Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விம்பிள்டன் வின்னர் ‘யார்’

Featured Replies

விம்பிள்டன் வின்னர் ‘யார்’

federer, tennis

லண்டன்: பச்சை பசேல் என்ற புல்வெளி மைதானத்தில் ‘வெண்ணிற’ தேவதைகளாக வீராங்கனைகள், ஆக்ரோஷமாக வீரர்கள் விளையாடும் விம்பிள்டன் டென்னிஸ் பார்ப்பதற்கும் ரம்மியமாக இருக்கும். மிக நீண்ட பாரம்பரிய மிக்க இத்தொடர் இன்று லண்டனில் துவங்குகிறது. இதில் பெடரர் 8வது முறையாக பட்டம் வெல்ல காத்திருக்கிறார். பெண்கள் பிரிவில் செரினா வில்லியம்ஸ், கிவிட்டோவா என நிறைய பேர் களத்தில் உள்ளனர்.

லண்டனில் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற 129வது விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா இன்று ஆரம்பமாகிறது. ஆண்கள் ஒற்றையரில் இதுவரை 7 முறை பட்டம் வென்றுள்ள ‘புல்தரை கள மன்னன்’ சுவிட்சர்லாந்தின் பெடரர், கடைசியாக 2012ல் கோப்பை வென்றார். உலகின் ‘நம்பர்–2’ வீரரான இவர், கடந்த ஆண்டு நடந்த பைனலில் ஜோகோவிச்சிடம் கோப்பையை பறிகொடுத்தார். இம்முறை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் 8வது முறையாக பட்டம் வென்று, அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்கலாம்.

மூன்றாவது பட்டம்:

‘நடப்பு சாம்பியன்’ செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றார். சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை முன்னேறினார். ‘சூப்பர் பார்மில்’ உள்ள உலகின் ‘நம்பர்–1’ வீரரான இவர், மீண்டும் சாதிக்கும் பட்சத்தில் விம்பிள்டனில் தனது 3வது பட்டத்தை கைப்பற்றலாம்.

உள்ளூர் நாயகன்:

உலகின் ‘நம்பர்–3’ வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே, சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் சாதிக்க வாய்ப்பு உண்டு.

விம்பிள்டனில் 2 முறை பட்டம் வென்ற உலகின் ‘நம்பர்–10’ வீரரான ஸ்பெயினின் ரபெல் நடால், சமீபகாலமாக ‘பார்மின்றி’ தவிக்கிறார். இவர்களை தவிர, சமீபத்திய பிரெஞ்ச் ஓபனில் பட்டம் வென்ற சுவிட்சர்லாந்தின் வாவ்ரின்கா, ஜப்பானின் கெய் நிஷிகோரி, செக்குடியரசின் தாமஸ் பெர்டிச், ஸ்பெயினின் டேவிட் பெரர், கனடாவின் மிலோஸ் ராவோனிக், குரோஷியாவின் மரின் சிலிக் உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

சாதிப்பாரா செரினா:

பெண்கள் பிரிவில் உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், விம்பிள்டனில் இதுவரை 5 முறை (2002–03, 2009–10, 2012) கோப்பை வென்றுள்ளார். இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன் தொடரில் கோப்பை வென்ற இவர், நல்ல ‘பார்மில்’ உள்ளார். இவர், விம்பிள்டனிலும் சாதிக்கும் பட்சத்தில் தனது 21வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம்.

‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் செக்குடியரசின் பெட்ரா கிவிட்டோவா, இந்த ஆண்டு நடந்த ஆஸ்திரேலிய ஓபன் (3வது சுற்று), பிரெஞ்ச் ஓபனில் (4வது சுற்று) பெரிய அளவில் சாதிக்கவில்லை.

ஷரபோவா எதிர்பார்ப்பு:

கடந்த 2004ல் விம்பிள்டனில் பட்டம் வென்ற உலகின் ‘நம்பர்–4’ வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா, 2011ல் பைனல் வரை முன்னேறினார். இவர் முழுத்திறமையை வெளிப்படுத்தினால் 2வது பட்டம் வெல்லலாம்.

இவர்களை தவிர, ருமேனியாவின் சிமோனா ஹலெப், டென்மார்க்கின்  வோஸ்னியாக்கி, செக்குடியரசின் லுாசி சபரோவா, செர்பியாவின் இவானோவிச், ரஷ்யாவின் எகடரினா மகரோவா, ஜெர்மனியின் கெர்பர் உள்ளிட்டோர் பட்டம் வெல்ல போராடலாம்.

பயஸ் நம்பிக்கை

விம்பிள்டன் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் சோம்தேவ் தேவ்வர்மன், யூகி பாம்ப்ரி, சாகேத் மைனேனி ஆகியோர் தோல்வி அடைந்தனர். இதன்மூலம் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஒற்றையர் பிரிவு பிரதான சுற்றில் ஒரு இந்திய வீரர் கூட விளையாட முடியாத சோகம் அரங்கேறியது. ஆனால் இரட்டையர் பிரிவில் இந்தியா சார்பில் பயஸ், ரோகன் போபண்ணா, புரவ் ராஜா, சானியா மிர்சா ஆகியோர் விளையாடுகின்றனர்.

7

ஆண்கள் ஒற்றையரில் அதிக முறை பட்டம் வென்ற வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா (1881–86, 89), அமெரிக்காவின் பீட் சாம்பிராஸ் (1993–95, 97–2000), சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் (2003–07, 2009, 2012) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் மூவரும் தலா 7 முறை கோப்பை வென்றனர்.

9

பெண்கள் ஒற்றையரில் அதிக முறை கோப்பை வென்ற வீராங்கனைகள் வரிசையில் அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவா (1978–79, 1982–87, 1990) முன்னிலை வகிக்கிறார். இவர், 9 முறை பட்டம் வென்றுள்ளார். இவரை அடுத்து மற்றொரு அமெரிக்க வீராங்கனை ஹெலன் வில்ஸ் 8 முறை (1927–30, 32–33, 35, 38) கோப்பை வென்றார்.

6

ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவில் தொடர்ச்சியாக அதிக முறை பட்டம் வென்றவர்கள் பட்டியலில் இங்கிலாந்தின் வில்லியம் ரென்ஷா, அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவா முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் தொடர்ச்சியாக 6 முறை கோப்பையை கைப்பற்றினர்.

பெக்கர் ‘சூப்பர்’

இளம் வயதில் விம்பிள்டன் ஒற்றையரில் பட்டம் வென்ற வீரர் என்ற பெருமையை ஜெர்மனியின் போரிஸ் பெக்கர் (1985, 17 ஆண்டு 227 நாட்கள்) பெற்றார். பெண்கள் ஒற்றையில் இங்கிலாந்தின் லோட்டி டாட் (1887, 15 ஆண்டு 285 நாட்கள்) இப்பெருமையை பெற்றார். பெண்கள் இரட்டையரில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் (1996, 15 ஆண்டு 282 நாட்கள்) குறைந்த வயதில் கோப்பை வென்றார்.

நீ....ண்ட நேரம்

கடந்த 2008ல் நடந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபெல் நடால் மோதிய பைனல், விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையரில் நீண்ட நேரம் நடந்த பைனல் என்ற சாதனை படைத்தது. இப்போட்டி 4 மணி நேரம், 48 நிமிடம் வரை நடந்தது. பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், லிண்ட்சே டேவன்போர்ட் மோதிய பைனல் (2005) அதிகபட்சமாக 2 மணி நேரம், 45 நிமிடம் வரை நடந்தது.

* கடந்த 2010ல் அமெரிக்காவின் ஜான் இஸ்னர், பிரான்சின் நிகோலஸ் மஹுத் மோதிய போட்டி ஆண்கள் ஒற்றையரில் நீண்ட நேரம் நடந்த போட்டி என்ற பெருமை பெற்றது. இப்போட்டி 11 மணி நேரம், 5 நிமிடம் வரை நீடித்தது. பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் சண்டா ருபின், கனடாவின் பாட்ரிகா மோதிய ஆட்டம் (1995) 3 மணி நேரம் 45 நிமிடம் வரை சென்றது.

