Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரதமரின் யோசனையால் யாழில் உறுப்பினர் தொகை குறையும்

Featured Replies

அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்ற அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்­டத்­தினால் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.
 
 
ஆகையால் இது தொடர்பில் பங்­காளிக் கட்­சி­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யதன் பின்னர் திருத்­தங்­களை முன்­வைக்­க­வுள்­ள­தாக ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச் செய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார்.
 
இலங்­கையின் வர­லாற்றின் அடிப்­ப­டையில் பாரா­ளு­மன்­ற உறுப்பினர்களின் எண்­ணிக்கையை அதி­க­ரிப்­பது என்­பது பெரிய விட­ய­மல்ல. சனத்­தொகை வளர்ச்­சிக்­கேற்ப உறுப்­பினர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­பட வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.
 
மேலும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்த யோச­னை­யினால் யாழ்ப்­பா­ணத்தின் உறுப்­பினர் தொகை குறை­வ­டையும் அபாயம் உள்­ளது. அத்­தோடு மாத்­த­றை­யிலும் அந்த நிலை­மையே காணப்­ப­டு­வ­தா­கவும் அவர் சுட்­டிக்­காட்­டினார்.
 
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
100 நாள் வேலைத்­திட்­டத்தின் பிர­காரம் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்­தி­னூடாக தேர்தல் முறைமை மறு­சீ­ர­மைப்­பி­னையும் உள்­ள­டக்­கு­மாறே அர­சாங்­கத்­தி­டம கோரினோம். அதுவே மக்­க­ளுக்கு வாக்­கு­றுதி அளிக்­கப்­பட்ட 100 நாள் வேலைத் திட்டத்­திலும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்ளது. எனினும் அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை.
 
எவ்­வா­றா­யினும் தேர்தல் மறு­சீ­ர­மைப்­பினை 20 ஆவது திருத்­தச்­சட்­ட­மாக பாரா­ளு­மன்­றத்தில் சமர்­ப்பிக்­க­வுள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­ய­ளித்தார். இதன்­படி தற்­போது அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தச்­சட்டத்திற்கு தற்­போது அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது.
 
எனினும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யினால் முன்­வைக்­கப்­பட்ட யோசனை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.மாறாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் முன்­வைக்­கப்­பட்ட திருத்­தமே ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டுள்ளது. இதன்­ பி­ர­காரம் பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்­களின் எண்­ணிக்கை 225 ஆக திருத்­தப்­பட்­டுள்­ளது. இந்த திருத்­த­த்தினால் சிறு­பான்­மை­யின கட்­சி­க­ளுக்கும் சிறிய அர­சியல் கட்­சி­க­ளுக்கும் பெரு­ம­ளவில் அநீதி இழைக்­கப்­பட்­டுள்­ளது.
 
தேர்தல் மறு­சீ­ர­மைப்புக் குழு என்ற வகையில் அனைத்துக் கட்­சி­க­ளு­டனும் சிவில் அமைப்­பு­க­ளுடன் கலந்­து­ரை­யா­டி­யதன் பின்­னரே பாரா­ளு­மன்ற ஆச­னங்­களின் தொகையை 255 ஆக அதி­க­ரித்தோம்.
 
இருந்தபோதிலும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தொகை 255 ஆக மாற்றம் செய்­தமை நாட்­டுக்கு உகந்­த­தல்ல என ஐக்­கிய தேசியக் கட்சி வாதா­டு­கி­றது.அவ்­வா­றாயின் 1977 ஆம் ஆண்டு 170 ஆச­னங்­களைக் கொண்ட பாரா­ளு­மன்­றத்தின் ஆச­னங்களின் எண்­ணிக்­கையை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜய­வர்­த்தன 225 ஆக அதி­க­ரித்தார். எனினும் அதன்போது எந்­த­வொரு எதிர்ப்பும் தெரி­விக்­க­வில்லை. இந்­நி­லையில் தற்­போது சனத்­தொ­கை­யா­னது இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ளது. அவ்­வா­றாயின் அதற்­கேற்றால் போல் பாரா­ளு­மன்­றத்தின் உறுப்­பினர் தொகையும் அதிக்­க­ரிக்­கப்பட வேண்டும்.
 
இதன்­ பி­ர­கா­ரமே அனைத்துக் கட்­சி­களின் ஆலோ­ச­னையை பெற்று 255 ஆக ஆச­னங்களின் எண்­ணிக்­கையை அதி­க­ரித்தோம். எனவே இன்று வெள்­ளிக்­கி­ழமை இது தொடர்பில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் விசேட பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளோம். அதன் பின் இது குறித்­தான திருத்­தங்­களை முன்­வைப்போம்.
 
குறித்த திருத்­த­ச் சட்­டத்தை நிறை­வேற்­றுவோம். இந்­நி­லையில் அர­சி­ய­ல­மைப்பு பேர­வைக்கு நாம் அனு­மதி வழங்க தீர்மானித்துள்ளோம். இதன்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டு அதன் செயற்பாடுகள் தொடரும். இதன்போது ஊடகவியலாளரினால் கேள்வியெழுப்பப்பட்ட போது பதிலளித்த அநுர பிரியதர்ஷன யாப்பா,
 
கேள்வி – முன்னைய ஆட்சியின் போது ஏன் தேர்தல் முறைமை, ஜனாதிபதி முறைமையை மறுசீரமைக்கவில்லை?
 
பதில் – அந்த காரணத்தினாலேயே நாம் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றோம். எவ்வாறாயினும் 20 ஆவது திருத்தத்தை நாமே நிறைவேற்றுவோம் என்றார்
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.