Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதிய அர­சாங்­கத்­துக்கு வழி­ச­மைத்த போதிலும் எமது மக்­களின் கனவு தவி­டு­பொ­டி­யா­கி­விட்­டது : செல்வம் எம்.பி.

Featured Replies

Selvam-Adaikalanathan.jpg
 
படு­கொலை, வெள்ளை வேன் கலா­சாரம், காணாமல் போதல் மற்றும் வடக்கு, கிழக்கு மக்­களை மிரு­கங்­க­ளை­விட மிகக் கேவ­ல­மாக நடத்­தி­யமை போன்ற கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்­களை விரட்­டி­ய­டித்து புதிய ஆட்சி மலர்­வ­தற்கு வழி­ச­மைத்தோம். இருப்­பினும் புதிய ஆட்­சியில் எமது மக்­களின் கனவும் தவி­டு­பொ­டி­யா­கி­விட்­டது. முன்­னைய கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்­களை விமர்­சித்­த­து­போன்று புதிய ஆட்­சி­யா­ளர்­க­ளையும் தட்டிக் கேட்கும் பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப் பிற்கு இருக்­கின்­றது என்று கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்தார்.
 
தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பா­னது வடக்குஇ கிழக்கு தமிழ் மக்­களை சூடேற்றி அவர்­களின் இரத்­தத்தை கொதிப்­ப­டைய செய்­வ­தாக இங்கு உறுப்­பினர் ஒருவர் கூறு­கின்றார். நாம் கூறு­கின்ற கதை­களால் எமது மக்கள் சூடே­று­வ­தற்கும் இரத்தம் கொதிப்­ப­டை­வ­தற்கும் அவர்கள் முட்­டாள்கள் அல்ல. அத்­துடன் சிந்­திக்கத் தெரி­யா­த­வர்­களும் அல்லர். ஏமா­ளி­களும் இல்லை என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
பாராளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை அமர்­வின்­போது இடம்­பெற்ற அர­சாங்­கத்தின் 100 நாள் வேலைத் திட்­டத்தின் மீதான சபை ஒத்­தி­வைப்பு வேளையில் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி. அங்கு மேலும் கூறு­கையில்,
 
கொடுங்கோல் ஆட்­சி­யா­ளர்­க­ளையும் வெள்ளை வேன் கலா­சா­ரத்தை மேற்­கொண்­ட­வர்­க­ளையும் சிறைச்­சா­லை­களில் சிறைக்­கை­தி­களை படு­கொலை செய்த மற்றும் காணா­மல்­போதல் ஆகி­ய­வற்­றுக்கு கார­ண­மா­ன­வர்­க­ளையும் வடக்குஇ கிழக்கில் எமது மக்­களை மிரு­கங்­களை விட மிக­மோ­ச­மாக நடத்­தி­ய­வர்­க­ளையும் இல்­லாது செய்து புதிய அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளித்­ததில் என்ன தவறு இருக்­கி­றது? எனக் கேட்க விரும்­பு­கின்றேன்.
 
புதிய அர­சாங்­கத்தை நாம் அமைத்த போதிலும் எமது மக்­களின் கன­வுகள் தவி­டு­பொ­டி­யா­கி­விட்­டன என்­ப­தையும் கூற­வேண்டும். நாம் மஹிந்த அர­சாங்­கத்­தையும் வெளிப்­ப­டை­யாக விமர்­சித்­தி­ருந்தோம். புதிய ஆட்சி மலர்ந்­தி­ருக்­கின்ற போதிலும் எமது மக்­க­ளுக்கு எந்த நன்­மையும் கிட்­டி­வி­ட­வில்லை. அதே­போன்று புதிய அர­சாங்­கத்தின் வெற்­றிக்கு கார­ண­மா­ன­வர்கள் என்ற வகையில் எமக்கு இழைக்­கப்­ப­டு­கின்ற அநீ­திகள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வாய்­மூ­டி­யதா­கவும் வல்­ல­மை­யற்றும் இருந்­து­விடப் போவ­தில்லை.
 
இன்று இன்­றைய ஆட்சி குறித்து பேசு­கின்­ற­வர்கள் அனு­ரா­த­புரச் சிறைச்­சா­லையில் ஒருவர் கொல்­லப்­பட்டார். அந்தத் தரு­ணத்­திலும் போரின்­போது இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­ட­வர்கள் காணா­மல்­போன போதும் இவர்கள் எதுவும் பேச­வில்லை. ஆனால் நாம் அன்றும் எமது மக்­க­ளுக்­காக குரல் கொடுத்தோம் இன்றும் குரல் கொடுத்­துக்­கொண்­டி­ருக்­கிறோம். காணா­மல்­போனோர் தொடர்பில் எமது உற­வுகள் ஒரு­வேளை உண­வைக்­கூட நிம்­ம­தி­யாக உண்­ப­தற்கு முடி­யா­த­வர்­க­ளாக உள்­ளனர். இன்றும் சிறைச்­சா­லை­க­ளுக்குச் சென்று தமது உற­வு­களைத் தேடி வரு­கின்­றனர். இவ்­வாறு தேடப்­ப­டு­ப­வர்கள் இருக்­கின்­ற­னரா இல்­லையா என்­பது குறித்து அர­சாங்கம் கூற­வேண்டும். காணா­மல்­போ­ன­வர்கள் தொடர்பில் முன்­னைய அர­சாங்­கத்­திலும் நியாயம் கிடைக்­க­வில்லை. புதிய அர­சாங்­கத்­திலும் கனவு தவிடுபொடியாகிவிட்டது.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வடக்குஇ கிழக்கு தமிழ் மக்களை சூடேற்றி அவர்களின் இரத்தத்தை கொதிப்படைய செய்வதாக இங்கு உறுப்பினர் ஒருவர் கூறுகின்றார். நாம் கூறுகின்ற கதைகளால் எமது மக்கள் சூடேறுவதற்கும் இரத்தம் கொதிப்படைவதற்கும் அவர்கள் முட்டாள்கள் அல்ல. அத்துடன் சிந்திக்கத் தெரியாதவர்களும் அல்லர். ஏமாளிகளும் இல்லை என்றார்.
 

கூட்டமைப்பு சொல்லித்தான் மக்கள் போடுகின்றார்கள் என்பது வெறும் பம்மாத்து ....எங்கள் மக்கள் தெளிவாகத்தான் உள்ளார்கள் ..காலத்துக்கு ஏற்றால் போல அவர்களால் வாக்கு போட முடியும் .... யாரும் இதற்கு உரிமை கொண்டாட முடியாது ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.