Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 177/5 

  • Replies 82
  • Views 5.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உயிரற்ற ஆட்டக்களதில் வெளுத்துக் கட்டும் சூரர்களா ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள்?

 
 
ஆஸ்திரேலியாவை ‘ஸ்விங்’ செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
ஆஸ்திரேலியாவை ‘ஸ்விங்’ செய்த ஜேம்ஸ் ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் உண்மையான திறமை குறித்த கேள்விகளை இங்கிலாந்து ஸ்விங் பவுலர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

ஆஷஸ் தொடர் 3-வது டெஸ்ட் போட்டியில், நேற்று முதல் நாளில் 37-வது ஓவரிலேயே 136 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா. இதனால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களின் உண்மையான திறமை குறித்த கேள்விகள் எழுந்துள்ளன. ஆண்டர்சன் நேற்று ஆஸ்திரேலியாவின் பேட்டிங் உத்திகளின் போதாமையை அம்பலப்படுத்தினார்.

பந்துகள் ஸ்விங் ஆனால் இங்கிலாந்தில் ஆடினாலும் அல்லது தன் சொந்த மண்ணில் ஆடினாலும் ஆஸ்திரேலியா மண்ணைக் கவ்வும் என்றே தெரிகிறது. புள்ளி விவரங்களும் அவ்வாறே தெரிவிக்கின்றன.

பொதுவாக இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு தோற்றுசெல்லும் உயர்மட்ட அணிகள், பிட்சை குறைகூறுவது வழக்கம். குறிப்பாக நட்சத்திர அந்தஸ்து பெற்ற இந்திய பேட்ஸ்மென்களை 'flat track bullies' அதாவது மந்தமான ஆடுகளத்தில் வெளுத்துக் கட்டுபவர்கள் என்ற தொனியில் ஆஸ்திரேலியர்களும், இங்கிலாந்து கிரிக்கெட் நிபுணர்களும், முன்னாள் இந்நாள் வீரர்களும் குறிப்பிடுவது வழக்கம். குறிப்பாக பாய்காட் போன்றவர்கள் எந்த பிட்சிலும் அடித்து நொறுக்கும் சேவாக் போன்ற மரபை மீறிய பேட்ஸ்மென்களையும் மட்டை ஆட்டக்கள சூரர்கள் என்று வர்ணிப்பார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்றதற்குக் காரணம் அந்த அணியின் பேட்ஸ்மென்கள் அதீத தன்னம்பிக்கையில் ஆடினர் என்று கூறப்பட்டது. லார்ட்ஸ் பிட்ச் அதன் வழக்கமான உயிரை இழந்து உயிரற்ற ஆட்டக்களமான போது ரன்களைக் குவித்து அதன் பிறகு இங்கிலாந்து நெருக்கடிக்குள்ளானதோடு, அந்த மட்டைப் பிட்சிலும் மோசமாக ஆடி தோல்வி தழுவியது, எனவே செத்த ஆட்டக்கள தீரர்கள் என்ற அந்த ‘அவப்பெயர்’ கூட இங்கிலாந்துக்கு கிடைக்காமல் போனது.

ஆனால், நேற்று மைக்கேல் கிளார்க் புற்கள் உள்ள உயிரோட்டமான, பந்துகள் ஸ்விங் ஆகும் சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட் செய்யும் முடிவின் மீது தற்போது விமர்சனம் எழுந்துள்ளது. ஏன் கிளார்க்கை இதற்காக சாட வேண்டும் என்பதே நம் கேள்வி. அவர்கள்தான் எந்தப் பிட்சிலும் ஆடும் தீரர்கள், சூரர்கள் ஆயிற்றே, ஏன் நேற்று முடியவில்லை? உண்மையில் மிகவும் துல்லியமான ஸ்விங் பவுலிங்குக்கு எதிராக எந்த அணியும் சரணடைவதுதான் நடக்கும்.

ஆனால், அத்தகைய தருணங்களில் ரிச்சர்ட்ஸ், லாரா, சச்சின், திராவிட், சங்கக்காரா, ஜாக் காலிஸ் போன்ற வீரர்கள் தங்களது உத்தியின் வலிமையையும், மனவலிமையையும் உறுதிப்பாட்டையும் காண்பித்துள்ளனர். ‘செத்த ஆட்டக்கள தீரர்கள்’ என்று ஒரு சில இந்திய, இலங்கை வீரர்களை அவர்கள் வர்ணிக்கலாம், ஆனால் ஸ்விங் ஆட்டக்களத்தில் மேற்கூறிய வீரர்கள் தங்களுக்கேயுரிய பாணியில் எதிரணியினரை ஆதிக்கம் செலுத்தியுள்ளனர் என்பதே உண்மை.

அத்தகைய டெஸ்ட் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இப்போது இல்லை என்பதே உண்மை. ஸ்டீவ் ஸ்மித்தை இப்போது செத்த ஆட்டக்கள தீரர் என்று ஒருவர் அழைத்தால் அது எவ்வளவு அபத்தமாக அமையும்?

ஆனால், நேற்று அவருக்கு ஸ்டீவன் ஃபின் வீசிய பந்து அருமையானது, ஒரு பந்தை டிரைவ் ஆடிவிட்டால், உடனே தன்னம்பிக்கையின் உச்சத்துக்கு சென்று விடக்கூடாது என்று வேகப்பந்து வீச்சை அணுஅணுவாக ஆடிக் கணித்துள்ள சுனில் கவாஸ்கர் கூறியது இங்கு நினைவுகூரத்தக்கது.

அவர் கூறுவார், ஸ்விங் ஆகும் போது ஓவர் பிட்ச் பந்துகள் என்று நாம் தவறாக கருதும் பந்துக்கு டிரைவ் ஆடச் செல்வோம், இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நம்பிக்கை அளித்துவிடும். எனவே ஒரு ஷாட்டை முன்னால் வந்து ஆடினோம் என்றால் அடுத்த பந்தை பின்னால் சென்று ஆட வேண்டும் அல்லது ஆடாமல் விட்டு விட வேண்டும் என்பார் சுனில் கவாஸ்கர்.

மைக்கேல் கிளார்க் காயத்திற்குப் பிறகே சரியாக ஆட முடிவதில்லை. அவரது உத்தி முன்னால் வந்து ஆடுவதற்கு ஏற்றதாக இல்லை. பின்னால் சென்றாலும் அவரால் புல், கட், ஹூக் போன்றவற்றை துல்லியமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. டேவிட் வார்னர் நல்ல ஸ்விங் பந்துவீச்சுக்கு முன்னால் ஒன்றுமில்லாத வீரர் என்பதும் நேற்று தெரிந்தது. ஒரு பந்தை ஆடுவதா வேண்டாமா என்பதிலேயே ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்களுக்கு நேற்று இரட்டை மனோநிலை ஏற்பட்டது.

துணைக் கண்ட ‘செத்த பிட்ச்’களில் ஆடும் சூரப்புலிகள் என்று உலகின் தலைசிறந்த துணைக்கண்ட வீரர்களையும் கேலி பேசும் அவர்களும் செத்த பிட்ச் நாயகர்கள்தான். இங்கிலாந்தில் இத்தகைய சூழ்நிலைமைகளில் ராகுல் திராவிட் நிறைய சதங்களை அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் வெளுத்துக் கட்டியுள்ளார், அரவிந்த டிசில்வா, சங்கக்காரா, தில்ஷன், ஜெயசூரியா போன்ற துணைக்கண்ட பேட்ஸ்மென்களும் இந்தச் சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொண்டுள்ளனர்.

