Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோபா அமெரிக்கா கால்பந்து நாளை தொடக்கம் ;முதல் ஆட்டத்தில் சிலி- ஈகுவடார் மோதல்!

Featured Replies

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்க கால்பந்து: பிரேசில் அதிர்ச்சி தோல்வி

 

 

brazil, soccer

கான்சிபிசன்: கோபா அமெரிக்க கால்பந்து தொடரிலிருந்து பிரேசில் அணி வெளியேறியது. காலிறுதியில் பராகுவே அணியிடம் ‘பெனால்டி ஷூட்–அவுட்’ முறையில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. கான்சிபிசனில் நடந்த காலிறுதியில் பிரேசில், பராகுவே அணிகள் மோதின. கொலம்பியா அணிக்கு எதிரான லீக் போட்டியில் எதிரணி வீரர்களிடம் மோதலில் ஈடுபட்ட பிரேசில் வீரர் நெய்மருக்கு 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனால் இவர் இல்லாமல் பிரேசில் அணி களமிறங்கியது. 

முதல் பாதியில் 15வது நிமிடத்தில் பிரேசில் அணி வீரர் ராபின்கோ ஒரு கோல் அடித்தார். இதற்கு 72வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி கிக்’ வாய்ப்பில் எதிரணியின் கான்சலாஸ் கோல் அடித்து பதிலடி தந்தார். இதன் பின் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. கூடுதல் நேர முடிவில் போட்டி 1–1 என சமநிலையானது. இதனால் போட்டி ‘பெனால்டி ஷூட்–அவுட்’ முறைக்கு சென்றது. 

இதில் இரு அணிகளுக்கும் தலா 5 வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் முதல் வாய்ப்பில் பெர்னான்கோ (பிரேசில்), மார்டின்ஸ் (பராகுவே) கோல் அடித்தனர். அடுத்த வாய்ப்பில் பிரேசில் அணியின் எவர்டான் மட்டும் கோல் வாய்ப்பை தவறவிட்டார். மூன்றாவது வாய்ப்பில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க, பிரேசில் அணி 2–3 என பின்தங்கியது. நான்காவது வாய்ப்பில் இரு அணி வீரர்களும் ஏமாற்றினர். ஐந்தாவது வாய்ப்பில் பிலிப் (பிரேசில்), கான்சலாஸ் (பராகுவே) என இரு அணி வீரர்களும் கோல் அடித்தனர். முடிவில், பிரேசில் அணி 3–4 என ‘பெனால்டி ஷூட்–அவுட்’ முறையில் தோல்வியடைந்தது. 

http://sports.dinamalar.com/2015/06/1435472960/brazilsoccer.html

  • தொடங்கியவர்

துங்கா மீண்டும் 'க்ளீன் போல்ட்': பிரேசிலுக்கு ஐயோ! பராகுவே பராக்...பராக்!!

கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடந்த 4வது காலிறுதி ஆட்டத்தில் பிரேசில் அணி டைபிரேக்கரில் பராகுவே அணியிடம் பரிதாபமாக தோற்றது. பிரேசில் அணியின் பயிற்சியாளர் துங்கா, கடந்த 2010ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்கு பின், மீண்டும் சரிவை சந்தித்துள்ளார்.

BRE1.jpg

ஆட்டத்தின் முதல் பாதியில் பிரேசில் அணியின் ரொபின்ஹோ முதல் கோல் அடித்தார். 15வது நிமிடத்தில் அடிக்கப்பட்ட இந்த கோலால் பராகுவே அணி வீரர்கள் அதிர்ச்சியடைந்தாலும் கோல் வாங்காமல் இருக்க தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் முதல் பாதியில் பிரேசில் அணியால் மேற்கொண்டு  கோல் அடிக்க முடியவில்லை.

