Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை

Featured Replies

சூதாட்ட புயலில் டாம்பே: மீண்டும் பிரிமியர் தொடரில் சர்ச்சை

 

tambe, cricket

மும்பை: பிரிமியர் கிரிக்கெட் தொடரில் மீண்டும் சூதாட்ட சர்ச்சை வெடித்துள்ளது. ராஜஸ்தான் அணி வீரர் பிரவிண் டாம்பேவை, மற்றொரு மும்பை வீரர் ‘பிக்சிங்கில்’ ஈடுபட அணுகியது அம்பலமாகியுள்ளது.                                                                          

ஆறாவது பிரிமியர் தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரீசாந்த்திற்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இப்பிரச்னையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் பதவியே பறிபோனது. இதனிடையே எட்டாவது பிரிமியர் தொடரின் போது,‘ ராஜஸ்தான் அணியில் உள்ள மும்பையை சேர்ந்த வீரர் ஒருவரை, இந்த தொடரில் பங்கேற்காத மற்றொரு மும்பை வீரர் அணுகினார்,’ என, செய்திகள் வெளியானது.                         

இதுகுறித்து அந்த வீரர், இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழுவிடம் (ஏ.சி.எஸ்.யு.,) தெரிவித்தார். எனினும் இந்த வீரர்கள் யார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இதனால் ராஜஸ்தான் அணிக்காக பங்கேற்ற மும்பை வீரர்கள் தவால் குல்கர்னி, அபிஷேக் நாயர், ரகானே, தினேஷ் சாலுங்கே மற்றும் பிரவிண் டாம்பே என, ஐந்து பேர் மீது சந்தேகம் எழுந்தது.                         

சம்பவம் குறித்து விசாரணை முடிந்த பின் வீரர்கள் பெயர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இரண்டு மாதம் முடிந்த நிலையிலும் இன்னும் விசாரணை முடியாமல் தான் உள்ளது. தற்போது ‘பிக்சிங்’ செய்ய அழைக்கப்பட்ட ராஜஸ்தான் வீரர்  பிரவிண் டாம்பே எனத் தெரிய வந்துள்ளது.                         

எங்களுக்கு தெரியாது: மும்பை கிரிக்கெட் சங்கத்தின் பொருளாளர் நிதின் தலால் கூறுகையில்,‘‘ பி.சி.சி.ஐ., தரப்பில் ‘பிக்சிங்’ சர்ச்சையில் சம்பந்தப்பட்ட அந்த இரண்டு வீரர்கள் யார் என்ற விவரம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை,’’ என்றார்.                         

இன்னும் முடியவில்லை: பி.சி.சி.ஐ., தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில்,‘‘ இந்த பிரச்னை குறித்து எங்களது ஊழல் தடுப்பு கண்காணிப்புக்குழு விசாரித்து வருகிறது. இக்குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பித்த பின் தான், பி.சி.சி.ஐ., ஒழுங்குமுறை கமிட்டி நடவடிக்கை எடுக்கும்,’’ என்றார்.

‘சீனியர்’ வீரர்: இந்திய அணிக்காக பிரவிண் டாம்பே,41, எந்த ஒரு போட்டியிலும் விளையாடியது இல்லை. ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணிக்காக 2 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பிரிமியர் தொடரில் கடந்த 2013 முதல் ராஜஸ்தான் அணி சார்பில் விளையாடி வருகிறார். மூத்த வீரரான இவரது பெயர் சூதாட்டத்தில் சிக்கியுள்ளது, பிரிமியர் கிரிக்கெட்டின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

http://sports.dinamalar.com/2015/06/1435404377/tambecricket.html

  • தொடங்கியவர்

சூதாட்டத்தில் ரெய்னா, ஜடேஜா: லலித் மோடி ‘திடுக்’ புகார்

 

 

Raina, Jadeja, Lalit Modi, Cricket, IPL, Match Fixing, Betting

புதுடில்லி: ரெய்னா, ஜடேஜா, டுவைன் பிராவோ உள்ளிட்ட நான்கு சென்னை அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக லலித் மோடி புகார் கூறியுள்ளார்.

இந்தியன் பிரிமியர் தொடரின் தலைவராக இருந்தவர் லலித் மோடி. பின் நிதி முறைகேடு தொடர்பாக 2010ல் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். தற்போது லண்டனில் தலைமறைவாக உள்ளார்.             

இவர், பிரிமியர் தொடர் சூதாட்டம் குறித்து 2013ல் ஐ.சி.சி., தலைமை அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு,  அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தி தற்போது வெளியாகியுள்ளது.             

