Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறை: ஹெரோயினுடன் பெண் கைது

Featured Replies

article_1436100354-gavel300.jpg

பருத்தித்துறை, தும்பளை மணல் ஒழுங்கை பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண்ணெருவரை 285 கிராம் ஹெரோயினுடன் ஞாயிற்றுக்கிழமை (05) கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண்ணும் அவரது கணவனும் ஹெரோயின் விற்பனையில் ஈடுபடுவதாக இரகசிய பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பொலிஸார் ஹெரோயினை பெற்றுக் கொள்வது போன்று பாவனை செய்து பருத்தித்துறை கடற்கரைப்பகுதிக்கு இருவரையும் அழைத்துள்ளனர்.   குறித்த இடத்துக்கு வந்தபோது பெண்ணின் கணவன், வந்திருப்பது பொலிஸார் என அடையாளம் கண்டுதப்பி ஓடியுள்ளார். எனினும் குறித்த பெண்ணை கைது செய்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 285 கிராம் ஹெரோயின் சுமார் 10 மில்லியன் பெறுமதியானது எனவும் திங்கட்கிழமை (06) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பெண்ணை ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 http://www.tamilmirror.lk/149727#sthash.mRFyFA3D.dpuf

Edited by Athavan CH

  • தொடங்கியவர்

பருத்தித்துறை தொடர்பாக அண்மையில் ஊடகங்களில் பல எதிர்மறைச் செய்திகள் வருகின்றன , பருத்தித்துறையின் கல்விமான்கள், நலன் விரும்பிகள் இதனை கவனத்தில் எடுப்பார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறை தொடர்பாக அண்மையில் ஊடகங்களில் பல எதிர்மறைச் செய்திகள் வருகின்றன , பருத்தித்துறையின் கல்விமான்கள், நலன் விரும்பிகள் இதனை கவனத்தில் எடுப்பார்களா?

பருத்தித்துறை என்று சொல்வதை விட யாழ்ப்பாணம் என்று சொல்வதே சிறந்தது.....அதுவும் போதை ப்பொருள் ,சிகரட்,மதுபாவனை மற்றும் காமம் சம்பந்த பட்ட செய்திகள் புள்ளிவிபரங்கள் எடுக்காமல் ...சிறிலங்காவிலயே முதலிடம் ,இரண்டாம் இடம் என போடுகிறார்கள்

  • தொடங்கியவர்

ஹெரோயினுடன் கைதான பெண்ணுக்கு விளக்கமறியல்

வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் 285 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட பதில் நீதவான் எஸ்.சுப்பிரமணியம், திங்கட்கிழமை (06) உத்தரவிட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை(05) பருத்தித்துறை கடற்கரைப் பகுதியில் வைத்து புத்தளம் பொலிஸ் பிரிவின் போதைப்பொருள் தடுப்பு பொலிஸார், ஹெரோயின் பொருளினை வாங்குவது போல் பாசங்கு செய்து மேற்படி பெண்ணை கைது செய்திருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (03) யாழ்ப்பாணத்தில் இருந்து 693 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொழும்புக்கு கொண்டு சென்ற பண்டத்தரிப்பு மற்றும் கொழும்பு பொரளை பகுதியினை சேர்ந்த இருவரை புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து புத்தளம் போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைதான இருவரிடமும் பெற்றுக்கொண்ட வாக்குமூலத்தில் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்க யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த போதைப்பொருள் ஒழிப்பு பொலிஸார் மேற்படி பெண்னை ஞாயிற்றுக்கிழமை (05) ஞாயிற்றுகிழமை கைது செய்திருந்தனர். சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவன் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.tamilmirror.lk/149806#sthash.4hR9TB5j.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.