ஆனால் ஆஸ்திரேலியா நேற்று மட்டுமல்ல 2005 ஆஷஸ் தொடர் முழுதும் இத்தகைய சூழ்நிலைகளை திறமையுடன் எதிர்த்து ஆட முடியாமல் தோல்வி தழுவியது.

1997-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இதே எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் ஒன்றில் மார்க் டெய்லர் தலைமையிலான வலுவான ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட் செய்து 118 ரன்களுக்குச் சுருண்டதும் அறிந்த கதைதான். அப்போதும் இங்கிலாந்து 3 பவுலர்களையே பயன்படுத்தியது. இப்போதும் 3 பவுலர்களையே இங்கிலாந்து பயன்படுத்தியது. ஆனால் இம்முறை ராஜர்ஸ் அரைசதம் கண்டார், மார்க் டெய்லர் அணியில் ஒருவரும் அரைசதம் அடிக்கவில்லை.

துணைக்கண்ட ‘செத்த பிட்ச்’ களில் ஆடும் பேட்ஸ்மென்கள் என்று அவர்களால் பெயர் பெற்ற பேட்ஸ்மென்கள் ஸ்விங் ஆகும் நிலைகளில் கைகளைத் தளர்வாகக் கொண்டு சென்று பந்தை ஆடுவர், இதனால் எட்ஜ் ஆனாலும் பந்து பீல்டர் கைக்கு செல்லாது.

பவுன்ஸ் பிட்ச்களில் ஆடிப் பழகிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள், பந்தை அடிக்க வன்மையாகச் செல்வர், இதனால் எட்ஜ் பீல்டர் கைகளுக்குச் செல்கிறது. இங்குதான் ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஜாக் காலிஸ், சங்கக்காரா ஆகியோரது உத்தி பெரிதும் கைகொடுக்கும்.

எனவே லார்ட்ஸில் செத்த பிட்சில்தான் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சோபித்தனர். ஸ்விங் சாதகமான ஆட்டக்களத்தில் எவ்வளவு ஆக்ரோஷமான அணியாகத் தங்களை ஆஸ்திரேலியா கருதிக் கொண்டாலும் அந்த அணியில் கவாஸ்கர், திராவிட், காலிஸ் பாணி வீரர்களின் தேவை இருக்கிறது என்பதையே உணர்த்துகிறது.

உண்மையில் நல்ல ஸ்விங் பிட்சிலும் திணறுகிறார்கள், நல்ல ஸ்பின் பிட்சிலும் திணறுகிறார்கள் என்றால் அவர்களும் செத்த பிட்சில் வெளுத்துக் கட்டும் சூரர்கள்தானே!

 

http://tamil.thehindu.com/sports/உயிரற்ற-ஆட்டக்களதில்-வெளுத்துக்-கட்டும்-சூரர்களா-ஆஸ்திரேலிய-பேட்ஸ்மென்கள்/article7481386.ece

Edited by நவீனன்

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா  136 & 76/4 (16.5 ov)
இங்கிலாந்து  281
Australia trail by 69 runs with 6 wickets remaining
 
இன்று இன்னும் 39.3 ஓவர்கள் வீச உள்ள நிலையில் :shocked: சிலவேளை  இன்றுடன் போட்டி முடிவுக்கு வந்தால் 2 நாளில் டெஸ்ட் போட்டி விளையாடி முடிந்த உலக சாதனையை உருவாக்கி விடுவார்களோ:grin:
  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா  136 & 168/7 (55 ov)
இங்கிலாந்து  281
Stumps - Australia lead by 23 runs with 3 wickets remaining
  • கருத்துக்கள உறவுகள்
அவுஸ்திரேலியா  136 & 168/7 (55 ov)
இங்கிலாந்து  281
Stumps - Australia lead by 23 runs with 3 wickets remaining

என்னத்தைச் சொல்ல.... யாரைக் கட்டியழ...!:grin:

விழ...விழ  ...எழுவோம்!:shocked:

  • தொடங்கியவர்

என்னத்தைச் சொல்ல.... யாரைக் கட்டியழ...!:grin:

விழ...விழ  ...எழுவோம்!:shocked:

இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கிலாந்துகாரர் மிச்ச விக்கெட்களையும் சரித்து போட்டு மதிய இடைவேளையோடு போட்டியை முடித்து விடுவார்கள்:shocked:

பிறகு என்ன 2 நாள் போட்டி முன்பே முடிந்ததால் குடியும் கும்மாளமும்தான் அலிஸ்டர் குக் கோஸ்டி:grin:

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா 136 & 200/7 (60.2 ov)
இங்கிலாந்து  281
Australia lead by 55 runs with 3 wickets remaining
  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா  136 & 265
இங்கிலாந்து  281 & 4/0 (2.0 ov)
England require another 117 runs with 10 wickets remaining
மதிய உணவு இடைவேளையையும் கடந்து ஆட்டம் தொடர வழி பார்த்து விட்டார்கள் அவுஸ்திரேலிய வீரர்கள்.:grin:
  • தொடங்கியவர்

ஸ்டீவ் ஃபின் அபாரம்: இங்கிலாந்து வெற்றி இலக்கு 121 ரன்கள்

 
 
6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வழிகாட்டிய இங்கிலாந்து பவுலர் ஸ்டீவ் ஃபின்னை பாராட்டும் வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.
6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கு வழிகாட்டிய இங்கிலாந்து பவுலர் ஸ்டீவ் ஃபின்னை பாராட்டும் வீரர்கள். | படம்: ராய்ட்டர்ஸ்.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்சில் 265 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 121 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2-ம் நாளான நேற்று 168/7 என்று முடித்த ஆஸ்திரேலியா இன்று மேலும் 97 ரன்களை எடுத்தது, குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் 108 பந்துகளில் 6 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 58 ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக மொயீன் அலியிடம் வீழ்ந்தார்.

விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் 59 ரன்கள் எடுத்து ஸ்டீவன் ஃபின்னின் 6-வது விக்கெட்டாக வெளியேறினார். 21 ஓவர்களில் 3 மெய்டன்களுடன் ஸ்டீவ் பின் 79 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

கடைசியில் மிட்செல் ஸ்டார்க்கை ஏதோ பெரிய பேட்ஸ்மென் என்பது போல் கருதி பீல்டை பரவலாக்கி இங்கிலாந்து கேப்டன் குக் கேப்டன்சியில் தவறிழைத்தார். இதனால் ஜோஷ் ஹேசில்வுட், மற்றும் நேதன் லயனை மட்டுமே நெருக்கினார். இது ஸ்டார்க்குக்கு பலன் அளித்தது.

ஜான்சன் ஆட்டமிழந்த பிறகு நெவில், ஸ்டார்க் கூட்டணி 64 மதிப்புள்ள ரன்களை 8-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இதுதான் முன்னிலையை 100 ரன்களுக்கும் அதிகமாகக் கொண்டு சென்றது.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 103 ரன்களுக்குச் சுருண்ட இங்கிலாந்து, இந்த உயிருள்ள பிட்சில் தற்போது உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. குக் 4 ரன்களுடனும் லித் ரன் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்.

முன்னதாக நேற்று மீண்டும் அணிக்குள் வந்த ஸ்டீவ் ஃபின் அபாரமான ஸ்விங் பந்துவீச்சை வெளிப்படுத்தி ஸ்மித், கிளார்க், வோஜஸ், மிட்செல் மார்ஷ், ஜான்சன் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தி இன்று நெவிலின் விக்கெட்டையும் கைப்பற்றினார். இதில் கிளார்க், வோஜஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி ஃபின் ஹேட்ரிக் வாய்ப்பைப் பெற்றார்.

ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் முதலில் நிறைய எட்ஜ்கள் செய்தாலும் பிற்பாடு அதிரடி முறையில் 62 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 77 ரன்களை அதிகபட்சமாக எடுத்து 6-வது விக்கெட்டாக ஆண்டர்சனின் ஒரே விக்கெட்டாக வெளியேறினார்.

இங்கிலாந்துக்கு பின்னடைவு:

முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவை ஆட்டிப் படைத்து 6 விக்கெட்டுகளுடன் 136 ரன்களுக்குச் சுருட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சன் காயம் காரணமாக 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இவருக்கு மாற்று பவுலரை கண்டுபிடிப்பது இங்கிலாந்துக்கு சாமானியமான காரியம் அல்ல. இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெல்லவே அதிக வாய்ப்பிருக்கும் நிலையில், அடுத்த டெஸ்ட் போட்டி நாட்டிங்கம் மைதானத்தில் ஆகஸ்ட் 6-ம் தேதி தொடங்குகிறது.

இந்த மைதானத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் நிறைய விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

எனவே இந்த டெஸ்ட் போட்டியில் வெல்வது இங்கிலாந்துக்கு தற்போது கட்டாயமாகியுள்ளது. அடுத்த டெஸ்ட் போட்டியில் மார்க் உட் திரும்புவார் என்றாலும், ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு அவர் மாற்றா என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/ஸ்டீவ்-பின்-அபாரம்-இங்கிலாந்து-வெற்றி-இலக்கு-121-ரன்கள்/article7485887.ece?homepage=true

  • தொடங்கியவர்

இங்கிலாந்து 8 விக்கெட்களால் வெற்றி

அவுஸ்திரேலியா  136 & 265
இங்கிலாந்து  281 & 124/2 (32.1 ov)
 
இந்த டெஸ்ட் போட்டி 2 அரை நாளில் முடிவுக்கு வந்துள்ளது:shocked:
  • தொடங்கியவர்

124/2: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

 
  • இங்கிலாந்தின் ஜோ ரூட், இயன் பெல் ஆகியோர் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். | படம்: ஏ.பி.
    இங்கிலாந்தின் ஜோ ரூட், இயன் பெல் ஆகியோர் வெற்றியைக் கொண்டாடுகின்றனர். | படம்: ஏ.பி.
  • தோற்றவுடன் கிளார்க். | படம்: ஏ.பி.
    தோற்றவுடன் கிளார்க். | படம்: ஏ.பி.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஷஸ் தொடரில் 2-1 என்று முன்னிலை பெற்றுள்ளது.

வெற்றிக்குத் தேவையான 121 ரன்களை எடுக்க களமிறங்கி குக், லித் விக்கெட்டுகளை மட்டும் இழந்து 124 ரன்கள் எடுத்து 3-ம் நாள் ஆட்டத்தில் பாதியிலேயே வெற்றியை ஈட்டியது. கிட்டத்தட்ட இரண்டரை நாளில் ஆஸ்திரேலியாவை காலி செய்தது.

இயன் பெல் 10 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்தும், ஜோட் ரூட் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்தும் நாட் அவுட்டாக திகழ்ந்தனர்.

அலிஸ்டர் குக் 7 ரன்களில் ஸ்டார்க் பந்தில் பவுல்டு ஆனார். லித் 12 ரன்களில் ஹேசில்வுட் பந்தில் அவுட் ஆனார். 51/2 லிருந்து ஜோ ரூட், இயன் பெல் கொண்டு சென்று வெற்றிபெறச் செய்தனர். இங்கிலாந்தை அச்சுறுத்தும் ஜான்சன் 9-வது ஓவர் வரை கொண்டுவரப்படாதது ஏன் என்பது புரியாத புதிராக இருந்தது. ஜான்சன் பந்து வீச அழைக்கப்படும் போது இங்கிலாந்து நல்ல தொடக்கத்தைக் கண்டிருந்தது. அதாவது 47/1 என்று வசதியான நிலையில் இருந்தது.

அங்கிருந்து இங்கிலாந்தை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதே உண்மை.

32.1 ஓவர்களில் இலக்கை எட்டியது இங்கிலாந்து. நேதன் லயன் 11 ஓவர்கள் வீசினார் பயனில்லை. 52 ரன்களைக் கொடுத்தார் விக்கெட் இல்லை. இதில் 6 பவுண்டரிகள் 1 சிக்சரையும் விளாசினர்.

இந்த டெஸ்ட் போட்டிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் விளையாடிய ஸ்டீவ் பின் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் அவர் ஸ்டீவ் ஸ்மித், மைக்கேல் கிளார்க் ஆகியோரை காலி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

என்னுடைய மோசமான் பார்மினால் ஆஸி. 10 வீரர்களுடன் விளையாடுகிறது: கிளார்க் சுய விமர்சனம்

தோல்வி குறித்து கிளார்க் கூறும் போது, “என்ன நடந்தது என்பதை விளக்குவது கடினம். இங்கிலாந்தை பாராட்டுவது தவிர வேறு வழியில்லை. முதல் நாள் உண்மையில் அபாரமாக வீசினர். ஆனாலும் நான் முதலில் பேட் செய்ததையே ஆதரிக்கிறேன். பிட்ச் கொஞ்சம் உடையத் தொடங்கியது, 4-ம் நாள் 5-ம் நாளுக்கு ஆட்டம் சென்றிருக்க வேண்டும். ஆட்டம் முழுதும் பந்துகள் ஸ்விங் ஆனது. எனது பேட்டிங் உண்மையில் கவலையளிக்கிறது. நாங்கள் நான் நீங்கலாக 10 வீரர்களுடன் விளையாடுவதாகவே கருதுகிறேன்.

எனது பேட்டிங் பற்றி கவலையில்லை. ஆனாலும் தயாரிப்பு பற்றிய விஷயமாகும் இது. இங்கிலாந்துக்கு பாராட்டுகள், என்னை விரைவில் வீழ்த்தி விட்டனர். 5-ம் நிலையில் நான் களமிறங்கியபோது எனது ரெக்கார்ட் நன்றாக இருந்தது, இப்போது 4-ம் நிலை கவலையளிப்பதாக உள்ளது.

வீரர்கள் போராடிய விதம் பெருமையளிக்கிறது, பின்கள வீரர்கள் போராடினர், ஸ்டார்க் நன்றாக ஆடினார். 180-200 ரன்கள் எங்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்திருக்கும், ஆனால் இங்கிலாந்து மீண்டும் நன்றாக பேட் செய்தது என்றே கூற வேண்டும்.

எங்கள் இலக்கு தொடரை வெல்வதே, எங்களால் இன்னமும் அது முடியும் என்றே நான் நம்புகிறேன். ஒன்றேயொன்று நாங்கள் நன்றாக விளையாடவேண்டும், என்று சாதாரணமாகக் கூறிவிடலாம்” என்றார்.

http://tamil.thehindu.com/sports/1242-ஆஸ்திரேலியாவை-வீழ்த்தியது-இங்கிலாந்து/article7486225.ece

 

  • தொடங்கியவர்

12 டெஸ்ட்களில் 250 ரன்கள்: பிராட் ஹேடின் நீக்கம் பற்றி பொரிந்து தள்ளிய டேரன் லீ மேன்

 
 
darren_lehman_2494706h.jpg
 

தனது மகள் மியா-வின் உடல் நலக்கோளாறு காரணமாக லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆடாத பிராட் ஹேடின் அதன் பிறகு தேர்வு செய்யப்படாததால் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் ‘முதலில் குடும்பம்’ என்ற கொள்கை மிதித்துத் தள்ளப்பட்டுள்ளதாக புகார் எழுப்பப்பட்டு வரும் நிலையில் ஹேடின் நீக்கம் குறித்து பயிற்சியாளர் டேரன் லீ மேன் மவுனம் கலைத்தார்.