இதில்,‘ரெய்னா, ஜடேஜா, டுவைன் பிராவோ என, குறைந்தது நான்கு சென்னை அணி வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக லஞ்சம் மட்டுமன்றி, ‘பிளாட்டுகளும்’ பரிசாக பெற்றனர்.       

‘புக்கி’ என்று சந்தேகிக்கப்படும் ‘ரியல் எஸ்டேட்’ தொழிலதிபர் பாபா திவான் என்பவரிடம் தொடர்பில் இருந்தனர். இது இவர்களின் நேர்மையை கேள்விக்குறியாக்கியது. இதெல்லாம் உண்மையாக இருக்காது என்று நம்புகிறேன். ஒருவேளை உண்மையாக இருந்தால், இன்னும் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம்,’ என, தெரிவித்துள்ளார்.       

விரைவில் மூடுவிழா: ஏற்கனவே சூதாட்ட பிரச்னையால் பிரிமியர் தொடரின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ரெய்னா, ஜடேஜா போன்ற முன்னணி வீரர்களின் பெயர்களும் அடிபடுவதால் பிரிமியர் தொடருக்கு விரைவில் தடை விதிக்கப்படலாம்.

ஒரு போட்டிக்கு

ரூ. 10 ஆயிரம் கோடி 

சூதாட்டம் குறித்து லலித் மோடி வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,‘ பிரிமியர் தொடரின் போது ஒரு போட்டிக்கு ரூ. 9 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் கோடி வரை சூதாட்டம் நடக்கிறது. இதை பல ஆண்டுகளாக கூறுகிறேன். அப்படி இருந்தும் இதைத் தடுக்க யாரும் முன்வரவில்லை,’ என, குறிப்பிட்டுள்ளார்.

http://sports.dinamalar.com/2015/06/1435426028/RainaJadejaLalitModiCricketIPLMatchFixingBetting.html

  • தொடங்கியவர்

லஞ்சம் வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியலை வெளியிட்டார் 'சர்ச்சை' மோடி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ட்வைன் பிரவோ ஆகியோர் சூதாட்டக்காரர்களிடம் இருந்து 20 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் வாங்கியதாக லலித் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

modi%281%29.jpg

இது தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு எழுதிய கடிதத்தை  ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில், எனக்கு கிடைத்த தகவலை தங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன். இந்திய சூதாட்டத் தரகர் பாபா திவானிடம் இருந்து தலா 20 கோடி ரூபாய் அளவிற்கு பணம் அல்லது அதற்கு இணையான அடுக்குமாடி குடியிருப்புகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா, ட்வைன் பிராவோ ஆகியோர் லஞ்சமாக பெற்றுள்ளனர்.

பாபா திவான் ஒரு ரியல் எஸ்டேட் அதிபரும் கூட. இந்த பாபா, ஐ.பி.எல். சூதாட்டக் குற்றச்சாட்டுக்குள்ளான குருநாத் மெய்யப்பன் மற்றும் ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு நெருக்கமானவர்.  பணம் அல்லது அதற்கு இணையானஅடுக்குமாடி குடியிருப்புகளை இந்த 3 வீரர்களும் லஞ்சமாக பெற்றுள்ளனர்  என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து எனக்கு தகவல் கிடைத்துள்ளது.

modi1.jpg

சுரேஷ் ரெய்னாவுக்கு டெல்லி, கிர்கான் மற்றும் வசந்தவிகார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன. ரவீந்தர ஜடேஜாவுக்கு மும்பை பாந்திரா கடற்கரை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அபார்ட்மெண்ட் வழங்கப்பட்டுள்ளது. மேற்கிந்திய வீரர் ட்வைன் பிராவோவுக்கு பணமாகவே லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இது உண்மையாக இருக்க கூடாது என்று தாம் விரும்புவதாகவும் லலித் மோடி அந்த கடிதத்தில் கூறியுள்ளார். லஞ்சம் பெற்றது உண்மையாக இருக்கும்பட்சத்தில் பாபா திவான் மட்டுமன்றி இன்னும் பலருக்கு இந்த சூதாட்டத்தில் தொடர்பு இருக்கலாம். ஐ.பி.எல். போட்டியை பொறுத்த வரை ஒரு போட்டிக்கு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை சூதாட்டத்தில் புழங்குவதாகவும் லலித் மோடி அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=48648

