Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து ஒருநாள் தொடர்

Featured Replies

ஜோ ரூட், பட்லர் சதம் * இங்கிலாந்து 408 ரன் குவிப்பு

 

பர்மிங்ஹாம்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஜோ ரூட், பட்லர் சதம் அடித்து அசத்தினர்.

 

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி பர்மிங்காஹாமில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பிரண்டன் மெக்கலம் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

 

ரூட் சதம்:

இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. ராய் முதல் பந்திலேயே ‘டக்’ அவுட்டானார். ஹேல்ஸ் (20) நீடிக்கவில்லை. பின் இணைந்த ஜோ ரூட், கேப்டன் மார்கன் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

3வது விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில் அரைசதம் கடந்த மார்கன் (50) அவுட்டானார். ஒருநாள் அரங்கில் தனது 5வது சதத்தை 71வது பந்தில் அடித்த ஜோ ரூட், 104 ரன்னுக்கு அவுட்டானார்.

 

ஸ்டோக்ஸ் (10), பில்லிங்ஸ் (3) ஏமாற்றிய போதும், பட்லர் 66 வது பந்தில் தனது இரண்டாவது சதம் அடித்தார். இவர் 129 ரன்னுக்கு அவுட்டாக, ரஷித் 69 ரன் எடுத்தார். இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 409 ரன்கள் குவித்தது.

 

 

இது தான் அதிகம்

நியூசிலாந்துக்கு எதிராக 50 ஓவரில் 408 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணிக்கு, ஒருநாள் போட்டி வரலாற்றில் இது தான் அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் 2005ல் வங்கதேசத்துக்கு எதிராக 391 ரன்கள் எடுத்தது தான் அதிகம்.

 

 

உலக சாதனை படைத்த பட்லர், ரஷித்

நேற்று நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தின் பட்லர், ரஷித் ஜோடி இணைந்து 7வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்து, புதிய உலக சாதனை படைத்தனர். இதற்கு முன் ஜிம்பாப்வேயின் ஆன்டி பிளவர், ஹீத் ஸ்டீரீக் ஜோடி 130 ரன்கள் (எதிர்–இங்கிலாந்து) சேர்த்தது தான் அதிகபட்சமாக இருந்தது.

 

* தவிர 6வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றார் பட்லர் (129 ரன்).

 

http://sports.dinamalar.com/2015/06/1433870638/newzealandenglandodicricket.html

  • தொடங்கியவர்

தற்சமயம் துடுப்பெடுத்தாடி வரும் நியூசீலாந்து அணி  94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து உள்ளது 13.5 ஓவர்களில்.

  • தொடங்கியவர்

158 -3  23 ஓவர்களில்

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 210 ஓட்டங்களால் வெற்றி.

  • தொடங்கியவர்

பூனையின் 'புலி' பாய்ச்சல் : ஒருநாள் போட்டியில் 408 ரன்கள் குவித்து இங்கிலாந்து சாதனை

 

 

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 408 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது.

பிர்மிங்ஹாமில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். பின்னர் இணைந்த ஜோ ருட், மோர்கள் ஜோடி அதிரடியாக விளையாடியது. ஜோ ரூட் 78 பந்துகளில் 104 ரன்களை குவித்தார். இதில் 13 பவுண்டரிகளும்  2சிக்சர்களும் விளாசினார்.

 

மோர்கன் தன் பங்குக்கு 50 ரன்கள் எடுத்தார். அடுத்து களமிறங்கிய ஜோ பட்லர் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை விளாசித் தள்ளினார். இவர் 77 பந்துகளில் 129 ரன்களை குவித்து வெளியேறினார்.

 

இதனால் இங்கிலாந்து அணியின் ரன்வேகம் மின்னல் வேகத்தில் உயர்ந்தது. ரஷித்தும் அதிரடியாக விளையாடி 50 பந்துகளில் 69 ரன்களை எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 408 ரன்களை குவித்தது.

 

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அதோடு டெஸ்ட் விளையாடும் அணிகளில் 400 ரன்களுக்கு மேல் அடித்த 5வது அணியாக இங்கிலாந்து அணி இணைந்தது. தற்போது பாகிஸ்தான், வங்கதேசம்,மேற்கிந்திய தீவுகள்,ஜிம்பாப்வே அணிகள்தான் இந்த சாதனையை நிகழ்த்தியிராத அணிகளாக உள்ளன.