"நாங்கள் ஒரு குழுவாக நெருக்கமாகவே இருக்கிறோம். நாம் ஒரு விஷயத்தில் தெளிவாக இருப்போம், பிராட் எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்காக சிறப்பாக ஆடிவந்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், அவரை நீக்குவது என்பது குறித்த ஒரு கடினமான முடிவை ஒரு பயிற்சியாளராக நான் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

மிகவும் சீரணிக்க முடியாத உண்மை என்ற ஒன்று எப்போதும் உண்டு. கடைசி 12 டெஸ்ட் போட்டிகளில் ஹேடின் 250 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். 21 முறையில் 16 முறை பவுல்டு ஆகியுள்ளார். எனவே ஆட்டத்திறன் என்பதே இறுதியில் முடிவெடுக்கும் அம்சமாக உள்ளது. 'முதலில் குடும்பம்' என்ற கொள்கை பற்றி “ஆ” “ஊ” என்று பேசப்பட்டு வருகிறது, அதற்கு எந்தக் குந்தகமும் ஏற்படவில்லை, அது அப்படியேதான் இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரை ரியான் ஹேரிஸ் ஆடவில்லை, முதல் டெஸ்டில் இங்கு ஆடுவார் என்ற உத்தரவாதமும் இல்லை. ஆனால், அவர் ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. டேவிட் வார்னர் தனக்கு குழந்தை பிறந்ததால் ஜிம்பாப்வே தொடரில் ஆடவில்லை, ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஆடுவார் என்ற உத்தரவாதங்கள் இல்லை. ஆனால் இவையெல்லாம் பற்றி நிறைய பேர்களிடத்தில் ஒரு சமச்சீரற்ற பார்வை இருந்து வருகிறது.

பிராட் ஹேடின் குடும்பம் பற்றி நாங்கள் உண்மையில் அக்கறை கொண்டுள்ளோம். அவருக்கு பதிலாக லார்ட்ஸில் ஆடிய பீட்டர் நெவில் சிறப்பாக ஆடினார், எனவே அடுத்த போட்டியில் மாற்ற விரும்பவில்லை. இந்த டெஸ்ட் போட்டியிலும் அவர் சிறப்பாகவே ஆடினார். நாங்கள் அனைவருமே பிராட் ஹேடினை நேசிக்கிறோம், எனவே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் இருக்கும், தொழில்பூர்வ விளையாட்டில் இதெல்லாம் சகஜம், எங்களால் இயன்ற அளவுக்கு இந்தச் சூழ்நிலைகளை சிறப்பாகக் கையாண்டு வருகிறோம்” என்றார்.

தோல்வி, கேப்டன் கிளார்க் பார்ம் குறித்து...

அவர் தேவையான அளவுக்கு விளையாடலாம். அவர்தான் கேப்டன். ஆனால் அவர் நன்றாக விளையாடுவது அவசியம். அவர் மட்டுமல்ல, முதல் இன்னிங்ஸில் ராஜர்ஸ், 2-வது இன்னிங்ஸில் வார்னர் தவிர முன்கள வீரர்கள் தடுமாறியே வருகின்றனர்.

ஆனால் வீரர்களின் பணிக் கவனம் குறித்து நான் புகார் தெரிவிக்க மாட்டேன். குறிப்பாக மைக்கேல் கிளார்க் தயாரிப்பு அபாரம். எனவே இந்தத் தோல்வியினால் நாங்கள் பதட்டமடையப் போவதில்லை. இது உறுதி.

ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் எங்கள் வீரர்கள் மேலும் சிறப்புற வேண்டும்.” என்றார் டேரன்.

http://tamil.thehindu.com/sports/12-டெஸ்ட்களில்-250-ரன்கள்-பிராட்-ஹேடின்-நீக்கம்-பற்றி-பொரிந்து-தள்ளிய-டேரன்-லீ-மேன்/article7489609.ece

  • தொடங்கியவர்

இங்கிலாந்துக் குழாம் அறிவிப்பு

IN219123.jpg

இங்கிலாந்து, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஆஷஸ் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்துக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. 14 பேர் கொண்ட குழாமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

3ஆவது போட்டியின் போது காயமடைந்து, நான்காவது போட்டியில் பங்குபற்ற முடியாத நிலைக்குள்ளான இங்கிலாந்தின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனுக்குப் பதிலதக, லியம் பிளங்கட், மார்க் ஃபூட்டிட் ஆகிய இருவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

எனினும், மூன்றாவது போட்டியில் காயம் காரணமாகச் சேர்க்கப்பட்டிருக்காத மார்க் வூட்-க்குப் பதிலாகச் விளையாடிய ஸ்டீவன் ஃபின், அப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றதையடுத்து, ஃபூட்டிட், பிளங்கட் ஆகியோரோடு, மார்க் வூட்டும் நான்காவது போட்டியில் இறுதி இடத்துக்காகப் போராடவுள்ளார்.

தடுமாறிவரும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அடம் லைத்-க்கு, இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இடம்பெற்றுக்கொண்டிருக்கும் ஆஷஸ் தொடரில், இங்கிலாந்து அணி 2-1 என்ற நிலையில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குழாம்:

 

அலஸ்டெயர் குக், அடம் லைத், இயன் பெல், ஜோ றூட், ஜொனி பெயர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், ஜொஸ் பட்லர், மொயின் அலி, ஸ்டுவேர்ட் ப்ரோட், ஸ்டீவன் ஃபின், மார்க் வூட், லியம் பிளங்கட், மார்க் ஃபூட்டிட், அடில் றஷீத்.

http://tamil.wisdensrilanka.lk/article/1847

  • தொடங்கியவர்

ஆஷஸ் 4-வது டெஸ்ட் இன்று தொடக்கம்: தொடரை வெல்ல இங்கிலாந்து தீவிரம்

 
பயிற்சியின்போது கால்பந்து விளையாடி மகிழும் இங்கிலாந்து வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்.
பயிற்சியின்போது கால்பந்து விளையாடி மகிழும் இங்கிலாந்து வீரர்கள். படம்: ராய்ட்டர்ஸ்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இரு போட்டிகளில் வென்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி இந்தப் போட்டியிலும் வென்று தொடரைக் கைப்பற்றுவதில் தீவிரமாக இருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவோ தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைக்க இந்தப் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா தோற்குமானால் தொடரை இழந்துவிடும்.

முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து, 2-வது டெஸ்ட்டில் படுதோல்வி கண்ட நிலையில், 3-வது போட்டியில் மீண்டும் வென்று வலுவான நிலையில் உள்ளது. 4-வது போட்டி, தொட ரின் வெற்றியைத் தீர்மானிக்கும் போட்டியாக இருப்பதால் இரு அணிகளுமே கடுமையாகப் போராடும் என எதிர்பார்க் கப்படுகிறது.

தடுமாறும் கிளார்க்

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் டேவிட் வார்னர், கிறிஸ் ரோஜர்ஸ், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் ரன் குவிப்பு அமையும். தொடர்ந்து தடுமாறி வரும் கேப்டன் கிளார்க் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் அவர், இந்தப் போட்டியிலாவது சிறப்பாக ஆடி அதற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆடம் வோஜஸுக்குப் பதிலாக ஷான் மார்ஷ் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. மார்ஷ் இட ம்பெறும்பட்சத்தில் கிளார்க் 5-வது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது. மற்றபடி ஆஸ்திரேலிய அணி யில் எந்த மாற்றமும் இருக் காது. பின்வரிசையில் விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில், ஆஸ்திரேலி யாவுக்கு நம்பிக்கையளிக்கிறார்.

