Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்த பதவி வெறி பிடித்தவர்: மங்கள சமரவீர விமர்சனம்

Featured Replies

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவிவெறி பிடித்தவர் என்று நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர பிபிசியிடம் தெரிவித்தார்.

150721172440_mangala_samaraweera_512x288

இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர

முன்னர் இருந்த ஜனாதிபதிகளைப் போல இவரும் கண்ணியமாக அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருக்கிறார்.
மஹிந்த ராஜபக்ஷ வெளிநாடுகளில் பணத்தை வைத்துள்ளார் என்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்துள்ளார்.
நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடவடிக்கைகள் சூடுபிடித்து வரும் சூழலில், வெளியுறவு அமைச்சரின் கடுமையான இந்த விமர்சனங்கள் வந்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ வெட்கமற்று பதவி வெறியின் காரணமாகவே மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார் என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

150717164352_mahinda_rajapaksa_512x288_t

மஹிந்த ராஜபக்ஷ மீதான குற்றச்சாட்டுக்களை அவரது பேச்சாளர் மறுக்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளதன் மூலம் மஹிந்த ராஜ்பக்ஷ தன்னைத் தானே அவமானப்படுத்திக் கொண்டுள்ளார் என்றும் அது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் மங்கள சமரவீர கூறுகிறார்.
எனினும் அவர் தேர்தலில் போட்டியிடுவது மறைமுகமாக நல்லாட்சிக்கான ஐக்கியத் தேசிய முன்னணிக்கு அனுகூலமே எனவும் அவர் தெரிவித்தார்.
குடும்பத்தினரின் எதிர்கால நலன்களை மனதில் வைத்தே மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத் தேர்தலுக்கு போட்டிடுகிறார் என மங்கள சமரவீர கூறும் கருத்தை, மஹிந்தவின் பேச்சாளர் ரோஹன வெலிவிட்டிய கடுமையாக மறுத்துள்ளார்.
அதேபோல மஹிந்த ராஜபக்ஷ மீது வைக்கப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் அவரது பேச்சாளர் புறந்தள்ளுகிறார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/07/150722_mangala_mahinda_spat

 

  • கருத்துக்கள உறவுகள்

முதல் இரண்டு செக்கன்களில் மகிந்த மாத்தயா என்ன செய்கின்றார் என்று பாருங்கள். 

 
 
 

Edited by கிருபன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.