 

தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இங்கிலாந்து அணி 210 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் பூனை போல கிடந்த இங்கிலாந்து அணி தற்போது புலிப்பாய்ச்சல் காட்டியிருப்பதால் அந்த அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைக்கின்றனர்.

 

 

http://www.vikatan.com/news/article.php?aid=47748

  • தொடங்கியவர்

ஒரே நாளில் 763 ரன்கள் விளாசப்பட்ட த்ரில்லர் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

   

 

ஓவலில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை நியூஸிலாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 1-1 என்று சமன் செய்துள்ளது.

 

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 398 ரன்கள் விளாச, தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து இன்னிங்ஸில் பிற்பகுதியில் மழை குறுக்கிட டக்வொர்த் முறைப்படி 46 ஓவர்களில் 379 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து 365 ரன்களை எடுத்து மகாவிரட்டல் செய்து தோற்றுப் போனது.

 

பொதுவாக துணைக்கண்டங்களில் 350 ரன்களுக்கு மேல் இந்தியாவோ, இலங்கையோ அடிக்கும் போது 'Sub-continent mine-field' என்று இங்கிலாந்து ஊடகங்களும் முன்னாள் வீரர்களும் கேலி பேசுவர். ஆனால் தொடர்ந்து 2-வது ஒருநாள் போட்டியில் ஸ்கோர் 400 ரன்களை தொட்டுள்ளது. அவர்கள் பேட்டிங்குக்குச் சாதகமான ஆட்டக்களம் இட்டு அதில் இரு அணிகளும் 400 ரன்கள் பக்கம் விளாசினால் அது ‘எபிக் மேட்ச்’ என்றும் அதே துணைக்கண்டத்தில் அதேபோன்று நடந்தால் அது ‘புழுதியும், தூசியும் கொண்ட மட்டை பிட்ச்’ இதுதான் மேற்கத்திய ஊடகங்களின், முன்னாள் வீரர்களின் கருத்து. சரி போகட்டும்..

 

ராஸ் டெய்லர் 96 பந்துகளில் 10 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் விளாசி தனது 13-வது ஒருநாள் சதத்தை எடுக்க, கேன் வில்லியம்சன் 88 பந்துகளில் 93 ரன்களை அருமையான முறையில் எடுக்க, மெக்கல்லம் தன் வழக்கமான அதிரடி அனாயாசத்தில் 22 பந்துகளில் 5 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 39 ரன்களையும், மார்டின் கப்தில் 50 ரன்களையும், கிராண்ட் எலியட் (15 பந்தில் 32 ரன்கள்), லூக் ரோங்கி (33, 16 பந்துகள், 2 பவுண்டரி 3 சிக்சர்கள்) ஆகியோர் கடைசியில் பின்னி எடுக்க நியூஸிலாந்து தங்களது 2-வது அதிக ஒருநாள் ஸ்கோரான 398 ரன்களை எடுத்தது.

 

இலக்கைத் துரத்தும் போது, இங்கிலாந்து இன்னிங்சில் 37 பந்துகளில் 54 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. 3 விக்கெட்டுகள் கையில் இருந்தன. பவர் ஹிட்டர்களான அடில் ரஷீத், லியாம் பிளங்கெட் ஆகியோர் கிரீசில் இருந்தனர். ஆனால் 50 நிமிடங்கள் மழை கொட்டிய பிறகு 13 பந்துகளில் 34 ரன்கள் என்று இலக்கு மாறியது.

முன்னணி பவுலர்கள் ஓவர்கள் முடிந்து விட நேதன் மெக்கல்லம் எஞ்சியிருந்தார். அவரை பார்வையாளர் பகுதிக்கு ஒரு சிக்சர் அடித்தார் பிளங்கெட், பிறகு 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்த பிளங்கெட்டை, நேதன் மெக்கல்லம் வீழ்த்தினார்.

 

 

திருப்பு முனை ஏற்படுத்திய எல்லைக் கோடு அருகே அபாரமான கேட்ச்:

ரஷீத் 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்திருந்த போதுதான், நியூஸிலாந்தின் அற்புதமான பீல்டிங் திறமை வெளிப்பட்டது, இது வெற்றிக்கு வித்திட்டது.