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், ஹேஸில்வுட் கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் நாதன் லயனை நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

வலுவான பேட்டிங்

இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் விளையாடவில்லை. அதைத் தவிர வேறு எந்த மாற்றமும் இருக்காது. இங்கிலாந்து அணி கேப்டன் அலாஸ்டர் குக், இயான் பெல், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்கள் அனைவருமே பார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன் இடம்பெறாததால் ஸ்டூவர்ட் பிராட் தலைமையிலான கூட்டணி கவனிக்கவுள்ளது. 2-வது வேகப்பந்து வீச்சாளராக ஸ்டீவன் ஃபின் அசத்தி வருகிறார். ஆண்டர்சனுக்குப் பதிலாக மார்க் உட் இடம்பெறுவார் என தெரிகிறது. அவருக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக உடற்தகுதி சோதனை நடை பெறுகிறது. ஒருவேளை அதில் மார்க் உட் தேறாதபட்சத்தில் லியாம் பிளெங்கெட் இடம்பெற வாய்ப்புள்ளது. சுழற்பந்து வீச்சில் மொயீன் அலி நம்பிக்கை யளிக்கிறார். இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெல்லும்பட்சத்தில் சொந்த மண்ணில் தொடர்ந்து 4-வது முறையாக ஆஷஸ் தொடரைக் கைப்பற்றிய பெருமையைப் பெறும்.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-4வது-டெஸ்ட்-இன்று-தொடக்கம்-தொடரை-வெல்ல-இங்கிலாந்து-தீவிரம்/article7506788.ece

15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள்: பிராட் ஆவேசத்தில் 60 ரன்களுக்குச் சுருண்டது ஆஸ்திரேலியா

 
  • டிரெண்ட் பிரிட்ஜில் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்த ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி
    டிரெண்ட் பிரிட்ஜில் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைச் சாய்த்த ஸ்டூவர்ட் பிராட். | படம்: ஏ.பி
  • ஸ்கோர் போர்டு 29/6 என்று காட்ட மைக்கேல் கிளார் அவுட் ஆகி வெளியேறும் காட்சி. | படம்: ஏ.பி.
    ஸ்கோர் போர்டு 29/6 என்று காட்ட மைக்கேல் கிளார் அவுட் ஆகி வெளியேறும் காட்சி. | படம்: ஏ.பி.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் 4-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்கமில் இந்திய நேரம் 3.30 மணிக்குத் தொடங்கியது. 5.10 மணிக்குள் 18.3 ஓவர்களில் ஆஸ்திரேலியா தன் முதல் இன்னிங்சில் 60 ரன்களுக்குச் சுருண்டது. உதிரிகள் வகையில் 14 ரன்கள் வந்ததே அதிகபட்ச தனிப்பட்ட ரன் எண்ணிக்கையாக அமைந்தது.

1898-ம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியா உணவு இடைவேளைக்கு முன்னதாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த துவம்சத்தில் டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் 5 விக்கெட்டுகளை குறைந்த ஓவர்களில் கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார் பிராட்.

ஆஸ்திரேலியாவைச் சுருட்ட 100 நிமிடங்களே எடுத்து கொண்டார் பிராட். இன்னிங்ஸ் முழுதும் 5 ஸ்லிப்கள் நிறுத்தப்பட்டிருந்தது.

ஸ்டூவர்ட் பிராட் 9.3 ஓவர்கள் வீசி 5 மெய்டன்களுடன் 15 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், இதன் மூலம் அவர் 300 விக்கெட்டுகளைக் கடந்துள்ளார். கிறிஸ் ராஜர்ஸ் விக்கெட்டை வீழ்த்தியவுடனேயே அவர் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிவிட்டார். தற்போது 307 விக்கெட்டுகளுடன் இங்கிலாந்து முன்னாள் வீரர் பிரெட் ட்ரூமென்னை சமன் செய்துள்ளார்.

ஆண்டர்சன் விக்கெட்டுகளை அள்ளிக்குவிக்கும் இந்த மைதானத்தில் காயம் காரணமாக அவர் இடம்பெறாததையடுத்து ஸ்டூவர்ட் பிராட் விக்கெட்டுகளை அள்ளினார். இந்த மைதானத்தில் சிறந்த பவுலிங் இதுவே என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

இன்னும் கூறப்போனால், அடுத்த பேட்ஸ்மெனுக்கு கால்காப்பு உள்ளிட்டவைகளை கட்டிக் கொள்ள நேரமிருந்திருக்குமா என்பதே சந்தேகம், அந்த வேகத்தில் விக்கெட்டுகள் மடம்டவென சரிந்தன.

எப்போதும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் டிரெண்ட் பிரிட்ஜ் ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் அலிஸ்டர் குக், ஆஸ்திரேலியாவை பேட் செய்ய அழைத்தார்.

முதல் ஓவரை பிராட் வீச 3-வது பந்து கிறிஸ் ராஜர்ஸ் கிரீஸில் தேங்கி நின்றார், ஃபுட்வொர்க் இல்லை, பிராட் பந்து ஆங்கிளாக உள்ளே வந்து சற்றே வெளியே ஸ்விங் ஆக அதுவே எட்ஜ் எடுத்துக்கொண்டு சென்றது. முதல் ஸ்லிப்பில் கேட்ச் ஆனது.

அதே ஓவரில் 6-வது பந்தில் புதிதாக களமிறங்கிய ஸ்மித்துக்கு ஒரு பந்து ஆஃப் ஸ்டம்பில் சற்றே நல்ல அளவுக்கு கொஞ்சம் முன்னதாக பந்து பிட்ச் ஆக அவர் நின்ற இடத்தில் அப்படியே நேராக திரும்ப வேண்டியதாயிற்று, அதாவது கிரிக்கெட் மொழியில் ஸ்கொயர் ஆனார் என்று கூறப்படுவதுண்டு. பந்து ஸ்மித்தை மதிக்காமல் மட்டையின் விளிம்பைத் தட்டிச் சென்று ரூட் கையில் அடைக்கலமானது.

2-வது ஓவரில் டேவிட் வார்னர், மார்க் உட் வீசிய நல்ல வேகமான பந்தை தன் உடலிலிருந்து சற்றே தள்ளி ஆடி மட்டையை தொங்கவிட பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு பட்லரிடம் கேட்ச் ஆனது. 3 விக்கெட்டில் இரண்டு டக் அவுட்.

ஷான் மார்ஷ் களமிறங்கினார் 4 பந்துகள் ஆடினார், மீண்டும் பிராடின் அருமையான ஆஃப் ஸ்டம்ப் லெந்த்துக்கு மட்டை விளிம்பைக் கொடுத்தார், வெளியேறினார்.

5-வது ஓவரில் பிராட், வோஜஸையும் ஒரு அருமையான ஸ்விங் பந்துக்கு வீழ்த்தினார், இம்முறை 5-வது ஸ்லிப்பில் ஸ்டோக்ஸ் அருமையான கேட்ச் ஒன்றை பிடித்தார், ஆஸ்திரேலியா 21/5.

