Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

பேராதனை பல்கலைக்கழக மாணவி பானுசா சிவப்பிரகாசம் தற்கொலை தொடர்பினில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் புலனாய்வு கட்டமைப்பின் முன்னாள் பணிப்பாளர் ஹெந்தவிதாரண ஆகியோரினை பங்காளிகளாக கொண்ட டாண் தொலைக்காட்சி குழும ஊடகவியலாளர் ஒருவர் தேடப்படுகின்றார்.

அர்ஜீனன் கோவிந்தபிள்ளை என்றழைக்கப்படும் குறித்த நபர் தன்னையொரு ஊடகவியலாளர் எனவும் தன்னை காவல்துறையோ எவருமோ ஒன்றும் செய்யமாட்டாதெனவும் சவால் விடுத்தே பாலியல் துண்புறுத்தல்களை செய்திருந்ததாக தெரியவருகின்றது.

 

முகப்புத்தகம் மற்றும் கைதொலைபேசி ஊடாக விடுக்கப்பட்ட தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாகவே குறித்த மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளமை விசாரணைகளினில் கண்டறியப்பட்டுள்ளது.

மாணவியின் தற்கொலையினையடுத்து குறித்த நபர் தலைமறைவாகியிருப்பதாக கூறப்படுகின்றது.ஏற்கனவே குறித்த யுவதியின் தாயாhர் மற்றும் தந்தையார் நேரடியாக குறித்த நபரது வீட்டிற்கு சென்று பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை கைவிடுமாறு கோரியபோதும்  அவர்களை மிரட்டி விரட்டியடித்துள்ளனர்.

தலைமறைவான .அர்ஜீனன் கோவிந்தபிள்ளை பாதுகாப்பு கருதி டாண் தொலைக்காட்சி அலுவலகத்தினுள் பதுங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே குறித்த செய்தி நிறுவனத்தின் செய்தி ஆசிரியர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளமை தெரிந்ததே.  http://www.pathivu.com/news/41133/57//d,article_full.aspx

