங்க என்னதான் சப்பு கட்டு கட்டினாலும்........

கழுத்து அறுப்பாங்க...

சந்தர்ப்பவாத- அரசியல் - வாழும் தேசமெங்கும்!

இது - என் தனிப்பட்ட கருத்து!! :lol:

இன்னொரு சமூகத்தை, புண்படுத்துவதோ, அவர்களை விமர்சிப்பதோ, ஒரு பண்புள்ள தமிழ் சமூகத்திற்கு அழகில்லை. இப்போதைக்கு எங்கலுடைய பிரச்சனை எதுவோ அதை மட்டும் பார்ப்பம். மேற்க்கதேயவருக்கும், இஸ்லாமியருக்கும் நடக்கும் பிரச்சனையில் நாங்கள் ஏன் மூக்கை நுழைப்பான்? இது எங்களுக்கு வேண்டாத வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

ஈரானில் இருந்தோ சிரியா, சவுதி, இப்பிடி வேற முஸ்லீம் நாடுகளில் செய்தால் கட்டாயம் நடக்கும்....! வேணும் எண்டால் அப்பிடி ஒரு நாட்டுக்கு போய் பரீட்ச்சீத்து பாருங்கள்...!

ஆக, மூஸ்லீம் நாடுகள், மேற்கத்தைய நாடுகள் பிரச்சனையிது. நாங்கள் ஏன் இந்தப் பிரச்சனைக்குள் போய் மூக்கை நுழைப்பான்! சுண்டலி தான் நடக்கமாட்டாதாம். தும்புக் கட்டையைத் தூக்கிக் கொண்டா நடக்க வேணும்!

ஆக, மூஸ்லீம் நாடுகள், மேற்கத்தைய நாடுகள் பிரச்சனையிது. நாங்கள் ஏன் இந்தப் பிரச்சனைக்குள் போய் மூக்கை நுழைப்பான்! சுண்டலி தான் நடக்கமாட்டாதாம். தும்புக் கட்டையைத் தூக்கிக் கொண்டா நடக்க வேணும்!

உதைத்தான் நானும் நினைக்கிறன்.. அவன் குடுகிறான் இவன் வாங்குகிறான்... வெள்ளைக்காறனுக்கு சோனகர்களை பிடிக்காத்துக்கு குறைஞ்சது ஆயிரம் காரணமாவது இருக்கும் எங்களுக்கு என்னத்துக்கு உந்த குப்பைகள்..

எனது பாடசாலைப் பருவத்தில் எத்தனையோ இஸ்லாமிய நண்பர்களுடன் நான் நெருங்கிய நட்பு வைத்திருந்தேன். தமிழின நண்பர்களுக்கும் இஸ்லாமிய நண்பர்களுக்கும் எந்தவித வேறுபாடுகளும் இல்லை. எந்த நாட்டிலும் எந்த மதத்திலும் எந்த இனத்திலும் சுயநலக்காரர்களும், கள்வர்களும், காட்டிக்கொடுப்போரும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதற்காக ஒரு முழு இனத்தையுமே ஒதுக்கிவைக்க முடியாது. அதுவும் காலங்காலமாக சிங்களவனிடமிருந்து ஒதுக்கப்பட்டு ஒடுக்குமுறையை அனுபவித்த தமிழினம் வேறொரு சிறுபான்மையினத்தை ஒடுக்கிவைப்பது தவறிலும் தவறு. எங்கள் கடந்தகால அனுபவங்களைப் சிறந்தமுறையில் பயன்படுத்தி தமிழினத்துடன் இணைந்துகொள்ள முன்வரும் இஸ்லாமிய மக்களையும் பாதுகாக்கவேண்டியது விடுதலைப்புலிகளின் கடமையாகும். எமது தேசியத்தலைவரும் இதைப் பலமுறை பல சந்தர்ப்பங்களில் அறிவுறுத்தியிருக்கிறார். இக்கருத்துக்களத்தில் இஸ்லாமிய இனத்தைக் குறைகூறி எழுதுவதைத் தவிர்த்துக்கொள்ளவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.