ஐந்து ஆண்டு சாம்பியன்கள்

விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையரில் கடந்த 5 ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றவர்கள் விவரம்:

ஆண்டு சாம்பியன் 2வது இடம் செட்

2010 நடால் (ஸ்பெயின்) பெர்டிச் (செக்குடியரசு) 6–3, 7–5, 6–4

2011 ஜோகோவிச் (செர்பியா) நடால் (ஸ்பெயின்) 6–4, 6–1, 1–6, 6–3

2012 பெடரர் (சுவிட்சர்லாந்து) முர்ரே (பிரிட்டன்) 4–6, 7–5, 6–3, 6–4

2013 முர்ரே (பிரிட்டன்) ஜோகோவிச் (செர்பியா) 6–4, 7–5, 6–4

2014 ஜோகோவிச் (செர்பியா) பெடரர் (சுவிட்சர்லாந்து) 6–7, 6–4, 7–6, 5–7, 6–4

 

பெண்கள் ஒற்றையர்:

ஆண்டு சாம்பியன் 2வது இடம் செட்

2010 செரினா (அமெரிக்கா) ஸ்வனரேவா (ரஷ்யா) 6–3, 6–2

2011 கிவிட்டோவா (செக்குடியரசு) ஷரபோவா (ரஷ்யா) 6–3, 6–4

2012 செரினா (அமெரிக்கா) ரத்வன்ஸ்கா (போலந்து) 6–1, 5–7, 6–2

2013 பர்டோலி (பிரான்ஸ்) லிசிக்கி (ஜெர்மனி) 6–1, 6–4

2014 கிவிட்டோவா (செக்குடியரசு) பவுச்சார்டு (கனடா) 6–3, 6–0

பைனலில் ஏமாற்றம்

விம்பிள்டன் ஒற்றையர் பைனலில் அதிக முறை தோல்வி அடைந்தவர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீராங்கனை பிளான்சே பிங்ளே ஹில்யார்டு (1885, 87–88, 91–93, 1901), அமெரிக்க வீராங்கனை கிறிஸ் எவர்ட் (1973, 78–80, 82, 84–85) முன்னிலை வகிக்கின்றனர். இவர்கள் இருவரும் தலா 7 முறை பைனலில் தோல்வி அடைந்து கோப்பை வெல்ல தவறினர்.

அதிக போட்டி

விம்பிள்டனில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் பட்டியலில் பிரான்சின் ஜீன் போரோட்ரா (223 போட்டி) முன்னிலை வகிக்கிறார். வீராங்கனைகள் வரிசையில் அமெரிக்காவின் மார்டினா நவரத்திலோவா (326 போட்டி) முதலிடத்தில் உள்ளார்.

http://sports.dinamalar.com/2015/06/1435475553/federertennis.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன்: இவானோவிச், செரினா வெற்றி

wimbledon tennis ana ivanovic serena

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், செர்பியாவின் இவானோவிச் வெற்றி பெற்றனர்.

இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நேற்று துவங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ‘நம்பர்–1’ வீராங்கனை அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், ரஷ்யாவின் காஸ்பர்யனை சந்தித்தார்.

இதன் முதல் செட்டை 6–4 என, வென்ற செரினா, இரண்டாவது செட்டையும் 6–1 என, எளிதாக கைப்பற்றினார். முடிவில் செரினா 6–4, 6–1 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இவானோவிச் அபாரம்:

மற்றொரு போட்டியில் செர்பியாவின் இவானோவிச், சீனாவின் யி வான் ஜுவை எதிர்கொண்டார். இதில் 6–1, 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற இவானோவிச், இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

அசரன்கா அசத்தல்:

பெண்கள் ஒற்றையருக்கான மற்றொரு முதல் சுற்று போட்டியில் பெலாரசின் அசரன்கா, எஸ்தோனியாவின் கொன்ட்டாவெயிட்டை 6–2, 6–1 என, வீழ்த்தினார். பிற முதல் சுற்று போட்டிகளில் ஹங்கேரியின் பாபஸ், லாட்வியாவின் ஆஸ்டபென்கோ, அமெரிக்காவின் பெத்தானியே மேடக் சாண்ட்ஸ், கஜகஸ்தானின் தியாஸ், பெல்ஜியத்தின் பிலிப்கென்ஸ், செக் குடியரசின் பிலிஸ்கோவா வெற்றி பெற்றனர். 

ஜோகோவிச் வெற்றி:

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ‘நடப்பு சாம்பியன்’ செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் பிலிப் கோல்ஸ்கிரிபரை 6–4, 6–4, 6–4 என்ற நேர் செட்களில் சுலபமாக வென்றார்.

குரோஷியாவின் மரின் சிலிக், ஜப்பானின் மோரியாவை 6–3, 6–2, 7–6 என்ற கணக்கில் வீழ்த்தினார்.

அமெரிக்காவின் ஜான் இஸ்னர், ஜப்பானின் மற்றொரு வீரர் சோயிடாவை 7–6, 6–4, 6–4 என்ற நேர் செட்களில் வென்றார்.

பிற போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் கிரிகரிஸ், லிதுவேனியாவின் பெரான்கின்ஸ், ஸ்பெயினின் கிரானலர்ஸ், பெல்ஜியத்தின் காபின், அர்ஜென்டினாவின் லியானர்டோ மேயர் வெற்றி பெற்றனர்.

போபண்ணா அபாரம்:

ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, புளோரின் மெர்கியா(ருமேனியா) ஜோடி, டிம் ஸ்மைசெக்(அமெரிக்கா), ஜிரி வெஸ்லி(செக் குடியரசு) ஜோடியை 6–3, 7–6, 6–1 என போராடி வென்றது.

http://sports.dinamalar.com/2015/06/1435591342/wimbledontennisanaivanovicserena.html

  • தொடங்கியவர்

ரோஜர் பெடரர் நம்பிக்கை

 

Wimbledon Tennis, Federer, Djokovic, Murray, Nadal

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பட்டம் வென்று சாதிப்போம் என செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் தெரிவித்தனர்.      

நடப்பு ஆண்டின் மூன்றாவது ‘கிராண்ட்ஸ்லாம்’ தொடரான விம்பிள்டன் டென்னிஸ் திருவிழா லண்டனில் இன்று துவங்குகிறது. இதில் உலகின் ‘நம்பர்–1’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இந்தியாவின் சானியா மிர்சா, பயஸ், போபண்ணா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.      

இத்தொடர் குறித்து முன்னணி நட்சத்திரங்கள் சிலர் தெரிவித்த கருத்து:      

* ஜோகோவிச் (செர்பியா): ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் செர்பியாவின் ஜோகோவிச் கூறுகையில், ‘‘எனக்கு உடல் மற்றும் மனதளவில் சிறந்து ஓய்வு தேவைப்பட்டது. இதனால் தான் இத்தொடருக்கு முன் எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை. ஆனால் இது போன்று நேரடியாக விம்பிள்டனில் பங்கேற்பது முதல் முறை அல்ல,’’ என்றார்.      

* பெடரர் (சுவிட்சர்லாந்து): விம்பிள்டனில் 7 முறை கோப்பை வென்ற சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடாத போதிலும் பைனலுக்கு முன்னேறினேன். ஆனால் இம்முறை எனது செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. சிறந்த முறையில் தயாராகி உள்ளேன்,’’ என்றார்.      

* முர்ரே (பிரிட்டன்): பிரிட்டனின் ஆன்டி முர்ரே கூறுகையில், ‘‘இம்முறை நல்ல உடற்தகுதியுடன் இருக்கிறேன். சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன் விளையாடுவதால் நெருக்கடி இருப்பதாக தெரியவில்லை,’’ என்றார்.      

* நடால் (ஸ்பெயின்): களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஸ்பெயினின் ரபெல் நடால், புல்தரையில் சொதப்புகிறார். நடால் கூறுகையில், ‘‘விம்பிள்டன் தொடர் புல்தரை ஆடுகளத்தில் நடப்பதால், கோல்ப் விளையாடினேன்,’’ என நகைச்சுவையாக கூறினார்.

http://sports.dinamalar.com/2015/06/1435508294/WimbledonTennisFedererDjokovicMurrayNadal.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன்: சானியா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி வெற்றி

 
 
tennis_2460636f.jpg
 

லண்டனில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சானியா மிர்ஸா, ஸ்விட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த ஜோடி சீனாவின் சாய் சாய் ஜெங், கஜகஸ்தானின் ஸாரினா டியாஸ் ஜோடியை 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வென்று 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் அனா இவானோவிக், அமெரிக் காவின் மாட்டெக்கிடம் தோற்று வெளியேறினார்.

செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, விக்டோரியா அஸரென்கா, ஸாரினா டியாஸ், ஆண்ட்ரியா பெட்கோவிக், லூஸி சபரோவா ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர். ஆடவர் பிரிவில் வாவ்ரிங்கா, ரயோனிக், ஆண்டிர முர்ரே, லியானர்டோ மேயர், மரின் சிலிச், ஜான் ஐஸ்னர், சான்டியாகோ கிரால்டோ, டேவிட் காபின் ஆகி யோர் 3-வது சுற்றுக்கு முன் னேறினர்.

விம்பிள்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று கடும் வெப்பநிலை நிலவியது. 35.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. இதனால், வீரர், வீராங்கனைகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

பந்து எடுத்துப் போடும் சிறுவன் ஒருவன் மயக்கமடைந்து விழுந்தான். அச்சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விம்பிள்டன் மைதானத்தில் ஒரு பகுதியில் தீ அபாய எச்சரிக்கை மணி ஒலித்ததால் அனைவரும் சிறிது நேரம் வெளி யேற்றப்பட்டனர்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-சானியாமார்டினா-ஹிங்கிஸ்-ஜோடி-வெற்றி/article7382136.ece

  • தொடங்கியவர்
சீமான்கள் பிரிவில் பிரபல வீரர்கள் வெற்றி சீமாட்டிகள் பிரிவில் அனா அதிர்ச்சித் தோல்வி
2015-07-03 10:31:47

10917_Batheni.jpgலண்­டனில் நடை­பெற்­று­வரும் 129ஆவது விம்­பிள்டன் டென்னிஸ் போட்டி அத்­தி­யா­யத்தின் மூன்றாம் நாளன்று சீமான்கள் ஒற்­றையர் பிரிவில் பிர­பல வீரர்கள் இரண்டாம் சுற்றில் வெற்­றி­பெற்று மூன்றாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளனர்.