Edited by நிழலி
இறந்தவரது படம் நீக்கம்

கிளிநொச்சியில் மகள் தற்கொலை! கதறி அழும் தாய் வெளியிடும் பரபரப்புத் தகவல்…
பெரதேனியா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்ற மாணவி பானுசா சிவப்பிரகாசா நேற்று முன்தினம் காலை (ஜுன் 24, 2015) பளை, கரந்தாயில் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதற்கான காரணங்களாக, நம்பகமாக கிடைத்த குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கொடுத்த தகவல்கள் வருமாறு.
தற்கொலை செய்த மாணவி பானுசாவின் மீது சாவச்சேரி, சங்கத்தானையை சேர்ந்த அர்ஜூனன் கோவிந்தப்பிள்ளை எனும் இளைஞன் ஒரு தலைக்காதல் வளர்த்துள்ளார்.
இவர் இலங்கையில் இயங்கும் ஒரு மீடியாவில் வேலை புரிவது குறிப்பிடத்தக்கது. இதற்கு பானுசா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
ஒரு நாள் திடிரென இந்த இளைஞன் தன் நண்பர்களுடன் பானுசா கல்வி கற்கும் பெரதேனியா பல்கலைகழகம் சென்று அவருடன், அவரின் நண்பிகள் முன்னிலையில் வாக்குவாதம் புரிந்துள்ளார்.
பானுசாவும் ஏன் இவ்வாறு கீழ்த்தரமாக நடக்கிறாய் எனத் கேட்டுள்ளார். அதனை பொருட்படுத்தாத அந்த இளைஞன், பானுசாவின் தொலைபேசியை பறித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார்.
பானுசாவின் முகப்புத்தகத்தை அவரின் தொலைபேசியிலிருந்தே அவர் போல் பாவிக்க தொடங்கியதுடன் பானுசாவின் உறவினர்களுக்கு தனக்கும் பானுசாவுக்கும் தப்பான உறவு உள்ளதாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
தொலைபேசி பறிபோனதும் பானுசாவின் தந்தையும், அக்காவும் அர்ஜூனன் வீட்டுக்கு போயுள்ளார்கள். அங்கு சென்று நியாயம் கேட்ட போது அர்ஜினன் வேலைக்கு சென்று விட்டார் எனவும் இரவு தான் வீட்டிற்கு வருவார் எனவும் அர்ஜினனின் தந்தை தெரிவித்துள்ளார்.
அத்தோடு தனக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாகவும், தனது மகன் மீடியாவில் வேலை செய்வதாலும் தான் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதியின் தந்தையை கடத்துவாரெனவும் மிரட்டியுள்ளார்.
அவர்கள் மேலும் கோவிந்தபிள்ளையிடம் தாங்கள் முகப்புத்தகத்தை நிறுத்தினாலும் உங்கள் மகன் மீண்டும் அக்டிவேட் செய்து சொந்தக்காரருக்கு தப்பான மெசேஜ் அனுப்புகிறார்.
தொலைபேசியை தராவிட்டாலும் பரவாயில்லை. அவ்வாறு கீழ்த்தரமான வேலைகளை செய்யவேண்டாம் என கெஞ்சியுள்ளனர். கோவிந்தபிள்ளை அவர்களை மிரட்டி வெளியேற்றிவிட்டார்.
அர்ஜூனன் அனுப்பிய மெசேஜ்கள் உறவினர்கள் முகப்புத்தகங்களில் உள்ளது. அவர்கள் ஏன் இப்படி கேவலமாக மெசேஞ் பண்ணுகிறீர்கள் எனக் கேட்ட போது தான் அப்படிதான் பண்ணுவன்.
இதில் என்ன தப்பு இருக்கிறது என பதில் அனுப்பியுள்ளார். பெண் பிள்ளையின் விடயம் என்றதால் தாம் காவல் நிலையம் செல்லவில்லை என பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
பானுசாவின் குடும்பத்தினர், முகப்புத்தக நிறுவனத்துக்கு பல தடவை இப்படி ஒரு நபர் பானுசாவின் முகப்புத்தகத்தை தவறாக பயன்படுத்துகிறார். தாங்கள் பாஸ்வேட் மாற்றம் மற்றும் டிஅக்டிவேசன் எல்லாம் செய்தும் அவர் தொலைபேசியை வைத்திருப்பதால் அக்டிவேட் பண்ணுகிறாரென பலதடவை மெசேஜ் பண்ணியுள்ளார்கள்.
துர் அதிஸ்டவசமாக பானுசா தூக்கிட்ட அன்றே அவரது முகப்புத்தகத்தையும் முகப்புத்தக நிறுவனம் நிரந்தரமாக டிஅக்டிவேட் செய்துள்ளது.
 
இதற்கிடையில் அவமானம் தாங்க முடியாமல் அந்த மாணவி அவசரமான் முடிவை எடுத்து விட்டார்.
பல்கலை கழக மாணவியின் இந்த அநியாயமான சாவுக்கு காரணம் என்ன?

 

தற்கால தொழில் நுட்பமா? இல்லை அதை தவறான வழியில் பயன்படுத்தும் இளைஞர்களா? இல்லை அந்த இளைஞர்கள் தப்பான வழியில் செல்லும் போது தட்டிக் கேட்காத அவர்களின் பெற்றோரா? இல்லை , செல்வாக்கினால் பொலிஸ், சட்டம் இவர்களை தண்டிக்காததா? இல்லை மானத்துக்கு பயந்த அப்பாவி மக்களா?
2012-04-07 இவ்வளவு சாட்சிகள் இருந்தும் இன்னும் அர்ஜூனனை பொலிஸ் விசாரணைக்கேதும் கைது செய்யாதது கவலைக்குரியது.
அத்தோடு இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பயத்தை உருவாக்க வேண்டிய விடயம் மட்டுமன்றி காவாலிகள் உருவாக காரணமாகிறது.
 
