Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – என்கிறார் கோத்தா

Featured Replies

தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லையாம் – என்கிறார் கோத்தா  

JUN 15, 2015 | 1:22

by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள்

gotabhaya-rajapakse-300x200.jpgதேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக தம்மால் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது என்றும், தமக்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைப்பதில்லை என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பாதுக்க, உடுமுல்ல ஆலயத்துக்குச் சென்றிருந்த கோத்தாபய ராஜபக்சவிடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாழ்வதை தாம் உறுதி செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அரசியலுக்கு வருவீர்களா என்று  எழுப்பிய கேள்விக்கு, கோத்தாபய ராஜபக்ச, தாம் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

வடக்கில், 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த வெள்ளிக்கிழமை மாத்தறையில் நடந்த மகிந்த ஆதரவு அணியின் கூட்டத்துக்கு முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அனுப்பி வைத்திருந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே, மறுநாள் பாதுகாப்புத் தொடர்பான புலனாய்வு அறிக்கைகள் தமக்கு கிடைப்பதில்லை என்றும், எனவே தேசிய பாதுகாப்பு குறித்து கருத்துக் கூற முடியாது என்றும் கோத்தாபய ராஜபக்ச கூறியிருக்கிறார்.

http://www.puthinappalakai.net/2015/06/15/news/6953

 

மக்களின் அச்சமே உங்களால் தானே , பொறுக்கிங்க .... எல்லா பாதக  செயலையும் செய்தது இந்த கும்பல் தானே ..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.