கடைசி ஓவருக்கு முதல் ஓவரின் கடைசி பந்தை அடில் ரஷீத் சிக்சருக்குத் தூக்கினார். பந்து லாங் ஆனை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சவுதீ நீண்ட தூரம் கவர் செய்து இருகைகளாலும் பந்தை பிடிக்கும் நிலையில் தான் எல்லைக்கோட்டுக்கு வெளியே சென்று விடுவோம் என்று உணர்ந்த சவுதீ, சமயோசிதமாக லாங் ஆஃபிலிருந்து அங்கு ஓடி வந்த போல்ட் அருகில் நிற்க அவரிடம் தட்டி விட்டார். போல்ட் கேட்சைப் பிடிக்க இங்கிலாந்து கதை முடிந்தது.

 

போல்ட் அதனை ஒரு கையில் பிடித்தார். மிகவும் அற்புதமான கேட்ச், அதுவும் நெருக்கடி தருணத்தில் தோல்வி ஏற்படும் அழுத்தத்தில் மிகவும் அருமையான கேட்ச் இது. சர்வதேச மட்டத்தில் இதுவரை பிடிக்கப்பட்ட அற்புத கேட்ச்கள் பட்டியலில் இதற்கும் ஒரு இடம் நிச்சயம் உண்டு.

 

கடைசி 46-வது ஓவரை கிராண்ட் எலியட் வீசும்போது இங்கிலாந்து வெற்றிக்கு 24 ரன்கள் தேவை என்ற சாத்தியமாகாத நிலை ஏற்பட்டது.

 

ஒரே ஒருநாள் போட்டியில் 763 ரன்கள்! இங்கிலாந்தில் 2002-ம் ஆண்டு லார்ட்ஸில் அந்த ‘எபிக்’ துரத்தலில் இந்தியா வெற்றி பெற்ற போட்டியில் இருஅணிகளும் 651 ரன்கள் எடுத்ததே இங்கிலாந்து மைதானத்தில் அதிக பட்ச ரன் எண்ணிக்கையாகும்.

 

399 ரன்கள் இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ராய் (39), அலெக்ஸ் ஹேல்ஸ் (49 பந்தில் 54) ஆகியோர் 75 பந்துகளில் 85 ரன்கள் என்ற அபாரத் தொடக்கம் கொடுத்தனர். சவுத்தி, போல்ட்டால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

 

ஸ்பின்னர் சாண்ட்னர் வந்த பிறகு 3 பந்துகளில் ஹேல்ஸ், ரூட்டை காலி செய்தார்.

 

இயன் மோர்கன் அதிரடியில் ஏற்பட்ட வெற்றி வாய்ப்பு:

அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய 16-வது ஓவர் முடிவில் 100/3 என்ற நிலையில் கேப்டன் மோர்கனின் அபாரமான அதிரடி இங்கிலாந்து வெற்றி வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்தது. அவர் 47 பந்துகளில் 6 பவுண்டரிகள் 6 சிக்சர்களை விளாசி 88 ரன்கள் எடுத்தார்.

 

மோர்கனின் 6 சிக்சர்கள் வருமாறு: சாண்ட்னரை ஸ்லாக் ஸ்வீப் செய்து லாங் ஆனில் முதல் சிக்ஸ். பிறகு நேதன் மெக்கல்லமை இறங்கி வந்து நேராக சிக்ஸ். மீண்டும் நேதன் மெக்கல்லமை லாங் ஆனில் சிக்ஸ். சாண்ட்னரை நேராக சைட் ஸ்க்ரீன் மீது ஒரு சிக்ஸ். அதே ஓவரில் மீண்டும் அதே இடத்தில் ஒரு சிக்ஸ். பிறகு எக்ஸ்ட்ரா கவரில் ஒரு அருமையான சிக்ஸ்.

 

கடைசியில் 33-வது ஓவரில் மெக்லீனாகன் பந்தை மீண்டு சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் டீப் பாயிண்டில் கிராண்ட் எலியட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

ஒரு நேரத்தில் அன்று 61 பந்துகளில் சதம் அடித்து அதிவேக சதத்துக்கான இங்கிலாந்து சாதனை படைத்த ஜோஸ் பட்லர் சாதனையை மோர்கன் முறியடிப்பார் என்றே தோன்றியது.

 

பவர் பிளே முன்பு 35 ஓவர்களில் 273/5 என்று இருந்தது இங்கிலாந்து. போல்ட் மீண்டும் வந்து 38 பந்துகளில் 41 ரன்களுடன் அச்சுறுத்திய ஜோஸ் பட்லரை எட்ஜ் செய்ய வைத்தார். சாம் பைலிங்ஸையும் அடுத்ததாக வீழ்த்தினார். அதன் பிறகுதான் பிளங்கெட், ரஷீத் ஜோடி மிரட்டினர். அதனை சவுத்தி-போல்ட் இணை கேட்ச் முடிவுக்கு கொண்டு வந்தது.

