Jump to content

தினை ரெசிபி ( தினம் ஒரு சிறுதானியம் - 2)


Recommended Posts

தினை ரெசிபி ( தினம் ஒரு சிறுதானியம் - 2)

small%20grain02.jpg

தினைக்கு ஆங்கிலத்தில், 'இத்தாலியன் மில்லட்' என்று பெயர். உலக அளவில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானிய வகைகளில் ஒன்று. இனிப்புச் சுவைகொண்டது.

பலன்கள்

தினையோடு, எள் சேர்ப்பதால், கால்சியம் நிறைவாகக் கிடைக்கும். இதனால், எலும்புகள் நன்றாக உறுதியாகும். இதயத்தை பலப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். தேவையான புரதச்சத்து கிடைப்பதால், உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். வாயு, கபத்தைப் போக்கும்.

thinai01.jpg

தினை, எள் சாதம்

ஒன்றரை கப் தினையை இரண்டரை கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும். வெந்த தினை சாதத்தை ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும். சிறிது நல்லெண்ணெயில் 150 கிராம் எள், 5 காய்ந்த மிளகாய், 50 கிராம் உளுத்தம் பருப்பு, அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். ஒரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு, அரை டீஸ்பூன் கடுகு, சிறிது உளுத்தம் பருப்பு, 50 கிராம் வேர்க்கடலையைப் போட்டுத் தாளிக்கவும். இதில், தினை சாதத்தைப் போட்டு, எள்ளுப் பொடியைத் தூவி, கிளறி இறக்கவும்.

http://www.vikatan.com/news/article.php?aid=48722

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

தினை சிறியதாய் மஞ்சள் நிறத்தில் இப்படி இருக்கும்.1280px-An_Italian_millet_%28thinai_in_Ta

சமைத்த உணவை பார்த்தால் சோறு போல் இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

தினை சிறியதாய் மஞ்சள் நிறத்தில் இப்படி இருக்கும்.1280px-An_Italian_millet_%28thinai_in_Ta

சமைத்த உணவை பார்த்தால் சோறு போல் இருக்கு.

எந்தக்கடையிலை வாங்கலாம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Super Market யில் வாங்கலாம். 

உங்கள் ஊரில் Hirse என்ற பெயரில் விற்கிறார்கள். அத்தோடு பலவிதமான தானியவகைகள் விற்கிறார்கள்.

நாம்தான் இங்கிருக்கும் தானியவகைகளை அவதானிக்க தவறுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Super Market யில் வாங்கலாம். 

உங்கள் ஊரில் Hirse என்ற பெயரில் விற்கிறார்கள். அத்தோடு பலவிதமான தானியவகைகள் விற்கிறார்கள்.

நாம்தான் இங்கிருக்கும் தானியவகைகளை அவதானிக்க தவறுகிறோம்.

ரொம்ப ரொம்ப தாங்ஸ்மா...thumbup1_zps850b96f6.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.