 

எனினும் சீமாட்­டிகள் ஒற்­றையர் பிரிவில் சேர்­பி­யாவின் அனா இவா­னோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்து வெளியேறினார்.

 

நடப்பு சம்­பியன் நொவாக் ஜோ­கோவிச் தனது இரண்டாம் சுற்று போட்­டியில் பின்லாந்தின் ஜே. நியெ­மி­னென்னை 3 நேர் செட்­களில் (6–4, 6–2, 6–3) வெற்­றி­பெற்றார்.

 

டொமி­னிக்­காவைச் சேர்ந்த எஸ்ட்­ரெல்லா பேர்­கோஸை 3 நேர் செட்­களில் (6 - 3, 6–4, 7–6) சுவிட்­சர்­லாந்தின் ஸ்டனிஸ்லோஸ் வொரின்கா வெற்றிகொண்டார்.

 

இவர்­க­ளை­விட குரோ­ஷி­யாவின் எம். சிலிக், கன­டாவின் எம். ராஓனிக் ஆகிய முன்­னணி வீரர்­களும் இரண்டாம் சுற்றில் வெற்­றி­பெற்று மூன்றாம் சுற்­றுக்கு முன்­னே­றினர்.

 

சீமாட்­டிகள் ஒற்­றையர்

 

109173839861.jpgசீமாட்­டிகள் ஒற்­றையர் பிரிவில் சேர்பியாவின் அனா இவா­னோவிச் (ஏழாம் நிலை வீராங்­கனை) முற்றிலும் எதிர்­பா­ரா­த­வி­த­மாக இரண்டாம் சுற்றில் ஐக்­கிய அமெரிக்­காவின் பெத்தானி மெட்டெக் சாண்ட்­ஸிடம் தோல்வி (3–6, 4–6) அடைந்து வெளி­யே­றினார். 

 

ஹங்­கேரி வீராங்­கனை ரீ.பாபொஸை இரண்டாம் சுற்றில் எதிர்த்­தா­டிய செரீனா வில்­லியம்ஸ் மிக இல­கு­வாக 6–4, 6–1 என்று புள்ளி­களைக் கொண்ட இரண்டு நேர் செட்­களில் வெற்­றி­கொண்டார்.

 

ரஷ்­யாவின் மரியா ஷர­போவா தனது போட்­டியில் நெதர்­லாந்தின் ஆர். ஹொஜென்­காம்ப்பை 6–3, 6–1 என இலகுவாக வெற்றிகொண்டார்.

 

தாய்வான் வீராங்­கனை எஸ். டபிள்யூ. சியேவுடனான போட்டியில் செக் குடியரசின் எல். சவரோவா 2 நேர் செட்களில் வெற்றிபெற்றார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10917#sthash.DMsvIGoG.dpuf

விம்பிள்டன் தொடரில் நடால் அதிர்ச்சித் தோல்வி

 
 

பிரித்தானியாவில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் தொடரில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரபெல் நடால் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

wimbledon.jpg

இந்நிலையில் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் 2 முறை விம்பிள்டன் தொடரைக் கைப்பற்றியவரும் உலகின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஸ்பெயினின் ரபேல் நடால் தரவரிசையில் 102வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் டஸ்டின் பிரவுனை எதிர்கொண்டார்.

இதில் ரபேல் நடால் 5-7, 6-3, 4-6, 4-6 என்ற செட்களில் டஸ்டின் பிரவுனிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

இந்த வெற்றி குறித்து பிரவுன் கூறியதாவது,
இந்த போட்டியில் தோல்வி அடைந்தாலும் என்னிடம் இழப்பதற்கு எதுவுமில்லை என்பதால் தைரியமாக விளையாடினேன்.

என்னுடைய விளையாட்டு அவரை விளையாட விடாமல் செய்துவிட்டது. அவரால் சீராக விளையாட முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/articles/2015/07/03/விம்பிள்டன்-தொடரில்-நடால்-அதிர்ச்சித்-தோல்வி

  • கருத்துக்கள உறவுகள்

டஸ்ரினின் விளையாட்டு பிரமிக்க வைத்தது. பந்தை வலைக்கு கிட்டவாக அடித்து எதிராளியை திணரடிக்க வைத்தார். நல்ல எதிர்காலம் அவருக்கு உண்டு. அவருக்கும் பயிற்றுவிப்பாளருக்குமான உடல் பாசை(body language) ரசிக்கும் படி இருந்தது.

  • தொடங்கியவர்

பெடரருக்கு எதிராக 2-வது அதிவேக சர்வ் அடித்து ஆஸி.வீரர் சாம் குரோத் விம்பிள்டன் சாதனை

  • விம்பிள்டன் 2015: 3-வது சுற்று ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத்தை வீழ்த்திய பெடரர். அருகில் சாம் குரோத். | படம்: ஏ.எஃப்.பி.
    விம்பிள்டன் 2015: 3-வது சுற்று ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத்தை வீழ்த்திய பெடரர். அருகில் சாம் குரோத். | படம்: ஏ.எஃப்.பி.
  • மணிக்கு 236 கிமீ வேக சர்வை அடித்து 2-வது அதிவேக சர்வுக்கான விம்பிள்டன் சாதனை புரிந்த சாம் குரோத். | படம்: ஏ.எஃப்.பி.
    மணிக்கு 236 கிமீ வேக சர்வை அடித்து 2-வது அதிவேக சர்வுக்கான விம்பிள்டன் சாதனை புரிந்த சாம் குரோத். | படம்: ஏ.எஃப்.பி.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸில் 2-வது அதிவேக சர்வை அடித்து ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத் சாதனை புரிந்துள்ளார். ஆனாலும் பெடரரின் வெற்றியைத் தடுக்க முடியவில்லை.

ஆடவர் 3-வது சுற்று ஒற்றையர் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத், பெடரருக்கு எதிராக ஆடினார். 1-1 என்று சமநிலை வகித்த நிலையில் முதல் செட்டில் 30-30 என்று இருந்த ஒரு சர்வ் கேமில் ஆஸ்திரேலிய வீரர் சாம் குரோத் அடித்த சர்வ் ஒன்று மணிக்கு 236 கிமீ வேகத்துடன் சென்றது.

அந்த சர்வுக்கு பெடரர் தனது டென்னிஸ் ராக்கெட்டைத்தான் கொண்டு செல்ல முடிந்தது, ரிடர்ன் செய்ய முடியவில்லை.

இது விம்பிள்டன் டென்னிஸில் 2-வது அதிவேக சர்வ் ஆகும். முன்னதாக 2010-ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸில் நோவக் ஜோகோவிச்சுக்கு எதிராக டெய்லர் டெண்ட் அடித்த சர்வ் 238 கிமீ வேகம் கொண்டதாக அமைந்து முதலிடத்தில் உள்ளது.

இவ்வளவு ஆக்ரோஷம் காட்டியும் 3-வது சுற்றில் பெடரர் வெற்றி பெற்றார். அதாவது 6-4, 6-4, 6-7(டைபிரேக்கரில் 5/7), 6-2 என்று 4 செட்களில் 3-1 என்று பெடரர் சாம் குரோத்தை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

இந்த ஆட்டத்தில் சாம் குரோத் மொத்தம் 21 ஏஸ் சர்வ்களை அடித்தார், பெடரர் 17 ஏஸ்களை அடித்தார். சாம் குரோத் 4 டபுள் பால்ட்களை முக்கியத் தருணத்தில் செய்ததால் தோல்வி ஏற்பட்டது. பெடரர் மாறாக 1 முறையே டபுள் பால்ட்டை தன் சர்வில் செய்தார். முதல் சர்வில் 90% வெற்றிப் புள்ளிகளை பெடரர் பெற சாம் குரோத் 73%-ஏ பாயிண்ட் சர்வ்களை அடிக்க முடிந்தது. இரண்டாவது சர்விலும் பெடரர் 68% சர்வ் பாயிண்ட்களை வெல்ல சாம் குரோத் 52% சர்வ்களிலேயே பாயிண்ட் பெற முடிந்தது.

அவருக்கு பெடரர் சர்வ்களை முறியடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை, மாறாக பெடரர், குரோத் சர்வ்களை முறியடிக்க கிடைத்த 8 வாய்ப்புகளில் 4-ஐ தன் வெற்றியாகச் சாதித்தார்.