  • தொடங்கியவர்

ரெய்னா, ஜடேஜா, பிரவோ மீது லஞ்சப் புகார்: ஐ.சி.சி. அனுப்பிய கடிதத்தை பி.சி.சி.ஐ அமுக்கியதா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடேஜா மற்றும் ட்வைன் பிராவோ ஆகியோர் தலா 20 கோடி ரூபாய் அளவிற்கு லஞ்சம் பெற்றதாக லலித் மோடி அனுப்பிய கடிதத்தை பி.சி.சி.ஐ- யின் ஊழல் தடுப்பு பிரிவிற்கு அனுப்பி வைத்ததாக ஐ.சி.சி. கூறியுள்ளது.

suresh.jpg

பாபா திவான் என்ற ரியல் எஸ்டேட் புரோக்கரிடம் இந்த 3 வீரர்களும் ரூ.20 கோடி அல்லது அதற்கு இணையான அடுக்குமாடி குடியிருப்பை லஞ்சமாக பெற்றதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதம், ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி டேவ் ரிச்சர்ட்சனுக்கு ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி, கடிதம் எழுதியுள்ளார்.

லலித் மோடி அடிக்கடி சென்னை அணியை சேர்ந்த 4 வீரர்களுக்கு சூதாட்ட தரகர்களுடன் தொடர்பிருப்பதாக கூறி வந்தாலும், இது வரை வெளிப்படையாக பெயரை வெளியிட்டதில்லை. இந்நிலையில்  ஐ.சி.சி.க்கு அவர் எழுதிய கடிதத்தை ட்விட்டரில் நேற்று முன்தினம் ஓபனாக வெளியிட்டு விட்டார். 

இதற்கிடையே லலித் மோடி, ஐ.சி.சி.க்கு அனுப்பிய கடிதத்தை உடனடியாக பி.சி.சி.ஐ-யின் ஊழல் தடுப்பு பிரிவின் பார்வைக்கு அனுப்பி விட்டதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. வழக்கமான விசாரணையை பி.சி.சி.ஐ. நடத்தியதாக ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று ஏன் அறிவிக்கவில்லை என தெரியவில்லை. 

மாறாக இதுவரை பி.சி.சி.ஐ அந்த கடிதத்தை பற்றி வாய் திறக்கவில்லை. தற்போது அந்த கடிதத்தை லலித் மோடி வெளியிட்ட பின்னரே, இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஆனாலும் இந்த 3 வீரர்கள் மீது எந்த விசாரணையும் நடத்தப்பட்டதாக தெரியவில்லை.

உண்மையை சொல்லப்போனால் இப்படி ஒரு கடிதம் எழுதப்பட்டிருப்பதே லலித் மோடி ட்விட்டரில் வெளியிட்ட பிறகுதான் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் பிகார் கிரிக்கெட் சங்கச் செயலாளர் ஆதித்யா வர்மா, இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. எடுத்த நடவடிக்கை குறித்து அறிய கிரிக்கெட் உலகம் ஆவலாக இருப்பதாக ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதியுள்ளார்.

http://www.vikatan.com/news/article.php?aid=48671

  • தொடங்கியவர்

அவங்க உத்தமர்கள்தான்...பிசிசிஐ செயலாளர் சர்டிபிகேட்!

ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ரவீந்தர ஜடோஜா, பிராவோ ஆகியோர் ரூ.20 கோடி அல்லது அதற்கு இணையான அடுக்குமாடி குடியிருப்புகளை சூதாட்டத் தரகர் ஒருவரிடம் இருந்து பெற்றதாக ஐ.சி.சி.க்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

ANU.jpg

இந்த நிலையில் டெல்லியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பில்  பி.சி.சி.ஐ செயலாளர் அனுராக் தாகூர் கூறுகையில், "குற்றச்சாட்டுக்குள்ளான 3 பேருமே சர்வதேச வீரர்கள். ஐ.சி.சி- தான் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஆனால் இந்த விஷயத்தில் ஐ.சி.சி. எந்த முடிவுக்கும் வரவில்லை.

இந்த விவகாரத்தில் ஐ.சி.சி. யிடம் இருந்து வேறு எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. அந்த வகையில் நாங்கள் முடிவெடுக்க வேண்டியதாகி விட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுபவர்கள் மீது புகார் வந்தால், அதனை விசாரிக்க வேண்டியது ஐ.சி.சி.யின் பொறுப்புதான். இதுதான் விதிமுறையும் கூட. ஐ.சி.சி. விசாரித்தாகி விட்டது என்று கூறி விட்டது. அதனால் அவர்கள்தான் இந்த விஷயத்தில் பதிலளிக்க வேண்டும். அதில் ஏதாவது குற்றச்சாட்டு நிரூபணமானால்தான் எங்களுக்கு அந்த அறிக்கையை அனுப்பி வைக்க வேண்டும்'' என்றார்.

http://www.vikatan.com/news/article.php?aid=48711

  • தொடங்கியவர்

சூதாட்டத்தில் ஈடுபட்ட சூப்பர் கிங்ஸ் வீரர்களை காப்பாற்றினார்: என்.சீனிவாசன் மீது லலித் மோடி குற்றச்சாட்டு

 
 
சீனிவாசன். | கோப்புப் படம்.
சீனிவாசன். | கோப்புப் படம்.

