Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு சீன கடும் பிரயத்தனம்

Featured Replies

மஹிந்தவை ஆட்சிப் பீடம் ஏற்றுவதற்கு சீன கடும் பிரயத்தனம் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்றுவதற்கு சீன அரசாங்கம் கடும் பிரயத்தனம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சீனத் தூதரகத்தின் இரண்டாம் அதிகாரியான அரசியல் பிரிவு பொறுப்பாளர் ரென் பகியான் இந்த நடவடிக்கைகளின் இணைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க முக்கியஸ்தர்களுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மஹிந்தவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக சீன அரசாங்கம் நிதி உதவிகளை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதனை வழங்குவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் போலியான தகவல்களை இந்த தூதரக அதிகாரி வழங்கி வந்தமை அம்பலமாகியுள்ளது.

இந்த சீனத் தூதரக அதிகாரி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் தொடர்புகளைப் பேணி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சீன தூதரக உதவியுடன் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை விமர்சனம் செய்து, பத்திரிகைகள் அச்சிட்டு வெளியிடப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையின் அபிவிருத்திப் பணிகளின் ஏகபோக உரிமையை சீனா கொண்டிருந்ததுடன், அதற்கான பெருமளவு தரகுப் பணம் ராஜபக்ஸ குடும்பத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

எவ்வாறெனினும், சீனாவின் தலையீடு மறைமுகமாக மேற்கொள்ளுமாறு பணிக்கப்பட்ட போதிலும் இரண்டாம் அதிகாரி பகிரங்கமாக உதவிகளை வழங்கியதனால் சீனத் தூதுவர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸக்களுடன் பேணி நெருங்கிய தொடர்பு காரணமாக குறித்த அதிகாரியின் சேவைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதேவேளை, மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதனை தடுக்க இந்தியா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இணைந்து முயற்சித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121644/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதேவேளை, மஹிந்தவிற்கு வேட்பு மனு வழங்குவதனை தடுக்க இந்தியா முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் இணைந்து முயற்சித்து வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா... இதனை தடுக்க விட்டால், 
மகிந்த, வந்த பின்... கோத்தாவுடன் சேர்ந்து....
சம்பந்தனின்.... தலை உருள்வது நிச்சயம்.:lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.