பிற்பாதி ஆட்டத்தில் பிரேசில் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 70வது நிமிடத்தில் பிரேசில் பெனால்டி ஏரியாவுக்குள் அந்த அணியின் கேப்டன் தியாகோ சில்வா பந்தை கையால் தடுத்தார். இதையடுத்து பராகுவே அணிக்கு சாதகமாக பெனால்டி வழங்கப்பட்டது. இந்த பெனால்டியை பராகுவே வீரர் கன்சாலஸ் கோலாக மாற்றினார். 90 நிமிட நேரமும் அதையடுத்து வழங்கப்பட்ட 30 நிமிட கூடுதல் நேர ஆட்டமும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

BRE2.jpg

இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்க டைபிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் பராகுவே அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 2வது முறையாக கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது. பெருத்த எதிர்பார்ப்புடன் இந்த தொடரில் பங்கேற்ற பிரேசில் அணி ஏமாற்றத்துடன் போட்டியை விட்டு வெளியேறியது.

BRE%281%29.jpg

கடந்த 2010 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணிக்கு இதே துங்காதான் பயிற்சியாளராக இருந்தார். அந்த தொடரின் காலிறுதியில் நெதர்லாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி தோற்கடித்தது.. இதையடுத்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து துங்கா விலகினார்.

அதற்கு பின், கடந்த உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் ஜெர்மனி அணி 7-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை துவம்சம் செய்தது. இதனால் அப்போது பயிற்சியாளராக இருந்து லூயீஸ் பிலிப் ஸ்காலாரி பதலி விலக நேரிட்டது. அதற்கு பின், கடந்த ஜுலை மாதம் பிரேசில் அணிக்கு பயிற்சியாளராக துங்கா மீண்டும் பொறுப்பேற்றார். எனினும் கோபா அமெரிக்கா தொடரில் பிரேசில் அணியால் ஜொலிக்க முடியவில்லை. பெரிய அளவில் நட்சத்திர வீரர்கள் பராகுவே அணியில் இல்லையென்றாலும் பிரேசில் அணிக்கு தண்ணி காட்டி கடைசியில் வெற்றியும் பெற்று விட்டது. துங்காவை பொறுத்த வரை இது மிகப் பெரிய தோல்விதான்.

வைரஸ் காய்ச்சலால் பிரேசில் தோற்றதாம் - துங்கா சாக்கு போக்கு

தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள துங்கா, ''  பிரேசில் அணியின் 15 வீரர்களுக்கு வைரஸ் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் வீரர்கள் தலைவலி, முதுகுவலியால் அவதிப்பட்டன. சிலர் வாந்தி எடுத்தனர். வில்லியன் முதல் பாதியிலேயே சோர்வடைந்து விட்டார். ரொபின்ஹோவும் பிற்பாதியில் சோர்வடைந்து விட்டார். இந்த வைரஸ் தாக்குதலால் முறையான பயிற்சியும் எடுக்க முடியவில்லை என தோல்விக்கு சாக்கு போக்கு கூறியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=48649

  • தொடங்கியவர்

இப்படி செய்தவருக்கு 3 போட்டிகளில் விளையாடத் தடை!

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் உருகுவே அணி சிலி அணியுடன் மோதியது. இந்த போட்டியின் போது உருகுவே அணியின் முன்னணி வீரர் எடிசன் கவானியின் பின்பக்கத்தில் தட்டி அநாகரீகமாக நடந்து கொண்டார் சிலி வீரர் கன்சாலா ஜாரா. இதனால் ஆத்திரமுற்ற எடிசன் கவானி, ஜாராவின் முகத்தில் தாக்க, எடிசன் கவானிக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.

jara.jpg

தொடர்ந்து லைன்ஸ்மேனிடம் சென்றும் எடிசன் கவானி தகராறில் ஈடுபட்டதால் மேலும் ஒரு மஞ்சள் அட்டை பெற்ற எடிசன் கவானி களத்தை விட்டு வெளியேற வேண்டியதாகி விட்டது. இந்த போட்டியில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் எடிசன் கவானியிடம் சிலி வீரர் கன்சாலா ஜாரா நடந்து கொண்ட விதம் குறித்து 'கான்மோபோல்' ஒழுங்கு கமிட்டி விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், கவானியிடம் ஜாரா நடந்து கொண்டது விளையாட்டுத் தன்மை இல்லாத செயல். இதனால் அவருக்கு 3 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது. மேலும் 7 லட்ச ருபாய் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

