Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும்

Featured Replies

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலை சிறுபான்மை இனமாக மாற்றப்படும்:-

இலங்கையில் தமிழ் மக்கள் அடுத்த 15 வருடங்களில் 2ம் நிலைசிறுபான்மை இனமாக மாற்றப்படும் அபாயம் உள்ளதாகசமுதாய மருத்துவ நிபுணரும் தற்போதைய  யாழ்.மருத்துவர்சங்கத்தின் தலைவருமாகிய  முரளி வல்லிபுரநாதன்தெரிவித்துள்ளார்.

 2012ம் ஆண்டு 11.2 வீதமாக இருந்த தமிழர்கள் 2031ம் ஆண்டில் 10.3வீதமாக மாறும் அபாயத்தை ஆய்வுகள் குறிப்பிடுவதாகவும்அவர் கூறியுள்ளார்.
ஜுலை 11ம் திகதி உலக குடித்தொகை தினத்தை ஒட்டிஇலங்கையில் தமிழர்களின் எதிர் கால இருப்பு தொடர்பாகயாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில், இந்த வருட குடித்தொகைதின  தொனிப் பொருளாக அபாய நிலையில் உள்ள ஊறு படத்தக்க குடித்தொகையை பாதுகாப்போம் என ஐக்கிய நாடுகளின்குடித்தொகைப் பிரிவு பிரேரித்து இருக்கிறது . இவ்வாறான ஒருஅபாய  நிலையில் வாழும் குடித்தொகையாகத்தான் யுத்தப்பாதிப்பு , மீள்குடியேற்ற மறுப்பு, குற்றங்களுக்கான நீதி மற்றும்இழப்பீடு வழங்கப்படாமை, திட்டமிட்ட பாரபட்சங்கள்போன்றவற்றினால் தொடர்ந்து  பாதிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் ஒரு  இனமாக இலங்கையில் தமிழ் மக்கள்வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பாக வடக்கு கிழக்கில்வாழும் தமிழ்ப் பெண்கள் ஆண் துணைமற்றும்  வாழ்வாதாரம் அற்றும் அதிக இராணுவப் பிரசன்னத்தின்மத்தியிலும் இருப்பதனால் அதிக  அபாயத்தில் இருக்கிறார்கள். 

போருக்கு பின்னர் ஏற்படும்  அதிகரித்த குழந்தைப் பிறப்புகள்(baby boom )  வடகிழக்கு மாகாணங்களில் போருக்கு பின்னர்ஏற்படவில்லை. இதற்கு திருமண வயதில் இருக்கும் பலபெண்களுக்கு பொருத்தமான ஆண் துணை அற்று இருப்பதேகாரணமாகும்.  

வடகிழக்கு மாகாணங்களில் 89 ஆயிரம் விதவைகள் உள்ளனர்.இதற்குமேல் வடகிழக்கு மாகாணங்களில் ஆண்களின்தொகையை விட பெண்களின் தொகை மிக அதிகம். இதற்குஆண்களில் அதிகமாக  போரில் ஏற்பட்ட இறப்புகள் ,காணாமல்போகச் செயப்பட்டோர் , வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்தோர்  போன்றவை  காரணங்களாகும்.

இந்நிலையில் அதிகமாக காணப்படும் பெண்களுக்குபொருத்தமான ஆண்துணையை ஏற்படுத்தும்  எவ்விதமானசெயற்பாட்டு திட்டங்களோ விதவைகள் மறுவாழ்வுத்திட்டங்களோ  எம்மிடம் இல்லை. இதேபோன்று ஏனையஇனங்களுக்கு சமமாக சனத்தொகையை  அதிகரிப்பதற்கானதிட்டங்களும் எங்களிடம் இல்லை. இதன் விளைவாக  குறைந்துவரும் குடித்தொகையின்  ஒரு பிரதிபலிப்பாக  தான் குறைந்துவரும் யாழ் மாவட்ட பாராளுமன்றப் பிரதிநிதிகளின்எண்ணிக்கையையும் பார்க்கவேண்டும். 