நேதன் மெக்கல்லம் 9 ஓவர்கள் 86 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட். போல்ட், மெக்லீனாகன், சாண்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள்.

 

முன்னதாக இங்கிலாந்து பவுலர்களில் கிறிஸ் ஜோர்டான் 9 ஓவர்களில் 97 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மெக்கல்லம் இவரை ஒரே ஓவரில் 20 ரன்கள் விளாசியதிலிருந்து ஜோர்டானுக்கு நேரம் சரியில்லை. அதுவும் ஒரு ஷாட் கிரவுண்டுக்கு வெளியே சென்றது. டெய்லரும், வில்லியம்சனும் 121 ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். வில்லியம்ன்சன் 93 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்தில் அவுட் ஆனார். ஆனால் நோ-பால் என்று அம்பயர் கூறி பிறகு மாற்றிக்கொள்ளப்பட்டது.

 

ராஸ் டெய்லர் 119 ரன்களை விளாசினாலும் 7 மற்றும் 40 ரன்களில் வாய்ப்புகள் வழங்கினார். கடைசியில் எலியட், ரோங்கி 5 முறை எல்லைக்கோட்டுக்கு வெளியே அடிக்க நியூஸிலாந்து 398 ரன்கள் குவித்தது. இதற்கு முன்பாக அயர்லாந்துக்கு எதிராக 2008-ம் ஆண்டில் இதை விட அதிக ஸ்கோரை அடித்திருப்பதால் இது 2-வது அதிகபட்ச ஒருநாள் ஸ்கோர் ஆகும்.

 

ஆட்ட நாயகனாக ராஸ் டெய்லர் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-763-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7312487.ece

  • தொடங்கியவர்

வில்லியம்சன், டெய்லர் சதம்: நியூசி., அசத்தல் வெற்றி

 

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வில்லியம்சன், ராஸ் டெய்லர் சதம் அடித்து கைகொடுக்க நியூசிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

 

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றன. மூன்றாவது போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மார்கன், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.     

 

மார்கன் அரைசதம்: இங்கிலாந்து அணிக்கு ஜாசன் ராய் (9), அலெக்ஸ் ஹேல்ஸ் (23) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய ஜோ ரூட் (54), கேப்டன் மார்கன் (71) அரைசதம் கடந்தனர். ஜாஸ் பட்லர் (13), பில்லிங்ஸ் (34) சோபிக்கவில்லை. அடில் ரஷித் ‘டக்–அவுட்’ ஆனார். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் (68 ரன், 47 பந்து) தன்பங்கிற்கு அரைசதம் அடித்து கைகொடுத்தார். வில்லே (3), ஸ்டீவன் பின் (0) நிலைக்கவில்லை.     

 

இங்கிலாந்து அணி 45.2 ஓவரில் 302 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தீ, வீலர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.     

 

சூப்பர் ஜோடி: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு மார்டின் கப்டில் (2), கேப்டன் பிரண்டன் மெக்கலம் (11) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். பின் இணைந்த வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஜோடி இங்கிலாந்து பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபாரமாக ஆடிய வில்லியம்சன், ஒருநாள் அரங்கில் தனது 7வது சதத்தை பதிவு செய்தார். மறுமுனையில் அசத்திய ராஸ் டெய்லர், 14வது சதம் அடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 206 ரன்கள் சேர்த்த போது வில்லியம்சன் (118) அவுட்டானார். கிராண்ட் எலியாட் (5), சான்டர் (21) ஏமாற்றினர். பொறுப்பாக ஆடிய டெய்லர் (110) நம்பிக்கை தந்தார். லுாக் ரான்கி (13) சொதப்பினார்.

 

ஸ்டோக்ஸ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டிம் சவுத்தீ வெற்றியை உறுதி செய்தார். நியூசிலாந்து அணி 49 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சவுத்தீ (5), பென் வீலர் (3) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் வில்லே 3 விக்கெட் வீழ்த்தினார்.

 

இந்த வெற்றியின்மூலம், ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூசிலாந்து அணி 2–1 என முன்னிலை பெற்றது. நான்காவது போட்டி வரும் ஜூன் 17ல் நாட்டிங்காமில் நடக்கிறது.