தான் திருமணம் புரிந்த மனைவியே பிடிக்கவில்லையெனில் விவாகரத்து பெற சட்டம் உள்ளது. ஒருதலைக் காதலுக்கு ஒரு யுவதியை தற்கொலைக்கு தூண்டியது கொடூரம்.
 
காதலுக்காக உயிர் நீத்த காலம் மலையேறி இப்போ தாங்கள் காதலிப்பவர்கள் கிடைக்காவிடின் அவர்களை மாய்க்கும் கலிகாலம்.

 

வித்தியா, பானுசா என பெண்கள் பல வழிகளில் துஸ்பிரயோகம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரின் நிலை இத்தகைய காவாலிக்களுக்கிடையில் மரணப்போராட்டம் தான்.
Panuja 01
Panuja 02
Boy
Panuja
 

பானுசாவின் தற்கொலையும் அவிழ்க்கப்படாத முடிச்சுகளும் – குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலமும்...

பளை கராந்தாய் பகுதியை சேர்ந்த பெரதெனியா பல்கலைகழக மாணவியான 24 வயதுடைய, பானுசா சிவப்பிரகாசு என்பவர் கடந்த 24ம் திகதி தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

மாணவியின் தற்கொலைக்கு சாவகச்சேரி சங்கத்தானையைச் சேர்ந்த கோவிந்தராசா அர்ஜீனன்; என்பவரே, காரணம் என மாணவியின் உறவினர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.  அதேவேளை குறித்த இளைஞர்  மாணவியின் தற்கொலைக்கு தான் காரணமல்ல என மறுத்து வருகின்றார்.

மாணவி தற்கொலை செய்ய காரணம் இளைஞர் ஒருவர் முகநூலில் மாணவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் மாணவியின் தொலை பேசி இலக்கத்தை முகநூலில் பதிவிட்டதும் காரணம் என மாணவியின் தரப்பினர் கூறி வருகின்றனர்.

அதேவேளை இந்த இளைஞன் மீது பல குற்றசாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு இருந்தன...

குறித்த மாணவியை இளைஞர் ஒரு தலையாக காதலித்து வந்ததார் அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து வந்தார்.

அதனால் மாணவி கல்வி கற்கும் பேராதனை பல்கலைகழகத்திற்கு சென்ற இளைஞர் பல்கலைகழகத்தில் வைத்து மாணவியுடன் முரண்பட்டார்.

அத்துடன் மாணவியின் தொலைபேசியினை பறித்து சென்று அதன் ஊடாக மாணவியின் முகநூலினை அந்த இளைஞர் கையாண்டு  மாணவியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் மாணவி குறித்து அவதூறாக தகவல் அனுப்பினார்.

அதனாலேயே மாணவி தற்கொலை செய்துகொண்டார்...

இவை குறித்து மாணவியின் பெற்றோர் இளைஞர் வீட்டுக்கு சென்று கதைத்த போது இளைஞனின் தந்தை தம்மை மிரட்டியதகாவும் மாணவியின் தரப்பினர் குறிப்பட்டு உள்ளனர்...

இந்த குற்ற சாட்டுக்கள் அனைத்தையும் குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் மறுத்துள்ளார்.

அது தொடர்பில் குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளரிடம் இளைஞர் தெரிவிக்கையில், (குரல்வழி ஆதாரம் எம்முடன் உண்டு)

'தற்கொலை செய்து கொண்டவர் பல்கலைகழகத்திற்கு தெரிவாக முதலே எனக்கு அறிமுகமானவர், யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அவரது ஒரு கண் பாதிப்புக்கு உள்ளாகி இருந்ததும் அவரை ஏற்கனவே ஒருவர் காதலித்து ஏமாற்றி மனமுடைந்து இருந்தமையாலும் அவர் மீது ஒரு கரிசனை ஏற்பட்டு நல்ல நண்பர்களாக இருந்து பின்னர் அது இருவருக்கும் காதலாக வளர்ந்தது.