கிளார்க் இறங்கி 2 பவுண்டரிகளை அடித்து 10 ரன்களில் இருந்த போது பிராட் வீசிய வெளியே சென்ற பந்தை, விட்டு விட வேண்டிய பந்தை கால்களை நகர்த்தாமல் சேவாக் பாணி ஸ்லேஷ் செய்தார் எட்ஜ் ஆனது குக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு ஒவ்வொரு விக்கெட்டுக்கும் தலையை எதிர்மறையாக ஆட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார் கிளார்க்.

விக்கெட் கீப்பர் நெவிலும் ஃபுட்வொர்க் இல்லாமல் மார்க் உட் பந்தில் பவுல்டு ஆனார். 13-வது ஓவரில் பிராட் மீண்டும் ஸ்டார்க், ஜான்சன் ஆகியோரை காலி செய்தார். இரண்டுமே குட் லெந்த், எட்ஜ், வழக்கமான மட்டை தொங்கவிடல், அவுட்.

நேதன் லயன் 9 ரன்கள் எடுத்தார். ஆனானப்பட்டவர்களுக்கே சட்டென எட்ஜ் எடுக்கும் போது இவர் மட்டும் என்ன செய்வார்? ஆஸ்திரேலியா 18.3 ஓவர்களில் 60 ரன்களுக்குச் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியில் ஜான்சன் அதிகபட்சமாக 13 ரன்கள் எடுத்தார், உதிரிகள் 14 ரன்கள்.

http://tamil.thehindu.com/sports/15-ரன்களுக்கு-8-விக்கெட்டுகள்-பிராட்-ஆவேசத்தில்-60-ரன்களுக்குச்-சுருண்டது-ஆஸ்திரேலியா/article7508022.ece

 

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய ஆட்டத்தை இரவு பார்த்த பின்...விடிந்த பிறகு.. புங்கை வேலைக்குப் போகும் காட்சி....!

agni.jpg

  • தொடங்கியவர்

IMG_1796_zpsa3jadx70.jpg

IMG_1795_zpsoujnbnms.jpg

IMG_1794_zpsf9qhgwhs.jpg

IMG_1797_zpsvf7deiu4.jpg

  • தொடங்கியவர்

அவுஸ்திரேலிய ஆட்டத்தை இரவு பார்த்த பின்...விடிந்த பிறகு.. புங்கை வேலைக்குப் போகும் காட்சி....!

agni.jpg

 

இது கூட பரவாயில்லை நீங்கள் மொட்டாக்கோட கவுரமாக போறியள்:shocked: ஆனால் அங்க Nottinghamதில்  ரொம்ப மோசம் போல இருக்கு அவுஸ் வீரர்களின் நிலைமை:grin:

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய வேதனையை அதிகரித்த ஜோ ரூட் சதம்: ரன்குவிப்பில் இங்கிலாந்து

 
நாட்டிங்கமில் சதம் கண்ட ஜோ ரூட் மட்டையை உயர்த்துகிறார். | படம்: ஏ.பி.
நாட்டிங்கமில் சதம் கண்ட ஜோ ரூட் மட்டையை உயர்த்துகிறார். | படம்: ஏ.பி.

டிரெண்ட் பிரிட்ஜில் பிராடின் ஆவேசத்தினால் முதல் இன்னிங்ஸ் வீழ்ச்சியைச் சந்தித்த ‘வலுவான’ ஆஸ்திரேலிய அணியின் வேதனையை ஜோ ரூட் தன் சதத்தின் மூலம் அதிகரித்துள்ளார்.

முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது இங்கிலாந்து. ஜோ ரூட் 19 பவுண்டரி, 1 சிக்சருடன் 158 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து ஆடிவருகிறார். இரவுக்காவலனாக இறக்கப்பட்ட மார்க் உட் 2 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

60 ரன்களுக்கே ஆஸ்திரேலியா மடிந்ததால் பெரிய தன்னம்பிக்கையுடன் களமிறங்கியது இங்கிலாந்து. ஆனாலும் லித் நல்ல இந்த தருணத்தில் தனது பார்மை கண்டுபிடித்துக் கொள்ள தவறினார். அவர் 14 ரன்கள் எடுத்து ஸ்டார்க் பந்தை மட்டை விளிம்பில் ஆட கேட்ச் ஆனது.

இயன் பெல்லுக்கு, ஸ்டார்க் மிகப்பெரிய இன்ஸ்விங்கரை வீசினார் நேராக கால்காப்பு எல்பி என்று தீர்ப்பளிக்கப்பட்டார், பெல்லின் ரிவியூ பயனளிக்கவில்லை.

அலிஸ்டர் குக் மீண்டும் ஒரு முறை சுவராக ஒரு புறம் நல்ல உத்தியுடன் ஆடினார். ஒரு முறை ஸ்மித், கிளார்க் இருவரும் வாய்ப்பு ஒன்றை கோட்டை விட்டனர். 43 ரன்கள் எடுத்த குக் 143 கிமீ வேக நேர் பந்தை கால்காப்பில் வாங்கி எல்.பி. ஆனார். வேகத்தில் பீட் ஆனார் குக். 96/3 என்ற நிலையில் ஜோ ரூட், பேர்ஸ்டோ இணைந்து அபாரமாக விளையாடி 173 ரன்களை 4-வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.

மிட்செல் ஜான்சன், ஸ்டார்க், ஹேசில்வுட் இடையே 53 ஓவர்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. ஜோ ரூட் ஆஸ்திரேலிய பவுலர்கள் தவறு செய்த போது அடித்தும், சரியாக வீசும்போது தடுத்தும் நிதானத்தையும் சாதுரியத்தையும் காண்பித்தார்.

பேர்ஸ்டோ 105 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் எடுத்து ஹேசில்வுட் பந்தை ஒரு கவனமற்ற கணத்தில் பிளிக் செய்து நேராக ஷார்ட் ஸ்கொயர்லெக்கில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஆஸ்திரேலியா எதிர்பார்க்காத விக்கெட் இது. 67 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்த ஜோ ரூட் 128 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் சதம் கண்டார்.

மிட்செல் ஸ்டார்க் ரன்களை வாரி வழங்கி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவர் 17 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜான்சன் 16 ஓவர்களில் 71 ரன்கள் விளாசப்பட்டார். லயன், வார்னர் வீசினர் அவ்வளவுதான் மற்றபடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

மொத்தத்தில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் வர்ணிப்பது போல் முதல் நாள் ஆட்டம் ‘ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் கறுப்பு தினம்” என்றே கூற வேண்டும்.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலிய-வேதனையை-அதிகரித்த-ஜோ-ரூட்-சதம்-ரன்குவிப்பில்-இங்கிலாந்து/article7511845.ece

  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா  60 & 105/0 (22.2 ov)
இங்கிலாந்து  391/9d

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: 391 ரன்களுக்கு 9 விக்கெட்; இங்கிலாந்து டிக்ளேர்

 
 
6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்கை பாராட்டும் ஆஸ்திரேலிய வீரர்கள். | படம்: ஏ.பி.
6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய மிட்செல் ஸ்டார்க்கை பாராட்டும் ஆஸ்திரேலிய வீரர்கள். | படம்: ஏ.பி.

டிரெண்ட் பிரிட்ஜ், 4-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று உணவு இடைவேளைக்கு சற்று முன் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 391 ரன்கள் எடுத்த நிலையில் இன்னிங்சை முடித்துக் கொண்டதாக அறிவித்தது.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் ஆரோக்கியமான 331 ரன்கள் முன்னிலையைப் பெற்றுள்ளது இங்கிலாந்து.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் 27 ஓவர்களில் 111 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நேற்று 17 ஓவர்களில் 73/3 என்று கைப்பற்றிய ஸ்டார்க் இன்று மேலும் 10 ஓவர்களில் 38 ரன்களைக் கொடுத்து மேலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

பிராட் பேட்டிங்கிலும் ஓரளவுக்கு அசத்தி 2 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 24 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். ஃபின் ரன் எடுக்காமல் நாட் அவுட். 85.2 ஓவர்களில் 391 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது இங்கிலாந்து.