ஆகவே தமது அரசியல் வலுவை அதிகரிப்பதற்கும்தமக்கு அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும்  சனத்தொகைஅதிகரிப்பை செய்யவேண்டிய கட்டாயத்தில் இன்றையநிலையில் தமிழர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் சனத்தொகை அதிகரிப்பிற்கு முதலில் நாங்கள்செய்யக்கூடிய விடயம் என்னவென்றால் வடகிழக்குமாகாணங்களில் உள்ள காலம் தாழ்த்திய திருமணங்களைநிறுத்தவேண்டும்.

2012 இல் மேட்கோள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இலங்கையில்காலம் தாழ்த்திய திருமணங்களில் தமிழர்களே முதலிடத்தில்உள்ளார்கள். அதிலும் யாழ்ப்பாண மாவட்டம்இலங்கையிலேயே  முதலாவது இடத்தில் இருக்கின்றது.

குறிப்பாக இலங்கைத் தமிழ் இனத்தில் ஆண்களின்சராசரி திருமண வயது  27.4 வருடங்களாகவும் , தமிழ்பெண்களின் சராசரி திருமண வயது  24.4 வருடங்களாகவும்இலங்கையில் உள்ள ஏனைய இனங்களின் சராசரி திருமணவயதுகளை விட இது அதிகமாகவும்   இருக்கின்றது. 

அதாவது ஏனைய இனத்தவர்கள்  உரிய வயதில் திருமணம்செய்கிறார்கள். தமிழர்களில் உரிய வயதில் திருமணம் செய்யமுடியாமைக்கு, பல காரணங்கள் இருக்கின்றன.

குறிப்பாக பொருளாதாரம், சீதனம், சாதி மதப்  பிரச்சினை, பிரதேசவாதம், மிகையான சோதிட நம்பிக்கை  உள்ளிட்ட பலசிக்கல்கள் எங்கள் சமூகத்தில் இருக்கின்றன.

முக்கியமாக போரின் பின்னர் இந்தப் பிரச்சினைகள்  மேலும்அதிகரித்திருக்கின்றன . எனவே இவைகள் முதலில்களையப்படவேண்டும். கால தாமதமான திருமணங்கள் கர்ப்பம்தரிக்கும் தன்மையைக் குறைத்து சனத்தொகை வளர்ச்சியைமட்டுமல்லாமல், பிறக்கும் அடுத்த சந்ததியையும் பல்வேறுவகையிலும்  பாதிக்கின்றது.

அதிகரித்த வயதில் கர்ப்பம் தரிக்கும் போது  கர்ப்ப காலத்தில்தாய்க்கும் சேய்க்கும் அதிகரித்த சிக்கல்கள் ஏற்படும் . நிறைகுறைந்த பிள்ளைகள் பிறப்பது, குறை மாதப் பிரசவம், பிறப்புக்குறைபாடுகள், புத்திக் கூர்மைக் குறைவு போன்ற பிரச்சினைகள்குழந்தைகளில் மாத்திரமல்லாது கர்ப்ப காலத்தில்  தாய் சேய்உயிர் இழப்புகள் கூட அதிகமாக ஏற்படுகிறது. பெற்றோருக்கும்பிள்ளைகளுக்கும் அதிக வயது வேறுபாடு காணப்படும் போதுஅதிகளவு கருத்து வேறுபாடுகள் மற்றும்  தொடர்பாடல்பிரச்சினைகள் காணப்படுவதுடன்  குடும்பங்களில் அதிகளவு மனஉளைச்சலும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன . எனவே உரியவயதில் திருமணம் செய்வதும் தாமதம் இன்றி குழந்தைகள்பெற்றுக் கொள்வதும் ஆரோக்கியமான சமூகத்திற்கும்,சனத்தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும்உகந்ததாகும். 