கடந்த 4 வருடகாலமாக அந்த பெண்ணை காதலித்து வந்தேன். பல்கலைகழகத்திற்கு தெரிவானதும் மகிழ்வுடன் அனுப்பி வைத்தேன்.

பல்கலைகழகம் சென்றதும் அவரின் மனதில் சில மாற்றங்கள் ஏற்பட தொடங்க இருவருக்கும் இடையில் சிறு சிறு சண்டைகள் ஏற்படும். அதனை அடுத்து நான் கதைக்காது விட்டால் எனது வீட்டில் உள்ளவர்களுக்கு தொடர்பை ஏற்படுத்தியும் என் வீட்டுக்கு நேரில் வந்து என்னுடன் கதைத்து சமரசம் செய்வார்..

இந்த நிலையில் அவரது வீட்டுக்கு எமது காதல் தெரியவந்தது. அதனை அடுத்து அவரது சகோதரர் தொலைபேசி இலக்கத்தை மாற்றி பல்கலைகழகத்திற்கு அனுப்பி வைத்தார் இதனால் எமக்கிடையிலான தொடர்பு அற்று போனது.

அவரது பழைய தொலைபேசி இலக்கத்தை சகோதரர் பாவிக்க தொடங்கினார் நான் தொடர்பு எடுக்கும் போதெல்லாம் அவரை பற்றி எந்த தகவலும் தெரிவிக்காது என்னை மிரட்டுவார். 

அதனால் நான் நேராக அவரை சந்திக்க அவர் கல்வி கற்கும் பேராதனை பல்கலைகழகத்திற்கு சென்று அவரை சந்தித்து கதைத்தேன் அப்பொழுது நான் கோபத்தில் சண்டையும் இட்டேன்.

பின்னர் தொலைபேசி இலக்கத்தை மட்டும் வாங்கி வந்தேன். ஊடகங்களில் தெரிவித்தது போன்று தொலை பேசியை பறித்து வரவில்லை.

எனினும் நானே அபானுசாவுக்கு முகநூல் கணக்கை ஆரம்பித்து கொடுத்ததனாலும், அதற்குரிய கோட் எனக்கு தெரிந்து இருந்ததாலும், வைபர் முகநூல் என்பவற்றை இருவருமே இயக்கியதாலும் அவரது முகநூல் ஊடாக அவரின் உறவினருக்கு எமது காதலை தெரியப்படுத்தி அவருக்கும் எனக்கும் இடையில் இருந்த உறவுபற்றியும் கூறியிருந்தேன்... எனினும் அவர்களுடனான உரையாடல் பற்றிய முழுமையையும் அவர்கள் ஸ்கீறின் சொட்டாக போடவில்லை....

வெளிநாட்டில் இருக்கும் ஒருவருக்கு மணம் முடித்து கொடுக்கப் போகிறார்கள் என்ற ஆதங்கத்தில் என்னுடனான காதல் பற்றி சொல்லி அதனை தடுக்க முயன்றிருந்தேன்... அவரை அவமானப்படுத்தவதற்கு அல்ல....

இதே வேளை நான் பல்கலைகழகம் போன விடயம் தெரிந்து அவரது சகோதரன் அவரை பல்கலைகழகத்தில் இருந்து இடைநிறுத்தி கடந்த 3 மாத காலமாக வீட்டில் மறித்து வைத்திருந்தார் தற்கொலை செய்யும் போது அவர் நீண்ட நாள் பல்கலைக்கழகம் செல்லவில்லை. .

அதனை கேள்வியுற்று நான் சகோதரனிடம் பல தடவைகள் மன்றாடிக் கேட்டேன் என்னால ஒரு பெண்ணின் கல்வி பாதிப்படைய கூடாது நான் இனி அவரின் வாழ்க்கையில் குறுக்கிட மாட்டேன் நீங்கள் விரும்பியவருக்கே  திருமணம் செய்து வையுங்கள் அதுவரை தயவு செய்து  படிக்க அனுமதியுங்கள் என  கேட்டேன்.

