Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரகானே புதிய கேப்டன் * இந்திய அணி அறிவிப்பு

Featured Replies

ரகானே புதிய கேப்டன் * இந்திய அணி அறிவிப்பு

 

 

India Zimbabwe Tour Team india rahane

புதுடில்லி: ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார். தோனி, கோஹ்லி உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது.

ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டி (ஜூலை 10, 12, 14), இரண்டு ‘டுவென்டி–20’ போட்டிகளில் (ஜூலை 17, 19) பங்கேற்கிறது.

இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய, சந்தீப் படேல் தலைமையிலான தேர்வுக்குழு கூட்டம் இன்று டில்லியில் நடந்தது. முடிவில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

தோனி ஓய்வு:

கடந்த 7 மாதங்களாக கேப்டன் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, அஷ்வின் மற்றும் ரெய்னா உள்ளிட்ட ‘சீனியர்’ வீரர்கள் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர். இதனால் ஜிம்பாப்வே தொடரில் இவர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. தவிர, ஷிகர் தவான், உமேஷ் யாதவிற்கும் ஓய்வு கிடைத்தது. இந்திய அணிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஹர்பஜன் சிங் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பினார். 

http://sports.dinamalar.com/2015/06/1435507185/IndiaZimbabweTourTeamCaptainRohitRaina.html

ODI squad: Ajinkya Rahane (capt), M Vijay, Ambati Rayudu, Manoj Tiwary, Kedar Jadhav, Robin Uthappa, Manish Pandey, Harbhajan Singh, Axar Patel, Karn Sharma, Dhawal Kulkarni, Stuart Binny, Bhuvneshwar Kumar, Mohit Sharma, Sandeep Sharma.

http://www.espncricinfo.com/zimbabwe-v-india-2015/content/story/892263.html

 

  • தொடங்கியவர்

தோனி, கோலிக்கு லீவு : இந்திய அணியின் புதிய கேப்டன் அஜிங்கிய ரஹானே!

டெல்லி :ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

rah.jpg

இந்திய அணி, ஜுலை மாதம் ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பதுடன், 2 டி 20 போட்டிகளிலும் விளையாடுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் கேப்டன் தோனி, துணை கேப்டன் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அஸ்வின், ரோகித் சர்மா, உமேஷ் யாதவ், ஷிகர் தவான் ஆகியோருக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான போட்டிகளை அடுத்து முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதே வேளையில் மூத்த வீரரான ஹர்பஜன் சிங்கிற்கு அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது.

இதற்கு முன் ரஹானே இந்திய அணிக்கு ஒரு டி 20 உள்பட இரு ஆட்டங்களுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது.


இந்திய அணி வீரர்கள் விபரம்

அஜிங்கிய ரஹானே, முரளி விஜய், அம்பாத்தி ராயுடு, மனோஜ், கேதார் ஜாதவ், ராபின் உத்தப்பா, மணீஷ், ஹர்பஜன் சிங்,அக்ஷார் பட்டேல், கார்ன் ஷர்மா, தவால் குல்கர்னி,பின்னி, புவனேஷ்வர், மோகித் சர்மா, சந்தீப் ஆகியோர் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=48696

  • தொடங்கியவர்

கராத்தே வீரர் கையில் இந்திய கிரிக்கெட் அணியை ஒப்படைக்க காரணம் என்ன?

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணிக்கு அஜிங்கிய ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் ஹர்பஜன் சிங் இருக்கையில் வெறும் 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரஹானேவை இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்க பல காரணங்கள் இருக்கின்றன.

rah.jpg

முதலில் ரஹானே அமைதியானவர். இவரை பற்றி எந்த சர்ச்சையும் கிடையாது. கோலியை போல அடாவடி கிடையாது. தோனியை போல் வாயையும் அடிக்கடி திறந்து சர்ச்சையில் சிக்கும் பழக்கம் கிடையாது. கூச்ச சுபாவம் கொண்ட ரஹானே, எதையும் பேட் மூலம்தான் எதிர்கொள்வார். சிறுவயது முதலே பெற்றோர்க்கு அடங்கிய பிள்ளை. இவரது கூச்ச சுபாவத்தை போக்க, அவரது தந்தை இளம் வயதில் கராத்தே வகுப்பில் சேர்த்து விட்டார். அதில், ஜுனியர் பிரிவில் 'பிளாக் பெல்ட்' வாங்கிய பின்னர் கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.

சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்த ரஹானேவின் வலுவான ஷாட்கள் பிரமிப்பை ஏற்படுத்தியவை. கடந்த ஐ.பி.எல். சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையடினார். அந்த அணியின் ஆலோசகரான ராகுல் டிராவிட்டின் அறிவுரைகள், ரஹானேவை மேலும் மேலும் பட்டை தீட்டியது. ரஹானே அமைதியான குணம் கொண்டிருந்தாலும் கேப்டனாக சிறப்பாக பிரகாசிக்க முடியுமென்று நம்புகிறார். இது குறித்து ரஹானே கூறுகையில், ''கராத்தேவில் சேர்ந்த போதும் என்னை கேலியும் கிண்டலும் செய்னதர். அதில் சாதித்தது போல் கேப்டன் பதவியிலும் சாதிப்பேன்" என்கிறார்.

இந்திய அணியை பொறுத்த வரை விரைவில் தோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறக் கூடும். அதற்கு பின், கோலி கையில் முழுமையாக கேப்டன் பொறுப்பு ஒப்படைக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது, கோலிக்கு நல்லதொரு துணை தேவை. அதற்கு தயார்படுத்தும் விதத்தில்தான் இந்த கராத்தே வீரன் கையில் இந்திய அணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஹர்பஜனுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டால், ரஹானேவுக்கு கேப்டனாக தன்னை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்காது. ஹர்பஜன் கிட்டத்தட்ட ஓய்வை நெருங்கி விட்டவர். அணிக்கே அவ்வப்போதுதான் அவர் தேர்வு செய்யப்படுகிறார். இந்திய அணிக்கு வருங்காலத்தில் நல்ல கேப்டனை உருவாக்கும் பொருட்டே மகராஷ்டிராவை சேர்ந்த 27 வயது ரஹானேவை தேர்வுக்குழுவினர் நியமித்துள்ளனர்.

http://www.vikatan.com/news/article.php?aid=48734

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.