 

http://sports.dinamalar.com/2015/06/1434303633/EnglandNewZealandCricketOneDayWilliamsonRossTaylor.html

 

  • தொடங்கியவர்

நியூசீலாந்து 349/7
v இங்கிலாந்து  97/0 (10/50 ov)

  • தொடங்கியவர்

 நியூசீலாந்து 349/7
v இங்கிலாந்து 145/2 (17.4/50 ov)

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 7 விக்கெட்டுக்களால் வெற்றி.

  • தொடங்கியவர்

மோர்கன், ரூட் சதங்களுடன் சாதனை ரன் துரத்தலில் இங்கிலாந்து வெற்றி

 

டிரெண்ட்பிரிட்ஜில் நேற்று நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து நிர்ணயித்த 350 ரன்கள் இலக்கை இங்கிலாந்து 44 ஓவர்களில் வெற்றிகரமாகத் துரத்தி நியூஸிலாந்தை வீழ்த்தியது.

 

இதன் மூலம் இங்கிலாந்து ஒருநாள் போட்டி ரன் விரட்டலில் புதிய உச்சத்தை எட்டி சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து துரத்தி வெற்றி பெற்ற அதிகபட்ச ரன்கள் இலக்கு இதுவே. 44 ஓவர்களில் வெறும் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அபார வெற்றியை ஈட்டியது.

 

முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 349 ரன்கள் விளாசியது. கேன் வில்லியம்ன்சன் மீண்டும் அபாரமாக ஆடி 90 ரன்கள் எடுத்ததோடு ஒருநாள் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்தார். கப்தில், எலியட் அரைசதங்கள் மற்றும் கடைசியில் சாண்ட்னரின் 19 பந்து 44 ரன்களினால் நியூஸிலாந்து கடைசி 8.3 ஓவர்களில் 99 ரன்களை விளாசி 349 ரன்களை எட்டியது.

 

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து ஹேல்ஸ், ராய் மூலம் 10.4 ஓவர்களில் 100 ரன்கள் அதிரடி தொடக்கம் கண்டது. 12.5 ஓவர்களில் 111/2 என்ற நிலையில் ஜோடி சேர்ந்த ஜோ ரூட், இயன் மோர்கன் ஜோடி சுமார் 27 ஓவர்களில் 198ரன்களை 3-வது விக்கெட்டுக்காகச் சேர்த்து சாதனை வெற்றியை பெற பங்களிப்பு செய்தது.

 

இயன் மோர்கன் 82 பந்துகளில் 12 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் 113 ரன்களை விளாசித் தள்ள, ஜோ ரூட் 97 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 106 ரன்கள் எடுத்தார். மோர்கன் அவுட் ஆகும் போதே ஸ்கோர் 39.1 ஓவர்களில் 309 ரன்கள் வந்து விட்டது. இவ்வளவு சுலபமாக 350 ரன்களை எந்த அணியாவது துரத்தியிருக்குமா என்பது சந்தேகமே. 44 ஓவர்களில் 350 ரன்கள் இலக்கு ஒன்றுமில்லாமல் ஆனது.

 

நியூஸிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் வீலர் 8 ஓவர்களில் 75 ரன்களை வாரி வழங்கினார். சவுத்தி 10 ஓவர்களில் 70 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். மெக்லீனாகன், ஹென்றி, சாண்ட்னர் என்று அனைவரும் ஓவருக்கு 7 ரன்களுக்கும் மேல் கொடுத்தனர். இங்கிலாந்து அடித்த மொத்த 11 சிக்சர்களில் வீலர் 4-ஐயும், ஹென்றி 4-ஐயும் விட்டுக் கொடுத்தனர். மொத்தம் 35 பவுண்டரிகளில் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் 32 பவுண்டரிகளை விட்டுக் கொடுத்தனர்.

 

மோர்கன், அதிவேகப் பவுலர் ஹென்றியை டீப் மிட்விக்கெட் ஸ்டாண்டுக்கு சிக்ஸ் அடித்து சதம் கண்டார். ஜோ ரூட்டுக்கு 9 ரன்களில் இருந்த போது ராஸ் டெய்லர் கேட்சைக் கோட்டை விட்டார். ஆனால் அவரது ஆட்டம் அதன் பிறகு தவறில்லாதது. மோர்கனை மெக்கல்லம் நெருக்கினாலும் அவர் நேராக அடித்த ஷாட்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஷார்ட் பிட்ச் பந்துகள் முறையாக எல்லைக்கோட்டுக்கு வெளியே அனுப்பப்பட்டன.