இன்று 274/4 என்று களமிறங்கிய இங்கிலாந்து அணி அவசரகதியில் விக்கெட்டுகளை இழந்தது. ஜோ ரூட் 130 ரன்கள் எடுத்திருந்த போது ஸ்டார்க் வீசிய வழக்கமான இடது கை வேகப்பந்து வீச்சாளரின் கோணத்துக்கு ரூட் மட்டையின் விளிம்பைக் கொடுத்தார், நெவில் தவறு செய்யவில்லை.

இரவுக்காவலன் மார்க் உட் அவருக்கு கொடுத்த பணியை ஓரளவுக்கு திறம்பட செய்தார். 32 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கின் அதிவேக லெக்ஸ்டம்ப் பந்தை கோட்டை விட்டார். லெக் ஸ்டம்ப் பறந்தது.

கிறிஸ் பட்லர் இறங்கி அவசரகதியில் 3 பவுண்டரிகளை அடித்து கொஞ்சம் அலட்சியமாக ஸ்டார்க் பந்தை அதிதன்னம்பிக்கையுடன் ஒரு பெரிய டிரைவ் ஆட முயன்று பவுல்டு ஆனார்.

ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 5 ரன் எடுத்து ஹேசில்வுட்டின் லெக் திசை பந்தில் எட்ஜ் எடுத்து அவுட் ஆனார். 332/8 என்று ஆனது இங்கிலாந்து, அதன் பிறகு மொயீன் அலி, பிராட் இணைந்து 8 ஓவர்களில் 58 ரன்களை சாத்தினர். மொயின் அலி 24 பந்துகளில் 7 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்து ஜான்சனின் முதல் விக்கெட்டாகச் சாய்ந்தார். ஆனால் ஸ்லிப்பில் ஸ்மித் அற்புதமான ஒரு கை கேட்ச் எடுத்ததும் குறிப்பிடத்தகுந்தது.

ஹேசில்வுட்டின் ஓரே ஓவரில் மொயீன் அலி 2 பவுண்டரிகளை விளாச, பிராட் ஒரு பவுண்டரி 1 சிக்சர் அடிக்க அந்த ஓவரில் 20 ரன்கள் வந்தது. விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் ஆஸ்திரேலியா இன்று மேலும் 117 ரன்களை விட்டுக் கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிட்ச் ஆஸ்திரேலிய பவுலிங்கை வைத்துப் பார்க்கையில் கொஞ்சம் எளிதானது போல் தெரிகிறது. ஆனால், ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் சரியான உத்தியுடன் ஆட வேண்டியது அவசியம். இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க களமிறங்கியுள்ள ஆஸ்திரேலியா 5/0 என்று ஆடி வருகிறது.

http://tamil.thehindu.com/sports/ஆஷஸ்-4வது-டெஸ்ட்-391-ரன்களுக்கு-9-விக்கெட்-இங்கிலாந்து-டிக்ளேர்/article7512485.ece?homepage=true

  • தொடங்கியவர்
 அவுஸ்திரேலியா  60 & 158/4 (34.4 ov)
இங்கிலாந்து    391/9d
  • தொடங்கியவர்
அவுஸ்திரேலியா  60 & 241/7 (62.2 ov)
இங்கிலாந்து  391/9d
  • தொடங்கியவர்

வெளிநாட்டில் சோனையான ஆஸ்திரேலியா: நாட்டிங்ஹாம் போலீஸ் கூட கிண்டல் அடிக்குது...!

 

வெளிநாட்டு மண்ணில் இந்திய வீரர்கள் சோனைகள் என்று  மட்டம் தட்டுவது ஆஸ்திரேலியர்களின் வழக்கம். எந்த நாட்டுக்கு சென்றாலும் நாங்கள் சிங்கம்டா என்று அலட்டிக் கொள்வார்கள்.

nattingam.jpg

கடந்த மூன்று மாதத்துக்கு முன்தான் உலகச் சாம்பியன் ஆன அணி இப்போது இங்கிலாந்து சென்று சம்மட்டி அடி வாங்கி வருகிறது. அதுவும் 4வது ஆஷஸ் போட்டியில் முதல் இன்னிங்சில் வெறும் 60 ரன்களுக்கு அவுட் ஆகி மிகப் பெரிய அவமானத்தை சந்தித்தது.

அது மட்டுமல்ல 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்து அணி 331 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 2வது நாள் ஆட்ட முடிவில் 241 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது. இதனால் கிட்டத்ததட்ட இங்கிலாந்து அணியின் வெற்றி உறுதியாகி விட்டது.

இந்நிலையில் போட்டி நடந்து வரும் நாட்டிங்ஹாம் நகர போலீசும் கூட ஆஸ்திரேலிய வீரர்களை கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டது. நாட்டிங்ஹாம் நகர போலீஸ் ட்விட்டரில், '' ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி சிக்கலில் சிக்கியுள்ளது. உதவிக்கு யாரையாவது அனுப்பி வைக்க முடியுமா? '' என்று புகார் வந்திருப்பதாக அது கூறியுள்ளது

http://www.vikatan.com/news/article.php?aid=50709

  • தொடங்கியவர்
4வது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் தோல்வி! ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து
 
lலண்டன்: ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம், 5 போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், 3-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. இங்கிலாந்து-ஆஸ்திரேலியா நடுவேயான சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் நடப்பாண்டு டெஸ்ட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடந்து வருகின்றது.

 

முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தும், 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்ற நிலையில், 4வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காம் நகரின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வெறும் 60 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து பேட் செய்த இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 391 ரன்கள் குவித்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஜோ ரூட் அதிகபட்சமாக 130 ரன்கள் குவித்தார்.

 

331 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்கள் ரோஜர்ஸ் 52, வார்னர் 64 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். ஆனால், ஸ்மித் 5, மார்ஷ் 2, கேப்டன் கிளார்க் 14, விக்கெட் கீப்பர் நெவில் 17, ஜான்சன் 5 ரன்களில் அடுத்தடுத்து நடையை கட்டி இங்கிலாந்துக்கு வெற்றியை இலகுவாக்கினர். ஆஸ்திரேலிய அணி இந்திய நேரப்படி இன்று மாலை 4.15 மணிக்கெல்லாம் 253 ரன்களில் (72.4 ஓவர்கள்) ஆல்-அவுட் ஆனது. இதனால், ஒரு இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது. தொடரையும் 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.

ஆஸ்திரேலியாவில் நடந்த முந்தைய ஆஷஸ் தொடரில் 5-0 என்ற கணக்கில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆனது. சமீபத்தில் முடிந்த உலக கோப்பையில் காலிறுதிக்கு கூட தகுதி பெற முடியாமல் வெளியேறியது. இந்நிலையில் ஆஷஸ் வெற்றி அந்த அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் உற்சாகம் கொடுத்துள்ளது.

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியா பரிதாப இன்னிங்ஸ் தோல்வி: ஆஷஸ் தொடரை வென்றது இங்கிலாந்து

 
  • ஸ்டம்பை இழந்த ஆஸி. வீரர் நேதன் லயன். வெற்றியைக் கொண்டாடும் இங்கிலாந்து. | படம்: ஏ.எஃப்.பி.
    ஸ்டம்பை இழந்த ஆஸி. வீரர் நேதன் லயன். வெற்றியைக் கொண்டாடும் இங்கிலாந்து. | படம்: ஏ.எஃப்.பி.
  • ஆஷஸ் தொடரை வென்ற பிறகு குக் மற்றும் ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.
    ஆஷஸ் தொடரை வென்ற பிறகு குக் மற்றும் ஆண்டர்சன். | படம்: ராய்ட்டர்ஸ்.