பெடரரின் மிகப்பெரிய பிரச்சினையான தெரியாமல் செய்யும் தவறுகள் இந்த ஆட்டத்தில் 8 முறையே நிகழ்ந்தது, மாறாக குரோத் 19 முறை தவறிழைத்தார். பெடரர் மொத்தம் 56 வின்னர்களை அடிக்க, குரோத் 47 வின்னர்களையே அடிக்க முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/பெடரருக்கு-எதிராக-2வது-அதிவேக-சர்வ்-அடித்து-ஆஸிவீரர்-சாம்-குரோத்-விம்பிள்டன்-சாதனை/article7386897.ece

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: 4-வது சுற்றில் சிலிச், வோஸ்னியாக்கி - போராடி தோற்றார் இஸ்னர்

 
 
இஸ்னரை வீழ்த்தியதும் ஆர்ப்பரிக்கிறார் மரின் சிலிச்
இஸ்னரை வீழ்த்தியதும் ஆர்ப்பரிக்கிறார் மரின் சிலிச்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் குரேஷியாவின் மரின் சிலிச், டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் 3-வது சுற்று ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள மரின் சிலிச் 7-6 (4), 6-7 (6), 6-4, 6-7 (4), 12-10 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 17-வது இடத்தில் இருந்த அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார்.

நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த ஆட்டம் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்றும் நடைபெற்றது. 4 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ‘பிக் செர்வர்களான’ ஜான் இஸ்னரும், சிலிச்சும் விடாப்பிடியாக போராடினர். 5-வது செட்டில் ஒரு கட்டத்தில் இருவரும் 10-10 என சமநிலையில் இருந்தனர். ஆனால் அடுத்த இரு கேம்களில் அபாரமாக ஆடிய மரின் சிலிச் அதைக் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.

விம்பிள்டனில் இவர்கள் இருவரும் நீண்டநேர ஆட்டங்களில் விளையாடுவது 2-வது முறையாகும். 5 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நடைபெற்ற ஆட்டத்தில் 11 மணி நேரம், 5 நிமிட போராட்டத்துக்குப் பிறகு பிரான்ஸின் நிகோலஸ் மஹத்தை வீழ்த்தினார் இஸ்னர். கடைசி செட் 70-68 என்ற கணக்கில் முடிந்த அந்த ஆட்டத்தில் இஸ்னர் வெற்றி கண்டார். டென்னிஸ் வரலாற்றில் நீண்ட நேரம் நடைபெற்ற ஆட்டம் இதுதான்.

2012 விம்பிள்டனில் சிலிச்-சாம் கியூரி இடையிலான ஆட்டம் 5 மணி, 31 நிமிடங்கள் நடை பெற்றது. கடைசி செட் 17-15 என்ற கணக்கில் முடிந்த அந்த ஆட்டத் தில் சிலிச் வெற்றி கண்டார். இது தான் விம்பிள்டன் வரலாற்றில் 2-வது நீண்ட நேர ஆட்டம்.

இதேபோல் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவருமான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் டென்மார்க்கின் வோஸ்னியாக்கி, போலந்தின் அக்னீஸ்கா ரத்வன்ஸ்கா ஆகியோர் வெற்றி கண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-4வது-சுற்றில்-சிலிச்-வோஸ்னியாக்கி-போராடி-தோற்றார்-இஸ்னர்/article7388968.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

 விம்பிள்டன்: முர்ரே முன்னேற்றம்

 
murray, tennis

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்றுக்கு பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே முன்னேறினார். 

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்றில் ‘நம்பர்–3’ வீரர் பிரிட்டனின் முர்ரே, தரவரிசையில் 27வது இடத்திலுள்ள இத்தாலியின் ஆன்ட்ரிஸ் செப்பியை எதிர் கொண்டார். முதலிரண்டு செட்டை 6–2, 6–2 என கைப்பற்றிய முர்ரே, மூன்றாவது செட்டை 1–6 என மோசமாக பறிகொடுத்தார். அடுத்த செட்டில் எழுச்சி கண்ட முர்ரே 6–1 என கைப்பற்றி பதிலடி தந்தார். முடிவில், முர்ரே 6–2, 6–2, 1–6, 6–1 என்ற செட் கணக்கில் வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 3வது சுற்றில் பிரான்சின் சிமோன் 3–6, 6–3, 7–6, 2–6, 6–2 என சக வீரர் மோன்பில்சை வீழ்த்தினார். செக் குடியரசின் தாமஸ் பெர்டிக் 4–6, 6–0, 6–3, 7–6 என ஸ்பெயினின் பாப்லோவை வென்றார். 

சோங்கா தோல்வி:

மற்றொரு போட்டியில் பிரான்சின் சோங்கா 6–7, 6–4, 6–7, 6–7 என குரோசியாவின் கார்லோவிச்சிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் பெலாரசின் கோவர்ட்ஸ்வோ 7–6, 6–3 என்ற நேர் செட் கணக்கில் சுலோவாகியாவின் ரெபர்கோவாவை வீழ்த்தினார். 

மற்றொரு போட்டியில் ருமேனியாவின் மோனிகா 6–3, 7–5 என செக் குடியரசின் கிறிஸ்டியானவை வென்றார். 

பயஸ் ஜோடி அசத்தல்

கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி 6–4, 6–2 என பிரான்சின் வேஸ்லின், அலிசா ஜோடியை வீழ்த்தியது. 

சானியா ஜோடி முன்னேற்றம்

மற்றொரு கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் சானியா, பிரான்சின் புரூனோ ஜோடி 6–2, 6–4 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஆன்ட்ரி, சுலோவாகியாவின் ஜான்டி ஜோடியை வென்றது. 

போபண்ணா ஜோடி தோல்வி

கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் போபண்ணா, ஸ்பெயினின் மரியா ஜோடி 2–6, 4–6 என மரியாஸ், கிளாடியா ஜோடியிடம் தோல்வியடைந்தது.

http://sports.dinamalar.com/2015/07/1436119510/murraytennis.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
விம்பிள்டன் டென்னிஸ் சீமாட்டிகள் பிரிவில் நான்காம் சுற்றில் செரீனா, வீனஸ் சகோதரிகள் மோதல்
2015-07-06 11:45:35

10960Untitled-9.jpgவிம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளில் சீமான்கள் ஒற்றையர் பிரிவில் ரொஜர் ஃபெடரர் (சுவிட்ஸர்லாந்து), அண்டி மறே (பெரிய பிரித்தானியா), தோமஸ் பேர்டிச் (செக் குடியரசு), மாரின் சிலிக் (குரோஷியா) ஆகிய முன்னணி வீரர்கள் நான்காம் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளனர்.

 

இவர்கள் முறையே எஸ். க்ரொத் (அவுஸ்திரேலியா), ஏ. செப்பி (இத்தாலி), பீ. அண்டுஜார் (ஸ்பெய்ன்), ஜே. ஐஸ்நர் (ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரை மூன்றாம் சுற்றில் வெற்றிகொண்டனர்.

 

சீமான்கள் பிரிவில் ரஃபாயல் நடால் எதிர்பாராதவிதமாக இரண்டாம் சுற்றில் ஜேர்மன் வீரர் டஸ்டின் பிறவுணிடம் தோல்வி அடைந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

 

109603846609.jpgசீமாட்டிகள் ஒற்றையர் பிரிவுக்கான நான்காம் சுற்றில் வில்லியம்ஸ் சகோதரிகளான வீனஸும் செரீனாவும் ஒருவரை ஒருவர் இன்று எதிர்த்தாடவுள்ளனர்.

 

மரியா ஷரபோவாவை கரோலின் வொஸ்னியாக்கி எதிர்த்தாடவுள்ளார்.

 

கடந்த 15 வருடங்களில் தலா 5 தடவைகள் விம்பிள்டன் சம்பியன் பட்டத்தை வென்றுள்ள வில்லியம்ஸ் சகோதரிகள் 2009ஆம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் சந்தித்த பின்னர் அகில இங்கிலாந்து கழக அரங்கில் ஒருவரை ஒருவர் எதிர்த்தாடவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

 

சீமாட்டிகளுக்கான நிரல்படுத்தலில் முதல் பத்து இடங்களுக்குள் இருப்பவர்களில் செரீனா, ஷரபோவா, வொஸ்னியாக்கி, லூசி சஃபரோவா ஆகியோரே எஞ்சியுள்ளர்.

 

பெட்ரா கெவிட்டோவா,சிமோனா ஹாலெப், அனா இவானோவிச், எகெத்தரினா மக்கரோவா, கார்லா சுவாரெஸ் நவாரோ, ஏஞ்சலிக் கேர்பர் ஆகியோர் முதலாம் வாரப்போட்டிகளுடன் வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

 

1096001.jpgவிம்பிள்டன் அரச குடும்ப ஆசனப் பகுதியில் சங்கா விம்­பிள்டன் அகில இங்­கி­லாந்து டென்னிஸ் கழக அரங்கில் நடை­பெற்­று­வரும் விம்­பிள்டன் டென்னிஸ் போட்டிகளைக் கண்­டு­க­ளிக்க சென்ற இலங்­கையின் நட்­சத்­திர கிரிக்கெட் வீரர் குமார் சங்­கக்­கார (மேல் வரி­சையில் இட­மி­ருந்து இரண்­டா­வது), அரச குடும்­பத்­தி­ன­ருக்கு ஒதுக்­கப்­பட்ட ஆசனப்பகு­தியில் அமர்ந்­தி­ருப்­பதைப் படத்தில் காணலாம்.