அதற்கு சகோதரன் எமது தங்கைக்கு என்ன செய்ய வேண்டும் என எமக்கு தெரியும் நீ ஒன்றும் சொல்ல தேவையில்லை என கூறினார். இது தொடர்பில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் மற்றுமொரு சகோதரனுடனும் கதைத்தேன் அவரும் அதற்கு செவி சாய்க்கவில்லை.

மூன்று மாத காலமாக பல்கலைகழகத்திற்கு அனுப்பாமல் என்னுடன் அவர் தொடர்பினை ஏற்படுத்த விடாது அவரது சகோதரர் தடுத்து வைத்து இருந்தார்.

இந்நிலையில் நான் காதலித்த அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார் என,  கடந்த 24ம் திகதி பளை வைத்தியசாலையில் இருந்து தொலைபேசி மூலம் எனக்கு தகவல் வந்தது. இவ்வாறாக மாணவியின் தற்கொலைக்கு காரணம் என குற்றம் சாட்ட பட்ட அர்ஜீனன் குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம்  தெரிவித்தார்.

பெண்ணின் தற்கொலைக்கு நீங்கள் தான் காரணம் என குற்றம் சாட்டபடுகின்றதே? மரண விசாரணையின் போது மாணவியின் பெற்றோரால் நீங்கள் தான் தற்கொலைக்கு காரணம் என குறிப்பிட்டு இருந்தால் உங்களை பொலிசார் விசாரணைக்கு அழைக்கவில்லையா? எனக் கேட்ட போது 

இதுவரை பொலிசார் என்னை எங்கும் விசாரணைக்கு அழைக்கவில்லை. இன்றுவரை நான் எனது வீட்டில் தான் இருக்கிறேன் நான் எங்கும் தலைமறைவாகவில்லை எனத் தெரிவித்தார்.

சில ஊடகங்களில் அவ்வாறு செய்தி வர காரணம் யாது ? என கேட்டபோது ...

அவ்வாறு செய்தி வர  யாழ்ப்பாணத்தின் முக்கிய  கட்சியை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரே காரணம் என சந்தேகிக்கின்றேன். குறித்த நபர் நான் வேலை செய்யும் நிறுவனத்தின் மீதான கோபத்தை என் ஊடாக காண்பிக்கின்றார். அவர் தனது முகநூலில் அந்த மாணவியின் தற்கொலைக்கு காரணம் நான் தான் என பதிவிட்டு இருந்தார். அந்த பதிவுக்கு எனது நண்பர்கள் சிலர் நான் காரணமல்ல என கருத்திட்டு இருந்தார்கள்.

ஆதனால் அவர்; எனது நண்பர்களுக்கு தொலை பேசி மூலம் அழைப்பெடுத்து நாங்கள் யார் தெரியுமா? இந்த தேர்தல் முடிய நாங்கள் யார் என்று காட்டுறோம். அந்த செய்திகளை இணையத்தளங்களில் பிரசுரிக்க நான் எவ்வளவு பணம் செலவழித்து வருகிறேன் என தெரியுமா ? என கேட்டு மிரட்டியுள்ளார்.

இதன் மூலம்  மாணவியின் தற்கொலைக்கு காரணம் நான் தான் என குறித்த நபரே இணையங்களில் செய்தி வெளியிட்டு இருப்பார் என நம்புவதாக தெரிவித்தார்.

ஒரு பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துள்ளார்.. அந்த மரணம் குறித்து அண்மைய நாட்களில் பல்வேறு செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளன. குளோபல் தமிழ்ச் செய்திகள் கள்ள மௌனம் சாதிக்கிறதா? ஏன் இந்த செய்தியை பிரசுரிக்கவில்லை என்ற கேள்விகள் எம்மை நோக்கி அலை அலையாய் வந்தன...

எனினும் இது பற்றி இரு தரப்பு தகவல்களையும் பெற முயற்சி செய்தோம் ஏற்கனவே மாணவியின் பெற்றோர் தரப்பு நியாயங்கள் வெளிவந்துள்ளன.... குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலம் பல முயற்சிகளின் பின் நேற்றே எமக்கு கிடைத்தன....