இதேவேளை யுத்த சூழ்நிலை உருவாக முன்னர் எங்கள்சமுகத்தில் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் நிலைகாணப்பட்டது . ஆனால் அது படிப்படியாக குறைவடைந்து 2012ம்ஆண்டு சராசரியாக  2.0ஆக மிகவும் குறைவடைந்துள்ளதுடன்மேலும் குறையப் போகும் யாழ்ப்பாண குடித்தொகைக்குகட்டியம் கூறுகிறது. இதே வேளை தென் பகுதியில்மேற்கொள்ளப்படும் தீவிர இனவாத பிரசாரங்களினால் 1998 இல்1.9 ஆக இருந்த இலங்கையின் கருவள வீதம் இப்போது 2.4 ஆகஅதிகரித்து இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால் 2012ம் ஆண்டில்11.2வீதமாக இருந்த தமிழர்கள் 2021ம் ஆண்டில் 10.8 வீதமாகவும், 2031 ம் ஆண்டில் 10.3 வீதமாகவும், 2041ம் ஆண்டில் 9.8 வீதமாகவும்வீழ்ச்சியடையும் நிலை வரும். இதன் காரணமாக இலங்கைத்தமிழர்கள் வெகு விரைவில் முதலாவது சிறுபான்மை இனம்என்ற நிலையை இழக்க வேண்டி வரலாம். உலக நாடுகள்இந்தளவுக்காவது தமிழர் பிரச்சினையில் கரிசனம் காட்டியதற்குதமிழர்களின் முதலாவது சிறுபான்மை இன நிலையே காரணம்என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து கொள்ள வேண்டும். 

தென்னிலங்கையில் திட்டமிட்ட வகையில் சனத்தொகைவளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. 2011 இல் இனவாத அரசுபொலிஸ் உட்பட்ட அனைத்து ஆயுதப் படையினருக்கும்மூன்றாவது குழந்தை பெற்றுக் கொள்வதற்கு ஒரு இலட்சம்ரூபாய் ஊக்குவிப்புத் தொகை வழங்கத் தொடங்கியது. இந்தநிலை தற்போதைய அரசாங்கத்திலும் தொடர்வதை தமிழ்தலைவர்கள் அவதானிக்க வேண்டும். 

மாறாக தமிழர் வாழும் பகுதிகளில் கட்டாய கருத்தடைகளும்சனத்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுமேதொடர்கின்றது. உதாரணமாக 2013 இல் கிளிநொச்சிமாவட்டத்தில் உள்ள வலைப்பாடு மற்றும் அயல்கிராமங்களில் இடம் பெற்ற கட்டாயக் கருத்தடையைக்குறிப்பிடலாம். இன்று வரை இந்த இன அழிப்பு நடவடிக்கையில்ஈடுபட்ட குற்றவாளிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இதைவிட தமிழர்களில் பலர்  போருக்குப் பின்னர் வாழ்வாதாரம்இன்றி வறுமையில் உழலுகின்றனர் . 

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்திப் பிரிவினால் 2012இல்  மேற்கொள்ளப் பட்ட  ஒரு ஆய்வு யாழ்.மாவட்டத்தில் 16வீதமானவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாககாட்டுகிறது. இது இலங்கையின் வறிய மாவட்டங்களாகவழமையாக கருதப்படும் மொனராகலை 14.5% மற்றும் பதுளை13.3% ஆகியவற்றை விட அதிகமாக இருப்பதை அவதானிக்கவேண்டும். சனத்தொகையை அதிகரிப்பதற்கு பொருளாதாரமும்வலுப்படுத்தப் படவேண்டும். 