 

படத்தில் இங்­கி­லாந்தின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெவ் போய்கொட், பிரித்­தா­னிய டென்னிஸ் பயிற்­று­நரும் அண்டி மறேயின் தாயா­ரு­மான ஜூடி மறே, ஓய்­வு­பெற்ற கால்­பந்­தாட்ட வீரர் கிரேம் லெ சோக்ஸ் மற்றும் அவ­ரது மனைவி மேரி­யானா, இங்­கி­லாந்தின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீரரும் தொலைக்­காட்சி தொகுப்­பாளருமான கறி லினேக்கர் ஆகி­யோரும் படத்தில் காணப்ப­டு­கின்­றனர்.

 

10960caption.jpg

 

ஆறாம் நாளன்று நடை­பெற்ற அவுஸ்­தி­ரே­லி­யாவின் செமுவல் க்ரொத், சுவட்­ஸர்­லாந்தின் ரொஜர் ஃபெடரர் ஆகியோருக்கு இடையிலான போட்டியைக் இவர்கள் கண்டுகளித்தனர்.

 

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=10960#sthash.XvqDy6wX.dpuf
  • தொடங்கியவர்

விம்பிள்டன் காலிறுதியில் சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ்

 
 
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் காலிறுதிக்கு முன்னேறிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி. படம்: ஏ.எப்.பி.
விம்பிள்டன் மகளிர் இரட்டையர் காலிறுதிக்கு முன்னேறிய சானியா-ஹிங்கிஸ் ஜோடி. படம்: ஏ.எப்.பி.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.

16-ம் தரவரிசையில் உள்ள ஸ்பானிய ஜோடி, அனபெல் மெதினா காரிகேஸ், அராண்ட்ஷா பரா சாண்டோனியா ஜோடியை 6-4, 6-3 என்ற நேர் செட்களில் 66 நிமிடங்களில் வெளியேற்றியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

முதல் செட்டில் ஸ்பானிய ஜோடியின் சர்வை இருமுறை உடைத்த சானியா-ஹிங்கிஸ் ஜோடி, 2-வது செட்டில் 3 முறை முறியடித்தனர். அதே சமயத்தில் முதல் செட்டில் ஒரு முறை தங்களது சர்வை இழந்த சானியா ஜோடி, 2-வது செட்டில் இருமுறை தங்களது சர்வில் தோல்வி அடைந்தனர்.

முதல் சர்வில் 76% பாயிண்ட்களை சானியா-ஹிங்கிஸ் ஜோடி வென்றனர். 2-வது சர்விலும் 23 சர்வ்களில் 10-இல் வெற்றிப்புள்ளிகளைப் பெற்றது. மாறாக 2-ம் சர்வ்களில் ஸ்பானிய ஜோடி 14-ல் 5 முறையே வெற்றிப் புள்ளிகளைப் பெற்றது.

சானியா-ஹிங்கிஸ் ஜோடி மொத்தம் 59 வின்னர்களை அடிக்க, ஸ்பானிய ஜோடியோ 45 வின்னர்களை மட்டுமே அடிக்க முடிந்தது.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-காலிறுதியில்-சானியா-மிர்சாமார்டினா-ஹிங்கிஸ்/article7392287.ece

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ்: சஃபரோவா அதிர்ச்சி தோல்வி

 
 
சஃபரோவாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் கோகோ.
சஃபரோவாவை வீழ்த்திய மகிழ்ச்சியில் கோகோ.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த செக்.குடியரசின் லூஸி சஃபரோவா அதிர்ச்சி தோல்வி கண்டார்.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சர்வதேச தரவரிசையில் 47-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் கோகோ வந்தேவ்கே 7-6 (1), 7-6 (4) என்ற நேர் செட்களில் சஃபரோவாவைத் தோற்கடித்தார்.

விம்பிள்டனில் முதல்முறை யாக காலிறுதிக்கு முன்னேறியி ருக்கும் கோகா, அடுத்ததாக ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை சந்திக்கவுள்ளார். போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஷரபோவா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் கஜகஸ்தானின் ஜெரீனா டியாஸை தோற்கடித்தார்.

உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். விம்பிள்டனில் 6-வது பட்டம் வெல்வதில் தீவிரம் காட்டி வரும் செரீனா 67 நிமிடங்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார். அவர் இந்த ஆட்டத்தில் 10 ஏஸ் சர்வீஸ்களை பறக்கவிட்டார். இதுவரை வீனஸுடன் 26 முறை மோதியுள்ள செரீனா 14-வது வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் 3-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் பெலாரஸின் தகுதி நிலை வீராங்கனை ஓல்காவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரான்ஸின் ரிச்சர்ட் காஸ்கட் 7-5, 6-1, 6-7 (7), 7-6 (6) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸைத் தோற்கடித்தார். இதன்மூலம் கடந்த விம்பிள்டனில் நிக்கிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

மற்றொரு ஆடவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கனடாவின் வசேக் போஸ்பிஸில் 4-6, 6-7 (4), 6-4, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் செர்பியாவின் விக்டர் டிராய்க்கியைத் தோற்கடித்தார். இதன்மூலம் விம்பிள்டனில் காலிறுதிக்கு முன்னேறிய 3-வது கனடா வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் கனடாவைச் சேர்ந்த ராபர்ட் பாவெல் (1908, 1910, 1912), மிலோஸ் ரயோனிச் (2014) ஆகியோர் மட்டுமே விம்பிள்ட னில் காலிறுதிக்கு முன்னேறியிருக் கின்றனர்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-சபரோவா-அதிர்ச்சி-தோல்வி/article7394811.ece

  • தொடங்கியவர்

அரையிறுதியில் ஷரபோவா * ஜோகாவிச் போராடி வெற்றி

wimbledon tennis sharapova

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ரஷ்ய வீராங்கனை ஷரபோவா முன்னேறினார். நான்காவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் போராடி வென்றார். 

லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் காலிறுதியில் ரஷ்யாவின் மரியா ஷரபோவா, அமெரிக்காவின் கோகோவை எதிர்கொண்டார்.

முதல் செட்டை 6–3 என வென்ற ஷரபோவா, அடுத்த செட்டில் 3–1 என முன்னிலையில் இருந்தார். திடீரென எழுச்சி பெற்ற கோகோ, ‘டை பிரேக்கர்’ வரை சென்று 7–6 என, இரண்டாவது செட்டினை கைப்பற்றினார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷரபோவா, 6-–2 என வென்றார்.

முடிவில் 6–3, 6–7, 6–2 என்ற செட்களில் வெற்றி பெற்ற ஷரபோவா, விம்பிள்டன் தொடரில் 5வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறினார்.

முகுருஜா வெற்றி:

மற்றொரு காலிறுதியில் ஸ்பெயினின் முகுருஜா, சுவிட்சர்லாந்தின் பக்சின்ஸ்கியை 7–5, 6–3 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு காலிறுதியில் ‘நம்பர்–1’ இடத்திலுள்ள அமெரிக்காவின்  செரினா வில்லியம்ஸ், பெலாரசின் அசரன்காவை 3-–6, 6–2, 6–3 என்ற கணக்கில் வீழ்த்தினார். 

ஜோகோவிச் அபாரம்:

ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், தென் ஆப்ரிக்காவின் ஆண்டர்சனை 6–7, 6–7, 6–1, 6–4, 7–5 என்ற கணக்கில் போராடி வென்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

http://sports.dinamalar.com/2015/07/1436290798/wimbledontennissharapova.html

  • கருத்துக்கள உறவுகள்

?? மரியாவுக்கு வாழ்த்துகள்! ??

  • தொடங்கியவர்

விம்பிள்டன்: அரையிறுதியில் போபண்ணா ஜோடி

Wimbledon tennis bopanna india

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவ அரையிறுதிக்கு இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் ஜோடி முன்னேறியது.

லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் ஜோடி, உலகத் தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்திலுள்ள அமெரிக்காவின் பாப் பிரையன், மைக் பிரையன் சகோதரர்களை சந்தித்தது.

இதன் முதல் செட்டை 5–7 என போபண்ணா ஜோடி இழந்தது. பின் எழுச்சி கண்ட இந்த ஜோடி அடுத்த இரு செட்களையும் 6–4, 7–6 என வென்றது. தொடர்ந்து அசத்திய போபண்ணா ஜோடி நான்காவது செட்டை 7–6 என, தன் வசப்படுத்தியது.

2 மணி நேரம் 34 நிமிடங்கள் நீடித்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 5–7, 6–4, 7–6, 7–6 என்ற கணக்கில் பிரையன் சகோதரர்களை வீழ்த்திய அரையிறுதிக்கு முன்னேறியது.