JARA%201%281%29.jpg

எனினும் களத்தில் அநாகரீகமாக நடந்து கொண்ட ஜாராவுக்கு சிலி ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். எடிசன் கவானியின் பின்பக்கத்தில் ஜாரா தட்டுவது போன்று தெருக்களில் ஓவியமாக தீட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

தடை விதிக்கப்பட்டதையடுத்து அரையிறுதி ஆட்டத்தில் ஜாரா விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளை நடைபெறவுள்ள முதல் அரையிறுதி ஆட்டத்தில் சிலி அணி பெரு அணியை எதிர்கொள்கிறது. மற்றொரு அரையிறுதியில் அர்ஜென்டினா& பராகுவே அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன.

http://www.vikatan.com/news/article.php?aid=48689

  • தொடங்கியவர்

28 ஆண்டுகளுக்கு பிறகு கோபா அமெரிக்கா தொடரின் இறுதி ஆட்டத்தில் சிலி!

சான்டியாகோ :கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில், சிலி அணி 2-1 என்ற கோல் கணக்கில்  பெரு அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

COP.jpg

சான்டியாகோ நகரில் நடந்த இந்த ஆட்டத்தில், 20வது நிமிடத்தில் பெரு வீரர் கர்லோஸ் சம்பரானாவுக்கு சிவப்பு அட்டை கிடைத்தது. சிலி வீரர் சார்லஸ் ஆர்கியூசின் முதுகில் மிதித்ததால், இந்த நேரடி சிவப்பு அட்டை வழங்கப்பட்டது. இதனால் மீதி 70 நிமிட நேர ஆட்டத்திலும் பெரு 10 வீரர்களுடன் விளையாட வேண்டியது இருந்தது.

COP1%282%29.jpg

முதல் பாதியின் 42வது நிமிடத்தில், எடுவாரா வர்காஸ் கோல் அடித்தார். அலெக்சிஸ் சான்ச்செஸ் கிராஸ் செய்த பந்து, பெரு கோல் கம்பத்தில் பட்டு, ரீபவுண்ட் ஆனது. இதனை வர்காஸ் மிக எளிதாக கோலுக்குள் தள்ளினார். பிற்பாதியில் 60 வது நிமிடத்தில் சிலி அணி, ஒரு 'சேம்சைட்' கோல் அடித்தது. மெடில் அடிந்த இந்த சேம்சைட் கோலால் ஆட்டம் 1-1 என்று சமனடைந்தது.

edu.jpg

சேம்சைட் கோலால் சோர்ந்து போன சிலி வீரர்கள், தாக்குதல் ஆட்டத்தை தீவிரமாக்கினர். இதற்கு அடுத்த நிமிடமே பதில் கிடைத்தது. 62வது நிமிடத்தில் வர்காஸ் 30 அடி தொலைவில் இருந்து அடித்த பந்து மிக நேர்த்தியாக சென்று பெரு அணியின் கோல் வலைக்குள் தஞ்சமடைந்தது. பதிலடி கொடுக்க பெரு அணி போராடினாலும் பலனளிக்கவில்லை. இறுதியில் சிலி அணி 2-1 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

கடந்த 1987ஆம் ஆண்டுக்கு பிறகு, கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்துக்கு  சிலி அணி தகுதி பெற்றுள்ளது.

http://www.vikatan.com/news/article.php?aid=48742

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா சாம்பியன் யார்?- வரலாறு படைக்கும் முனைப்பில் அர்ஜெண்டினா, சிலி அணிகள்

 
லயோனல் மெஸ்ஸி
லயோனல் மெஸ்ஸி

சிலியில் நடைபெற்று வரும் தென் அமெரிக்காவின் பிரபல கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா சாம்பியன்ஷிப் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சான்டியா கோவில் இன்று நள்ளிரவு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினாவும், சிலியும் மோதுகின்றன.