2010 இல் இலங்கையில் மந்த போசணையினால் குழந்தைகள்அதிகம் பாதிக்கப்பட்ட  மாவட்டங்களில் வவுனியா 51 வீதம்.யாழ்ப்பாணம் 41வீதம் ஆகவும் இருந்தது. மந்த போசணையும்வறுமையும் அதிகரித்த நோய்களுக்கும் இறப்புகளுக்கும் இட்டுச்சென்று குடித்தொகையை குறைக்கிறது. 

தற்போதைய சூழ்நிலையில் இவற்றை எல்லாம்  நிவர்த்திசெய்யவேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.முக்கியமாக  தமிழர்கள் வாழ்க்கைத்துணை தேடுவதில் பிற்போக்கான முறைகளைக் களைந்து காலம்தாழ்த்திய திருமணங்களை முழுமையாக நிறுத்த வேண்டும்.பொருளாதார ரீதியாக வலுப்பெற வேண்டும். வெளிநாட்டில்வாழும் தமிழர்கள் இலங்கையின் சீதன சந்தைக்கு வலுச்சேர்க்காமல் தமிழர்களின் பொருளாதாரத்தை மீளக் கட்டிஎழுப்புவதற்கு உதவ வேண்டும். இனப் படுகொலைக்கு எதிரானதீர்மானத்தை நிறைவேற்றியதுடன்நின்றுவிடாமல் விதவைகளுக்கு மறுவாழ்வு அளிப்பதற்குமாகாண அரசாங்கம் ஒரு திட்டத்தை அமுல் படுத்திவெளிநாட்டுத் தமிழர்களையும் இதில் இணைத்துக்கொள்ளவேண்டும். தமிழ் தலைவர்கள் தமிழ் தேசியம் என்றபெயரில் வாக்கு கேட்கும் அதே வேளை தமது தமிழ்வாக்களர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நேர்மையாகஉழைக்கவேண்டும் . மனித உரிமை ஆர்வலர்களுடன்இணைந்து தமிழ் பெண்களுக்கான பாதுகாப்பான சூழல்உருவாக்கப்பட வேண்டும். என்றார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/121993/language/ta-IN/article.aspx

 

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும்  ஆழமான கட்டுரை

இதில் தாயக மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தும் பங்கு புலம் பெயர் மக்களிலேயே தங்கியுள்ளது..

Edited by விசுகு

தமிழர் பிரதிநிதிகள் நாடாளமன்றில் ஒன்றும் கிழிக்காட்டியும் பறவாயில்லை...

இப்படியான எதிர்கால பாரதூரமான விடயங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்கவில்லையே என்பதுதான் கவலைக்குரிய விடையமாக உள்ளது 

மேடைபேச்சுடன் நின்றுவிடாமல் கடைசி இதுகளுக்காவது ஒருவழிபண்ணலாமல்லே 

 

 

குறிப்பாக பொருளாதாரம், சீதனம், சாதி மதப்  பிரச்சினை, பிரதேசவாதம், மிகையான சோதிட நம்பிக்கை  உள்ளிட்ட பலசிக்கல்கள் எங்கள் சமூகத்தில் இருக்கின்றன.

 

இவை பற்றி நாட்டில் யாரிடமும் பேச முடியாது. இனம் அழிவது பற்றிக் கவலையில்லை. மேற்குறிப்பிட்ட மூட நம்பிக்கைகளே வாழ்க்கையின் அடித்தளமாக எண்ணி வாழ்கிறார்கள். 
 

தமிழர்களின் சனத்தொகை வீதத்தைத் தக்கவைப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு நிலப்பரப்பையும் தக்கவைக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் செரிவாக வாழும் மக்கள் வன்னிப் பகுதியை நோக்கி நகர வேண்டும். தமிழர்களின் பிரதேச எல்லைகளில் ஏனைய இன மக்கள் மிகக் குறைந்த விலைக்குப் பெருமளவு நிலப்பரப்பை வாங்கிக் குடியேறி வருகின்றனர். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தமது சொந்தங்கள் ஊடாக நிலங்களை வாங்கி முதலீடு செய்ய வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.