ஐபிஎல் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 3 பேரை அப்போது பிசிசிஐ தலைவ ராக இருந்த என்.சீனிவாசன் காப்பாற்றினார் என்று லலித் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சூப்பர் கிங்ஸ் அணியின் மூன்று வீரர்கள் (ரெய்னா, ஜடேஜா, பிராவோ) ஆகியோர் தொழிலதிபர் ஒருவரிடம் இருந்து பணம் பெற்றதாக லலித் மோடி 2013-ம் ஆண்டு அனுப்பிய இ-மெயில் தங்களிடம் உள்ளதாக ஐசிசி இப்போது அறிவித்துள்ளது.

இந்நிலையில், லண்டனில் இருந்து கொண்டு இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, லண்டன் தொலைக் காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் மூன்று பேரை அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் காப்பாற்றினார். இப்போது அவர் ஐசிசி அமைப்புக்கே தலைவ ராகி விட்டார். அவர் நம்பகமான வர் அல்ல. எனது குற்றச்சாட்டு குறித்து ஐசிசி தலைவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என் பதை இந்தியாவே ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.

இந்தியாவையும், கிரிக்கெட் டையும், விளையாட்டையும் கடவுள்தான் காப்பாற்ற வேண் டும். எனக்கு எவ்வித அச்சுறுத்த லும் இல்லை என்று தோன்றும் போது மீண்டும் இந்தியா திரும்பு வேன். இந்திய அரசு அளிக்கும் உத்தரவாதத்தை நம்பி அங்கு செல்ல மாட்டேன் என்று லலித் மோடி கூறியுள்ளார்.

http://tamil.thehindu.com/india/சூதாட்டத்தில்-ஈடுபட்ட-சூப்பர்-கிங்ஸ்-வீரர்களை-காப்பாற்றினார்-என்சீனிவாசன்-மீது-லலித்-மோடி-குற்றச்சாட்டு/article7369612.ece

  • தொடங்கியவர்

லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு : சுரேஷ் ரெய்னா, பிராவோ மறுப்பு

கிரிக்கெட் விளையாட்டை நேர்மையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் விளையாடி வருவதாக சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். மேலும் லலித் மோடியின் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

sur.jpg

சுரேஷ் ரெய்னா சார்பாக ரிதி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' சமீபத்தில் என்னை பற்றி தவறான முறையில் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இது குறித்து எனது நிலையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். கிரிக்கெட்டில் நேர்மை மற்றும் விளையாட்டு உணர்வுடன் செயல்படுபவன் நான். லலித் மோடி கூறியது போல் எந்த காலத்திலும் தவறான செயல்களில் ஈடுபட்டது கிடையாது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யனவை. அடிப்படை ஆதாரமற்றவை. இந்த விஷயத்தில் லலித் மோடி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்'' என கூறியுள்ளார்.

அதே போல் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த சென்னை வீரர் பிராவோவும் லலித் மோடியின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், '' கிரிக்கெட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். கிரிக்கெட் எனக்கு எவ்வளவோ செய்துள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை பாதிக்கும் வகையில் எந்த விதமான தவறான செயலையும் செய்யவில்லை.இந்த புகார் உண்மையற்றவை. எனது வழக்கறிஞர்கள் இந்த விஷயத்தை கையாண்டு வருகிறார்கள்'' என்றார்.


ஐ.பி.எல். முன்னாள் தலைவர் லலித் மோடி சென்னை அணி வீரர்கள் சுரேஷ் ரெய்னா, ஜடேஜா, பிராவோ ஆகியோர் ரூ. 20 கோடி மதிப்புள்ள பணமோ அல்லது அடுக்குமாடி குடியிருப்புக¬ளேயே சூதாட்டத் தரகரான பாபா திவான் என்பரிடம் இருந்து லஞ்சமாக பெற்றனர் என்று ஐ.சி.சி.க்கு தான் எழுதிய கடித்தை அண்மையில் ட்விட்டரில் வெளியிட்டதால் இந்த சர்ச்சை ஏற்பட்டது.

http://www.vikatan.com/news/article.php?aid=48908

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.