இந்த இரண்டு அணிகளில் எந்த அணி கோப்பையை வென்றா லும் அது வரலாறாகவே அமையும். அர்ஜெண்டினா கோப்பையை வெல்லும்பட்சத்தில் கோபா அமெரிக்கா போட்டியில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை 15 முறை கோப்பையை வென்ற உருகுவே யுடன் பகிர்ந்துகொள்ளும்.

மாறாக சிலி வெல்லும்பட்சத்தில் முதல்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்றைப் படைக்கும். 99 ஆண்டுகால பாரம்பரியமிக்க கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் சிலி அணி இதுவரை 4 முறை இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், அவை யனைத்தும் ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன. அதனால் இன்றைய ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் இன்றைய தினம் அந்த அணியின் வரலாற்றில் பொன்னாளாக அமையும்.

சொந்த மண்ணில் 70 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளை யாடும் சிலி அணி, இந்த வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக உள்ளது. ஆனால் அர்ஜெண்டினா அணியோ கடந்த 22 ஆண்டுகளில் எந்தவொரு பெரிய போட்டியிலும் சாம்பியனாகாததால் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது.

இதுதவிர கேப்டன் மெஸ்ஸி இதுவரை அர்ஜெண்டினாவுக்காக எந்த கோப்பையையும் வென்று தரவில்லை என்ற குறையும் உள்ளது. எனவே அர்ஜெண்டினா வீரர்கள் அவ்வளவு எளிதாக இந்த ஆட்டத்தை விட்டுவிடமாட்டார்கள். இதில் வெல்லும்பட்சத்தில் உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கண்ட தோல்விக்கு ஆறுதலாக அமையும் என அர்ஜெண்டின வீரர்கள் கருது வதால் இன்றைய ஆட்டம் கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.

அர்ஜெண்டினா தனது அரையிறு தியில் 6-1 என்ற கோல் கணக்கில் பராகுவேயையும், சிலி தனது அரையிறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் பெருவையும் தோற்கடித் துள்ளன. அர்ஜெண்டினா அணியைப் பொறுத்தவரையில் கேப்டன் மெஸ்ஸி, ஏஞ்ஜெல் டி மரியா, செர்ஜியோ அகிரோ, ஜேவியர் மாஸ்கெரனோ, மார்கஸ் ரோஜோ, கொன்ஸாலோ ஹிகுவெய்ன் என பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இவர்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுவர் கேப்டன் மெஸ்ஸிதான்.

சிலி அணியில் அலெக்ஸிஸ் சான்செஸ், ஆர்டுடோ விடால், ஜார்ஜ் வால்டிவியா, கோல் கீப்பர் கிளாடியோ பிராவோ, எட்வர்ட் வர்காஸ் என பலம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். சிலி கால்பந்து வரலாற் றைப் பொறுத்தவரை யில் தற்போதைய அணியே சிறந்த அணி யாகக் கருதப்படு கிறது. அதிக கோலடித் தவர்கள் வரிசையில் எட்வர்ட் வர்காஸ் 4 கோல்களுடன் முதலிடத்திலும், விடால் 3 கோல்களுடன் 2-வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியைப் பொறுத்த வரையில் வீரர்கள் அடிப்படை யிலும், புள்ளி விவரங்கள் அடிப்படையிலும் அர்ஜெண்டினா வுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்றாலும், கால்பந்து ஆர்வலர் களோ சிலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெறும் என கணித்திருக்கிறார்கள். அவர் களின் கணிப்பு பலிக்குமா அல்லது பொய்க்குமா என்பதைப் பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.