உண்மையில் இந்த இளைஞன் மீதான குற்றச்சாட்டை நீதிமன்றமே தீர்மானிக்க முடியும்... மாணவியின் தற்கொலைக்கு காரணம் அர்ஜீனன் என்பவரே என பெற்றோர் வசிக்கும் பகுதி பொலிஸ் நிலையத்தில் முறையிட்டால் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்வார்கள்...

அத்துடன் Jesudas Chandrasegarar என்பவர் தனது முகநூலில் பதிவிட்டு இருக்கும் முக்கிய தகவலின் அடிப்படையில்...
பேராதனை பல்கலைக்கழக மாணவி பானுசா உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக இலகுவாக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.


பானுசாவின் முகப்புத்தக கணக்கு கொலையாளியினால் முடக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. சட்ட தேவை கருதி பானுசாவின் முகப்புத்தக கணக்கினை மீண்டும் செயற்படுத்த முடியும்.


அத்துடன் பானுசாவின் முகப்புத்தக கணக்கிலிருந்து கொலையாளியினால் மேற்கொள்ளப்பட்ட சகலவிதமான நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களையும் Facebook Forensic Toolkit (FFT) என்ற மென்பொருள் ஊடாக பெற்றுக்கொள்ளப்பட முடியும். குற்றம்சாட்டப்பட்டவரால்  ஏற்கனவே நீக்கப்பட்ட விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். Facebook Forensic Toolkit (FFT) ( http://www.facebookforensics.com/ ) என்பதானது முகப்புத்தக வாயிலாக மேற்கொள்ளப்படும் தவறுகள் தொடர்பாக சட்டரீதியாக பயன்படுத்தப்படும் மென்பொருள் ஆகும். இக்கொலை தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகளில் உதவி தேவைப்படின் தன்னை தொடர்புகொள்ளவும். எனவும் குறிப்பட்டு உள்ளார்.


இந்த நிலையில் தான் தலைமறைவாகவில்லை வீட்டிலேயே இருக்கிறேன்... என குற்றம்சாட்டப்பட்டவர் தெரிவிக்கும் போது மாணவியின் தரப்பினர் அவரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து நீதியை பெற்றுக் கொள்வதானால் சட்டரீதியாக அணுகவேண்டும்...


இல்லை ஒரு பெண்ணின் மரணம் – தமது மகளின் மரணம் இவற்றிற்கான நீதியை தேட முற்பட்டு மரணித்த பானுசாவை மேலும் கொச்சைப்படுத்துவதாக அமையும் என நினைத்தால் பாதிக்கப்பட்ட தரப்பின் கருத்தும், பாதிப்பிற்கு காரணமானதென குற்றம்சாட்டப்படும் தரப்பும் சொல்வதில் எது உண்மை எது பொய் என்ற கேள்விகளுக்கான பதில்கள் முடிச்சுக்களாகவே தொடரும்...


எனினும் பானுசாவின் மரணம் சொல்லும் சேதி பல பானுசாக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்....  பல அர்ஜீனன்களை சிந்திக்க வைக்க வேண்டும்... கட்டுப்படுத்த முடியா காட்டுத் தீபோல் பரவி வரும் சமூக வலைத்தளப் பயன்பாடும் மோகமும் பலரை அவற்றிக்கு அடிமையாக்கி போதைஏற்றி வைத்திருக்கின்றன...


சுயகட்டுப்பாடற்ற சமூகவலைத்தள பயன்பாடு, தனிப்பட்ட வாழ்வின் அந்தரங்கங்கள் எல்லாவற்றையும் தங்கு தடையின்றி சமூக வலைத்தளங்களில் பகிருவது... உள்ளிட்ட விடயங்கள் குறித்த மீளாய்வு அனைவிரிடத்திலும் உருவாக வேண்டும்.....

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121412/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.