கலப்பு இரட்டையரில் காலிறுதி:

கலப்பு இரட்டையர் மூன்றாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரான்சின் சோரஸ் ஜோடி, குரோஷியாவின் டிராகன்ஜா, கொன்ஜு ஜோடியை சந்தித்தது. இதில் 6–3, 6–7, 6–3  என்ற கணக்கில் வெற்றி பெற்ற சானியா ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றது. 

http://sports.dinamalar.com/2015/07/1436347334/Wimbledontennisbopannaindia.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன்: அரையிறுதியில் பெடரர்


 

federer, tennis

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரிட்டனின் ஆன்டி முர்ரே முன்னேறினர். 

லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ‘நம்பர்–2’ வீரர் சுவிட்சர்லாந்தின் பெடரர், தரவரிசையில் 12வது இடத்திலுள்ள பிரான்சின் சிமோனை சந்தித்தார். முதலிரண்டு செட்டை 6–3, 7–5 என பெடரர் கைப்பற்றினார். அடுத்த செட்டிலும் அசத்திய இவர் 6–2 என தன்வசப்படுத்தினார். ஒரு மணி நேரம் 34 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில், பெடரர் 6–3, 7–5, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். 

முர்ரே முன்னேற்றம்:

மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் பிரிட்டனின் முர்ரே 6–4, 7–5, 6–4 என கனடாவின் வசாக்கை வீழ்த்தி அரையிதிக்குள் நுழைந்தார். 

அரையிறுதியில் ரத்வன்ஸ்கா:

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் போலந்தின் ரத்வன்ஸ்கா 7–6, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மடிசனை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். 

http://sports.dinamalar.com/2015/07/1436377452/federertennis.html

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரெனை(சுவிஸ்) பிரெஞ்சுக்காரர் கடுமையான போட்டியின் பின் தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறுகிறார். இவர் 2007ல் அரை இறுதிக்கு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • தொடங்கியவர்
விம்பிள்டன் டென்னிஸ் சீமாட்டிகள் அரை இறுதிகளில் செரீனா- ஷரபோவா,ரட்வான்ஸ்கா - முகுருஸா மோதல்
2015-07-09 10:53:02

1102118.jpgமுன்னாள் சம்­பி­யன்­க­ளான செரீனா வில்லியம்ஸ் (ஐக்­கிய அமெ­ரிக்கா), மரியா ஷர­போவா (ரஷ்யா) ஆகிய இரு­வரும் விம்­பிள்டன் சீமாட்­டிகள் ஒற்­றையர் அரை இறுதிப் போட்­டியில் இன்று மோதவுள்ளனர்.

 

எனவே இவர்­களில் ஒரு­வ­ருக்கு சம்பியனாகும் வாய்ப்பு கிட்­டாமல் போவது உறுதி.

 

விம்­பிள்­டனில் செரீனா வில்­லியம்ஸ் ஐந்து தட­வை­களும் மரியா ஷர­போவா ஒரு தட­வையும் சம்­பி­ய­னா­கி­யுள்­ளனர்.

 

பெலாரஸ் வீராங்­கனை விக்­டோ­ரியா அஸ­ரென்­காவை லண்டன் மத்­திய டென்னிஸ் அரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற கால் இறு­தியில் எதிர்கொண்ட செரீனா வில்­லியம்ஸ் கடும் சவா­லுக்கு மத்­தியில் 2–1 செட்கள் அடிப்­படையில் வெற்­றி­யீட்­டினார்.

 

முத­லா­வது செட்டில் செரீ­னாவின் தடு­மாற்­றத்தை நன்கு பயன்­ப­டுத்­திக்­கொண்ட அஸ­ரென்கா 6–3 என்ற புள்­ளிகள் கணக்கில் வெற்­றி­பெற்றார்.

 

ஆனால் அடுத்த இரண்டு செட்­க­ளிலும் திற­மையை வெளிப்­ப­டுத்­திய செரீனா முறையே 6–2, 6–3 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் மிக இல­கு­வாக வெற்றி பெற்றார்.

 

1102119.jpgஇப்போட்­டிக்கு முன்­ன­தாக நடை­பெற்ற முத­லா­வது கால் இறு­தியில் அமெரிக்காவின் கோக்கோ வெண்­ட­வெஜ்ஜை எதிர்த்­தா­டிய மரியா ஷர­போவா 2–1 என்ற செட்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்றார்.

 

முத­லா­வது செட்டில் ஷர­போவா 6–3 என வெற்­றி­பெற்­ற­போ­திலும் அடுத்த செட்டை 7–6 என வெண்­டவெஜ் தன­தாக்­கிக்­கொண்டார்.

 

தீர்­மா­ன­மிக்க மூன்­றா­வது செட்டில் புத்தி சாது­ரி­யத்­துடன் விளை­யா­டிய மரியா ஷரபோவா 6–2 என வெற்­றி­பெற்று அரை இறு­திக்கு முன்­னே­றினார்.

 

மூன்­றா­வது கால் இறுதிப் போட்­டியில் அமெ­ரிக்­காவின் மெடிசன் கீஸ் என்பவரை சந்­தித்த போலந்தின் அக்­னி­யெஸ்கா ரட்­வான்ஸ்கா முத­லா­வது செட்டில் 6–7 என தோல்வி அடைந்தார். 

 

எனினும் அடுத்த இரண்டு செட்­களில் தலா 6–3 என்ற புள்­ளிகள் அடிப்­ப­டையில் வெற்­றி ­பெற்று அரை இறுதி வாய்ப்பை பெற்றார்.

 

கடைசி கால் இறுதிப் போட்­டியில் சுவிட்­ஸர்­லாந்தின் டிமியா பேசின்ஸ்கியை இரண்டு நேர் செட்களில் (7–5, 6–3) வெற்றி கொண்ட ஸ்பானியாவின் கார்பின் முகுருஸா அரை இறுதியில் அக்னியெஸ்கா ரட்வான்ஸ்காவை எதிர்த்தாடவுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=11021#sthash.UO9UHry9.dpuf
  • தொடங்கியவர்
பைனலில் செரினா
 
 
 
 
 

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு அமெரிக்காவின் செரினா முன்னேறினார். லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் அரையிறுதியில் 'நம்பர்-1' வீரர் அமெரிக்காவின் செரினா, தரவரிசையில் 4வது இடத்திலுள்ள ரஷ்யாவின் ஷரபோவாவை சந்தித்தார். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய செரினா, அடுத்த செட்டையும் 6-4 என கைப்பற்றினார். ஒரு மணி நேரம் 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், செரினா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்று பைனலுக்குள் நுழைந்தார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1292523

பைனலில் முகுருஜா, செரினா

Wimbledon tennis

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலுக்கு ஸ்பெயினின் முகுருஜா, அமெரிக்காவின் செரினா முன்னேறினர். 

லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–20’ வீராங்கனை ஸ்பெயினின் முகுருஜா, தரவரிசையில் 13வது இடத்திலுள்ள போலந்தின் ரத்வன்ஸ்காவை எதிர் கொண்டார். முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய முகுருஜா, அடுத்த செட்டை 3–6 என இழந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் கடைசி செட்டில் அசத்திய முகுருஜா 6–3 என தன்வசப்படுத்தினார். முடிவில், முகுருஜா 6–2, 3–6, 6–3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.

பைனலில் செரினா

 

மற்றொரு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீரர் அமெரிக்காவின் செரினா, தரவரிசையில் 4வது இடத்திலுள்ள ரஷ்யாவின் ஷரபோவாவை சந்தித்தார். முதல் செட்டை 6–2 என கைப்பற்றிய செரினா, அடுத்த செட்டையும் 6–4 என கைப்பற்றினார். ஒரு மணி நேரம் 18 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில், செரினா 6–2, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வென்று பைனலுக்குள் நுழைந்தார்.

 

போபண்ணா ஜோடி தோல்வி:

ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் போபண்ணா, ருமேனியாவின் புளோரின் ஜோடி 6–4, 2–6, 3–6, 6–4, 11–13 என நெதர்லாந்தின் ரோஜர், ருமேனியாவின் ஹோரியா ஜோடியிடம் வீழ்ந்தது. 

http://sports.dinamalar.com/2015/07/1436347334/Wimbledontennisbopannaindia.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன் அரையிறுதியில் சானியா-ஹிங்கிஸ் ஜோடி

 
விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னெறியா சானியா-மார்டினா ஹிங்கிஸ். | ஏ.பி.
விம்பிள்டன் அரையிறுதிக்கு முன்னெறியா சானியா-மார்டினா ஹிங்கிஸ். | ஏ.பி.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் இரட்டையர் அரையிறுதிச் சுற்றுக்கு இந்திய-சுவிஸ் இணையான சானியா மிர்சா-மார்டினா ஹிங்கிஸ் ஜோடி முன்னேறியது.

காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய-கஜகஸ்தான் ஜோடியான கேஸி டெல்லக்வா- யாரஸ்லாவா ஷ்வெடோவா ஜோடியை 7-5, 6-3 என்ற நெர் செட்களில் ஒரு மணி நேரம் 19 நிமிடங்களில் வீழ்த்தியது சானியா-ஹிங்கிஸ் ஜோடி.