மெஸ்ஸி மீது எதிர்பார்ப்பு

இந்த சீசனில் ஐரோப்பிய சாம்பியன்ஷிப், லா லிகா ஆகியவற்றில் பார்சிலோனா கிளப்புக்கு வெற்றி தேடித்தந்த மெஸ்ஸி, கோபா அமெரிக்கா போட்டியில் தங்கள் நாட்டுக்கு வெற்றி தேடித்தருவார் என்ற நம்பிக்கையோடு அர்ஜெண்டினா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

கிளப் அளவிலான 480 போட்டிகளில் விளையாடியிருக் கும் மெஸ்ஸி 410 கோல்களை அடித்துள்ளார். அர்ஜெண்டினா வுக்காக 101 ஆட்டங்களில் விளை யாடி 46 கோல்களை அடித்திருக் கிறார். எனினும் பெரிய அளவிலான போட்டிகளில் மெஸ்ஸி பெரிய அளவில் கோலடிக்கவில்லை. கோபா அமெரிக்கா போட்டியில் இதுவரை ஒரு கோல் மட்டுமே அடித் துள்ளார்.

1993-ல் நடைபெற்ற கோபா அமெரிக்கா போட்டியில் அர்ஜெண் டினா சாம்பியன் ஆனபோது மெஸ்ஸியின் வயது 6. 2007-ல் கோபா அமெரிக்கா போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரேசிலிடம் அர்ஜெண்டினா தோற்றபோது மெஸ்ஸி அணியில் இடம்பெற்றி ருந்தார். அதன்பிறகு தொடர்ந்து விளையாடி வரும் மெஸ்ஸி, உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக உருவெடுத்தபோதும், தங்கள் நாட்டு அணிக்கு உலகக் கோப்பை உள்ளிட்ட பெரிய போட்டிகளில் வெற்றி தேடித்தந்த தில்லை. அந்த குறையை இந்த முறை தீர்ப்பாரா மெஸ்ஸி?

இதுவரை…

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜெண்டினாவும், சிலியும் இதுவரை 24 முறை மோதியுள்ளன. அதில் ஒருமுறைகூட சிலி வென்றதில்லை. 1916-ல் நடைபெற்ற முதல் கோபா அமெரிக்கா போட்டியின் இறுதிச்சுற்றில் அர்ஜெண்டினாவும், சிலியும்தான் மோதியுள்ளன. அதில் அர்ஜெண்டினா 6-1 என்ற கோல் கணக்கில் சிலியை தோற்கடித்து சாம்பியனாகியுள்ளது.

ஒட்டுமொத்த கால்பந்து வரலாற்றில் 57 முறை சிலியை வீழ்த்தியுள்ள அர்ஜெண்டினா, 21 ஆட்டங்களில் டிரா செய்துள்ளது. 6 ஆட்டங்களில் சிலியிடம் தோற்றுள்ளது. 1973-க்குப் பிறகு தற்போது வரையில் ஒரேயொரு முறை மட்டுமே அர்ஜெண்டினாவை வீழ்த்தியுள்ளது சிலி. அதாவது 2008-ல் சிலியில் நடைபெற்ற உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் சிலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினாவை வீழ்த்தியிருக்கிறது.

போட்டி நேரம்: இரவு 1.30

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ், சோனி கிக்ஸ்

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-சாம்பியன்-யார்-வரலாறு-படைக்கும்-முனைப்பில்-அர்ஜெண்டினா-சிலி-அணிகள்/article7386071.ece

  • தொடங்கியவர்

கோபா கால்பந்து: கோப்பையை வென்றது சிலி

messi, soccer

சாண்டியாகோ: கோபா அமெரிக்க கால்பந்து தொடரின் பைனலில் அர்ஜென்டினாவை தோற்கடித்த சிலி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது.

தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடக்கிறது. இதன் பைனலுக்கு கோப்பையை நடத்தும் சிலி அணியும், அர்ஜென்டினா அணியும் முன்னேறின. இன்று நடந்த பைனலில் மோதிய இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடின. ஆட்டம் தொடங்கியது முதல், கோல் அடிக்கும் முயற்சியில் இறங்கிய இரு அணிகளுக்கும் பலன் கிடைக்கவில்லை.

 முதல் பாதியில் கோல் அடிக்காத நிலையில், இரண்டாம் பாதி ஆட்டமும் கோல் ஏதுமின்றி 0-0 என்ற சமநிலையில் இருந்தது. இதனையடுத்து ஒதுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனையடுத்து போட்டி பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு சென்றது.