நாட்டிங்கம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை இன்னிங்ஸ் மற்றும் 78 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-1 என்று கைப்பற்றியது. இதன் மூலம் இழந்த ஆஷஸ் கலசத்தை மீண்டும் கைப்பற்றியது இங்கிலாந்து.

ஆஸ்திரேலியா தனது 2-வது இன்னிங்ஸில் 3-ம் நாளான இன்று 253 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் மிக அருமையாக வீசி 21 ஓவர்களில் 8 மெய்டன்களுடன் 36 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மார்க் உட் 3 விக்கெட்டுகளையும், பிராட் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

241/7 என்று தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆடம் வோஜஸ் 51 ரன்களுடன் நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். நேற்று ஆட்டம் முடிந்தவுடன் சேனலில் “ஆட்டம் இன்னமும் முடிந்துவிடவில்லை” என்று சவால் விட்ட மிட்செல் ஸ்டார்க் 17 பந்துகளில் ரன் எடுக்காமல் பென் ஸ்டோக்ஸ் பந்தில் பெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, ஹேசில்வுட், நேதன் லயன் ஆகியோர் மார்க் உட்டின் துல்லியமான பந்துக்கு பவுல்டு ஆகி வெளியேறினர். 72.4 ஓவர்களில் ஆஸ்திரேலியா 253 ரன்களுக்குச் சுருண்டது. மொத்தமே இந்த டெஸ்ட் போட்டியில் 90 ஓவர்களையே ஆடியுள்ளது ஆஸ்திரேலியா. ஆட்ட நாயகனாக ஸ்டூவர்ட் பிராட் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி மூலம் உள்நாட்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து தொடர்ச்சியாக 4-வது தொடர் வெற்றியை ஈட்டியுள்ளது.

தோல்வி மற்றும் ஓய்வு குறித்து மைக்கேல் கிளார்க்:

பந்தை எப்படி கையாள வேண்டும் என்பதை இந்தத் தொடரில் இங்கிலாந்து எங்களுக்குக் கற்றுக் கொடுத்தது. அவர்கள் எங்களை துவம்சம் செய்தனர் என்பதை நேர்மையாக ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். எனது கிரிக்கேட் வாழ்வில் இன்னும் ஒரு டெஸ்ட் உள்ளது அதன் பிறகு ஓய்வு பெறுகிறேன். ஆட்டத்திலிருந்து விலகி ஓடுவது யாருக்கும் விருப்பம் இல்லாததுதான், ஆனால் எனது ஆட்டம் எனக்கே விருப்பமுடையதாக இல்லை.

எங்கள் அணியை சிறந்த இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது. இங்கிலாந்துக்கு ‘மொமெண்டம்’ கிடைத்துவிட்டால் அவர்களை அடக்கியாள்வது கடினம். இந்த சூழ்நிலையில் எப்படி வீச வேண்டும் என்பதை ஆண்டர்சன், பிராட், ஸ்டோக்ஸ் ஆகியோர் நிரூபித்தனர்.

நான் எப்படி ஆடவேண்டுமோ அப்படியாடவில்லை. என்னுடைய இலக்குக்கு ஏற்ப எனது ஆட்டம் அமையவில்லை, அணியை முன்னின்று வழிநடத்தவில்லை. நாம் சரியாக ஆடாத போது ஓய்வு பெறும் முடிவு அவ்வளவு கடினமான முடிவாக இருப்பதில்லை. 100 டெஸ்ட் போட்டிகளில் ஆடியதே அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த அணியில் நிறைய திறமைகள் உள்ளன, இவர்கள் மீண்டெழுவார்கள். அதற்கான திறன் இங்கு உள்ளது” என்றார் கிளார்க்.

http://tamil.thehindu.com/sports/ஆஸ்திரேலியா-பரிதாப-இன்னிங்ஸ்-தோல்வி-ஆஷஸ்-தொடரை-வென்றது-இங்கிலாந்து/article7516389.ece

  • தொடங்கியவர்
ஆஷஸ் 2015: தோற்ற ஆஸி. கேப்டனும், வென்ற இங்கிலாந்து கேப்டனும் கண்ணீர் சிந்தி உருக்கம்
 
லண்டன்: ஆஷஸ் டெஸ்ட் தொடரில் தோற்ற அணியின் கேப்டன் மட்டுமின்றி வெற்றி பெற்ற அணியின் கேப்டனும் கண்ணீர் சிந்தியது பார்வையாளர்களை உருக்கியது. ஆஸ்திரேலியா-இங்கிலாந்து நடுவேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர், அவ்விரு அணிகளுக்கும் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு இணையானது. பாரம்பரியம் மிக்கது. எனவே இந்த தொடரின் வெற்றி, தோல்விகள் இரு அணிகளையும் வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டது.

 

தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆஷஸ் தொடரில் ஆடிவரும் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்துவிட்டது. இன்னும் ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க், டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 4வது டெஸ்ட் இறுதியில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேசிய மைக்கேல் கிளார்க் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.

 

இரு நாட்கள் முன்புதான், டெஸ்ட் போட்டியில் ஓய்வுபெறும் எண்ணம் இல்லை என்று, கிளார்க் கூறியிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் தோல்வி மற்றும் அவரது பேட்டிங் சொதப்பல் போன்ற காரணங்களால் திடீரென இம்முடிவை கிளார்க் எடுத்ததாக கூறப்படுகிறது. கிளார்க் கூறியதாவது: ஆஸ்திரேலிய அணி அதைவிட திறமையாக ஆடிய ஒரு அணியிடம் தோற்றுள்ளது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியுடன் எனது டெஸ்ட் பயணம் முடிவுக்கு வரும். இந்த தொடரில் மட்டுமல்ல கடந்த 12 மாத காலமாகவே எனது ஆட்டத்திறன் மீது எனக்கே திருப்தியில்லை. இவ்வாறு கிளார்க் கூறியபோது, அவரது கண்களில் கண்ணீர் வடிந்தது. டெலிவிஷன் முன்பு அழுவது எனது வீக்னஸ் என்று கிளார்க் கூறிவிட்டு கிளம்பினார்.

 

இதையடுத்து வெற்றி பெற்ற அணியின் கேப்டனான அலிஸ்டர் குக் பேச வந்தார். அவரும் ரெஸ்ட்லெசாக, எமோஷனலாகவே காட்சியளித்தார். அவர் கூறுகையில், "நாங்கள் இப்போது வெற்றி பெற்றுள்ளோம் என்பதை நம்புவதற்கே எனக்கு சிரமமாக உள்ளது (கடந்த தொடரில் இங்கிலாந்து ஓயிட்வாஷ் ஆகியிருந்தது). இங்கிலாந்து முன்னாள் பயிற்சியாளர் பீட்டர் மூரேசின் சிரமத்துக்கு வெற்றி கிடைத்துள்ளது.

மைக்கேல் கிளார்க் ஒரு மிகச்சிறந்த வீரர். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை அறிந்ததும், கலக்கமாக உள்ளது. இவ்வாறு குக் பேசிக்கொண்டிருந்தபேதே, கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால், இது ஆனந்தக் கண்ணீர் என்பதை ரசிகர்கள் அறிந்தனர். எழுந்து நின்று கைதட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.