Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிமுகச் சிலந்தி வலையில் சிக்கிய (பூச்சிகள்) புலிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிமுகச் சிலந்தி வலையில் சிக்கிய பூச்சிகள் புலிகள்

பகலவன்

<p>புலிமுகச் சிலந்தி வலையில் சிக்கிய <span style="text-decoration: line-through;">பூச்சிகள்</span> புலிகள்</p>
 

 

நூற்றுக்கு நூறு பொருத்தமாயிருக்கிறது ஊடகவியலாளர் ந.வித்தியாதரனுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம். ந.வித்தியாதரன் சிலந்தியாகவும் அவரால் பின்னப்பட்ட வலையில் வீழ்ந்தவர்களாக சில முன்னாள் தலைவர்களும் காணப்படுவதாக அர்த்தம் கொள்ளலாம். இந்தக் குழுவினர் பரப்புரைக்காக பெரிதாக செலவு செய்யத் தேவையில்லை. ந.வித்தியாதரனை கூட்டத்தின் முன்னால் நிற்கவைத்து புன்னகைக்கச் செய்தால் போதும் வெற்றி நிச்சயம். 'என் எழுத்தாயுதம்' எனும் அவரது நூலில் குறிப்பிடுவதைப் பாருங்கள்.

தலைவர் பிரபாகரன் தொடங்கி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபச்ச வரை, சந்திரிகா குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க தொட்டு இராணுவத் தளபதிகள் ஜெனரல் பலகல்ல, ஜெனரல் சாந்த கொட்டெகொட உட்பட பல மூத்த இராணுவ அதிகாரிகள் வரை பலரையும் கவரும் முகபாவத்தையும், பேச்சு வன்மையையும் நான் ஓரளவு கொண்டிருந்தேன் என்பேன். முன்னால் இருப்பவரின் உள்ளக்கிடக்கையை ஊகித்து நாசூக்காக காய்நகர்த்தும் உளப்பாங்கே ஊடகத்துறையில் பல நெருக்குவாரங்களை நான் தாண்டுவதற்கான வெற்றிப்படிக்கட்டுகளாக அமைந்திருந்தன என்பேன் (65-66) 

முன்னால் அமர்ந்திருக்கும் அதிகாரவர்க்கத்தை - அது இராணுவ உயரதிகாரியாக இருக்கலாம், புலிகளின் தலைவராக இருக்கலாம் அல்லது நாட்டின் தலைவராகக் கூட இருக்கலாம் - எனது பேச்சு வன்மையால் வசீகரித்துச் சமாளிக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் இருந்தது. அந்த யுக்தி எனக்கு கை தந்தது என்றே சொல்வேன் (பக்கம் 65) 

சம்பந்தன் ஐயாவுக்கு வயசாகிவிட்டது. இதனால் வித்தியாதரனின் முகபாவத்தை கவனிக்கவும் அவரது பேச்சு வன்மையை கிரகிக்கவும் முடியவில்லை போல் இருக்கிறார். எனவே அவரது கவனத்தை ஈர்க்க சில முன்னாள் போராளிகளை பயன்படுத்தி இருக்கிறார் போலவும்.

அவரது நூலின் இன்னொரு பகுதியைப் பாருங்கள். 

ஓர் இழை கிடைத்ததால் அதை தேர் இழுக்கக்கூடிய வடமாக திரிக்கவும் வல்லமை பெற்ற சூரர்கள் நாங்கள். ஈரைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் எங்களுக்கு அந்த ஈர் முதலில் சிக்குவதுதான் முக்கியம் (பக்கம் 20)  

கடைசியில் ஈராகவோ இளையாகவோ இந்தப் போராளிகளா கிடைத்தார்கள்? சம்பந்தன் ஐயாவை அரசியல் ரீதியாக விமர்சிக்கலாம். புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் என்னும் அவரது நிலைப்பாட்டை தர்க்க ரீதியாக தவறு என்று நிருபிக்கலாம். அதனை விடுத்து சம்பந்தன் ஐயா கடலைக் கடை நடத்தத்தான் லாயக்கானவர் என இவருடன் இருக்கும் முன்னாள் போராளிகள் குறிப்பிடுவது தவறு. அப்படியானால் அந்தக் கடையில் கச்சான் வறுக்கவா இடம் கேட்பீர்கள் என்று யாராவது திரும்பிக் கேட்கலாம்.