2011 விம்பிள்டன் அரையிறுதியில் சானியா-எலெனா வெஸ்னின ஜோடி நுழைந்தது. அதன் பிறகு தற்போது மார்டினா ஹிங்கிஸுடன் விளையாடி அரையிறுதி கண்டுள்ளார் சானியா.

ஆக்ரோஷமாக ஆடியா சானியா-ஹிங்கிஸ் ஜோடி 27 முதல் சர்வில் 20-ஐ வெற்றியாக மாற்றினர். முதல் செட்டில் டெல்லக்வா-ஷ்வெடோவா ஜோடி சானியா-ஹிங்கிஸ் சர்வை முறியடித்தாலும் மீண்டும் சானியா-ஹிங்கிஸ் ஜோடி இருமுறை அவர்களது சர்வை முறியடித்து முதல் செட்டை 7-5 என்று கைப்பற்றினர்.

2-வது செட்டில் ஒரேயொரு எதிரணி சர்வை உடைத்த சானியா-ஹிங்கிஸ், அதன் பிறகு டெல்லக்வா-ஷ்வெடோவாவின் டபுள் ஃபால்ட்டினால் 2-வது செட்டை 6-3 என்று கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினர்

அரையிறுதியில் 5-ம் தரவரிசையில் உள்ள அமெரிக்க ஜோடியான ராகெல் காப்ஸ்-அபிகெய்ல் ஸ்பியர்ஸ் ஜோடியை எதிர்கொள்கின்றனர்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-அரையிறுதியில்-சானியாஹிங்கிஸ்-ஜோடி/article7403172.ece

  • தொடங்கியவர்

விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் அரையிறுதியை சேர்ந்து பார்த்த சச்சின், விராட் கோலி

 
 
விம்பிள்டன் டென்னிஸில் சச்சின், அஞ்சலி டெண்டுல்கர் விராட் கோலி| படம்: ட்விட்டர்.
விம்பிள்டன் டென்னிஸில் சச்சின், அஞ்சலி டெண்டுல்கர் விராட் கோலி| படம்: ட்விட்டர்.

ஒவ்வொரு ஆண்டும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியைப் பார்வையிட சச்சின் டெண்டுல்கர் செல்வது வழக்கம், இம்முறையும் சச்சின் விம்பிள்டன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டிக்கு வருகை தந்தார்.

இம்முறை இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி அவரது தோழி அனுஷ்கா சர்மாவும் இதே அரையிறுதிப் போட்டியைப் பார்வையிட வந்துள்ளனர்.

விம்பிள்டனின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுல்கர் அவரது மனைவி அஞ்சலி மற்றும் விராட் கோலி, அனுஷ்கா சர்மா ஆகியோர் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

நோவக் ஜோகோவிச், ரிச்சர்ட் காஸ்கே ஆகியோர் மோதும் முதல் அரையிறுதியான இந்தப் போட்டியை பார்வையிட ஓய்வு பெற்ற பிரெஞ்ச் கால்பந்து வீரர் தியரி ஹென்றியும் வந்துள்ளார்.

ரோஜர் பெடரரின் தீவிர ரசிகரான சச்சின், விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை ரெகுலராக நேரில் சென்று பார்ப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-டென்னிஸ்-ஆடவர்-அரையிறுதியை-சேர்ந்து-பார்த்த-சச்சின்-விராட்-கோலி/article7408125.ece

  • தொடங்கியவர்

சானியா சாதனை: விம்பிள்டன் பைனலுக்கு தகுதி

sania, tennis

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் ஜோடி பைனலுக்கு முன்னேறியது. 

லண்டனில், விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீராங்கனை இந்தியாவின் சானியா, சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜோன்ஸ், அபிகய்ல் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–1 எளிதாக கைப்பற்றிய சானியா ஜோடி, அடுத்த செட்டையும் 6–2 என தன்வசப்படுத்தியது. 56 நிமிடங்கள் முடிவில் சானியா, ஹிங்கிஸ் ஜோடி 6–1, 6–2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. 

முதல் முறை:

இதன் மூலம் இத்தொடரின் ‘சீனியர்’ பிரிவின் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார் சானியா. இதற்கு முன் (2003) இதே தொடரில் ‘ஜூனியர்’ பெண்கள் இரட்டையரில் ரஷ்யாவின் அலிசாவுடன் இணைந்து பட்டம் வென்றார். 

* கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இந்த இலக்கை சானியா இரண்டாவது முறையாக எட்டினார். இதற்கு முன் பிரெஞ்ச் (2011) ஓபனில் ரஷ்யாவின் வெஸ்னினாவுடன் இணைந்து பைனல் வரை முன்னேறினார்.

சானியா, ஹிங்கிஸ் ஜோடி இன்று நடக்கும் பைனலில் ரஷ்யாவின் மகரோவா, வெஸ்னினா ஜோடியை சந்திக்கிறது. இதில் சானியா வெல்லும்பட்சத்தில், கிராண்ட்ஸ்லாம் அரங்கில் பெண்கள் இரட்டையரில் தனது முதல் பட்டத்தை கைப்பற்றலாம். 

ஜோகோவிச், பெடரர் மோதல்:

ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ‘நம்பர்–1’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 21வது இடத்திலுள்ள பிரான்சின் காஸ்குயட்டை சந்தித்தார். ‘டை–பிரேக்கர்’ வரை சென்ற முதல் செட்டை ஜோகோவிச் 7–6 என கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர் அடுத்த இரண்டு செட்டையும் 6–4, 6–4 என வென்றார். 2 மணி 21 நிமிடம் நீடித்த போட்டியின் முடிவில் ஜோகோவிச் 7–6, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வென்று, பைனலுக்கு முன்னேறினார். 

மற்றொரு அரையிறுதியில் ‘நம்பர்–2’ வீரர் சுவிட்சர்லாந்தின் பெடரர், தரவரிசையில் 3வது இடத்திலுள்ள பிரிட்டனின் முர்ரேயை எதிர் கொண்டார். இதில் அபாரமாக ஆடிய பெடரர் முதலிரண்டு செட்டை 7–5, 7–5 என தன்வசப்படுத்தினார். கடைசி செட்டிலும் அசத்திய இவர் 6–4 என கைப்பற்றினார். 2 மணி 6 நிமிட போட்டியின் முடிவில், பெடரர் 7–5, 7–5, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இத்தொடரில் 10வது முறையாக பைனலுக்கு நுழைந்தார். 

பைனலில் பயஸ் ஜோடி

கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பயஸ், சுவிட்சர்லாந்தின் ஹிங்கிஸ் ஜோடி 6–3, 6–4 என அமெரிக்காவின் மைக் பிரையன், பெதானியே மேடக் ஜோடியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. 

நேகல் ஜோடி அசத்தல்:

‘ஜூனியர்’ ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சுமித் நேகல், வியட்நாமின் ஹோயங் ஜோடி 6–2, 6–3 என ஜப்பானின் யுசிகி, யமாஸ்கி ஜோடியை தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

http://sports.dinamalar.com/2015/07/1436549035/saniatennis.html

  • தொடங்கியவர்

விம்பிள்டன் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ்: 6-வது முறையாக பட்டம்

 
  • செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் சாம்பியன் டிராபியுடன், முகுருஸா அவரது ரன்னர் டிராபியுடன். | படம்: ஏ.பி.
    செரீனா வில்லியம்ஸ் விம்பிள்டன் சாம்பியன் டிராபியுடன், முகுருஸா அவரது ரன்னர் டிராபியுடன். | படம்: ஏ.பி.
  • சாம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் மகிழ்ச்சியில். | படம்: ராய்ட்டர்ஸ்.
    சாம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ் மகிழ்ச்சியில். | படம்: ராய்ட்டர்ஸ்.

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பட்டம் வென்றார் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ்.

சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கார்பைன் முகுருஸாவை 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 6-வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார்.

இது அவரது தொடர்ச்சியான 4-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். இத்துடன் 21 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்று சாதனை புரிந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

தொடக்கத்தில் மந்தமாக ஆடிய செரீனா மொத்தம் 8 டபுள் பால்ட்களைத் தனது சர்வில் செய்தார், மேலும் முடிக்கும் போதும் பதட்டத்துடன் முடித்தார்.

அடுத்ததாக வரும் யு.எஸ்.ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் ஒரே சீசனில் 4 கிராண்ட் ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வென்ற சாதனையை நிகழ்த்துவார். ஸ்டெஃபி கிராப் இந்தச் சாதனையை 1988-ம் ஆண்டு நிகழ்த்தினார்.

முதல் செட்டில் 2-4 என்று பின் தங்கியிருந்தார் செரீனா வில்லியம்ஸ், ஆனால் அதன் பிறகு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பேக்ஹேண்ட், ஃபோர்ஹேண்ட்,வாலி ஷாட்களில் கலக்கி 5 தொடர் கேம்களை வென்று முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றினார்.

