Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் உருவாக்கிய தேக்கம் காட்டில் இராணுவமுகாம்

Featured Replies

 

புலிகள் உருவாக்கிய தேக்கம் காட்டில் இராணுவமுகாம்!: குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் - வன்னி
 
விசுவமடு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வனவளப்பாதுகாப்புப் பிரிவு நாட்டிய தேக்குமரக்காட்டுப் பகுதி இப்போது இராணுவமுகாமாக காட்சியளிக்கிறது. 
 
அழகும் ரம்மியமும் மிக்க அந்தப் பகுதி கடந்த காலத்தில் மக்களின் பொழுது போக்கு அடமாக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இப்போது அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் செல்ல முடியாது என்கிறார் எமது செய்தியாளர்
 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தமிழீழ வனவளப் பாதுகாப்புத் துறை அன்றைய காலத்தில் மரம் நாட்டும் திட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்தது. 
 
யுத்தத்தின்போது மரங்கள் அழிக்கப்பட்டாலும் புதிய மரங்களை உருவாக்குவதிலும் காடுகளைப் பேணுவதிலும் விடுதலைப் புலிகளின் வனவளப்பாதுகாப்புத்துறை ஒரு கொள்கையுடன் நடைமுறையில் ஈடுபட்டது. 
 
மண்ணுக்கு உகந்த தேக்குமரங்களை நாட்டுவதில் தமிழீழ வனவளப்பாதுகாப்புத்துறை கடும் அக்கறையை எடுத்தமைக்கு வடக்கில் பரவலாக காணப்படும் தேக்குமரக்காடுகள் சாட்சி என்கிறார் எமது செய்தியாளர். 
 
கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்த ஒருவர் வடக்கில் முல்லைத்தீவில் தமிழீழ வனவளப்பாதுகாப்புத்துறை வளர்த்த தேக்குமரங்களை அழித்து மரங்களை விற்பனை செய்ததுடன் அந்த இடங்களை அபகரிக்க முயற்சி செய்தார். 
 
அத்துடன் ஏ-9 பாதையில் மாங்குளம் பிரதேசத்தை அண்டிய பகுதியில் தமிழீழ வனவளப்பாதுகாப்புத்துறை நாட்டிய தேக்குமரங்களில் கணிசமானவற்றை இராணுவத்தினர் தீயூட்டி அழித்துள்ளனர். 
 
இராணுவத்தினர் தமது முகாங்களை அமைக்கவும் காவலரண்களை அமைக்கவும் தேக்குமரங்களை அழிள்ளமை தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தது. (http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110042/language/en-US/-------.aspx)
 
விசுவமடுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வனவளபாதுகாப்புத்துறை நாட்டிய தேக்குமரக்காடு இப்போது இராணுவத்தின் பாரிய முகாமாக காட்சியளிக்கிறது. 
 
முல்லைத்தீவு செல்லும் மக்கள் இளைப்பாறும் குளிர்ச்சியும் அழகும் ரம்மியமும் மிக்க சூழலாக காணப்பட்ட இந்தப் பகுதிக்கு இப்போது பொதுமக்கள் செல்ல முடியாது.
 
இராணுவத்தினரின் பாரிய முகாம் இங்கு அமைக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக தேக்குமரங்கள் பல அழிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இராணுவத்தினர் இளைப்பாற இராணுவ தேனீரகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. 
 
வடக்கிலிருந்து காட்டுமரங்கள் அழிக்கப்பட்டு பலகைகளாக வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவில் தொடர்ச்சியாக காடழிப்பு தற்போது இடம்பெற்றுவருகிறது. 
 
வடக்கு கிழக்கில் மாத்திரமே காடுகள் பாதுகாக்கபபட்டதாக அண்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக்கொண்டிருந்தார். 
 
எனினும் வட கிழக்கில் முன்பு பாதுகாக்கப்பட்ட காடுகள் இப்போது அழிக்கப்பட்டு இராணுவமுகாங்கள் அமைக்கப்படுவதும் வடக்கின் மரங்கள் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. 
 

புலிகள் நட்ட தேக்குமரங்களை எரிக்கின்றனர் இராணுவத்தினர்! http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110042/language/en-US/-------.aspx

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/122098/language/ta-IN/article.aspx.

.

Edited by Athavan CH

யார் நட்டாலும் மரம் மரம் தானே ...இப்படியான மோட்டு சிங்களவனுடன் தான் சம்பந்தன் இணக்க அரசியல் செய்கின்றார் ...தேறும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.