 

அலெக்ஸ் ஹேல்ஸ் தொடக்கத்தில் மிகவும் ஆக்ரோஷமாக ஆடினார், 38 பந்துகளில் 7 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 67 ரன்களை விளாசினார். ராய் 35 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் விளாசினார், இவர்தான் வீலரை நடந்து வந்து லாங் ஆனில் சிக்சர் தூக்க அதன் பிறகு ஹேல்ஸ் உட்புகுந்தார்.

இருவரும் ஆட்டமிழந்த பிறகு ராஸ் டெய்லர் விட்ட கேட்சைத் தவிர மோர்கனையும், ரூட்டையும் அடக்க முடியாது தவித்தது நியூஸிலாந்து.

 

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து அணியில் பிரெண்டன் மெக்கல்லம் தனது பாணியில் 31 பந்துகளில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 35 ரன்கள் எடுத்தார். மார்டின் கப்தில் 66 பந்துகளில் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 53 ரன்கள் எடுக்க இருவரும் இணைந்து 13 ஓவர்களில் 88 ரன்கள் தொடக்கத்தைக் கொடுத்தனர்.

 

ராஸ் டெய்லர் 42 ரன்களை எடுத்து கேன் வில்லியம்சனுடன் இணைந்து 101 ரன்களைச் சேர்த்தார். கிராண்ட் எலியட் 55 ரன்களையும், சாண்ட்னர் அதிரடி முறையில் 19 பந்துகளில் 44 ரன்களையும் எடுத்தனர். அடில் ரஷீத் என்பவரை தவறாக மோர்கன் கடைசியில் கொண்டு வர 24 ரன்கள் ஒரே ஓவரில் விளாசப்பட்டது.

 

ஆட்ட நாயகனாக இயன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார். இன்னும் ஒரு போட்டி மீதமுள்ளது. இப்போதைக்கு தொடர் 2-2 என்று சமன் ஆகியுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article7329473.ece

  • தொடங்கியவர்

தொடரை வென்றது இங்கிலாந்து: நியூசி., ஏமாற்றம்

 
Bairstow

செஸ்டர் லீ ஸ்டீரிட்: நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘டக்வொர்த் லீவிஸ்’ முறைப்படி வென்றது. இதன் மூலம் கோப்பை வென்று அசத்தியது. 

இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2–2 என சமநிலை வகித்தது. இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் ஐந்தாவது போட்டி செஸ்டர் லீ ஸ்டீரிட்டில் நடந்தது. ‘டாஸ்‘ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் ‘பவுலிங்’ தேர்வு செய்தார். 

கப்டில் அரை சதம்:

நியூசிலாந்து அணிக்கு கப்டில் (67), வில்லியம்சன் (50) அரை சதம் அடித்தனர். கேப்டன் பிரண்டன் மெக்கலம் (6) ஏமாற்றினார். ராஸ் டெய்லர் (47), எலியாட் (35) ஓரளவு கைகொடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேற, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 283 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஸ்டோக்ஸ் 3 விக்கெட் வீழ்த்தினார். 

பேர்ஸ்டோவ் அசத்தல்:

இதன் பின் மழையால் போட்டி பாதிக்கப்பட, இங்கிலாந்து அணிக்கு 26 ஓவரில் 192 ரன்கள் என இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. ஜேசன் ராய் (12) நிலைக்கவில்லை. சான்ட்னர் ‘சுழலில்’ ஹேல்ஸ் (1), ஜோ ரூட் (4), மார்கன் (0) சிக்கினர். இதன் பின் பேர்ஸ்டோவ், பில்லிங்ஸ் ஜோடி சிறப்பாக செயல்பட்டது. பேர்ஸ்டோவ் அரை சதம் எட்டினார். பில்லிங்ஸ் 41 ரன்களில் வெளியேறினார். பேர்ஸ்டோவ் 2 பவுண்டரி, ரஷித் ஒரு பவுண்டரி அடிக்க, இங்கிலாந்து அணி 25 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 192 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பேர்ஸ்டோவ் (83), ரஷித் (12) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் போர்ஸ்டோவ் வென்றார். 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 3–2 என கைப்பற்றியது.

http://sports.dinamalar.com/2015/06/1434866673/englandcricket.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.