2-வது செட்டில் 5-1 என்று முன்னிலை பெற்று சடுதியில் போட்டியை வெல்ல முடியவில்லை. முகுருஸாவும் இளைத்தவர் இல்லை, அவர் எதிர்கால நட்சத்திரம் ஆவார். வில்லியம்ஸ் சர்வை முறியடித்து 2-5 என்று வந்தார் முகுருஸா, பிறகு மேட்ச் பாயிண்ட்டிலிருந்து தப்பித்த முகுருஸா 5-வது பிரேக் பாயிண்டை வென்று 4-5 என்று வில்லியம்சை மிரட்டினார்.

கடைசியில் முகுருஸா சர்வை முறியடித்தார் வில்லியம்ஸ், முருகுஸா, தனது ஷாட்டை வைடாக அடிக்க செரீனா மகிழ்ச்சியுற்றார்.

http://tamil.thehindu.com/sports/விம்பிள்டன்-சாம்பியன்-செரீனா-வில்லியம்ஸ்-6வது-முறையாக-பட்டம்/article7411550.ece

  • தொடங்கியவர்

பொறிபறக்கும் ஃபார்மில் உள்ள பெடரர்: முர்ரேயை வீழ்த்தி விம்பிள்டன் இறுதியில் நுழைந்தார்

 
  • முதல் செட்டில் முர்ரேயை வீழ்த்திய ரோஜர் பெடரர். | படம்: ஏ.பி.
    முதல் செட்டில் முர்ரேயை வீழ்த்திய ரோஜர் பெடரர். | படம்: ஏ.பி.
  • முர்ரே சர்வை பேக்ஹேண்ட் ரிடர்ன் அடிக்கும் பெடரர். | படம்: ஏ.பி.
    முர்ரே சர்வை பேக்ஹேண்ட் ரிடர்ன் அடிக்கும் பெடரர். | படம்: ஏ.பி.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் ஆண்டி முர்ரேயை 7-5, 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய ரோஜர் பெடரர், இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச்சைச் சந்திக்கிறார்.

மிகவும் துல்லியமான டென்னிஸ் ஆட்டத்தை பெடரர் வெளிப்படுத்தினார், இது முர்ரேவுக்கு அதிர்ச்சியளித்தது. ஆனால் இருவருமே நன்றாகவே விளையாடினர், ஆனாலும் பெடரர் இப்போது ஆடும் ஆட்டம், அவரே கூறுவது போல், ‘தன் வாழ்நாளின் சிறந்த ஆட்டம்’ ஆகும்.

பெடரரின் ஆட்டம் இவ்வாறான துல்லியத்தை எட்டியதற்கு ஒரு எளிய உதாரணமாக ஒன்றைச் சுட்டிக் காட்டலாம். இந்த தொடரில் அவரது சர்வ் ஒரேயொரு முறைதான் முறியடிக்கப்பட்டுள்ளது என்பதே அது. முர்ரேவுக்கு ஆட்டத்தின் முதல் கேமில் பிரேக் செய்ய வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு பெடரரின் சர்வ் வெற்றி கொள்ள முடியாத உச்சத்துக்குச் சென்றது.

முர்ரே அதிகபட்சமாக என்ன செய்யமுடியும் என்றால் தன் சர்வை இழக்காமல் ஒவ்வொரு செட்டையும் டை-பிரேக்கருக்கு நகர்த்துவதையே, அதில்தான் முர்ரேவுக்கு லேசான வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால் அதற்கும் பெடரரின் ஆட்டம் இடம்கொடுக்கவில்லை.

முர்ரேவின் 2-வது சர்வ் பலவீனங்களைப் பயன்படுத்தி முதல் 2 செட்களில் கடைசியில் அவரது சர்வை முறியடித்து வென்றார் பெடரர், ஆனால் பெடரரின் முதல் சர்வ் முதல் செட்டில் 85% உள்ளே விழுந்தது. முதல் சர்வ் அவ்வளவு துல்லியமாக அமைந்தால் எதிரணி வீரர் எவ்வளவு பெரிய ரிடர்ன் மாஸ்டராக இருந்தாலும் ஒன்றும் செய்து விட முடியாது, முர்ரேவுக்கும் அதுதான் நடந்தது. முதல் செட்டில் 11 ஏஸ்களும் பெடரருக்கு பலம் சேர்த்தது.

2-வது செட்டில் பெடரரின் முதல் சர்வ் 61% துல்லியமாக அமைந்தது. 56 வின்னர்களையும் அடித்துள்ளார் பெடரர்.

ஆட்டத்தின் மறக்க முடியாத ஒரு கணம் எதுவென்றால் அது 2-வது செட்டில் 4-5 என்ற நிலையில் முர்ரே சர்வ் செய்த போது 15 நிமிடங்கள் அந்த சர்வ் கேம் நீண்டது, இருவரும் ஆடிய ஷாட்களின் தரம் ஆட்டம் முடிந்த பிறகும் நீண்ட நாட்கள் நினைவில் தங்கக் கூடியது. இதில் பெடரர் சார்பாக இருந்த 5 செட் பாயிண்ட்களை முர்ரே போராடி முறியடித்தார். கடைசியில் ஒரு ஏஸ் வின்னரையும் அடித்தார். 5-5 என்று ஆனது, பெடரர் தனது சர்வை ஒரு புள்ளி கூட முர்ரேவுக்கு விட்டுக் கொடுக்காமல் சடுதியில் முடித்து 6-5 என்று முன்னிலை பெற, நீண்ட சர்வ் கேமை ஆடிய முர்ரேயிடம் உடனடியாக முக்கிய சர்வ் வந்தது.

ஆனால் முர்ரேவுக்கு தனது சாதுரியம் மற்றும் ஆக்ரோஷம் கலந்த டென்னிஸ் ஆட்டத்தைக் காண்பித்த பெடரர் செட்டைக் கைப்பற்றினார்.

3-வது செட்டில் 5-4 என்று முன்னிலை பெற்ற பெடரர் 6-4 என்று கைப்பற்றினார். முர்ரேவின் 2-வது சர்வ்களுக்கு முன்னால் வந்து ஆக்ரோஷம் காட்டினார், அதில் ஒரு ஷாட் உண்மையில் நினைத்து பார்க்க முடியாதது. பேக்ஹேண்ட் ஷாட் ஒன்று குறுக்காக ஆடப்பட்டது. சும்மா தட்டி விடுவது போல்தான் இருந்தது ஆனால் முர்ரே அதிர்ச்சியில் நின்றார்.

இறுதிப் போட்டியில் பெடரர்-ஜோகோவிச் மோதுகின்றனர், இன்னொரு அபாரமான சவால் நிறைந்த உயர்தர டென்னிஸ் ஆட்டம் நமக்கு காத்திருக்கிறது.

மொத்தத்தில் முர்ரேயின் 2-வது சர்வ் பலவீனத்தை பெடரர் நன்றாக ஒர்க்-அவுட் செய்துள்ளார். முர்ரே இதனைச் சரியாகக் கையாள முடியாததோடு, பெடரரின் சப்லைம் டென்னிஸ் முன்னால் தோல்வியும் ஒரு பெருமை என்ற மனநிலைக்கு வந்திருப்பார்.

http://tamil.thehindu.com/sports/பொறிபறக்கும்-பார்மில்-உள்ள-பெடரர்-முர்ரேயை-வீழ்த்தி-விம்பிள்டன்-இறுதியில்-நுழைந்தார்/article7411366.ece

  • தொடங்கியவர்

விம்பிள்டன் பட்டம் வென்று வரலாறு படைத்தார் சானியா மிர்சா!

விம்பிள்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா ஜோடி பட்டம் வென்றது. விம்பிள்டன் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை. மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்னை செரினா வில்லியம்ஸ் 6வது முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றார்.

ser.jpg

ஒற்றையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செரினா வில்லியம்ஸ் 20வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை முகுருஜாவை சந்தித்தார். ஒரு மணி நேரம் 23 நிமிடம் நீடித்த இந்த போட்டியில் செரினா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். விம்பிள்டன் பட்டத்தை செரினா கைப்பற்றுவது இது 6வது முறை ஆகும்.

தற்போது செரினா வென்றுள்ள 21வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இதுவாகும். முதலிடத்தில் உள்ள ஸ்டெபி கிராபின் சாதனையை முறியடிக்க இன்னும் 2 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை செரினா வெல்ல வேண்டும்.

sani.jpg

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை ரஷ்யாவின் மக்ரோவா-எலினா வென்னிசா ஜோடியை எதிர்கொண்டது. இதில் 5-7,6-7 (4), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டம் வென்றது. விம்பிள்டன் போட்டியில் இந்திய வீராங்கனை ஒருவர் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை.

கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை பொறுத்த வரை கடந்த 2009 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் மகேஷ் பூபதியுடன் இணைந்து சானியா மிர்சா கலப்பு இரட்டையரில் பட்டம் வென்றிருந்தார். அதே போல் கடந்த  கடந்த 2011ஆம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் மகளிர் ஒற்றையரில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி தோல்வியடைந்தார்.

http://www.vikatan.com/news/article.php?aid=49342

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.