எப்போதும் தனிப்பட்ட ரீதியில் தலைவர் யாரையும் விமர்சிப்பதை ஏற்காதவர். ஒருவரது கொள்கை, அரசியல் நிலைப்பாடு சம்பந்தமாக மட்டுமே விமர்சிக்க வேண்டும் என்பது அவரது தீர்மானம். பேராசிரியர் சிவத்தம்பி தொடர்பாக தனிப்பட்ட ரீதியில் ஈழநாதம் பத்திரிகையில் விமர்சித்தமைக்காக அதை எழுதியவருக்கு தனது கண்டனத்தை தெரிவித்ததுடன், பொறுப்பாளர் அழகன் மூலம் எழுத்து மூலமான மன்னிப்பை கோரும் நடவடிக்கையை மேற்கொள்ளச் சொன்னவர் தலைவர். இது இந்த புதிய போராளிகளுக்குத் தெரிய நியாயமில்லை. எனவே வித்தியாதரன் என்பவரே, இந்த முன்னாள் போராளிகளை தவறாக வழி நடத்த வேண்டாம்.

பிரபாகரன் உங்களது புன்சிரிப்பில் மயங்கி விட்டார் என்பதும் உங்களது தவறான கணிப்பு. அவரைப் புரிதல் என்பது சயனைட் கட்டிய போராளிகளால் மட்டுமே முடியும். விதிவிலக்கு பாலா அண்ணர் மட்டுமே. கிளிநொச்சியில் நடந்த பிரமாண்டமான ஊடகவியலாளர்கள் மாநாட்டுக்கு தங்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என்பதை தங்களுடன் நிற்கும் போராளிகளுக்கு நிச்சயம் நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள். இன்னொரு விடயத்தை நாம் உங்களுக்கு வலியுறுத்திக் கூறுகின்றோம். பிரபாகரனை தலைவராக ஆத்மார்த்த ரீதியாக ஏற்றுக்கொண்ட முன்னாள் போராளிகள் அவரது இடத்தில் இன்னொருவரை வைத்துப் பார்க்க மாட்டார்கள். அவரைப்போல ஆக வேறு எவராலும் முடியாது.

வேட்புமனுத் தாக்கலின் பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கூறிய கருத்துக்களை பொதுமக்கள் சிறுபிள்ளைத்தனமாகத்தான் பார்ப்பார்கள்.     

தலைவர் மட்டுமல்ல, எமது மக்களும் கௌரவமான அரசியற் செயல்பாட்டையே எதிர்பார்ப்பவர்கள். பாராளுமன்றத்தில் யாழ் குடாவிலுள்ள 40ஆயிரம் படையினரையும் சவப்பெட்டியில் அனுப்புவோம் என்று கூறியதையும், ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை தூசணை வார்த்தைகளால் பேசியதையும் சினத்தோடு பார்த்தவர்கள். இராணுவ விவகாரம் புலிகள் சம்பந்தப்பட்டது. சரியோ பிழையோ, வெற்றியோ தோல்வியோ அது புலிகளையும் அவர்களை உருவாக்கிய தலைமையும் சம்பந்தப்பட்டது. வாக்களித்த தமது கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் கருதினார்கள். அதனால் தாம் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட வாக்கு மூலம் பாராளுமன்றத்திற்கு அனுப்பியவரை அடுத்த தேர்தலில் தோற்கடித்தார்கள். இது திருந்துவதற்காக அவருக்கு அளிக்கப்பட்ட சந்தர்ப்பம். இந்தத் தேர்தலில் அவரை மீண்டும் ஏற்கக்கூடிய சூழல் உள்ளது போலிருக்கிறது.

1987 தேர்தலின் போது இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள் அமிர்தலிங்கம், சம்பந்தன் ஐயா உட்பட அனைவரையும் தோற்கடித்தனர். பின்னர் சூழ்நிலை மாற அவர்களுக்கு மன்னிப்பளித்தார்கள்.     

டக்ளஸ் தேவானந்தாவை அரசியல் ரீதியில் விமர்சிப்பதையே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். சம்பந்தன் ஐயாவினதும் கூட்டமைபினரதும் புலிகள் இல்லாத தமிழ்த் தேசியம் என்ற நிலைப்பாட்டுக்கு தமது வாக்கு மூலம் பதிலளிப்பார்கள். நாம் கௌரவமான அரசியலை நோக்கி அடியெடுத்து வைப்போமாக. அதற்கு கூட்டமைபினரது இந்த நிலைப்பாட்டை தாயகம் முழுவதும் தெரியப்படுத்தி அவர்களை அம்பலப்படுத்த வேண்டியது இக் கட்டுரையை படிக்கும் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழரினதும் கடமை.

 

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=7&contentid=4b773ba7-283d-4619-9492-b8da9b5449f5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.