ஹூரோ பிராவோ: பெனால்டியில் சிலி அணியின் பெர்னான்டஸ், விடல், அரன்குயஸ், அலெக்சிஸ் கோல் அடித்து அசத்தினர். அர்ஜென்டினா அணியின் முதலாவதாக வந்த மெஸ்சி மட்டும் கோல் அடிக்க, அடுத்து வந்த ஹூய்ஜெய்ன், பனேகா இருவரும் தங்கள் வாய்ப்பை வீணடித்தனர். சிலி அணியின் கோல்கீப்பர் பிராவோ திறமையாக செயல்பட்டு கோல் வாய்ப்பை தடுத்தார். இறுதியில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை தோற்கடித்து, கோபா அமெரிக்க கோப்பையை முதல் முறையாக முத்தமிட்டது.

1
அர்ஜென்டினாவை வீழ்த்திய சிலி அணி, கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் முதன்முறையாக கோப்பை வென்று சாதித்தது. இதுவரை 5 முறை பைனலுக்கு முன்னேறிய சிலி அணி, ஒரே ஒரு முறை (2015) மட்டும் வெற்றி பெற்றது. நான்கு முறை (1955, 56, 79, 87) பைனலில் தோல்வி அடைந்து 2வது இடம் பிடித்தது.

http://sports.dinamalar.com/2015/07/1435942827/messisoccer.html

  • தொடங்கியவர்

கோபா அமெரிக்கா கால்பந்து - 3-வது இடத்தைப் பிடித்தது பெரு: 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை தோற்கடித்தது

 
 
3-வது இடத்தைப் பிடித்த மகிழ்ச்சியில் பெரு அணியினர். படம்: ராய்ட்டர்ஸ்.
3-வது இடத்தைப் பிடித்த மகிழ்ச்சியில் பெரு அணியினர். படம்: ராய்ட்டர்ஸ்.

சிலியில் நடைபெற்று வரும் தென் அமெரிக்காவின் பிரபல கால்பந்து போட்டியான கோபா அமெரிக்கா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியைத் தோற்கடித்து 3-வது இடத்தைப் பிடித்தது.

கான்செப்சியூன் நகரில் நடந்த இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் பெரு அணிக்கு கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. கார்னரில் இருந்து கிறிஸ்டியான் கியூவா உதைத்த பந்தை கோல் கம்பத்தின் முன்னால் நின்ற ஸ்டிரைக்கர் பாலோ கெரேரோ தலையால் முட்டி கட்டுக்குள் கொண்டு வந்தார். அப்போது பந்து மிட்பீல்டர் ஆன்ட்ரே கேரில்லோ வசம் சென்றது. அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட கேரில்லோ கோலடிக்க, பெரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதன்பிறகு பராகுவே அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பு நூலிழையில் நழுவ, 89-வது நிமிடத்தில் வலது புறத்தில் இருந்து வந்த கிராஸ் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பாலோ கெரேரா அசத்தலாக கோலடிக்க, பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியைத் தோற்கடித்தது.

தொடர்ந்து 2-வது முறையாக 3-வது இடத்தைப் பிடித்துள்ளது பெரு. கடந்த முறை வெனிசுலாவை வீழ்த்தி 3-வது இடத்தைப் பிடித்தது பெரு.

டாப் ஸ்கோரை நோக்கி...

பெரு அணியின் நட்சத்திர முன்கள வீரரான பாலோ கெரேரோ இந்த கோபா அமெரிக்கா போட்டியில் இதுவரை 4 கோல்களை அடித்துள்ளார். தற்போதைய நிலையில் அதிக கோலடித்தவர்கள் வரிசையில் சிலியின் எட்வர்டோ வர்காஸுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார் கெரேரோ.

இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் சிலியும், அர்ஜெண்டினாவும் மோதுகின்றன. இதில் வர்காஸ் கோல் எதுவும் அடிக்காதபட்சத்தில் அவருடன் அதிக கோலடித்தவர் என்ற பெருமையை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு கெரேரோவுக்கு கிடைக்கலாம். கடந்த கோபா அமெரிக்கா போட்டியில் கெரேரோ 5 கோல்களுடன் முதலிடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர நேற்றைய கோலோடு சேர்த்து பெரு அணிக்காக 25 கோல்களை அடித்துள்ளார் கெரேரோ. அவர் இன்னும் ஒரு கோலடிக்கும் பட்சத்தில் பெரு அணிக்காக அதிக கோலடித்தவர் என்ற சாதனையை டீபிலோ கியூபிலாஸுடன் பகிர்ந்துகொள் வார்

http://tamil.thehindu.com/sports/கோபா-அமெரிக்கா-கால்பந்து-3வது-இடத்தைப்-பிடித்தது-பெரு-20-என்ற-கோல்-கணக்கில்-பராகுவேயை-தோற்கடித்தது/article7388970.ece

மெஸ்சி–மாரடோனா ஒப்பிடலாமா

messi, soccer

சான்டியாகோ: சிலி அணிக்கு எதிரான கோபா அமெரிக்க கால்பந்து பைனலில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரரும் கேப்டனுமான மெஸ்சியின் ஆட்டம் எடுபடவில்லை. பார்சிலோனா கிளப் அணிக்காக அசத்தும் இவர், சர்வதேச கால்பந்து போட்டிகளில் பெரிய அளவில் சோபிப்பதில்லை. சர்வதேச போட்டிகளில் 1020 நிமிடங்களுக்கு மேலாக ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

கடந்த 1986ல் நடந்த உலக கோப்பை தொடரில் தனிநபராக அசத்திய ஜாம்பவான் மாரடோனா, அர்ஜென்டினாவுக்கு சாம்பியன் பட்டம் பெற்று தந்தார். இவரோடு ஒப்பிட்டு பேசப்படும் மெஸ்சி, கடந்த உலக கோப்பை பைனலில் ஜெர்மனியிடம் தோற்று வாய்ப்பை வீணாக்கினார். தற்போது கோபா தொடரிலும் கோப்பை கைப்பற்ற தவறினார். இவ்விரு தொடரிலும் அணியை பைனல் வரை அழைத்து வந்தார். 

புள்ளிவிவரங்களின்படி மாரடோனாவை மெஸ்சி முந்துகிறார். இவர் 103 சர்வதேச போட்டிகளில் 46 கோல் அடித்துள்ளார். மாரடோனா 34 போட்டிகளில் 91 கோல் தான் அடித்துள்ளார்.

கிளப் அளவில் மெஸ்சி 412 கோல்(482 போட்டி) மற்றும் மாரடோனா 312 கோல்(588 போட்டி) அடித்துள்ளனர். மெஸ்சி 4 முறை ‘பிபா’ சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இந்த பெருமை மாரடோனாவுக்கு ஒரு முறை மட்டுமே கிடைத்தது. மெஸ்சியை பொறுத்தவரை தனிப்பட்ட முறையில்  சிறப்பாக செயல்படுகிறார். ஹிகுவேன் போன்ற சக வீரர்கள் இவருக்கு கைகொடுக்க தவறுகின்றனர். நல்ல அணி அமையும் பட்சத்தில் பெரிய தொடர்களில் மெஸ்சி நிச்சயம் கோப்பை வெல்வார். பீலே, மாரடோனா போன்ற வீரர்களின் வரிசையில் கண்டிப்பாக இடம் பிடிப்பார் என அர்ஜென்டினா ரசிகர்கள் நம்புகின்றனர்.-----

ரசிகர்கள் தாக்குதல்

வெற்றி ஆர்ப்பரிப்பில் சிலி ரசிகர்கள் சிலர் அரங்கில் இருந்த அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சியின் சகோதரர் ரோட்ரிகோ மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீசார் தலையிட்டு  மெஸ்சியின் குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

http://sports.dinamalar.com/2015/07/1436118407/messisoccer.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.